Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

N. Krishnasamy
N. Krishnasamy
N. Krishnasamy
Ebook214 pages1 hour

N. Krishnasamy

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1960இல் வெளியான - வெள்ளி விழா கண்ட - வெற்றிப் படமான, ‘படிக்காத மேதை’ தமிழ்ப் படத்தைப் பார்க்காத, சென்ற தலைமுறை ரசிகர்கள் இருக்க முடியாது.

நல்ல கதையம்சம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பு, இனிமையான பாடல்கள் என்று சாகாவரம் பெற்ற அம்சங்களின் திரை வடிவம் அந்தப் படம்.

ஆனால் அந்தப் படத்தைத் தயாரித்தவர் யார், அவருடைய பின்னணி என்ன, படத் தயாரிப்பில் அவர் சந்திக்க நேர்ந்த பிரச்னைகள் என்னென்ன, அவற்றை அவர் எதிர்கொண்ட விதம், அவர் தயாரித்த மற்றப் படங்கள் போன்ற பல விவரங்களைப் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்த வாய்ப்பை இந்தப் புத்தகம் உங்களுக்குத் தரும். தயாரிப்பாளர் என். கிருஷ்ணசாமி அவர்களின் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள், சோதனைகள், ஏற்றத் தாழ்வுகள், பெற்ற ரணங்கள் போன்று வேறு எந்தத் திரைப்படத் தயாரிப்பாளராவது சந்தித்திருப்பாரா என்பது சந்தேகம். ஒளிவு மறைவின்றி தன் வெற்றி, தோல்விகளை பகிர்ந்து கொண்டார்.

அதுவே இந்த நூலின் பலம்.

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580143106887
N. Krishnasamy

Read more from Ranimaindhan

Related to N. Krishnasamy

Related ebooks

Reviews for N. Krishnasamy

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    N. Krishnasamy - Ranimaindhan

    https://www.pustaka.co.in

    என். கிருஷ்ணசாமி

    N. Krishnasamy

    Author:

    ராணிமைந்தன்

    Ranimaindhan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ranimaindhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உள்ளே...

    1. பாபநாசம்

    2. பள்ளிக்கூடம் - பல அனுபவம்

    3. கல்லூரி - கல்லூரிக்கு அப்புறம்...

    4. ஜெமினி ஸ்டூடியோவில்...

    5. ‘சி.டி.ஏ’ கிருஷ்ணசாமி

    6. திறந்தவெளி சினிமா

    7. டெல்லியில்...

    8. சி.டி.ஏ நிகழ்ச்சிகள் சில...

    9. ஒன்றே குலம்

    10. தன் பிரச்சினை மறந்து... பொதுப் பிரச்சினை எடுத்து...

    11. படிக்காத மேதை

    12. படித்த மனைவி

    13. தபன் சின்ஹா வாரம் - துலாபாரம்

    14. என்.கே. விஷன்

    15. என்னென்ன செய்திருக்கிறார் இவர்!

    16. பெருமை சேர்த்த சில படைப்புகள்

    17. இன்று...

    FOREWORD

    Dr. P.V. KRISHNAMOORTHY

    Director General (Doordarshan) Retd., Fellow, Sangeet Natak Akademi

    Before I read this excellent biography, if you had asked me if I knew N. Krishnaswamy I would have said, of course, I know him as a handsome gentleman with an ever present smile on his face, soft spoken and with a plethora of films and documentaries to his credit.

    Humble to a fault, he hardly ever used I – the first person singular, in his conversation. I am sure his biographer must have had a hard time ferreting information about NK’s extraordinary career from him.

    This biography has brought to light the many faceted personality of NK most of which I was blissfully unaware. Kudos to Ranimaindhan, the biographer, for this inspirational

    contribution

    Having known Chembai Vaidyanatha Bhagavatar from my Kozhikode days, NK invited me to view the rough cuts of his documentary on the maestro. Viewers will recall that this was one of the very popular series on Great Masters which included stalwarts like Semmangudi, Ariyakudi, Rajaratnam Pillai, Madurai Mani lyer, and a host of other masters.

    My brother Subbudu who was also present told me how he was pleasantly surprised at NK’s erudition and knowledge of Carnatic music when he was a witness to his directing the highly successful series on Saint Thyagaraja, based on the Pancharatna kritis.

    This was at the AVM and Prasad studios. It was a revelation that NK studied music as a subject in the Annamalai University under the guidance of the great Tiger Varadachari.

    The biography reveals that there is hardly any facet of film making that NK is not an expert in, be it a selection of story, screen play writing, direction, camera work, editing and finally marketing the entire works. But unfortunately being blessed with this multi faceted talent is only half the battle.

    You have to find the finance. Money, (the saying goes) is the root of all evil. But the evil is inevitable. Those days there was no institution like the Film Finance Corporation and one had to use one’s wits to make financiers part with their money.

    One has to marvel at the persuasive powers of this Papanasarn born (not far from Kumbakonam!) genius. Money came in driblets and there were many interruptions in production but NK, made of sterner stuff, would not succumb to obstacles.

    As one deeply involved in the birth and growth of television in this country I must congratulate NK for some outstanding docudramas he has prepared for Doordarshan. Not all his creations are high brow. His serial Mel Madi Kali featuring Vivek was hilarious. To mark the Golden Jubilee of India’s struggle for freedom he produced ‘Indian stage and freedom struggle’ excellent material for students of historical research.

    NK’s organizational capacities are known only to his colleagues in the industry. No wonder he is called CTA Krishnaswamy for Cini Technicians Association, an organization to contend with, is his brain child and he has nursed it to adulthood.

    Did you know that the first Open Air Theatre was his innovation?

    He is the master Gate Crasher who has dared to barge into many a VIP stronghold to get things done. I am a Delhiwallah and know how difficult it is.

    It is unfair to the biographer for me reveal all the interesting anecdotes in the adventurous career of NK. I thoroughly enjoyed going through the deft handling by Ranimaindhan of the various challenges faced by NK.

    In fact I finished reading in three sessions despite my failing eye sight.

    Like Oliver Twist in the Dickens novel we ask for more.

    Ah! That reminds me that Kitcha (that’s how Sivaji sir lovingly addressed NK) will be crossing 90. He looks deceptively young. I am 92+ and believe that I have the credentials to bless him and his 66 years comrade Jayalakshmi. It is not a ‘family’ in the traditional sense. It is more a well run corporate body.

    Happy reading!

    (டாக்டர் பி.வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் விருப்பத்தின்படி அவருடைய இந்த முன்னுரை ஆங்கிலத்திலேயே வெளியிடப்பட்டிருக்கிறது.)

    அணிந்துரை

    திரைவிலகியது!

    விஜய திருவேங்கடம்

    முன்னாள் இயக்குநர்,

    சென்னை அகில இந்திய வானொலி

    திரைப்படத் துறையின் தனித் தன்மைகளில் ஒன்று திரையில் தெரியும் ஆளுமைகளைப் பலரும் அறிந்து வைத்திருப்பதும் அவர்களது ஒவ்வோர் அசைவையும் ஆர்வத்தோடு கவனிப்பதுமாகும். திரையின் பின்னே இருந்து இயக்கும் ஆளுமைகளைப் பற்றி அறிவதுமில்லை. அறிய முற்படுவதுமில்லை. அதிலும் அவர்களில் சாதனையாளரை அறிவதில்தான் திரையுலகச் சரித்திரம் நிறைவடைகிறது என்பதையும் நம்மில் பலர் உணர்வதில்லை.

    திரைப்படம் என்பது ஒரு குழுவின் கூட்டு முயற்சியின் வெளிப்பாடே. எனவே முன், பின் இயக்கங்களில் சம்பந்தப் பட்டவர்கள் அனைவருமே அதன் ஆதிக்கத்தில் பங்கேற்பவர்களே.

    திரையுலகப் பின்புல ஆளுமைகளிலும் ஒரு துறை வல்லமை உடையவர், பல்துறை வல்லமை உடையவர்கள் என இருவகையினர் உண்டு. முன்னவர் எண்ணிக்கையில் அதிகம். பின்னவர் சிலரே. அந்தச் சிலரிலும் வெள்ளித்திரை, சின்னத்திரை, மேடை நாடகம், நடிப்பு, பாட்டு என்று பல்கலை வல்லமையில் பரிமளித்தவர் மிக மிகச் சிலரே.

    பல்கலை வல்லமையில் பரிமளித்த அந்த மிகச் சிலரில் ஒருவரது வாழ்க்கைச் சரிதத்தைத்தான் வாசிக்கப் போகிறீர்கள்.

    திரைப்படக் கலை மிக்க நுணுக்கமானது. பல்வேறு அம்சங்கள் அதனுள் அடங்கும். திரைப்படக் கலையை முற்றிலும் அறிந்தவர் திரைப்படத் தயாரிப்பாளராக இருத்தல் சிறப்பானது.

    அதனினும் சிறப்பு இந்தக் கலை வல்லமை இரத்தத்தில் ஊறிய விஷயமாக, பால்ய வயதிலேயே பல்கலை வல்லவராக இருந்து, முறையாகக் கற்றறிந்து வளர்ந்தவராக இருப்பது.

    இவை எல்லாவற்றிலும் சிறப்பு திரைப்படக் கலை பீஷ்மாச்சாரியாரான எஸ்.எஸ். வாசனிடம் குருகுல வாசம் போலும் இருந்து அநுபவக் கல்வியும் பெற்றுத் தேர்ந்து முழுமை பெறுவது. இத்தகைய பன்முக ஆற்றலாளர்தான் என்.கே. அவர்கள்.

    பால்ய வயதில், பதின் வயதுப் பருவத்தில், இளமையின் எழுச்சிக் காலத்தில் என்.கே. அவர்கள் காட்டிய பல்கலை வல்லமையை ஊர்க்காரன் என்னும் வாய்ப்பாலும் வகையாலும் முதலில் மூத்தவர் சொல்லக் கேட்டும் பின் நானே பார்த்தும் வியந்தவனாதலால் என்.கே அவர்களின் வாழ்க்கைச் சரிதம் வரையப்படுவதில் எனக்கு மிகுந்த விருப்பம்.

    வியக்கத்தக்க வல்லமையுடைய என்.கே அவர்கள் செயலில் முன் நிற்பார். அச்செயலின் வெற்றியால் வரும் புகழெனில் பின் நிற்பார். இவரது இந்த தன்னடக்கமே நாம் போற்ற வேண்டிய தனிப் பண்பாதலால் இவரது வாழ்க்கைச் சரிதம் வரையப்படுதல் வேண்டுவதாயிற்று.

    செயல் என்றால் சிக்கல்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1