Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Panch Dwaraka
Panch Dwaraka
Panch Dwaraka
Ebook226 pages1 hour

Panch Dwaraka

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிறந்ததும் வளர்ந்ததும் நெய்வேலி நகரில். கடந்த 26 வருடங்களாக இருப்பது தலைநகர் தில்லியில். மத்திய அரசுத் துறை ஒன்றில் பணி. எட்டு வருடங்களாக இணையத்தில் எழுதி வருகிறேன்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115801927
Panch Dwaraka

Related to Panch Dwaraka

Related ebooks

Related categories

Reviews for Panch Dwaraka

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Panch Dwaraka - Venkat Nagaraj

    http://www.pustaka.co.in

    பஞ்ச் துவாரகா

    Panch Dwaraka

    Author:

    வெங்கட் நாகராஜ்

    Venkat Nagaraj

    For more books
    http://www.pustaka.co.in/home/author/venkat-nagaraj

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பஞ்ச் துவாரகா பயணிக்கலாமா?

    2. பொய் புன்னகை சிந்திய காரிகைகள்

    3. காலை உணவும் சாலைப் பயணமும்

    4. [CH]சகடா – ஆல் இன் ஆல் அழகுராஜா

    5. சோம்நாத் – மோதிஜிக்குப் பிறகு!

    6. முக்தி துவாரகா

    7. இரவுப் பயணமும் ஓட்டுனரின் தூக்கமும்!

    8. காந்தி பிறந்த மண்ணில்....

    9. மின்சார தட்டுப்பாடும் காற்றாலைகளும்

    10. த்வாரகாநாதன் – கண்டேன் கிருஷ்ணரை!

    11. ராஜ விருந்தும் மற்ற உபசாரங்களும்

    12. விதம் விதமாய் வாங்கலாம் வாங்க!

    13. [DH]தாருகா மற்றும் [DH]தாருகி - நாகேஷ்வர்

    14. கேடியா உடையும் ஆபரணமும்

    15. ராஜ் பரோட்டா

    16. பேட் த்வாரகா – ஒரு படகுப் பயணம்

    17. பேட் த்வாரகா – ருக்மணியின் கிருஷ்ணர்

    18. ருக்கு ருக்கு ருக்கு...... ருக்மிணி

    19. மிக்சட் ஜெய்ப்பூரி சப்ஜி

    20. மாத்ரு கயா - புளி போட்ட பாயசம்

    21. இடர் எனும் கிராமம் – 18 ரூபாய் தேநீர்

    22. ஸ்ரீநாத்ஜி தரிசனம் - நாத்துவாரா

    23. நாத்துவாரா – பிச்ச்வாய் ஓவியங்கள் - புதினா தேநீர்

    24. கேசரியா ஜி! மற்றும் ஷாம்லா ஜி!

    25. ஐஸ்க்ரீம் வேணும் – அடம் பிடித்த பெரியவர்

    26. அஹமதாபாத் நகரில் திருப்பதி ...

    27. குஜராத்தி உணவும் கிராமிய மணமும்

    28. ஏரிக்கரையின் மேலே.....

    29. டாகோர் – தங்க கோபுரமும் துலாபாரமும்

    30. ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்!

    என்னுரை

    வெங்கட் நாகராஜ்! இந்தப் பெயரில் தான் சில வருடங்களாக, சந்தித்ததும், சிந்தித்ததும் என்ற தலைப்புடன் வலைப்பூவில் எழுதி வருகிறேன். எனது பெயரில் பாதியும் என்னை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த எனது தந்தையின் பெயரில் பாதியும் சேர்த்து வைத்துக் கொண்டு எழுதி வருகிறேன். எட்டு வருடங்களாக வலையுலகில் எழுதிய பதிவுகளில் கணிசனமான பதிவுகள் சுற்றுலா மற்றும் புகைப்படங்கள் சம்பந்தப்பட்டவை.

    சமீபத்தில் ஒரு புத்தகத்தில் படித்ததில் பிடித்த வரிகள், இந்த அழகான உலகைச் சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள் நாம். ஒரு நாள் திரும்பிச் செல்லத்தான் போகிறோம். தேதிகள் மட்டுமே ரகசியம். சுற்றுலா வந்த இடத்தில், நிஜமாகவே சுற்றுலா செய்யாமல் இருப்பது நல்லதல்லவே…. பயணங்கள் செல்வது யாருக்குத் தான் பிடிக்காது? நம்மில் பலரையும் போல, பயணங்கள் செல்வது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். அப்படிப் பயணங்கள் செல்லும் போது நாம் பார்க்கும் விஷயங்களை நம்மோடு மட்டுமே வைத்துக் கொள்ளாது, மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி இரட்டிப்பானது. நான் பயணங்கள் சென்று வந்த பிறகு பயணம் பற்றிய தகவல்களை வலைப்பூவில் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற எண்ணத்துடன் எழுதிவிடுகிறேன்.

    அப்படி குஜராத் மாநிலம் சென்றபோது கிடைத்த அனுபவங்கள், அங்கே பார்க்க வேண்டிய இடங்கள் என பலவும் பயணக்கட்டுரைகளில் இடம் பெற்றன. அந்தக் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து, இதோ மின்புத்தகமாக வந்திருக்கிறது. மின்புத்தகமாக வெளியிட்ட திரு பத்மநாபன் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி. மின்புத்தகமாக வெளியிடப் போகிறேன், என்ற தகவலை ரஞ்சனிம்மா அவர்களிடம் சொல்லி, கட்டுரைகள் பற்றிய உங்கள் கருத்துகளை எழுதி அனுப்பி வையுங்கள் என்ற எனது கோரிக்கையை ஏற்று, எழுதித் தந்திருக்கும் திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு என் நமஸ்காரங்கள். வலைப்பூவில் தொடர்ந்து ஆதரித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் வலையுலக நண்பர்களுக்கும், எனது குடும்பத்தினருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

    இந்த மின்புத்தகத்தினைத் தரவிறக்கம் செய்து படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றி…..

    நட்புடன்

    வெங்கட் நாகராஜ்

    புது தில்லி.

    venkatnagaraj@gmail.com

    பஞ்ச் துவாரகா மதிப்புரை

    திரு வெங்கட் நாகராஜின் பஞ்ச் துவாரகா பயணக்கட்டுரையைப் படித்து முடித்தவுடன் எனக்கு இந்தக் கதைதான் நினைவிற்கு வந்தது.

    அக்பர் பீர்பல் கதை நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். பீர்பல் மேல் பொறாமை கொண்ட சிலர் அவரது இடத்தில் இன்னொருவரை அமர்த்த எண்ணி மன்னரிடம் ஒருவரை அழைத்து வருகிறார்கள். வந்தவர்கள் புதிய மனிதரைப் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழுகிறார்கள். இவர்கள் மன்னருடன் பேசிக்கொண்டிருக்கும்போது வாசலில் ஒருவர் ‘வெல்லம்!, வெல்லம்!’ என்று விற்றுக் கொண்டு போகிறார். மன்னர் புதியவரைப் பார்த்து, ‘வெல்லம் விலை விசாரித்து வாருங்கள்’ என்கிறார். பாய்ந்து சென்றவர் திரும்பி வந்து ‘மன்னா! படி 2 பணம்’ என்கிறார். ‘எந்த ஊரிலிருந்து?’ புதியவர் மறுபடி ஓடிப்போய் விசாரித்து வந்து ‘கிழக்குப் பக்கத்தில் உள்ள ஊராம்’ என்று பதிலளிக்கிறார். ‘எந்த வகையான கரும்பிலிருந்து எடுத்த வெல்லம் இது?’ மன்னர் கேட்க, புதியவர் மறுபடி வாசலுக்குப் போய் விசாரித்து வந்து பதிலைச் சொல்லுகிறார். அடுத்து அடுத்து மன்னர் கேள்விகளை அடுக்க, புதியவர் மறுபடி மறுபடி வாசலுக்கு ஓடி விடையைக் கேட்டு வந்து சொல்லுகிறார்.

    அந்த சமயத்தில் பீர்பல் அங்கு வர, மன்னர் அவரிடம், ‘வெல்லம் விலையை விசாரித்து வாருங்கள், பீர்பல்!’ என்கிறார். சற்று நேரத்தில் பீர்பல் திரும்பி வந்து, ‘மன்னா! வெல்லம் படி 2 பணம், கிழக்குப் பக்கத்திலிருக்கும் ஊரிலிருந்து வருகிறார். செங்கரும்பு இந்த வருடம் நல்ல விளைச்சலாம். அதிலிருந்து எடுக்கப்பட்ட வெல்லம் இது. தந்தை செய்து வந்த பரம்பரைத் தொழிலை இப்போது மகன் செய்யத் தொடங்கியுள்ளார். இவர்களது பரம்பரையின் வழக்கப்படி முதல் விளைச்சலில் வந்த கரும்பிலிருந்து பிழிந்து எடுத்த சாற்றிலிருந்து காய்ச்சிய வெல்லத்தை அரசரின் உபயோகத்திற்கு சமர்ப்பிக்க வந்துள்ளார்’ என்ற விவரங்களைக் கூற வந்தவர்கள் வாய்மூடி மௌனியாகிறார்கள்.

    திரு வெங்கட் நாகராஜின் பயணக்கட்டுரைகள் பீர்பல் போல சகல தகவல்களையும் நமக்குக் கொடுக்கும். பயணக்கட்டுரையின் தலைப்பு பஞ்ச் துவாரகா என்று சொன்னாலும் ஐந்தில் நான்கு துவாரகைகள் இருக்கும் குஜராத் மாநிலத்தைப் பற்றியும் சொல்லுகிறது. குஜராத் மாநிலத்திற்கு அவர் போவது முதல் தடவை என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் கிளம்புகிறார். நாமும் அவரை விட அதிக எதிர்பார்ப்புடன் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து படிக்க ஆரம்பிக்கிறோம்.

    பையை எடுத்துக்கொண்டு நண்பருடன் இண்டிகோ விமானத்தில் புறப்பட்டதிலிருந்து சொல்ல ஆரம்பிக்கிறார். அந்த ஒன்றரை மணி நேரப் பிரயாணத்தில், கூடப்பயணிக்கும் பயணிகள் அடிக்கும் கூத்துக்கள், பொய்ப் புன்னகை சிந்திய காரிகைகள் என்று இவர் வர்ணிக்கும் ஏர்ஹோஸ்டஸ் பெண்கள் அவர்களை சமாளிக்கும் விதம், இவர்கள் பொருட்கள் விற்பனை செய்வது இவருக்கு ‘இஞ்சி மரப்பா’ வியாபாரிகளை நினைவுபடுத்தியது என்று சுவாரஸ்யமாக சொல்லிக்கொண்டே போகிறார்.

    பஞ்ச துவாரகைகள் எவை எவை என்று முதலில் விளக்கம் சொல்லுகிறார். நான்கு துவாரகைகள் அங்கும், ஸ்ரீநாத் துவாரகை ராஜஸ்தானிலும் இருக்கின்றன. அதனால் முதலில் அஹமதாபாத்திற்குப் போகிறோம். நாம் சொல்வது போல அது அஹமதாபாத் இல்லையாம்; ஆம்தாவாத் என்று தான் சொல்லுகிறார்களாம். இப்படி குட்டிக் குட்டியாக பல சுவாரஸ்யமான, முக்கியமான தகவல்கள் இந்தப் பயணக் கட்டுரை முழுவதும் நிறைந்து கிடக்கிறது.

    வாகன ஓட்டி வசந்த் (B)பாய் வாய்நிறைய ‘மாவா மசாலா’வுடன் (மாவா என்பது என்ன? – கட்டுரையில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!) கார் ஓட்டத் துவங்க நமது பஞ்ச் துவாரகா பயணம் தொடங்குகிறது. ஆண்கள் பெயருடன் (B) பாய், பெண்கள் பெயருடன் (B) பெஹன் சேர்ந்திருக்கும் என்று அந்த மாநிலத்தின் பழக்கவழக்கங்களையும் சொல்லுகிறார். குஜராத்தி மொழியில் (வசந்த் (B)பாயிடம் தான் கற்றுக்கொண்டதை) அடிப்படை பேச்சு வார்த்தைகளையும் சொல்லித் தருகிறார்.

    இவரது கட்டுரைகளில் என்னைக் கவரும் இன்னொரு விஷயம்: நமது நாட்டின் வட பகுதியில் இருக்கும் ஊர்கள், பொருட்கள், மனிதர்களின் பெயர்களைச் சொல்லும்போது நாம் அவற்றைச் சரியாக உச்சரிக்க வேண்டும் என்று இவர் எடுத்துக்கொள்ளும் சிரத்தை. ஆங்கில எழுத்துக்களைப் போட்டு தெளிவு படுத்துகிறார்.

    குஜராத் மாநில சாலைகளை மிகவும் பாராட்டுகிறார். பேருந்துகள் தவிர (ch)ச(g)கடா என்ற மூன்று சக்கர வண்டிகளை ஆல்-இன்-ஆல் அழகு ராஜா என்று அறிமுகப்படுத்துகிறார். இந்த வண்டிகள் மனிதர்கள், ஆடுகள், மீன்கள் என்று எல்லோரையம் சுமந்து செல்லும் அழகு ராஜா ஆனால் அபாய ராஜா என்கிறார்.

    முதலில் சோம்நாத் கோவிலில் இருக்கும் ஜ்யோதிர் லிங்கத்தை (முதல் ஜ்யோதிர் லிங்கம் இது) தரிசனம் செய்துகொண்டு பஞ்ச் துவாரகாவிற்கு வருகிறோம். ஊரைப்பற்றி மட்டுமில்லாமல் அவை சம்மந்தப்பட்ட கதைகளையும் சொல்லுகிறார். நிகழ்காலத்திலிருந்து புராண காலங்களுக்கும் இந்தப் பயணத்தில் சென்று வருகிறோம். கண்ணனின் அவதாரம் முடிவிற்கு வந்த இடம் ஆதலால் இது முக்தி த்வாரகா. இங்கும் ஒரு கதை உண்டு. நடுநடுவே இயற்கையின் அழகினையும் தமது காமிராவால் படம்பிடித்து நமக்கு வழங்குகிறார்.

    போர்(b)பந்தரில் காந்தியடிகளின் நினைவில்லம் பற்றி சொல்லுகிறார் அடுத்த அத்தியாயத்தில். கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு அத்தியாயம்.

    குஜராத் மாநிலத்தின் காற்றாலைகள், சூரிய ஒளியின் மூலம் சாலை விளக்குகள் எரிக்கப்படுவது, சாலைப்பயணத்தின் போது குடித்த அர்[dh]தி [ch]சாய், என்று நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே போகிறார். த்வாரகா கோவில் பற்றிய அத்தனை தகவல்களையும் தருகிறார். த்வாரகாதீசனுக்கு நடக்கும் ராஜ விருந்து, மற்ற உபசாரங்கள், அலங்காரப் பொருட்கள் என்று தனித்தனி அத்தியாயங்களில் வர்ணிக்கிறார்.

    இன்னொரு ஜ்யோதிர்லிங்க ஸ்தலமாகிய

    Enjoying the preview?
    Page 1 of 1