Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vendam! Ithu Vibareetham!!
Vendam! Ithu Vibareetham!!
Vendam! Ithu Vibareetham!!
Ebook91 pages47 minutes

Vendam! Ithu Vibareetham!!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

சேது, மதி என்னும் இரண்டு நண்பர்கள் முண்டச்சி சாமியின் கோவிலில் நடந்த அடுத்தடுத்த இரண்டு கொலைகளின் காரணங்களை ஆராய்ந்து தெரிந்துக் கொள்ள செல்கிறார்கள். அங்கு மதியின் காதலி கொலை செய்யப்படுகிறாள், யார் அவளை கொலை செய்தது? இதற்கும் அங்கு நடந்த மற்ற இரண்டு கொலைகளுக்கும் காரணம் என்ன? என்பதை வாசிக்கலாமா பட்டுக்கோட்டை பிரபாகரின் விறுவிறுப்பான நடையில்...

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580100906979
Vendam! Ithu Vibareetham!!

Read more from Pattukottai Prabakar

Related to Vendam! Ithu Vibareetham!!

Related ebooks

Related categories

Reviews for Vendam! Ithu Vibareetham!!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vendam! Ithu Vibareetham!! - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    வேண்டாம்! இது விபரீதம்!!

    Vendam! Ithu Vibareetham!!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    சேதுராமன், மதியழகன்.

    இந்த இரண்டு பெயர்களில் ஒன்றை முதலில் தொடுங்கள்.

    சரி, மதி என்று செல்லமாக அழைக்கப்படும் மதியழகனைப் பற்றி முதலில் சொல்லலாம்.

    இந்த வரி எழுதப்படும் நேரத்தில் மதி தனது வாடகை வீட்டில் இவனாக அமைத்திருந்த இருட்டு அறைக்குள் நேற்று ஒரு அமைச்சர் கலந்து கொண்ட தமிழ் விழாவில் எடுத்த புகைப் படங்களைக் கழுவி அச்சு போட்டுக்கொண்டிருக்கிறான்.

    அமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டபோது ஒரு கிளிக்!

    அமைச்சருக்குப் பொன்னாடை போர்த்திய போது ஒரு கிளிக்!

    அமைச்சர் மைக் முன்பாக வந்து நின்றபோது ஒரு கிளிக்!

    பிறகு அமைச்சர் மேடைக்குப் பின்புறம் வந்து இரகசியமாக தம்மடித்தபோது ஒரு இரகசிய கிளிக்!

    கடைசி புகைப்படம் பத்திரிகையில் சொல்லப்படாதது இவனாக தீடீரென்று கிடைத்த காட்சியைத் தவறவிடாம எடுத்தது.

    அமைச்சர் சுவாரசியமாக சிகரெட்டு பிடிக்கும் இந்த புகைப்படத்தை திடீரென்று வெளியிட்டால் என்ன ஆகும்?

    ஆசிரியர் ஒருவேளை சம்மதிக்கலாம்.

    ஆனால் உடனே அமைச்சரிடமிருந்து தொலைபேசி வரும்.

    'எவண்டா அவன் எடுத்தது? அந்தப் பரதேசி விலை மசன் மகனை உடனே வந்து என்னைப் பார்க்கச் சொல்லு!'

    இப்படித்தான் உரையாடல் தொடங்கும்.

    மதி புன்னகைத்துக்கொண்டான். புன்னகைத்துக் கொண்ட மதி கை இல்லாத பனியன் அணிந்திருந்தான். கை இல்லாத பனியன் அணிந்திருந்த மதி கருகருவென்று மீசை வைத்திருந்தான். கருகருவென்று மீசை வைத்திருந்த மதி அழகாயிருந்தான்.

    அழகாயிருக்கும் மதிக்கும் அந்த 'நட்சத்திரம்' வார இதழில் வேலை. புகைப்படம் எடுத்தல் அவனுடைய முழுநேரத் தொழில்.

    அந்த பத்திரிகை நிறுவனத்திலிருந்து இரண்டு வார இதழ்கள், இரண்டு மாதமிருமுறை இதழ்கள் வருகின்றன. அரசியல், சினிமா, பொழுதுபோக்கு, மகளிர் என்று நான்கும் நான்கு வகை இதழ்கள்.

    நான்கு இதழ்களுக்கும் கட்டுரைகள், பேட்டிகள் தொடர்பாக புகைப்படம் எடுக்க மதியும் மற்றும் ஒரு புகைப் படக்காரணும்தான்.

    மதிக்கு அதனால் எல்லாவகை மனிதர்களோடும் அறிமுகம், பழக்கம் உண்டு.

    பெரிய தொழில் அதிபர், அமைச்சர், கவிஞர், எழுத்தாளர், திரைப்பட நடிகை, சினிமா தயாரிப்பாளர் என்கிற வட்டத்திலும் புழங்கவேண்டும். வேலைக்குப் போகிற பெண், கல்லூரி யுவதி, செருப்பு தைக்கும் தொழிலாளி, காது கேளாதவன், நீச்சல் வீராங்கனை என்கிற வட்டத்திலும் புழங்கவேண்டும்.

    ஒவ்வொரு நாளும் புதிய அனுபவம். புதிய அறிமுகம்.

    அப்படி ஒரு அறிமுகத்தில்தான் வீணாவின் சந்திப்பு.

    வீனாவைப் பிறகு வர்ணிப்போம். தற்போது தகவலாக அவள் அழகி என்று மட்டும் அறிக.

    ஒரு கல்லூரி விழா. படமெடுக்கச் சென்றது மதி. அந்த நிகழ்ச்சியை அருமையாக நகைச்சுவையாக தொகுத்தவள் வீனா.

    நிகழ்ச்சி முடிந்ததும்... 'செல்வி வீணா, நீங்கள் சரளமாக சுவாரசியமாக நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தீர்கள். என் பாராட்டுக்கள்" என்றான் மதி ஆங்கிலத்தில்

    கல்லூரிப் பெண்களிடம் தமிழைத் தூக்கிச் சென்றால் சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளியைப் பார்க்கிற பார்வையில் பார்ப்பார்கள் என்பது அவனது அனுபவ அறிவு.

    ஆனால் அதை உடைத்தெரியும் விதமாக... 'அப்படியா? ரொம்ப நன்றி. ஒரு பிரபல புகைப்படக்காரரான உங்ககிட்டேர்ந்து பாராட்டு கிடைக்கிறது எனக்குப் பெருமை" என்று முத்துப் பல் வரிசை பளீரிடச் சிரித்துச் சொன்ன அவளையும், அந்த பதிலையும் - அவசர அவசரமாக அவனுக்குப் பிடித்துப்போய் விட்டது.

    ஒரு பெண் எல்லா கோணத்திலேர்ந்து பார்த்தாலும் அழகாய் தெரிவது ரொம்ப அபூர்வங்க. உங்ககிட்ட அந்த சிறப்பு இருக்கு. நீங்கள் அனுமதிச்சிங்கன்னா உங்களை சில புகைப்படங்கள் எடுக்க விரும்பறேன் என்றான் மதி.

    நீங்கள் என்னை புகைப்படம் எடுக்கறதுக்கு நான் அதிருஷ்டம் செய்திருக்கணும் சார். எடுங்க. என்று சம்மதித்தாள் வீணா.

    ஒரு புதிய புகைப்படச் சுருளை மாட்டி முப்பத்தி ஆறு விதமாக எடுத்துத் தீர்த்தான்.

    எடுத்த புகைப்படங்களில் பிரதி போட்டு அவளுக்கு அனுப்பி வைத்தான்.

    ஒவ்வொரு புகைப்படத்தின் பின்புறத்திலும் இரண்டு வரிகளில் அவனுடைய சின்னக் கருத்துக்களையும் எழுதினான்.

    'வண்ணத்துப் பூச்சியே, வா வா,

    Enjoying the preview?
    Page 1 of 1