Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Neethiyarasarin Nedum Payanam
Oru Neethiyarasarin Nedum Payanam
Oru Neethiyarasarin Nedum Payanam
Ebook322 pages1 hour

Oru Neethiyarasarin Nedum Payanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்க்கையை எல்லோருமே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம்! ஆனால் 'வாழ்க்கையாக' அது இருக்கிறதா என்ற கேள்வியுடனேதான் பெரும்பாலர்க்கு அமைந்து விடுகிறது. ஆனால் நம்முடனேயே வாழ்ந்து கொண்டு, இதுதான் 'வாழ்க்கை' என்பதை வாழ்ந்துகாட்டும் அர்த்தமுள்ள மனிதர்கள் நிகழ்த்தும் அற்புத வாழ்க்கைதான் இப்பூவுலகில் மானுடப்பிறப்புக்கு பெருஞ்சிறப்பு சேர்த்து வருகிறது.

தன் வாழ்வியல் பயணத்தை மிகுந்த சிரமங்களோடும், போராட்டங்களோடும் துவக்கி, கடலில் தடுமாறும் கலம் போன்ற நிலைமையிலிருந்து, தானே ஒரு கலங்கரை விளக்கமாக மாறியதையும், எண்ணற்றோர் வாழ்வினில் நீதி எனும் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சுகின்ற நிலையையும் அழகாகப் போகிற போக்கில் எடுத்துக் காட்டும் நீதியரசரின் இந்தப் பயணம் கடும் பயணம் என்பதையும் சுடும் பயணம் என்பதையும் உணரமுடிகிறது!

Languageதமிழ்
Release dateSep 28, 2021
ISBN6580143106889
Oru Neethiyarasarin Nedum Payanam

Read more from Ranimaindhan

Related to Oru Neethiyarasarin Nedum Payanam

Related ebooks

Reviews for Oru Neethiyarasarin Nedum Payanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Neethiyarasarin Nedum Payanam - Ranimaindhan

    https://www.pustaka.co.in

    ஒரு நீதியரசரின் நெடும் பயணம்

    (நீதியரசர் மு. கற்பகவிநாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாறு)

    Oru Neethiyarasarin Nedum Payanam

    (Neethiyarasar M. Karpaga Vinhayagam Avargalin Vazhkkai Varalaru)

    Author:

    ராணிமைந்தன்

    Ranimaindhan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ranimaindhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஜஸ்டிஸ் டி.எஸ். அருணாசலம்

    முன்னாள் தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்.

    அணிந்துரை

    யோகி ராம்சுரத்குமார் ஜய குரு ராயா

    இந்தப் பதிப்பின் கதாநாயகன் பிறக்கும்போது வாயில் சிறிய வெள்ளிக் கரண்டியுடன், மகான்களின் விளையாட்டு மைதானமான இந்த பாரதத் தேசத்தில் தவழவில்லை. ஆனால் இன்றோ தன் அயராத உழைப்பினாலும், இறைபக்தி மற்றும் குரு விஸ்வாசத்தினாலும் நல்ல நல்ல நூல்களை எல்லாம் சதா படித்துக்கொண்டு, கருத்துக்களை மனதில் பதியவைத்துக்கொண்டு, மற்றவர்களை பலவித சூழ்நிலைகளில் சந்தித்து உரையாடும்போதும் சரி, மேடைச் சொற்பொழிவுகள் ஆற்றும்போதும் சரி, தாம் கற்றறிந்த சீரிய தகவல்களை, நகைச்சுவையுடன் கேட்பவர்களை ஈர்க்கும்படி வசீகரம் செய்யும் பண்பாளர் திரு. கற்பகவிநாயகம் அவர்கள். இப்போதோ தங்கமானவர் என்று பெயரெடுத்துவிட்டார்.

    இப்பெரும் தேசத்தில் அடிமட்டத்திலிருந்து உச்ச வாழ்க்கைக்கு எல்லாத் துறைகளிலும் முன்னேறியவர்களைப்பற்றி பட்டியல் போட்டால் என் எண்ண ஓட்டம் முந்திக்கொள்ளும் பொழுது குறிப்பிட்டு சொல்லமுடிகிறவர்கள் மிக சிறிய சதவீதமே.

    ‘பட்டங்கள் (Degrees) பல பெற்றுவிடலாம்; சில டாலர்களுக்கு அமெரிக்காவிலிருந்து டாக்டர் பட்டம் அங்கு செல்லாமலேயே பெற்றுவிடலாம். ஆனால், பாரம்பரியத்துக்குள் (Pedigree) நம்மைச் சுழலவிடுவது இறைவன் செயல்பாடு’ என்று நான் எப்போதும் கூறுவேன். தொடக்கத்தில் தகப்பனார் பத்திர எழுத்தாளர், பின்பு அவருக்கு மூத்த வழக்கறிஞரின் தொடர்பு, அடுத்து பத்திரம் எழுதும் அலுவலகம்.

    தாத்தாவோ ஊரில் பஞ்சாயத்துத் தலைவர். ஊர் விவகாரங்கள் பலவற்றுக்குத் தீர்ப்பளித்தவர். நம் நண்பரும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரிந்துள்ளார். அவர் தந்தைக்கோ தன் மகன் வழக்கறிஞராக ஆகவேண்டும் என்பதே பேரவா. தோல்விகள் எல்லாம் வெற்றிக்கு வழிவகுக்கும் படிகள் என்பதை - இவருடைய வாழ்க்கை வரலாற்றை - சுவையுடன் இப்புத்தகத்தின் ஆசிரியர் ராணிமைந்தன் எழிலுடன் அமைத்திருக்கிறார். ஆசிரியரின் பணி தெவிட்டாத தேன். தெய்வத்தின் குரலே சான்று.

    முதல்வரியில் கதாநாயகன் என்று குறிப்பிட்டுள்ளேன். அவர் நாடக மேடையையும், திரை நடிப்பையும்தான் குறிக்கோளாக வைத்திருந்தார் என்பதைத் தற்போது தெரிந்துகொண்டேன், நம் பிற்காலம் இறைவனால் நிர்ணயிக்கப்பட்டபிறகுதான், நாம் இந்நாட்டு மண்ணில் பிறக்கவைக்கப்படுகிறோம். ஷேக்ஸ்பியரின் வாக்கு நமக்கு மிகப்பொருத்தம். ‘உலகமே ஒரு நாடக மேடை. அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு வேடம்.’

    நீதி சார்ந்த குடும்பத்தில் பிறந்த திரு. கற்பகவிநாயகம் உயர்நீதி மன்ற நீதிபதியாக உயரவேண்டும் என்பது குருவின் தீர்மானம். கடவுளும், குருவும் ஒன்றே என்பதினால் அந்தத் தீர்மானம் மாற்ற முடியாதது என்பதை இந்த நூல் வாயிலாக அறிகிறோம். தன்னுடைய வளர்ப்புப் பிள்ளையாக இவரைக் கருதிய திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் அன்பும், உதவியும் தேவையான எல்லோருக்கும் இன்முகத்துடன் அளித்தவர். அந்தத் தொடர்பு நம் நண்பரின் வாழ்க்கைப் பயணத்தில் முக்கியமான ஓர் அம்சம். திரு. எம்.ஜி.ஆர். அவர்களுக்காக நான் சாராய ஊழல் வழக்கில் வாதாடி நாங்கள் வெற்றியும் பெற்றோம். வழக்கு தீர்ப்பான மறுநாளே அப்பொழுது முதலமைச்சராக இருந்த அவர் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி கூறினார். அரசியலைப்பற்றி கூறாமல் விலகிக்கொள்வதே இந்தக் காலக்கட்டத்தில் நலம் என்பது என் கருத்து. திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் நல்ல மாமனிதர் என்று கூற எனக்குத் தயக்கமில்லை.

    பின்பு டாக்டர் ஜெயலலிதா அவர்களுக்கும் திருமதி ஜானகி ராமச்சந்திரன் அவர்களுக்கும் ஆட்சி அலுவலகப் பொறுப்புப்பற்றி வழக்கு வந்தபொழுது திரு. கற்பகவிநாயகம் என்னை மூத்த வழக்குரைஞராக வைத்து வாதாடிய விவரம் பற்றி அவரே கூறியிருக்கிறார். உயர்நீதிமன்றத்தில் நாங்கள் வெற்றி பெற்றோம். அந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்தபொழுது மக்களின் கூட்டம் அலைமோதியது. நண்பர் திரு. கற்பகவிநாயகம் அவர்களின் உழைப்பும் ஒத்துழைப்பும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. திரு. கற்பகவிநாயகம் அவர்கள் அரசுக்காக வாதாடிய சமயம், ஒரு தனி நீதிபதியின் முன்பு சில வழக்குகளில் மட்டும் நான் வாதாடியிருக்கிறேன். நேர்மையாக யார் இருந்தாலும் அவரைப் போற்றுவது என் குணம். அது என் முன்னோர்களால் எனக்கு ஊட்டப்பட்ட குணம்.

    அந்தச் சமயங்களில் எனக்கு இரண்டு நீதிபதிகள் தலைமை வகிக்கும் நீதிமன்றங்களில் கொலைக் குற்ற வழக்குகளில் ஆஜராகவேண்டிய நெருக்கடிகள் அதிகம். நான் இந்த நண்பரை முதன் முதலாக சந்தித்தபொழுது அவரிடம் பெண்மையைக் கண்டேன்; பின்பு மென்மையைக் கண்டேன். பெண்ணில்தானே ஆங்கிலத்திலேயாவது ஆண் அடக்கம் - FEMALE - SHE - WOMAN. அவர் சொற்பொழிவுகள் கவருவதுடன் கேட்போர்களின் மனங்களில் நிலைத்து நிற்கும் என்பது சத்தியம்.

    விதியின் விளையாட்டினால் நான் மும்முறை மறுத்தும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை ஏற்கவேண்டி இருந்ததற்கு கட்டாயம் மிகுந்த அன்பிற்கும், பாசத்திற்கும் வற்புறுத்தலுக்கும் பணியவேண்டி இருந்ததுதான் காரணம். என் நீதிமன்றத்தில் சில வழக்குகளில் திரு. கற்பகவிநாயகம் திறமையாக வாதாடி உள்ளார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு இவர் உதாரணம்.

    நண்பர் குறிப்பிட்டுள்ளது போல ‘Morning Walk’ சமயம் நாங்கள் இருவரும், என் மகளும் பல மாதங்கள் ஒன்றிணைந்து சென்றுவந்தோம். பின்பு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்களுடன் மிகவும் சகஜமாகப் பழக வேண்டாம் என்ற அறிவிப்பு வந்த மறுதினத்திலிருந்து, நான் ஒழுக்கபாதையைக் கடைப்பிடிப்பவன் என்பதால், திரு. கற்பகவிநாயகத்திடம் ‘நான் நாளையிலிருந்து தனியாக நடைப்பயிற்சி மேற்கொள்கிறேன்’ என்று கூறிவிட்டேன்.

    நீதியை நேர்மையாக வழங்குவதற்கு வழக்கறிஞர்கள் சங்கமத்திலிருந்து நீதிபதி பதவியில் பொறுப்பேற்பவர்கள் பழைய நட்புகளை உதறிவிடுவது என்பது செயற்கையான - இயற்கைக்கு ஒவ்வாத கருத்து. என் முன் வாதாடிய பல வழக்கறிஞர்கள் நான் அந்தத்தொழிலில் இருந்தபொழுது என்னுடன் இணைந்தோ அல்லது எதிர்தரப்பிலோ வாதாடியிருக்கிறார்கள். நீதிபதியின் இருக்கை தெய்வீகம் பொருந்தியது. நான் நீதிபதியாக பணியாற்றிய முழுமையான காலத்தில் என் முன் யார் வாதாடுகிறார்கள் என்ற உணர்வே தோன்றியதில்லை, வழக்கு மட்டுமே தான் என்னை ஈர்க்கும்.

    அதற்கு முன்பே பேச்சுவாக்கில் நம் நண்பருக்கு உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க ஆர்வம் இருந்ததை தெரிந்துகொண்டேன். தக்க சமயத்தில் வாய்ப்பு வந்த பொழுது நான் அவர் தகுதியை அறிந்திருந்த காரணத்தால் ‘காலேஜியம்’ முன் அவர் பெயர் வைக்கப்பட்டு அங்கீகாரம் ஆகி நம் நண்பர் நீதிபதி திரு. கற்பகவிநாயகம் ஆக பதவியேற்றார். என்னுடன் சக நீதிபதியாக அமரவேண்டும் என்ற விருப்பத்தை அவர் என்னிடம் தெரிவிக்க, தலைமை நீதிபதியிடம் கூறி அவர் விருப்பத்தை பூர்த்திசெய்து வைத்தேன். நான் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற சமயம் என்னுடன் மீண்டும் முதல் கோர்ட்டில் அமரவேண்டுமென விழைந்தார். ஒருநாள் மட்டும் அவர் விருப்பத்தை நிறைவேற்றியவனானேன்.

    Honest Judge என்று யாராவது கூறினால் என் சினத்தை என்னால் அடக்கமுடியாது. ஒரு நீதிபதி என்றாலே Honest ஆகத்தான் இருக்க வேண்டும். பின் எதற்கு அந்த அடைமொழி என்று சீறுவேன். பல ஆண்டுகளுக்குப்பின், அந்த அடைமொழிக்குத் தகுந்தவர்களை மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கவேண்டும் என்பது எனது இப்போதைய திண்ணமான எண்ணம்.

    ஒவ்வொரு நீதிபதியும் அவர்கள் அனுபவத்தின் வாயிலாக உண்மைக்கு வெகு அருகில் இருக்கும் சாட்சியத்தின் அடிப்படையில் நீதி வழங்குவார்கள். எனக்கு முன்மாதிரி நீதிபதி திரு. என். கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்கள்தான். என்னுடைய நீதிபதி பதவிக்காலத்தில் சட்டத்தை சட்டம் போட்டு மாட்டக்கூடாது என்பதுதான் என் முயற்சியாக இருந்தது. Justice, Equity, Good Conscience இவைகளின் அடிப்படையில் சட்டத்தை அணுகாவிட்டால் சட்டமிட்ட சட்டம்தான் மிஞ்சும். சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப, சட்டத்தை புறக்கணிக்காமல், அதை Flexible ஆக்க வாய்ப்புகள் ஏற்படும்பொழுது அந்தக் கோணத்தில் நீதி வழங்கப்படவேண்டும் என்பது என் கருத்து. இந்த என் கருத்தில் பல சக நீதிபதிகளுக்கு ஒப்புதல் இருந்தது. அந்த காலக்கட்டத்தில் நான் தனியாகவோ, சக நீதிபதியுடன் சேர்ந்தோ அளித்த தீர்ப்புகள் பல Law Journalகளில் இடம்பெற்றுள்ளன. இந்த விபரங்களுக்கும் இந்த அணிந்துரைக்கும் என்ன சம்பந்தம் என்பது நியாமான கேள்விதான். ஏனென்றால் தற்போது நான் ‘பெயர் வேண்டாம், புகழ் வேண்டாம், குருவும், இறைவனுமே போதும்’ என்ற கோணத்தில் அமைதியாக இருக்கிறேன். இப்போது நான் நீதிபதியாக இல்லை என்றாலும் மேற்கூறியவற்றுக்கு நான் காரணம் அளித்தே ஆகவேண்டும். நான் நீதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின் நம் நண்பர் ‘நான் உங்கள் பாணியைத்தான் பின்பற்றுகிறேன். பத்திரிகையாளர்கள்கூட என் தீர்ப்புகள் உங்கள் தீர்ப்புகள்போல அமைகின்றன என்று கூறுகிறார்கள். அதில் எனக்கு பெருமை’ என்பார். நான் ஒரு நல்ல நீதிபதியை முன்னுதாரணமாகக் கொண்டேன். நம் நண்பரோ நான் அவருக்கு முன்மாதிரி என்று அடிக்கடி கூறுகிறார். அவருக்கு கருத்துச் சுதந்திரம் உண்டு என்று கூறி இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்,

    ஒரு கீழமை நீதிமன்றத்தின் Judgeஐ காட்டிலும் ஒரு Justiceக்கு சட்டத்தை சரியாக விவரித்து வளைக்க முடியும் பொழுதெல்லாம் வளைத்து தீர்ப்புகள் வழங்க வேண்டிய அவசியம் உண்டு.

    என் குடும்பத்திற்கும், நம் நண்பரின் குடும்பத்துக்கும் நல்லுறவு எப்பொழுதும் உண்டு. மின்சார தீர்ப்பாயத்தின் தலைவராக அவர் செய்த நற்பணிகள் இந்தப் புத்தகத்தில் பதிவாகியுள்ளன. அத்துறையில் எனக்கு நேரிடை அனுபவம் இல்லை என்றாலும் எனக்கு தெரிந்த உச்ச, உயர்நீதிமன்ற சில நீதிபதிகள் அதைப்பற்றி தீர்ப்பு வழங்கியுள்ளதால் நானும் என்னை இன்னும் நீதிபதி போலவே பாவித்து ‘I Agree’ என்று கையொப்பம் இடுகிறேன். மின்சாரம் ஷாக் அடிக்கும் என்பதில் அனுபவம் உண்டு. ஆனால் மின் தீர்ப்பாயத் தலைவர் இவ்வளவு இன்ப அதிர்வுகளைத் தந்திருக்கிறார் என்று இப்பொழுது புரிந்துகொண்டேன்.

    என் குரு யோகிராம் சுரத்குமார். யோகிராம் என்று கூறலாம். நண்பரின் குரு சாய்ராம். அயராத இறை நம்பிக்கையும், குரு பக்தியும் மலைகளையும் தகர்க்க வல்லவை என்று நான் எப்பொழுதும் நம்புகிறேன். நம் நண்பரின் வாழ்க்கைப் பயணமும் அதைக் கோடிடுகிறது. நல்ல மனிதன் என்று பெயரெடுப்பது தான் சாய் ராமின் Nobel prize.

    - ஜஸ்டிஸ் டி.எஸ். அருணாசலம்

    முன்னாள் தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்.

    வாழ்த்துரை

    Dr. Justice Arijit Pasayat

    Judge, Supreme Court of India (Retd.)

    Vice-President of Special Investigation Team (SIT) New Delhi

    Justice M. Karpagavinayagam - an Ideal person

    One feels handicapped when asked to write about a person who is dear to him. It can sometimes embarrass the writer as his approach may be partial. But in the case of Justice Karpaga Vinayagam I do not have that hesitation because the fear of expressing something which is not correct shall not happen (but the fact that I am a human being may result in some exaggeration).

    What has impressed me most about Justice Karpaga Vinayagam are the qualities which go to make a perfect judge - Honesty, Commitment, Erudition and over-all undiminised desire to do justice. He is unique in certain ways. At the most troubling and testing (sometimes humiliating) times, he has remained calm, did not become negative in approach and did not start criticizing people who were responsible for this testing times. It may have been possible because of the fact that he had surrendered himself totally to the will of the All-mighty. That probably is the source of his strength of mind. Normally, people consider aforesaid factors to be weaknesses; but that according to me is strength. There are many judges who are erudite, learned but they do not have the same commitment or zeal and desire to render justice in the true sense.

    I was amazed to learn from officers of Madras High Court after Justice Vinayagam had retired that he did not even own a house in Madras and his material wealth was minimal. He had compensated this by having moral and spiritual wealth in abundance. Justice Vinayagam is gentleman par excellence. His humanity can be role model for many. He is a remarkable person who should be the role model of everyone (not necessarily confined to those who are a part of the judicial system)

    Arrogance and power have not gone to his head, though he has held many high offices in life.

    Justice Vinayagam is born in that holy land which is the abode of Lord Vinayak (after whom he is named).

    Such persons are in short supply.

    Let his tribe grow.

    Dr. Justice Arijit Pasayat

    உங்களோடு சில மணித்துளிகள்...

    நீதியரசர் மு. கற்பகவிநாயகம்

    இது எனது வரலாறு.

    ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு வரலாறு உண்டு!

    சிலர் வாடிக்கையான வாழ்வு வாழ்ந்துவிட்டுச் சாகிறார்கள்.

    சிலர் வேடிக்கையான வாழ்வு வாழ்ந்துவிட்டுச் சாகிறார்கள்.

    மிகச்சிலர் மட்டுமே உயர்ந்த குறிக்கொளைக்கொண்டு குறிப்பிடத்தக்கவர்களாக வாழ்ந்துவிட்டு மறைகிறார்கள்.

    இவர்கள் உடம்பால் மறைந்தாலும், இவர்கள் வாழ்வில் பதித்த தடங்கள் என்றும் மறைவதில்லை.

    இவர்களின் வாழ்வுதான் அர்த்தமுள்ள வாழ்வு; ஆத்மார்த்தமான வாழ்வு.

    இவர்களின் வரலாறுதான் வரும் சந்ததிகளுக்குப் பாடமாகவும் அவர்கள் முன்னேறுவதற்கு ஊக்கமாகவும் அமையும்.

    எனது வரலாறு எழுதப்பட வேண்டும் என்று பலர் என்னைக் கேட்டுகொண்டபோது, நான் எனது வரலாறை எழுதத் தகுதி உள்ளவன்தானா? எனது வரலாறு எழுதப்படத் தகுதி உள்ளது தானா? என்ற கேள்விகளை என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

    எனக்குத் தகுதி உள்ளதா இல்லையா? என்ற கேள்விக்கு நான் பதில் சொல்வதைக்காட்டிலும் எனது வரலாறு எழுதப்படத்தகுதி உள்ளது என்று மற்றவர்கள் சொல்கிறார்களே, அதற்காகவாவது எனது வரலாறு எழுதப்படட்டும் என்று ஒப்புக்கொண்டேன்.

    அதன் விளைவுதான் ராணிமைந்தன் அவர்கள் எழுதிய ஒரு நீதியரசரின் நெடும்பயணம் என்ற இந்தப் புத்தகம். இவர் எழுதி முடித்தவுடன், நான் படிப்பதற்காக இந்தப் புத்தகத்தை என்னிடம் தந்தார் ராணிமைந்தன்.

    படித்தேன், திரைப்படம் போல ஓடுகிறது இந்த வரலாறு!

    சின்னச்சின்ன வாக்கியங்கள்;

    அதிரடியான சம்பவங்கள்;

    இவைகளைக் கோர்த்துச் சொல்கிற நேர்த்தி.

    ஆற்றொழுக்குப் போன்ற ஓட்டம்;

    இவைகள் படிப்பவர்களுக்கு சுவையையும்

    ஆர்வத்தையும் ஊட்டுவதாக அமைந்துள்ளன.

    சுருங்கச் சொன்னால், எனது முழு உருவத்தையும் முதன் முதலாக நானே பார்த்துக்கொள்ளும் அற்புதக் கண்ணாடியாக இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் ராணிமைந்தன்.

    நான், விநாயக சதுர்த்தி அன்று பிறந்தவன். எனவேதான் எனக்குப் பெயர் கற்பகவிநாயகம்.

    துவக்க காலத்தில் கடவுள் இல்லை என்று நம்பியவன்;

    கால ஓட்டத்தில் ‘கடவுள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன’ என்று எண்ணிக் காலத்தை ஓட்டியவன்;

    ஆனால் இன்று, கடவுளின் கருணை இல்லாமல் எதுவுமே இல்லை என்று நம்புகிறவன்.

    இந்த மூன்றாம் கட்டத்து வாழ்க்கையில்தான் நான் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்வதாக, ஆத்மார்த்தமான வாழ்வு வாழ்வதாக மனப்பூர்வமாக நம்புகிறேன்.

    இந்த நம்பிக்கைதான் எனக்கு

    நிமிர்ந்த நன்னடையையும்,

    நேர்கொண்ட பார்வையையும்

    தந்திருக்கிறது.

    முந்தைய காலக்கட்டங்களில் மூடநம்பிக்கைகளோடு வாழ்ந்திருக்கிறேன்.

    இன்றைய காலக்கட்டத்தில்தான் நான் அறவாழ்க்கையை உறுதியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்; திருப்தியோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

    எனக்கு சமுதாய ஒழுக்கம் பிடிக்கும். அதைவிட எனக்கு தனிமனித ஒழுக்கம் பிடிக்கும்.

    சமுதாய ஒழுக்கம் பேசுபவர்கள் தனிமனித ஒழுக்கம் உள்ளவர்களாக அமையவேண்டும். அப்போதுதான், அவர்களின் பேச்சில் உண்மை உண்டு; கேட்போர் இதயத்தைத் தொடும் வலிமை உண்டு;

    சராசரி மாணவனாக; உயர்நிலைப்பள்ளியில் இரண்டுமுறை தேர்வில் தோல்வி அடைந்தவனாக;

    தட்டுத்தடுமாறிப் பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு கல்லூரியில் படிக்க ஆர்வமில்லாத மாணவனாக, நாடக நடிகனாக;

    திரைப்படத்தின் வாய்ப்புக்களுக்காக தேடி அலைந்த ஒரு சாதாரண மனிதனாக இருந்த நான்,

    உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞராக;

    உயர்நீதிமன்ற நீதியரசராக;

    ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத் தலைமை நீதியரசராக;

    டில்லியில் உச்சநீதிமன்ற நீதியரசருக்கு இணையான பதவியான அகில இந்திய மின்சார மேல் முறையீட்டுத்

    Enjoying the preview?
    Page 1 of 1