Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Vazhve Peranantham
En Vazhve Peranantham
En Vazhve Peranantham
Ebook224 pages1 hour

En Vazhve Peranantham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புகைப்படக் கலைஞர்கள் மீது எனக்கு எப்போதுமே நிறைய ஈடுபாடு உண்டு. கூடவே கொஞ்சம் பொறாமையும் உண்டு. காரணம் அவர்களின் கண்கள் சிறப்பானவை. நம் கண்கள் காணத்தவறிவிடும் சில அபூர்வக் காட்சிகளை அவர்களின் கண்கள் கண்டுவிடும். லென்ஸ் வழியே பார்ப்பது மட்டுமல்ல, சாதாரணமாகவே பார்த்தாலும் ஒரு காமிராக் கலைஞனின் பார்வையில் நிச்சயம் ஒரு கலையழகு மிளிரும் இதை நான் பல புகைப்படக் கலைஞர்களிடம் கண்டு வியந்திருக்கிறேன்

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580149407623
En Vazhve Peranantham

Read more from Kalaimamani ‘Yoga’

Related to En Vazhve Peranantham

Related ebooks

Reviews for En Vazhve Peranantham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Vazhve Peranantham - Kalaimamani ‘YOGA’

    https://www.pustaka.co.in

    என் வாழ்வே பேரானந்தம்

    En Vazhve Peranantham

    Author:

    கலைமாமணி 'யோகா'

    Kalaimamani ‘YOGA’

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-yoga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    புகைப்படக் கலைஞர்கள் மீது எனக்கு எப்போதுமே நிறைய ஈடுபாடு உண்டு. கூடவே கொஞ்சம் பொறாமையும் உண்டு. காரணம் அவர்களின் கண்கள் சிறப்பானவை. நம் கண்கள் காணத்தவறிவிடும் சில அபூர்வக் காட்சிகளை அவர்களின் கண்கள் கண்டுவிடும். லென்ஸ் வழியே பார்ப்பது மட்டுமல்ல, சாதாரணமாகவே பார்த்தாலும் ஒரு காமிராக் கலைஞனின் பார்வையில் நிச்சயம் ஒரு கலையழகு மிளிரும் இதை நான் பல புகைப்படக் கலைஞர்களிடம் கண்டு வியந்திருக்கிறேன். அதிலும் நண்பர் திரு. யோகா அவர்கள் இப்பேர்ப்பட்ட ஸ்பெஷல் பார்வையில் ஒரு சூரர்.

    யோகா அவர்களின் காமிரா பதிவு செய்யாத பெரிய நிகழ்ச்சிகளோ, அவரது லென்ஸில் சிக்காத பிரமுகர்களோ இருக்க முடியாது. அப்படி இந்தப் புகைப்படத் துறையில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்திருக்கும் ஆற்றல் மிகு கலைஞர் அவர்.

    யோகாவுக்கு உள்ள இன்னொரு சிறப்பு அவரது பயண அனுபவங்கள். புகைப்படக் கலைஞர் என்றால் கல்யாணம், ரிசப்ஷன், இசை விழா நிகழ்ச்சிகளுக்குச் சென்று படம் எடுத்து, ஆல்பம் போட்டுக் கொடுப்பதுடன் வேலை முடிந்து, அடுத்த கல்யாண அழைப்புக்காகக் காத்திருப்பவர் என்ற பொதுவான அபிப்ராயத்தை அடியோடு துடைத்தெறிந்தவர் யோகா.

    பல ஊர்கள், பல நாடுகளுக்குச் சென்று காமிராவை இயக்கியவர். பார்த்த இடங்களை படங்களில் மட்டுமின்றி, கட்டுரைகளாகவும் பதிவு செய்தவர்.

    அவை இப்போது ஒரு தொகுப்பாக வெளிவருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நூலில் அவரது கட்டுரைகள் பல வேறுபட்ட இடங்களின் சிறப்புகளை எழுத்தால் படம் பிடித்திருக்கின்றன.

    குலு, மணாலி போன்ற எழிலான மலைப்பிரதேசங்கள், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கேப்டவுன், ஹாங்காய், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் யோகாவுக்குக் கிடைத்த அனுபவங்கள் ரசிக்கத்தக்கவை.

    தென் ஆப்பிரிக்காவுக்குப் போனவர் தென்காசியையும் விட்டுவைக்கவில்லை. அன்றயை முதலமைச்சர் டாக்டர் கலைஞருடன் சிங்கப்பூர், மலேசியா, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுடன் துபாய், இயக்குநர் இமயம் பாரதி ராஜாவுடன் குவைத் - என்று எத்தனை பேருக்கு இத்தகைய வாய்ப்புகள் கிடைக்கும்?

    புட்டபர்த்தி அனுபவங்கள் புல்லரிக்க வைக்கின்றன.

    வெறுமனே போனோம், வந்தோம் என்றில்லாமல், 'நாம் பெற்ற அனுபவம் பெறுக இவ்வாசகர்கள்!' என்ற சிந்தனையில் அவற்றை நமக்கு நூலாகத் தந்திருப்பது யோகாவின் சிறப்பை மேலும் உயர்த்தியிருக்கிறது.

    'அனுபவம் மிகச் சிறந்த ஆசான்; ஆனால் கட்டணம் அதிகம்' என்று ஆங்கிலத்தில் ஒரு கூற்று உண்டு. காமிராக் கலை பொதுவாக அதிக செலவு வைக்கும் கலைதான். ஆனால் யோகாவைப் போன்ற கலைஞர்களுக்கு அது பேனாவாகவும் பயன்படுகிறது. பயணநூல்கள் தமிழில் மிக அதிகம் என்று சொல்வதற்கில்லை.

    'சோமெலெ' போன்ற முன்னோடிகளில் தொடங்கி மணியன், சாவி என்று தொடர்ந்து வந்தாலும் நிறையப் பேர் இதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது பயண இலக்கியத்திற்கு ஒரு நட்டமே.

    நண்பர் யோகாவின் இந்த நூல் நட்டத்தைப் போக்கும் முயற்சி.

    மகிழ்ச்சியாக இருக்கிறது.

    63, தனலட்சுமி அவென்யூ

    சென்னை - 600020

    ஏ. நடராசன்,

    தொலைக்காட்சி

    முன்னாள் இயக்குனர்.

    என்னுரை

    நான் தொழில் முறையிலும் தனிப்பட்ட ஆர்வத்தின் பேரிலும் மேற்கொண்ட பயண அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டு மகிழும் இரண்டாவது நூல் இது.

    இதற்கு முன், ‘பூலோகம் ஆனந்தத்தின் எல்லை' என்ற நூல் மூலம் நூலாசிரியனாக, ஒரு கட்டுரையாளனாக என்னை முகம் காட்டிக்கொண்டேன். அந்த நூல் பலரின் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. பத்திரிகைகள், முக்கியமாக கல்கி, அமுதசுரபி, குங்குமம், கலைமகள் போன்றவை, அந்த நூலை நல்ல முறையில் விமர்சனம் செய்து அறிமுகப்படுத்தி என்னைப் பெரிதும் ஊக்கப்படுத்தின. அந்த இதழ்களின் ஆசிரியர்களுக்கு என் நன்றியினைக் காணிக்கையாக்கிக் கொண்டு, என்னுடைய இந்த 'என் வாழ்வே பேரானந்தம்' என்னும் தொகுப்பையும் இப்போது வெளியிடுவதில் பெருமிதம் அடைகிறேன்.

    என்னை ஓர் எழுத்தாளனாகவும், கட்டுரையாளனாகவும், அங்கீகரித்து அறிமுகப்படுத்தி, பல கட்டுரைகளை வெளியிட்டு ஆதரவளித்து வரும் கலைமாமணி டாக்டர் விக்கிரமன் அவர்களுக்கு நான் எத்தனை நன்றி சொன்னாலும் போதுமானதாக இராது. அவரை வணங்கி மகிழ்கிறேன்.

    'லேடீஸ் ஸ்பெஷல்' மாத இதழில் என்னுடைய கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் அதன் ஆசிரியர் திருமதி கிரிஜா ராகவன் அவர்களுக்கும் மற்ற இதழ்களின் ஆசிரியர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இப்படித்தான் எழுத வேண்டும் என்று அவ்வப்போது எனக்கு வழிகாட்டி வரும் அன்பு நண்பர் திரு சுப்ர, பாலன் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த நூலுக்குத் தம் ஆகிவந்த கரங்களால் வாழ்த்துரை வழங்கியுள்ள என் பெருமதிப்புக்குரிய திரு ஏ.நடராசன் (தொலைக்காட்சி முன்னாள் இயக்குநர்) அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டவன்.

    எப்போதும் என் நலம் நாடுகிற மற்ற நண்பர்கள் அனைவருக்கும், அச்சிட்டு உதவும் நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

    அன்பன்

    'யோகா'

    சென்னை – 17

    உள்ளே...

    குலு பள்ளத்தாக்கும் மணாலி பனிச்சிகரங்களும்

    தென் ஆப்ரிக்காவின் சொர்க்கம்

    ‘கேப் டவுன்’

    திருவள்ளூர் வீரராகவ சுவாமி மகிமை

    ஹாங்காங் பயணங்கள்

    பல்சுவை விருந்தாக ஹரித்துவார் ரிஷிகேஷ் பயணம்

    தென்காசிக் கோயில்

    இறைவன் விரும்பும் இடம் மணிகரண்

    "ரஹ்மான்'' இசை வெள்ளத்தில்துபாய்

    அழகான ஜெய்ப்பூர் – ஜோத்பூரில் ஆனந்தமான பயணம்

    சோளிங்கபுரத்து யோகநரசிம்மரே! நீயே நிரந்தரமானவர்!

    சிங்கப்பூர் மலேசியாவில் முதல்வருடன் ஆறு நாட்கள்

    ஒரு நாளில் ஒன்பது நந்திகள்

    புட்டபர்த்தியில் புனித விழா!

    ஒட்டக பூமியில் பாரதிராஜாவுடன் உலா வந்தபோது...

    இயற்கை அன்னை மடியில்... முசோரியும், டேராடூனும்

    அரசு விருந்தினராக சிங்கப்பூரில்

    குலு பள்ளத்தாக்கும் மணாலி பனிச்சிகரங்களும்

    இப்போதெல்லாம் காஷ்மீரத்திற்குத் தான் போக முடியவில்லை. 'எத்தனையோ திரைப்படங்களில் பார்த்து வரும் சிம்லாவுக்காவது போய்வரலாம்' என்றார்கள் எங்கள் குழந்தைகள். சிம்லா என்றால் பனிக்கட்டிகள் இருக்கும். அங்கு சென்று அவற்றை அள்ளி அள்ளி விளையாடலாம் என ஆசைப்பட்டார்கள் அவர்கள். ஆனால் நாங்கள் புறப்பட்ட நேரம் சிம்லா பயணத்துக்கு ஏற்றதில்லை என்பது பிறகுதான் தெரிந்தது. அந்த மே மாதக் கோடை விடுமுறையில் சிம்லா எங்களைப் பலவகையிலும் சோகத்தில் ஆழ்த்தியது.

    டெல்லிவரை ரயிலில் சென்றுவிட்டு அங்கு சதர்ன் டிராவல்ஸ் மூலம் ஒரு 'டாடா சுமோ' வண்டியை ஏற்பாடு செய்துகொண்டு புறப்பட்டோம். நான், என் மனைவி சாவித்திரி, பத்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மூத்த மகள் அனுரேகா, ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்த இரட்டையரான அருண் மற்றும் அருணா, என் மனைவியின் சகோதரி லலிதா, அவளது கணவர் பாலு, அவர்களின் குழந்தை பவித்ரா என எட்டு பேரையும் 'டாடா சுமோ' தன்னுள்ளே சுபலமாக அடக்கிக்கொண்டது. காலை பத்து மணிக்குப் புறப்படுவதாக ஏற்பாடு. ஆனால் வண்டி கிளம்புகையில் மணி பன்னிரண்டரைக்கு மேல் ஆகிவிட்டது. மே மாதத்தின் முதல் வாரத்தில் சென்னையில்தான் வெப்பம் உடலைச் சுட்டுப்பொசுக்குகிறது. ஆனால் டெல்லியில் மிதமான வெயிலின் ஊடே இதமான தென்றல் காற்று வீசிக்கொண்டிருந்தது இனிமையாக இருந்தது. வெயில் இருந்தும் வியர்வையில்லாத களைப்புத்தெரியாத பயணம்.

    சண்டிகர்வரை தேசிய நெடுஞ்சாலை மிகவும் கவனமாகப் பராமரிக்கப்பட்டு வருவதால் பயணம் எளிதாக இருந்தது. தொடர்ந்து சாலைகளின் இருபுறமும் உயர்ந்து வளர்ந்த யூகலிப்டஸ் மரங்கள் அழகாக இருப்பதோடல்லாமல் நிழல் தருவனவாகவும் உள்ளன. வழியில் பானிபட் நகரத்தைக் கார் கடந்து சென்றபோது சரித்திரப்பாடத்தில் படித்த வரலாற்றுச் செய்திகளெல்லாம் நினைவுக்கு வந்துவிட்டன. பானிபட் நகரத்தைத் தாண்டியதிலிருந்து எங்கு பார்த்தாலும் சூரியகாந்திச் செடிகள் பல ஏக்கர் பரப்பில் வளர்க்கப்பட்டு பார்ப்பதற்கு கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.

    'Drive safe, Be Safe'

    ‘Careful Driving Cost Nothing'

    போன்ற வாசகங்கள் வழி நெடுகிலும் வாகனம் ஓட்டுவர்களை உஷார் படுத்திக்கொண்டே இருக்கின்றன. வழியில் சாலையோரக் கடை ஒன்றில் சுக்கா ரொட்டி, பாலக் பனீர், ஆலூமட்டர், சன்னா மசாலா, ஆனியன் பக்கோடா என்று ஒரு பிடி பிடித்தோம். சண்டிகரில் அறை எடுத்துத் தங்கிவிடலாம் என்று டிரைவரிடம் சொன்னோம். ஆனால் இரவு எந்நேரமானாலும் சிம்லா போயிடலாம்' என்கிற மாதிரி சொல்லிவிட்டு சண்டிகரைத் தொடாமலே 'பை - பாஸ்' சாலையில் டிரைவர் பயணத்தைத் தொடர்ந்துவிட்டார். சண்டிகரிலிருந்து சிம்லா செல்லும் வழியில் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் என்று கூறியிருக்கிறார்கள். அதை அனுபவித்து மகிழமுடியாமல் இரவிலேயே மலைப் பாதைகளில் வளைந்து வளைந்து பயணம் செய்து சிம்லா வந்தடையும் போது நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மேலாகிவிட்டது.

    சிம்லாவில் எங்கள் நண்பர் ஒருவர் இருக்கிறார். ஜார்ஜ் என்பது அவர் பெயர். தொலைபேசித் துறையில் பணிபுரியும் அவரை, சென்னையிலிருந்தும் டெல்லியிலிருந்தும் கூட தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளப் பலமுறை முயன்றும் முடியவில்லை. அவருடன் தொடர்பு கொண்டிருந்தால் சிம்லாவில் தங்குமிடமாவது ஏற்பாடு செய்திருப்பார்.

    நிராதரவாக எங்கள் வண்டி நள்ளிரவில் சிம்லாவை அடைந்தபோது எங்களை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டது. ஐந்தாறுபேர். இளைஞர்கள். நன்றாகப் போர்வையில் உடம்பைச் சுற்றிக்கொண்டிருந்தார்கள். இந்தப் போர்வைப் படையைப் பார்த்துப் பெண்களும் குழந்தைகளும் மிரண்டு போனார்கள். ஓரளவு எங்களுக்கும் பயம்தான்.

    விதம்விதமான பயங்கள் எங்கள் எல்லோரையும் தொற்றிக்கொண்டன. உயிரைப்பற்றிக்கூடக் கவலை சூழ்ந்தது.

    ஆனால் அவர்கள் நம்பக்கம் இருக்கிற மாதிரி லாட்ஜ் பிடித்துத் தருகிற ஏஜெண்டுகள் தாம் என்பது தெரிந்ததும்தான் நிம்மதி பிறந்தது. வேண்டாம் என்று சொல்லியும் அவர்கள் சுற்றிச் சுற்றி வந்தார்கள். டெல்லியைவிட்டுப் புறப்படுகிறபோதே டிராவல்ஸ் கம்பெனியில் சில ஹோட்டல்களின் முகவரிகளையும் தொலைபேசி எண்களையும் தந்திருந்தார்கள். அந்த நடு இரவில் உடனடியாகத் தொலைபேசி வசதியும் கிட்டவில்லை. ஒரு வழியாய்த் திறந்திருந்த கடை ஒன்றைப் பார்த்துத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். அந்த ஹோட்டல்கள் 'ஸாரி... இடமில்லை ' என்று பதில் சொன்னபோது வெறுத்துப்போனது. நள்ளிரவைத் தாண்டி அந்தக் குளிர்காற்றில் வேறு வழி?

    போர்வைக்காரன் ஒருவனை அழைத்தோம். தனியாக வரமாட்டானாம். இரண்டு பேராய் வந்தார்கள். 'ஹோட்டல் குல்மார்க்' என்று சொல்லி வண்டியை ஓட்ட வழிகாட்டினான். பழைய பல்வவனில் தொற்றிக்கொண்டு வருகிற மாதிரி, எங்கள் வண்டியின் பின்புறம் ஒருவனும், டிரைவர் பக்கம் ஒருவனும் நின்றுகொண்டே வந்தார்கள்.

    முன்னூறு நானூறு ரூபாயில் ரூம் கிடைக்கும் என்று சொன்ன போர்வை வாலாக்கள் தலைக்கு ஐம்பது ரூபாய் கமிஷன் வாங்கிக்கொண்டு போயே போய் விட்டார்கள்… ரிசப்ஷனை நெருங்கிக் கேட்டபோது ஆயிரத்து நூறு ரூபாய் அறைதான் இருக்கிறது'' என்ற பதில் கிடைத்தது. வேறுவழியின்றி இரண்டு அறைகள் எடுத்துக்கொண்டோம். ரிசப்ஷனிலிருந்து 'லிப்ட்' உள்ளே சென்றதும் அறைகளை அடைய லிப்ட் கீழ் நோக்கித்தான் செல்கிறது. மலைப் பிரதேசமான ஊர் என்பதால் இந்த மாதிரி அமைப்பில் ஓட்டல் அமைந்திருக்கிறது. எப்படியோ அறைக்குச் சென்று 'சாண்ட்விச்' மட்டும் சாப்பிட்டுவிட்டுச், சற்றுக் கண்ணயர்ந்தோம்.

    காலை ஏழுமணிக்கு ஒரு வழியாக நண்பர் ஜார்ஜ் போனில் கிடைத்தார். உடனே அவருடைய அண்ணனை ஓட்டலுக்கு அனுப்பி வைத்தார். இரவு பன்னிரண்டு மணிக்கு வந்து அறையை வாடகைக்கு எடுத்திருந்தாலும் பகல் பன்னிரண்டு மணியுடன் ஒரு நாள் கணக்கு முடிகிறது என்று ஓட்டலில் கூறிவிட்டார்கள். " இந்த ஓட்டல் வேண்டாம். காலி செய்துவிடுவோம். சவுத் இண்டியன் ரெஸ்டாரண்டும் ஜார்ஜ் அலுவலகமும் இருக்கும் பகுதியில் ஓர் ஓட்டல் இருக்கிறது. வாடகையும் குறைவு. அகே போய்விடலாம்'' என்று ஜார்ஜின் அண்ணன் கூறினார். மூட்டை முடிச்சுகளோடு புறப்பட்டால் அங்கும் ஒரு சோதனை காத்திருந்தது. அந்த ஓட்டல் இருக்கும் இடம் சர்ச் வளாகமாம், எனவே அங்கே கார் எதுவும் போக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். வழியிலேயே சற்றுத் தொலைவில் காரை நிறுத்திவிட்டுச் சுமைகளைக் கூலியாட்களின் தலையில் ஏற்றி அனுப்பிவிட்டு நடந்தோம். அந்த மலைப்பகுதியில் கூலியாட்களின் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து நடக்கவே முடியவில்லை. 'ஏன்தான் சிம்லாவுக்கு வந்தோமோ?' என்று வெறுத்துப் போயிற்று.

    ஹிமாசலப் பிரதேசத்தின் தலைநகரம் சிம்லா. பிரட்டிஷார் உருவாக்கிய நகரம் அது. இன்னும் பழைய தலைமுறையின் சின்னங்களாக வாழும் ஐரோப்பியர்களை இங்கு காணலாம். பழம் பெருமைகளை நினைவூட்டும் கட்டட வனப்பும் சர்ச்களும் இங்கு நிறையவே

    Enjoying the preview?
    Page 1 of 1