Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Londonuku Azhaithu Pona 'Sabari'
Londonuku Azhaithu Pona 'Sabari'
Londonuku Azhaithu Pona 'Sabari'
Ebook252 pages1 hour

Londonuku Azhaithu Pona 'Sabari'

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

லண்டனை ஒரு புகைப்படக் கலைஞராக, பாரிஸை ஒரு கலா இரசிகராக, குவைத்தை ஒரு மனித நேயப் பண்பாளராக, அஹோபிலத்தை ஓர் ஆன்மிகவாதியாக மாறுபட்ட கண்ணோட்டங்களுடன் கண்டிருப்பது தனிச்சிறப்பு.

இந்த நூலில் மொத்தம் பத்துக் கட்டுரைகள் உள்ளன. 1. லண்டனுக்கு அழைத்துப் போன ஸபாரி, 2. பாரில் நல்ல பாரிஸ், 3. பாலைவன நாட்டில் சாலைப் பயண சந்தோஷம், 4. அஹோபில அற்புதங்கள், 5. சிங்கப்பூரில் ஒரு சாதனைப் பயணம், 6. ஸ்டார். ‘விர்கோ’ - ஒரு ரம்மியமான கப்பல், 7. தங்க முக்கோணம் - புவனேஸ்வர், புரி, கோணார்க், 8. இலங்கைப் பயணம் - நாற்பது ஆண்டுக் கனவு, 9. திகட்டாத தேக்கடி, 10. அரபு நாட்டில் அழகுத் திருக்கோயில்.

ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு சுவாரசியமான தகவல். ஒரு ‘மெசேஜ்’ உள்ளது. படிக்கும்போது ருசி தெரியும். அணிந்துரை, விமர்சனக் கட்டுரையாக மாறக் கூடாது என்று ஒவ்வொன்றையும் பற்றி படிக்கும் போது ருசி தெரியும்

Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580149407624
Londonuku Azhaithu Pona 'Sabari'

Read more from Kalaimamani ‘Yoga’

Related to Londonuku Azhaithu Pona 'Sabari'

Related ebooks

Related categories

Reviews for Londonuku Azhaithu Pona 'Sabari'

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Londonuku Azhaithu Pona 'Sabari' - Kalaimamani ‘YOGA’

    https://www.pustaka.co.in

    லண்டனுக்கு அழைத்துப் போன 'ஸபாரி'

    (பயண அனுபவங்கள்)

    Londonuku Azhaithu Pona 'Sabari'

    (Payana Anubavangal)

    Author:

    கலைமாமணி 'யோகா'

    Kalaimamani ‘YOGA’

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-yoga

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    வாழ்த்துரை

    தமிழகத்தில் எந்த ஒரு புகைப்படக் கலைஞருக்கும் இல்லாத தனிச்சிறப்பும், பெருமையும் என் இனிய நண்பர் கலைமாமணி யோகாவிற்கு உண்டு.

    ஆள்காட்டி விரலைப் பயன்படுத்தி வித்தகம் புரியும் இவர், மூன்று விரல்களைப் பயன்படுத்தி அருமையாக எழுதவும் செய்கிறாரே, இதையே இப்படிக் குறிப்பிடுகிறேன்.

    தமிழகத்தில் பயண இலக்கியத்திற்கென்றே அறியப்பட்ட எழுத்தாளர்கள் குறைவு. பயண இலக்கியத்தின் முன்னோடி, உலகம் சுற்றிய முதல் தமிழர் ஏ.கே. செட்டியாருக்குப் பிறகு இத்துறையில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செய்தவர் ‘இதயம் பேசுகிறது’ மணியன். மற்றபடி பயண இலக்கியத்திற்கென்றே அறியப்பட்ட எழுத்தாளர்கள் யார் என்கிற கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.

    பயண இலக்கியத்தை வளப்படுத்த வேண்டும் என்கிற தணியாத தாகம் உடையவன் நான். சென்னை விமான நிலையத்தைப் பார்த்தால் தமிழகமே காலியாகிவிடுமோ என்கிற அளவிற்கு ஏராளமானவர்கள் பயணிக்கின்றனர். ஆனால், தங்கள் பயண அனுபவங்களைப் பதிவு செய்கிறவர்கள் எத்துணை பேர்?

    ‘பார்த்த இடத்தைப் பற்றி பலர் எழுதி என்ன பயன்?’ என்று கேட்பார்கள் சிலர். இந்நூலில் திரு. யோகா குறிப்பிடும் லண்டனும், பாரீஸும், குவைத்தும் - நானும் பார்த்தவைதாம். எவ்வளவு வித்தியாசமான பார்வைகள்! எவ்வளவு வேறுபட்ட பதிவுகள்!

    லண்டனை ஒரு புகைப்படக் கலைஞராக, பாரிஸை ஒரு கலா இரசிகராக, குவைத்தை ஒரு மனித நேயப் பண்பாளராக, அஹோபிலத்தை ஓர் ஆன்மிகவாதியாக மாறுபட்ட கண்ணோட்டங்களுடன் கண்டிருப்பது தனிச்சிறப்பு.

    என்னுடைய இருபத்தைந்தாண்டு காலப் பழக்கத்தில் சிறு செயலைக் கூட நன்றியுணர்ச்சியுடன் பார்ப்பவர் யோகா. தன் பயணத்திற்குக் காரணமாக இருந்தவர்களையும் பயணத்தில் தமக்கு உதவியவர்களையும் பற்றி நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுவது இந்தப் பண்பைப் பலர் மத்தியில் வளர்க்கவல்லது.

    ஆடம்பரமான வரிகள் இல்லை. அலங்காரச் சொற்கள் இல்லை வீணான கற்பனை இல்லை. உள்ளதை உள்ளபடி உள்ளத்தைத் திறந்து அப்படியே கொட்டியிருக்கிறார். நூல் முழுவதும் ஏதோ நம்முடன் உரையாடுவதைப் போன்ற உணர்வே ஏற்படுகிறது. இது நூலின் வெற்றிக்கு நல்ல சான்று சில விவரங்களை மேம்போக்காகத் தராமல் முயன்று திரட்டியிருப்பது நுனிப்புல் மேயாத இவரது எழுத்தார்வத்தைக் காட்டுகிறது.

    நரசிம்மராவ் சிரித்துச் சிரித்துப் பேசுபவராமே! இது உண்மையில் அதிசயமான செய்திதான்.

    என் இனிய வெளிநாட்டுத் தமிழ் அன்பர்களான பாரீஸ் ஜமால், என்.சி. மோகன்தாஸ், பாரீஸ் பார்த்தசாரதி ஆகியோரைப் பற்றி யோகா குறிப்பிடும் இடங்களை இனிய நினைவுகளோடு படித்து மகிழ்ந்தேன்.

    நாம் இல்லாத இடத்தில் நாம் குறிப்பிடப்படுவது பெரிய விஷயம். திரு. நல்லி செட்டியார் என்னைப் பற்றி குவைத்தில் குறிப்பிட்டதை இந்த நூலில் குறிப்பிட்டதற்கு நன்றி யோகா அவர்களே!

    புத்தகத்தை மேலோட்டமாகப் புரட்டிவிட்டு அணிந்துரை தருகிறவனல்ல நான். ஆழ்ந்து படித்தேன். சுவைபடவும் நீட்டி முழக்காமலும் எழுதப்பட்டிருக்கிற நல்ல படைப்பு.

    எந்த ஒரு புகைப்படக் கலைஞரிடமும் இவ்வளவு எதிர்பார்க்க இயலாது.

    நல்வாழ்த்துகள்.

    என்றும் அன்புடன்

    லேனா தமிழ்வாணன்

    என்னுடைய குருநாதர் அண்ணா ‘ஜெனித்’ சங்கர் வழங்கியுள்ள முன்னுரை இது. – யோகா

    இந்த மனிதருள் இத்தனை நிறங்களா?

    வர்ணஜாலங்களுக்கிடையே வாழும் இந்த மனிதனுக்குத்தான் எத்தனை நிறங்கள்; எத்தனை முகங்கள்! என் தம்பி யோகாவுக்கு என் மீது உள்ள அளவிலாத அன்பும் ‘குரு’ பக்தியும் எங்களுடன் இருக்கும் அனைவருக்கும் தெரியும் இவரைப் புகைப்படக் கலைஞராகப் பார்க்கிறேன் நம் கணவனாகவும், அன்பான தகப்பனாகவும், மதிப்புள்ள சீடனாகவும், நல்ல இசையை ரசிக்கும் ரசிகனாகவும். இதற்கும் மேல் சிகரம் வைத்தாற் போல் சிறந்த எழுத்தாளராகவும் பார்ப்பது எனக்கு வியப்பை அளிக்கிறது. இந்த மனிதனுக்குத்தான் எத்தனை நிறங்கள்!

    கர்நாடக இசைக் கச்சேரிக்குச் சென்று சங்கீதம் கேட்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று. அவ்வாறு செல்லும் பொழுது யோகா புகைப்படம் எடுத்துக் கொண்டே இசையை ரசித்துக் கொண்டிருப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன்.

    அதனால்தானோ என்னவோ அவர் சென்ற இடங்களைப் பற்றி புகைப்படம் மட்டும் எடுக்காமல் தன் மனத்திலும் படம் பிடித்துக் கொண்டு அதைப் புத்தக வடிவில் உருவாக்கி அதன் பெருமைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைத்துள்ளார். இத்தனை அலுவல்களுக்கிடையேயும் இவர் எழுத்தாளராக ஜொலிப்பது. இவர் எழுத்தின்பால் கொண்ட ஆர்வத்தைப் பறை சாற்றுகிறது. இவரைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

    இவர் ‘நல்லி’ செட்டியார் மீது கொண்டுள்ள மதிப்பு, செட்டியார் இவர் மீது கொண்டுள்ள அன்பு, இதை எந்த உவமையோடும் ஒப்பிட முடியாதது. செட்டியாரைப் பற்றிப் பலமுறை யோகா என்னிடம் பேசியுள்ளார். அவரை யோகாவின் மூலமாகக் காண நேரிடும் போதெல்லாம் எனக்குக் கர்ணனைப் பற்றி ஞாபகம் வரும்.

    கர்ணனை யாரும் கண்டதில்லை. இந்த ‘கலியுகக் கர்ணனை’ நாம் அனைவரும் நேரிடையாகப் பார்க்கிறோம். அவர் அணியும் உடையைப் போல உள்ளமும் வெண்மையானது என்பதை இப்புத்தகம் படிக்கும்பொழுது தெரிகிறது.

    யோகா கால் பதியாத தடமும், கேமிராவில் பதியாத இடமும் வீண் என்றே கூற வேண்டும். ஏனென்றால் இவர் கண்டவுடன் புத்தக வடிவில் அதன் பெருமைகளையும் சிறப்புகளையும் நம் அனைவருக்கும் தெரியக் காட்டிவிடுகிறார்.

    லண்டன், பாரீஸ், சிங்கப்பூர் ‘ஸ்டார் விர்கோ’ கப்பல், ஆந்திராவில் அஹோபிலம், புவனேஸ்வர், புரி, கோணார்க் போன்ற பல இடங்களைப் பற்றி நாம் அறிய இப்புத்தகம் ‘டூரிஸ்ட் கைடு’ என்பார்களே... அதைப்போல மிக உதவியாக இருக்கும்.

    நான் இவரைப் பொது நிகழ்ச்சிகளில் பார்க்கும்போது தொண்ணூறு சதவிகிதம் நண்பர்கள் இவரை அறிந்திருப்பர் இதைப் பார்க்கும் நேரங்களில் நான் சிறிதளவு பொறாமை கூட அடைவேன். அப்போதெல்லாம் எனக்கு ஒரு வரி ஞாபகம் வரும். அது, ‘நாம் நடும் மரம் நம் உயரத்தைவிட அதிகமாக வளர்வதில்லையா?’ என்பதுதான் அது. நான் நட்ட மரத்தின் வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் அடைவேன்.

    எண்ணற்ற உள்ளங்களில் குடி கொண்டிருக்கும் யோகா நீடுழி வாழ்க என்று இந்த முன்னுரை மூலமாக இறைவனை வேண்டி அவரையும் வாழ்த்துகிறேன்.

    அன்புள்ளம் கொண்ட

    ‘ஜெனித்’ ஆர். சங்கர்

    அணிந்துரை

    அருமை நண்பர் புகைப்படக் கலைஞர் கலைமாமணி யோகா அவர்கள், தான் எழுதிய ‘லண்டனுக்கு அழைத்துப் போன ஸபாரி’ என்ற தமிழ் நூலுக்கு நான் ஓர் அணிந்துரை தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    ஏறக்குறைய முப்பதாண்டுகளுக்கு மேலாக திரு யோகா அவர்கள் என்னுடைய ஆத்ம நண்பர். அணிந்துரை தரும் அளவிற்கு எனக்குத் தகுதி உள்ளதா என்றுகூட யோசிக்கவில்லை. ஒப்புக் கொண்டேன்.

    ஒரு கால கட்டத்தில் ‘குமுதம் வார இதழில் நான் பணியாற்றியபோது பெருமளவுக்கு என் பேட்டிக் கட்டுரைகளுக்குப் படம் எடுத்துத் தந்து உதவியிருக்கிறார் யோகா.

    எந்த ‘அஸைன்மெண்ட்’ ஆக இருந்தாலும் உற்சாகமாக ஒப்புக்கொள்வார். நேர்த்தியாகப் படம் எடுத்துத் தருவார். ‘குமுதம்’ நிறுவன ஆசிரியர் அமரர் எஸ்.ஏ.பி. அவர்களின் அனுமதி பெற்றே ‘யோகா’ அவர்களுக்குப் படம் எடுத்துத் தர வாய்ப்பு அளித்தேன்.

    ரொம்பவும் இக்கட்டான சூழ்நிலையில் கூட மனம் தளராது ஊக்கமுடன் படம் எடுப்பார்.

    1978ஆம் ஆண்டு சிக்மகளூர் இடைத் தேர்தலில் திருமதி இந்திராகாந்தி அம்மையார் போட்டியிட்டபோது ‘யோகா’தான் சுறுசுறுப்பாக எப்படியும் படம் எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு என்னோடு ஜீப்பில் தொற்றிக் கொண்டு, இந்திரா காந்தி அம்மையார் சிரித்த முகத்துடன் காரிலிருந்து இறங்கியவுடன் ‘க்ளிக்’ செய்தார். சுமார் 90 படங்கள் ‘க்ளிக்’ செய்த பிறகு.

    காரணம், முதல் நாள் இரவு அம்மையார் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரர் இறந்து போனார். காலையில் எனக்குப் பேட்டி தருவதாக திருமதி இந்திராகாந்தி எங்களுக்கு உறுதியளித்திருந்தார். அந்த துர்சம்பவம் நிகழ்ந்த பிறகு பேட்டி எப்படி கிடைக்கும்? ஆனால், நான் வெறும் கையுடன் திரும்ப இயலாது.

    இந்திராகாந்தி அம்மையாரை யோகா எடுத்த படம்தான் ‘குமுதம்’ அட்டைப்படமாக வெளியாயிற்று. அதுவும் அவரது வெற்றிச் செய்தி வெளியான அன்று.

    யோகாவின் போட்டோ எடுக்கும் திறமை பற்றி இந்த அணிந்துரையில் விவரிக்கும் நோக்கம் எனக்கு இல்லை அவருடைய திறமை நாடறிந்த விஷயம்.

    திரு. யோகாவின் இந்த தமிழ் நூலில் பத்து கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றையும் பற்றி விமர்சனம் செய்து எழுதுவது அணிந்துரையாகாது.

    படிக்கிறவர்கள் மெய்சிலிர்க்கும் வகையில் படித்து ரசிப்பார்கள். ஒவ்வொன்றும் அவ்வளவு சுவாரசியம்.

    காரணம், ஒரு போட்டோ கலைஞர் கட்டுரைகளை சுவாரசியமாக எழுதுவது என்பது ரொம்பவும் அபூர்வமான விஷயம். போட்டோ எடுக்கிறவர்களுக்கு கண்ணும் கருத்தும் காமிராவிலேயேதான் இருக்கும்.

    அந்த வகையில் யோகா ஓர் அபூர்வமான மனிதர். சரளமான நடையில், சுவாரசியமாக, தகுந்த தகவல் குறிப்புகளோடு, உணர்வு பூர்வமாகவும், மனித நேயத்தோடும் இந்தப் பத்துக் கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார்.

    தலைப்புக் கட்டுரையைப் பற்றிச் சொல்ல ஆசைப்படுகிறேன்.

    கலா ரசிகரும், கொடை வள்ளலும், ஜவுளி வர்த்தகத் துறையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சாதனையாளரும், பண்பாட்டிற்கும் நட்புக்கும் இலக்கணமாகத் திகழும் கலைமாமணி பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் தன்னுடைய லண்டன் கடைத் திறப்பு விழாவுக்குச் சென்றபோது, ஸபாரி உடையில் சென்றிருக்கிறார். ஆனால், போட்டோ எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை.

    என்னைக் கூப்பிட்டுக் கொண்டு போயிருந்தால், உங்களை இந்த ஸபாரி உடையில் போட்டோ எடுத்திருப்பேனே என்று திரு. யோகா சொல்லியிருக்கிறார்.

    சாதாரணமாக நல்லி செட்டியார் அவர்கள் தூய வெள்ளை வேட்டியும், வெள்ளை ஷர்ட்டும் அணிவதை நாம் எல்லாரும் பார்த்திருக்கிறோம். நல்லி செட்டியார் அவர்கள் யோகாவிடம், "அதற்கென்ன? அடுத்த முறை லண்டன் செல்லும்போது நீங்களும் கூடவே வாருங்கள்,

    Enjoying the preview?
    Page 1 of 1