Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nirvaga Aalumai N. Ramdas
Nirvaga Aalumai N. Ramdas
Nirvaga Aalumai N. Ramdas
Ebook295 pages1 hour

Nirvaga Aalumai N. Ramdas

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிலர் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்தது. சிலர் வாழ்க்கை சோகமும் நிறைந்தது. மகிழ்ச்சியில் சிலர் தன்னை மறந்ததுமில்லை... சோகத்தில் சிலர் தன்னை இழந்ததுமில்லை. இரண்டிலுமே இறைவன் சிலர் கைகளைப் பத்திரமாகப் பிடித்துக்கொண்டான். சிலர் தடுமாறாமல் தாங்கிக் கொண்டான்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட பக்கங்கள் இருக்கும். நீளமும், அகலமும், ஆழமும் மாறுபடும். இதில் உள்ள உண்மைகள் அன்பு உள்ளங்களை ஆட்கொள்ளும் என்று உறுதியாக அவன் நம்புகிறான்.

ராமதாஸ் அவர்களின் நட்பு என்றும் என் நெஞ்சில் - ராமதாஸ் அவர்களின் வாழ்க்கை நூலாக உங்கள் கையில்

Languageதமிழ்
Release dateNov 2, 2021
ISBN6580143106897
Nirvaga Aalumai N. Ramdas

Read more from Ranimaindhan

Related to Nirvaga Aalumai N. Ramdas

Related ebooks

Reviews for Nirvaga Aalumai N. Ramdas

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nirvaga Aalumai N. Ramdas - Ranimaindhan

    https://www.pustaka.co.in

    நிர்வாக ஆளுமை என்.ராமதாஸ்

    (வாழ்க்கை வரலாறு)

    Nirvaga Aalumai N. Ramdas

    (Vazhkkai Varalaru)

    Author:

    ராணிமைந்தன்

    Ranimaindhan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ranimaindhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    குடும்பப் பின்னணி

    கல்விப் பருவம்

    விவேகானந்தா - லயோலா

    தந்தியில் வந்த வேலை

    புதுச்சேரிப் பணியில்...

    கரம் பிடித்த எழில்மலர்

    போராட்டம் - சாதனை

    விற்பனை வரி குறைப்பு - கரும்புக்கு விலை அதிகரிப்பு

    புதிய பால் எது?

    மத்திய விற்பனை வரி

    சர்க்கரை ஆலையில்...

    மொலாஸஸ் பூகம்பம்

    திடீர் வேலை நிறுத்தம்

    எத்தனை முடிவுகள்! எத்தகைய முடிவுகள்!

    வணிக வரி ஆணையர் ராமதாஸ்

    செக் - போஸ்ட் நிகழ்ச்சி

    வணிக வரிக் கட்டடம்

    அரசு அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்தால்...

    மூக்குக் கண்ணாடி விவகாரம்

    மத்திய விற்பனை வரி மாநிலத்திற்கே...

    மூலப் பொருட்களுக்கு ஒரு சதவீத வரி

    சி - படிவமும், வரி விலக்கும்

    பணியிலிருந்து விருப்ப ஓய்வு

    எழில்மலர் இறைவனை அடைந்தது

    பணியிலிருந்து ஓய்வு - அரசிடமிருந்து அழைப்பு

    ஏழு முதல்வர்களுடன்...

    குடும்ப விழுதுகள்

    இலக்கிய ஆர்வம்

    சில பயணங்கள்...

    ராமதாஸ் இன்று...

    முன்னுரை

    இந்நூலில் சந்திப்பதும் சிந்திப்பதும்...

    அவன் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்தது. அவன் வாழ்க்கை சோகமும் நிறைந்தது. மகிழ்ச்சியில் அவன் தன்னை மறந்ததுமில்லை... சோகத்தில் அவன் தன்னை இழந்ததுமில்லை. இரண்டிலுமே இறைவன் அவன் கைகளைப் பத்திரமாகப் பிடித்துக்கொண்டான். அவன் தடுமாறாமல் தாங்கிக் கொண்டான்.

    இளம் பிள்ளை வயதில் அவன் வீட்டிற்குச் செல்லப் பிள்ளை. பள்ளிப்பருவத்தில் அவன் துடுக்குப் பிள்ளை. கல்லூரிப் பருவத்தில் அவன் கடமை உணர்ந்த காளை. மணமாலை சூடி, மண வாழ்க்கையில் புகுந்த நாட்கள் இன்பச் சோலை. மனதால், வாக்கால், செயலால் ஒன்றுபட்ட தாம்பத்யம், அற்புதச் சங்கீதம். ஐம்பது வரையில் ஆனந்தத்திற்கிடையே சில போராட்டங்கள். ஐம்பதுக்கு மேல் போராட்டத்திற்கிடையே சில ஆனந்தங்கள்.

    அவன் பெற்ற மக்கள் அவன் பெற்ற பெருஞ்செல்வங்கள். பேரன், பேத்திகள் அவன் பெற்ற ஆனந்தங்களில் பேரானந்தம். அவன் காயங்களை மறக்க வைக்கும் அமுதங்கள் அவர்கள். அலுவலகப் பணியிலும், இலக்கியப் பணியிலும், அன்றாட வாழ்க்கையிலும் அவன் பெற்ற நண்பர்கள் மறக்க முடியாதவர்கள். அந்தப் பட்டியல் மிக நீளமானது.

    அவன் வரலாற்று நாயகனல்ல - ஆனால் புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி வரலாற்றை எழுதியதில் அவனுக்கும் பங்கு உண்டு.

    அவன் நினைவில் நின்றவைகளையும், வாழ்வில் நடந்தவைகளையும் இந்த நூலில் சந்திப்போம்.

    ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட பக்கங்கள் இருக்கும். நீளமும், அகலமும், ஆழமும் மாறுபடும்.

    இதில் உள்ள உண்மைகள் அன்பு உள்ளங்களை ஆட்கொள்ளும் என்று உறுதியாக அவன் நம்புகிறான்.

    இந்த நூலினை, கலைமாமணி ராணிமைந்தன் தன் கைவண்ணத்தில் படைத்திருக்கிறார்.

    எளிமையான தோற்றம், இனிமையான பேச்சு, தேனின் சுவையும் வானின் விசாலமும் கலந்த எழுத்து, நேரம் தவறாத செயல்பாடு எல்லாவற்றுக்கும் மேலாக உள்ளம் நிறைந்த நட்பு - இவற்றின் மொத்த வடிவம் ராணிமைந்தன்.

    பல மகத்தான சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை அவர் எழுதியிருக்கிறார். இப்போது அவனுடைய வாழ்க்கை வரலாறும் அவரால் எழுதப்பட்டிருக்கிறது. இது அவனுக்குப் பெரு மகிழ்ச்சி.

    இதனைப் படித்துப் பார்த்து மகிழ அவனைத் தாங்கி உருவாக்கிய ஆணிவேர், ஆம் துணைவி - எழில்மலர் இப்போது இல்லை. அவர் இருப்பது, இறைவன் திருவடியில்.

    அவனைத் தாங்கும் விழுதுகளாக அவன் வாரிசுகள், இருக்கிறார்கள். உறவுகளும் நட்பும் உறுதுணையாகின்றன. அவன் பயணம் தொடர்கிறது.

    இந்நூலின் உள்ளே இருக்கும் 'அவனாகிய' நான், எனக்கு உறுதுணையான அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.

    - ந. ராமதாஸ்

    151, நீடாராஜப்பய்யர் வீதி,

    புதுச்சேரி - 605 001

    கைப்பேசி: 7708224699

    அணிந்துரை

    சா. மாணிக்கவாசகம்

    முன்னாள் உறுப்பினர், மத்திய நிர்வாக தீர்ப்பாயம்

    முன்னாள் தலைமை ஆணையர்,

    சுங்க வரி மற்றும் மத்திய கலால் வரித் துறை

    திருமறைக்காட்டில் பிறந்து, புதுவையில் தடம் பதித்தவர் திரு. ராமதாஸ். சிறிய உருவம், பெரிய சாதனைகள். சிகரத்தைத் தொட்டவர் அவர்.

    ராணிமைந்தன் அவர்கள் ராமதாஸின் வாழ்க்கையை பல கோணங்களில் நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார். நூலின் தலைவனுடைய சிறப்பை துல்லியமாக எழுத்தில் வடித்திருக்கிறார். நூலின் கதாநாயகன் ராமதாஸுக்கு வாழ்த்துக்கள். அவரை நம் கண்முன் நெடிய உருவமாக நிறுத்தியிருக்கும் ராணிமைந்தனுக்கு பாராட்டுக்கள்.

    ‘டெல்லியின் இழப்பு, புதுவையின் லாபம்' என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. பணியில் சேர்ந்த சில மாதங்களில், டெல்லியில் அதிக சம்பளமும், நிறைய வாய்ப்புகளும் இருந்த மத்திய அரசு வேலையை உதறிவிட்டு, சொந்த மண்ணுக்குப் பெருமை சேர்க்க வந்தவர் ராமதாஸ்.

    அரசியல் பாரம்பரியமுள்ள குடும்பத்தில் பிறந்தும், ஏழு முதலமைச்சர்களுடன் புதுவை அரசின் உயர் அதிகாரியாக முப்பது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இருந்தாலும், தன் மீதும், தன் பணி மீதும் அரசியல் வாடை படாமல் பணியாற்றி வெற்றி கண்டவர், ராமதாஸ். இது உண்மையிலேயே மிகப்பெரிய சாதனைதான்.

    அரசு வரித் துறையில் பணியாற்றுவது சிரமமான காரியம். வாழ்க்கையில் நிச்சயமான நிகழ்வுகள் இரண்டு; ஒன்று இறப்பு, மற்றது வரி! (In this world nothing can be said to be certain except death and tax) என்ற பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (1706 - 1790) அவர்களின் கூற்றுப்படி, அரசு வரித் துறையின் தாக்கம் இல்லாத மனித வாழ்வின் பகுதியே கிடையாது. அப்படிப்பட்ட சிக்கலான, தர்ம சங்கடமான வணிக வரித் துறையில் வெற்றி நடை போட்டவர் ராமதாஸ்.

    புதுவை வணிக வரித்துறையின் முப்பது ஆண்டு கால வளர்ச்சியை நோக்கினால், அதில் ராமதாஸ் ஆற்றிய பங்கு செவ்வனே விளங்கும். அது எப்படி மனிதநேயத்துடன் செயல்பட்டது என்பது அவர் வாழ்க்கை வரலாற்றை நோக்கின் விளங்கும்.

    ராமதாஸ் அவர்கள் ஒரு சிறந்த வணிக வரித்துறை ஆணையர் மட்டுமல்ல, அவர் ஒரு முழுமையான மனிதர்; சிறந்த பேச்சாளர்; வியக்கப்பட்ட கவிஞர்.

    மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் விரும்பி பாடல் எழுதித் தருமாறு ராமதாஸைக் கேட்டுக்கொண்டார் என்றால் அதைவிட ஓர் அங்கீகாரம் தேவையில்லை என்றே தோன்றுகிறது!

    அவர் பணியாற்றியபோது, பல சிக்கலான சமயங்களில் எப்படி புத்திசாதுர்யத்துடன் அந்தச் சிக்கல்களைத் தீர்த்து வைத்தார் என்பது, இப்பொழுது அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமையும்.

    ராணிமைந்தன் அவர்கள் ராமதாஸின் பல நல்ல குணங்களைத் தெளிவாக நயத்தோடு எழுதியிருக்கிறார். வாழ்க்கையில் இருந்தோம், மறைந்தோம் என்று பலர் வாழும் இவ்வுலகில், சாதனையாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ராமதாஸின் செயல்களை சுவைபட எழுதியுள்ளார். அவர் நம் பாராட்டுக்குரியவர்.

    நூலைப் படித்து முடித்தபின், ராமதாஸ் ஓர் அரசாங்க உயர் அதிகாரியாக மனிதநேயத்துடன் செயல்பட்டதையும், பாசமிக்க குடும்பத் தலைவராக இருந்ததையும், பலருக்கு உதவிக் கரம் நீட்டியதையும் அறிந்து மனம் நிறைவுறுகிறது.

    அவர் நீடூழி வாழ என் வாழ்த்துக்கள்.

    - சா. மாணிக்கவாசகம்

    மே 30, 2011

    சென்னை

    வணக்கம்

    வாழ்க்கை வரலாறு எழுதுவதற்கு யாரைப் பற்றி எழுதுகிறோம் என்பதைவிட எந்த வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறோம் என்பதே அடிப்படையாக இருக்க வேண்டும்.

    சாதனையாளர்கள் பலர் சர்வசாதாரணமாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விளம்பரம் இல்லாமல் எளிமையாகத் தங்கள் பணிகளைச் செய்து கொண்டிருப்பதால் அடையாளம் காண்பது சிரமமாயிருக்கிறது.

    என். ராமதாஸ் அவர்கள் அப்படிப்பட்ட சாதனையாளர்களில் ஒருவர்.

    எங்களுக்குள் அறிமுகம் ஏற்படக் காரணமாக இருந்தவரின் பெயரைச் சொன்னால் நீங்கள் வியந்து போவீர்கள். மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள்!

    நான் எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்துவிட்டு, எம்.எஸ்.வியின் பரம ரசிகரான ராமதாஸ் என்னைப் பாராட்டினார். அதுதான் அறிமுகம்.

    ராமதாஸ் பற்றி என் இனிய நண்பர் பாரீஸ் ஜமால் போன்றவர்கள் நிறையச் சொன்னார்கள். நான் புதுச்சேரிக்குச் சென்றபோதும், ராமதாஸ் சென்னைக்கு வந்தபோதும் நிறையப் பேசினோம்.

    - அரசுப் பணியில் உயர் அதிகாரி ஒருவர், மாநில வருவாய் அதிகமாக வேண்டும் என்பதையே சிந்தனையாகக் கொண்டிருக்க முடியுமா?

    - தன் ஆடிட்டர் படிப்பும், அனுபவமும் தந்த நுணுக்கங்களை அதற்காகப் பயன்படுத்த முடியுமா?

    - புதுவை மாநிலத்தில் ஏழு முதலமைச்சர்களுடன் ஓர் அதிகாரி தொடர்ந்து பணியாற்றி அவர்கள் அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்க முடியுமா?

    - வரியைக் குறைத்தால் வருமானம் பெருகும் என்று நிரூபிக்க முடியுமா?

    இத்தனையும் முடியும் என்று ராமதாஸ் நிரூபித்திருக்கிறார்.

    எனவேதான் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும் என்ற ஆவல் எனக்குள் எழுந்தது.

    இந்த ஆவலை நான் பிடிவாதமாக மாற்றிக்கொண்டேன்.

    ஊர் நடுவே ஒரு சிறிய ஆறாக நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் வரலாறு என்று சொல்லக்கூடிய - பதிவு செய்யத் தகுதியான வாழ்க்கையா என் வாழ்க்கை? தெரியவில்லை என்று எனக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார்.

    ஆமாம்... அப்படிப்பட்ட வாழ்க்கைதான் என்று நான் பதில் எழுதினேன்.

    நாங்கள் பலமுறை சந்தித்தோம். தன் வாழ்க்கையை மிகவும் துல்லியமாக அவர் எனக்காகத் திரும்பிப் பார்த்தார். அந்த ஒத்துழைப்பே இந்த நூலுக்கு மூலாதாரம்.

    அண்டை மாநிலமான புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபட்ட ஓர் அரசு உயர் அதிகாரியின் வாழ்க்கை இந்த நூல்.

    இதைப் படிக்கும்போது நிச்சயமாக ராமதாஸ் உங்களுக்குள் விஸ்வரூபம் எடுப்பார். எனக்குள் அவர் ஏற்கெனவே அந்த ரூபத்தில்தான் இருக்கிறார்.

    எப்போதும்போல் கலைஞன் பதிப்பகம் திரு. நந்தன் அவர்கள் என்னைத் தட்டிக் கொடுத்தார்.

    ராமதாஸ் அவர்களின் நட்பு என்றும் என் நெஞ்சில் - ராமதாஸ் அவர்களின் வாழ்க்கை நூலாக உங்கள் கையில்

    படித்ததும் எனக்கோ அவருக்கோ இரண்டு வரி தவறாமல் எழுதுங்கள், நண்பர்களே!

    - ராணிமைந்தன்

    ஜூன், 2011

    சென்னை

    புதிய எண் 7 (ப.எண் 2)

    மணவாளன் தெரு,

    வெற்றி நகர் எக்ஸ்டென்ஷன்

    சென்னை - 600 082

    தொலைபேசி : 26713643

    கைப்பேசி : 9381025834

    குடும்பப் பின்னணி

    புராணச் சிறப்பு, வரலாற்றுப் பெருமை இரண்டும் கொண்டது வேதாரண்யம்.

    சிவபெருமான் - பார்வதி திருமணத்திற்காக எல்லோரும் கயிலையில் குழுமியபோது பாரம் தாங்காமல் வடக்கு தாழ்ந்து, தெற்கு. உயர்ந்து யாரேனும் ஒருவர் அங்கிருந்து அகன்றால்தான் சமநிலை - சாத்தியமாகும் என்ற நிலையில், அகத்திய மாமுனிவர் இறைவனின் கட்டளையை ஏற்று அந்த இடத்திலிருந்து அகன்று பூமியில் அவர் வந்த இடம் வேதாரண்யம் என்பதும், இங்கே அகத்தியருக்கு இறைவன் தன் திருமணக் கோலம் காட்டி அருளினார் என்பதும் புராணம்.

    ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து மகாத்மா காந்தி அடிகள் தலைமையேற்று நடத்திய பல போராட்டங்களில் ஒன்றான உப்பு சத்தியாகிரகத்தில் ராஜாஜி உப்பு எடுத்த இடம் வேதாரண்யம் என்பது வரலாறு.

    தற்கால வரலாற்றிலும் இந்த நகரத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. புதுச்சேரி (பாண்டிச்சேரி) மாநில வளர்ச்சியில் - குறிப்பாக அதன் பொருளாதார முன்னேற்றத்தில் - அரிய பங்களிப்பைத் தந்துள்ள என். ராமதாஸ் அவர்களின் பூர்வீகம் வேதாரண்யம் என்பது அந்தத் தனிச் சிறப்பு.

    அந்த மாநிலத்தின் ஆற்றல் மிக்க வணிக வரித் துறை ஆணையராக, அனைத்து முதலமைச்சர்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசு உயர் அதிகாரியாகப் பணியாற்றி, பணி ஓய்வுக்குப் பின்னரும் ஸ்டேட் ஃபைனான்ஸ் கமிஷன் சேர்மனாக அரசால் நியமிக்கப்பட்ட பெருமைக்குரியவர் ராமதாஸ்.

    ராமதாஸின் வாழ்க்கை வரலாறு இந்த நூல். வரலாறு அவருடைய தாத்தாவிடமிருந்து தொடங்குகிறது. அவரது பெயரும் ராமதாஸ்தான். தாத்தாவின் பெயரே பேரனுக்கும் வைக்கப்பட்டது.

    வேதாரண்யத்தில் அனைவராலும் மதிக்கப்பட்ட ஊர்ப் பெரிய மனிதர்களில் தாத்தா ராமதாஸ் பிள்ளையும் ஒருவர். மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தவர்.

    ராமதாஸ் பிள்ளையின் கண்ணியமும், கம்பீரமும் பிரசித்தம். காங்கிரஸ் கட்சியின் தார்மீக ஆதரவாளர் என்றாலும் நேரடியாகக் கட்சி நடவடிக்கைகளில் அவர் பங்கேற்றதில்லை. எனினும் அப்போது தஞ்சை மாவட்டத்தில் முக்கிய அரசியல் பிரமுகரான நெடும்பலம் என்.ஆர். சாமியப்ப முதலியார் அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்தார். அவர் ராமதாஸ் பிள்ளையை 'குழந்தை' என்றுதான் அழைப்பாராம்.

    ஊருக்கு நல்லது செய்யக் கூடியவர் பஞ்சாயத்து யூனியன் தலைவராக வரட்டும் என்றிருந்த காலம் அது. நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அரசியல் விளையாடாத நாட்கள். அப்படிப்பட்ட காலகட்டத்தில் வேதாரண்யம் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார் ராமதாஸ் பிள்ளை. அவரது வாக்கை வேதவாக்காக மதித்தார்கள் ஊர் மக்கள். ஏனெனில் அந்த வாக்கு சமன்செய்து சீர் தூக்கிய துலாக்கோல் வாக்கு என்பது அவர்களுக்கு நன்கு புரிந்திருந்தது.

    ராமதாஸ் பிள்ளை அப்போது வசித்த தெருவுக்கு யாழ்ப்பாணத் தெரு என்று பெயர். அவரது முன்னோர்கள் யாழ்ப்பாணத்துடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்பதாலும், அவர்கள் முதன் முதலாக அந்தத் தெருவில் வீடு கட்டிக்கொண்டு வந்தவர்கள் என்பதாலும், அந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கலாம். ராமதாஸின் முன்னோர்கள் யாழ்ப்பாணத்து வியாபாரிகளுடன் பாக்கு, புகையிலை வியாபாரத் தொடர்பு கொண்டிருந்தார்கள். வேதாரண்யத்திலிருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் யாழ்ப்பாணம்.

    யாழ்ப்பாணத் தெருவில் ராமதாஸ் வீடு

    ராமதாஸ் பிள்ளையின் மூத்த மகன் நடராஜப் பிள்ளை, தன் தந்தையின் குணநலன்களைக் கொண்டு அவரைப் போலவே சிறப்புமிகு வாழ்க்கை வாழ்ந்தார். மனதால் காங்கிரஸ்காரர். காங்கிரஸ் ஆதரவாளர் என்ற போதும் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கும் நண்பர். மணலி கந்தசாமி, காங்கிரஸ் தலைவர் வெங்கடாசலத் தேவர் என்ற பி.வி. தேவர், சர்தார் வேதரத்தினம் பிள்ளை ஆகியோரோடு நெருங்கிப் பழகியவர். அரசியல் நாகரிகத்தைத் தூக்கி நிறுத்தித் தாங்கிப் பிடித்த தகைமையாளர்களில் நடராஜனும் ஒருவர்.

    அரசியல் ஆர்வம் மிக்கவர் நடராஜன் என்பதைவிட நல்லவர் நடராஜன் என்றே அவர் மக்களால் மிகுதியாக அறியப்பட்டார். ‘நானா' என்றே அழைக்கப்பட்டார்.

    சமூகத்தில் அன்றே பல புரட்சிகளுக்கு வித்திட்டார் நடராஜன். சைவ மரபில் வந்த அவர் மாமிசம் உண்டதும், வேட்டைக்குப் போனதும், அனைத்துத் தரப்பு

    Enjoying the preview?
    Page 1 of 1