Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Dhrogam Indru Thodakkam
Dhrogam Indru Thodakkam
Dhrogam Indru Thodakkam
Ebook90 pages43 minutes

Dhrogam Indru Thodakkam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

மேனகா, மித்ரா இருவரும் காதலர்கள். ஆனால் மித்ராவை விட்டுவிட்டு மேனகா ஸ்ரீதரன் என்பவரை திருமணம் செய்து கொள்கிறாள். மேனகாவின் இந்த முடிவிற்கு காரணம் என்ன? தன்னை காதலித்து ஏமாற்றிய மேனகாவை பழி தீர்க்க துடிக்கிறான் மித்ரா. அவன் எண்ணம் ஈடேறியதா?

இறுதியில் இவர்கள் நிலை என்ன ஆனது? வாசிப்போம் பட்டுகோட்டை பிரபாகரின் விறுவிறுப்பான பாணியில்...

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580100906988
Dhrogam Indru Thodakkam

Read more from Pattukottai Prabakar

Related to Dhrogam Indru Thodakkam

Related ebooks

Related categories

Reviews for Dhrogam Indru Thodakkam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Dhrogam Indru Thodakkam - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    துரோகம் இன்று தொடக்கம்

    Dhrogam Indru Thodakkam

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    தொடர்ச்சியாக ஒன்பதாவது சிகரெட்டைப் பற்ற வைத்தான் மித்ரா. எட்டாவது சிகரெட் புகைக்கும் போது தெறித்து விழுந்த நெருப்புத் துண்டுகள் 'பாலியஸ்டர்' சட்டையில் பொத்தல்கள் இட்டதை அவன் கவனிக்கவில்லை.

    கை நரம்புகள் விறைப்பாகி இருந்தன. பதற்றம் பாதம் வரை பாய்ந்திருந்தது. வாழ்வின் கடைசி ஆசையை செயல்படுத்துபவன் போல அந்தப் புகையை ஆழமாக உறிஞ்சினான், இருமினான். பின் மீண்டும் மீண்டும் இழுத்தான். நிகழ்ச்சி முடிந்தும் அணைக்கப்படாமல் இருந்த தொலைக்காட்சி, 'மைக்ரோஸ்கோப்' கருவி வழியாகப் பார்க்கும் திசுக்களைப் போல திரை முழுக்க புள்ளிகளைக் காட்டிக்கொண்டிருந்தது.

    ஆடம்பர சுவர்க் கடிகாரத்தின் பெண்டுலத்துடன் பொருத்தப்பட்டு இருந்த குதிரை இடமும், வலமும் ஒரே சீராக சென்று கொண்டிருந்தது. 'க்ளக், க்ளக், க்ளக், க்ளக், க்ளக், க்ளக்...'

    மித்ரா தன் இரண்டு கால்களையும் கண்ணாடி வேய்ந்த செவ்வக 'டீப்பாய்' மீது போட்டிருக்க... இங்கிருந்து தெரிந்தவை மொத்தம் நான்கு மரக்கால்கள்.

    தொலைபேசி ஒலித்தபோது மித்ராவின் கவனம் கலையவில்லை. ஆறாவது 'டிர்ர்ர்ரிங்' சத்தம் கேட்டதும் திரும்பி ஜென்ம விரோதியைப் போல தொலைபேசியைப் பார்த்து முறைத்தான். சிகரெட் புகையை அதன் மேல் ஊதினான். இரக்கம் காட்டாமல் அதைத் தொடர்ந்து கதறவிட்டான் தன் பற்களைக் கடித்தான்.

    அவனது கண்கள் மிகவும் சிவந்திருந்தன. கலைந்த தலையை ஒற்றைக் கையால் அடிக்கடி மேலும் கலைத்துக்கொண்டான். உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. தொலைபேசி பிடிவாதம் பிடித்தது. அவன் நெற்றியோர நரம்புகள் விம்மின.

    யூ... ஷட் அப்! கத்தினான். அது கேட்பதாய் இல்லை. 'படக்' என்று எடுத்து, 'ஹலோ' எல்லாம் சொல்லாமல், என்ன எழவு வேணும் உனக்கு? என்றான், வார்த்தைகளைக் கடித்து.

    மித்ரா இருக்காங்களா?

    அவனேதான்... என்றான்.

    எதிர்முனை சில விநாடிகள் மவுன அதிர்ச்சியில் உறைந்திருந்தது.

    நான் சித்ரா பேசறேன்.

    முதல்ல போனை வையிடி.

    எதிர்முனையின் பதிலைக் கேட்காமல் தொலைபேசியை 'பட்'டென வைத்தான். காற்றில் அறைந்து சாத்திக்கொண்ட ஜன்னல் கதவை முறைத்தான். எழுந்து நின்று தன் கைகளைப் பின்புறம் கட்டிக்கொண்டு அறையின் குறுக்கில் அபத்தமாய் பாதம் வைத்து நடந்தான். குறுக்கிட்ட நாற்காலியைக் காலால் உதைத்து நகர்த்தினான்.

    சிகரெட் பெட்டி எடுத்துத் திறந்து பார்க்க அது காலியாக இருந்ததால் இன்னும் ஆத்திரம் அடைந்தான்.

    வேலு...

    நான்கு தெருக்களுக்குக் கேட்கும்படி அடித்தொண்டையில் இருந்து கத்தினான்.

    சத்தம் கேட்டு அவன் பதறியபடி அறைக்குள் வந்து, அய்யா என்றான்.

    என்ன நொய்யா!

    அவன் கழுத்தில் மாலையாய் போட்டிருந்த அழுக்கேறின சிகப்பு ஈரிழைத் துண்டின் இரண்டு முனைகளையும் சேர்த்துப் பிடித்து அருகில் இழுத்து, சிகரெட் எங்கடா?

    மேசைக்குள்ளாற ரெண்டு பாக்கெட் இருக்குதுய்யா,

    அவனை விடுவித்து, மேசையின் டிராயரை இழுத்த வேகத்தில் அது கையோடு வந்தது. உள்ளே இருந்த பலவிதப் பொருட்களும் கீழே விழுந்து சிதறின.

    அந்த சிகப்பு 'டைரி'யும் மல்லாக்க விழுந்து, விசிறி வாழை போல காற்றில் பக்கங்கள் புரள அதன் உள்ளிருந்த அவளின் புகைப்படம் வழுக்கிக்கொண்டு தரையில் சில அங்குலங்கள் நழுவி நின்றது.

    எல்லாத்தையும் நான் எடுத்து வச்சிடறேன்ய்யா என்ற வேலு, முதலில் அந்தப் புகைப்படத்தைத்தான் எடுக்கச் சென்றான்.

    முட்டாள்! தொடாதே... அவளைத் தொடாதே! மித்ரா பாய்ந்து அந்தப் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தான். அதை தன் உள்ளங்கையில் வைத்தபடி முறைத்துப் பார்த்தான்.

    தரையில் சிதறிக் கிடந்த மற்ற பொருள்கள் அனைத்தையும் அள்ளிப் போட்டுவிட்டு, டிராயரை மேசையில் பொருத்திவிட்டு, சிகரெட் பாக்கெட்டை அவனிடம் நீட்டினான் வேலு.

    டேய் உக்காரு! இங்கே உக்காரு வேலுவின் கையைப்பிடித்து கட்டிலில் தன் அருகில் அமர வைத்து, "பாரு... எவ்வளவு அழகா இருக்கா பாரு! இந்தக் கண்ணைப் பாரு! உதட்டைப் பாரு! தெத்துப் பல்லைப் பாரு! முத்தம் கொடுக்கணும் மாதிரி இல்லை, பண்ணி இருக்கேன்

    Enjoying the preview?
    Page 1 of 1