Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sirai!
Sirai!
Sirai!
Ebook259 pages1 hour

Sirai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறை ! தனிமைச் சிறையில் வாடும் பத்திரிகை நிருபரைச் சுற்றி கதை தொடங்கி கிளைபரப்பிக் கொண்டே செல்லும் வேகம், விறுவிறுப்பு... அப்பப்பா..! அருமையான உத்தி.. பயங்கரவாதத்தின் கொடுமையை மென்மையான காதல் கருவைப் பின்னணியாகக் கொண்டு 18 அத்தியாயங்களில் படிப்பவர்களின் மனதைக் கனக்கச் செய்திடும் விதத்தில் அமைத்துள்ள ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.

ஆயிரம் குற்றவாளிகள் சட்டத்தின் இண்டு இடுக்குகளில் தப்பித்துக் கொண்டாலும், நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதில் சட்டத்தை ஆள்பவர்கள் அக்கறையோடு இருக்க வேண்டுமென்பதை இந்நாவலில் வலியுறுத்துகிறார் ஆசிரியர்! வாசக அன்பர்கள் இந்நாவலை பெரிதும் வரவேற்பார்கள் என நம்புகிறேன்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125403864
Sirai!

Read more from Vaasanthi

Related to Sirai!

Related ebooks

Reviews for Sirai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sirai! - Vaasanthi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சிறை!

    Sirai!

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    முன்னுரை

    சிறை! தனிமைச் சிறையில் வாடும் பத்திரிகை நிருபரைச் சுற்றி கதை தொடங்கி கிளைபரப்பிக் கொண்டே செல்லும் வேகம், விறுவிறுப்பு… அப்பப்பா..! அருமையான உத்தி.. பயங்கரவாதத்தின் கொடுமையை மென்மையான காதல் கருவைப் பின்னணியாகக் கொண்டு 18 அத்தியாயங்களில் படிப்பவர்களின் மனதைக் கனக்கச் செய்திடும் விதத்தில் அமைத்துள்ள ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.

    ஆயிரம் குற்றவாளிகள் சட்டத்தின் இண்டு இடுக்குகளில் தப்பித்துக் கொண்டாலும், நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதில் சட்டத்தை ஆள்பவர்கள் அக்கறையோடு இருக்க வேண்டுமென்பதை இந்நாவலில் வலியுறுத்துகிறார் ஆசிரியர்! அருமையான சமூக நாவலை கவிதா பப்ளிகேஷன் வெளியிட வாய்ப்பளித்த எழுத்தாளர் வாஸந்தி அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி. வாசக அன்பர்கள் இந்நாவலை பெரிதும் வரவேற்பார்கள் என நம்புகிறேன்.

    1

    அவன் 'ஜெனரலின்' வருகைக்குக் காத்திருந்தான். காத்திருத்தலே அவனுக்கு வழக்கமாகிப் போயிற்று. அதில் ஓர் சுவாரஸ்யம் கூட இருந்தது. அதனாலேயே அவன் ஜீவித்திருப்பது சாத்தியமாவதாகத் தோன்றிற்று. அந்த எட்டடி சதுர அறையின் உச்சியில் இருந்த அந்த மிகச்சிறிய சாளரம், வெளியில் படர்ந்திருந்த இருளை, கட்டம் போட்டு காட்டிற்று. பழுப்பு நிற சுவரை ஒட்டிச் சரிந்த இருபத்து ஐந்து வாட் பல்பின் பிரகாசம் சுற்றிலும் இருந்த கருமையை ஆழமாக்கியது.

    மணி எத்தனை இருக்கும்? பதினொன்று, பதினொன்றரை இருக்கலாம். பகலே இல்லாத இரவுகள் கொண்ட வாழ்க்கை வாழும் வேட்கை ஒரு காலத்தில் அவனை பீடித்திருந்தது. பகலெல்லாம் தூங்கிக் கழித்தது நினைவுக்கு வந்தது. பகல் பொழுதுக்கும் சூரிய வெளிச்சத்துக்கும் வெறியுடன் ஏங்கும் நேரம் வரும் என்று அறிந்திராத வாழ்வு அது. திமிர் பிடித்த வாழ்வு. அது நினைவு வரும் போதெல்லாம் இன்னும் ஓர் நாள் வெளிச்சத்தைக் காண முடியாவிட்டால் மண்டை வெடித்துச் சிதறலாம் என்று அவனுக்குத் தோன்றிற்று. அதுவாக வெடிக்கா விட்டால் அவனே அந்த இரும்புக் கிராதி போட்ட கதவில் மோதிக் கொண்டு வெடிக்கச் செய்யலாம், ஒரேயடியாய் விமோசனம் கிடைக்கும்.

    டங்… டங்… மணியோசை கேட்டது.

    சட்டென்று அவன் உடம்பு குலுங்கியது. அவன் படுத்திருந்த கல் மேடையில் எதிர்பார்ப்புடன் நிமிர்ந்து உட்கார்ந்தான். 'ஒண்ணு, ரெண்டு, மூணு' என்று வாய் விட்டு எண்ண ஆரம்பித்தான். டங்! டங்! 'பன்னண்டு' என்று சொல்லி ஆவலுடன் காத்திருந்தான்.

    'தொபுக்' கென்று சத்தம் கேட்டது. அவன் உற்சாகத்துடன் கையைக் கொட்டி 'ஜெனரல் சாஹெப், வந்துட்டீரா?' என்றான். ஒரு மாபெரும் பெருச்சாளி, அந்த எட்டடி சதுரத்தைச் சுற்ற ஆரம்பித்தது. முதலில் டக் டக்கென்று மெதுவாக, பிறகு தரையை முகர்ந்து, முகர்ந்து, பிறகு வேகமாக, அவன் வைத்த கண் வாங்காமல் அதன் ரோந்தை கவனித்தான். சினிமாப் படம் பார்க்கும் சுவாரஸ்யத்துடன். அதன் முடிவு எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. இன்று கணக்கு மாறலாம்.

    டங்! மணி ஒன்று. கிளம்பறேன் என்பதுபோல் ஜெனரல் ஒரு வினாடி நின்று பிறகு வந்த வழியே சென்று மறைந்தது. அது எந்த நியதிக்குக் கட்டுப்பட்டு தினமும் சரியாக 12 மணிக்கு வந்து 1 மணிக்கு கிளம்புகிறது என்று அவனுக்குத் தெரியாது. நடுநிசியிலிருந்து ஒரு மணி நேரம் அவனைக் கண்காணிக்க வேண்டும் என்று அதன் மூளைக்குப் படுகிறது. ஒருவேளை இறந்துபோன ஒரு ஜெயில் வார்டனின் ஆவியாக இருக்கலாம்.

    முதல் நாள் பழக்கமே இல்லாத இந்த இருளில், கல் மேடையில் பலவித பயங்களுடன் அவன் அழுத வண்ணம் முழங்காலில் முகத்தைப் புதைத்தபடி அமர்ந்திருந்த போது பூதம் போல் ஓர் எலி, அவன் எதிரில் நடுநிசி வேளையில் ஓடியபோது அவன் பீதியில் உறைந்து போனான். அதற்கு முன் அவன் எலிகளை எப்போதாவது பார்த்திருக்கிறானே தவிர, பெருச்சாளியைப் பார்த்ததில்லை. அந்த ராட்சத எலி தன்மேல் பாய்ந்து குதறுவதற்காக அவன் காத்திருந்தான். செத்துப் போன அம்மாவை அழைத்து அழுதான்.

    இனிமே என்னாலே எதுவும் செய்யறதுக்கு இல்லே என்று அன்று காலை கம்பிக் கதவுகளுக்கு அப்பால் நின்றபடி தனது ஒரே மகனிடம் சொல்லிவிட்டுச் சென்ற செல்வாக்குள்ளவர் என்று நம்பியிருந்த அப்பாவை நினைத்து அழுதான். ஒரு மனித ஜீவன் அங்கு இருப்பதான பிரக்ஞை இல்லாமல் பெருச்சாளி தன் பாட்டிற்கு அறையைச் சுற்றிற்று. ஒரு மணி அடித்தபோது யாரோ கூப்பிட்டது போல் வெளியேறிற்று. மறுநாளும் வந்தது பன்னிரெண்டு மணிக்கு. ஒரு மணிக்குக் கிளம்பிற்று. அதற்கு மறுநாளும் அதற்குப் பின்பும் - தினசரி கூப்பிட்டது போல 12 மணிக்கு வந்தது. ஒரு மணி நேரம் ரோந்து செய்ய. ஆரம்ப பயம் மெல்ல மெல்ல விலகியதும் அவன் அதற்கு 'ஜெனரல் சாஹெப்' என்று பெயர் வைத்தான். ஒரு நண்பனின் வருகைக்காகக் காத்திருப்பது போல அதன் வருகைக்குக் காத்திருந்தான்.

    அப்படித்தான் பின் மாலைப் போதில் ஒரு நாள் அந்தச் சாளரத்தின் வழியாக நான்கு சிட்டுக்குருவிகள் உள்ளே நுழைந்தன. புதிய நண்பர்கள் என்று அவன் மனசில் பிரவாகமாய் சந்தோஷம் பொங்கிற்று. அவனுடைய அலுமினியத் தட்டில் ஒரு காய்ந்த ரொட்டித்துண்டு இருந்தது. அதன் வாசனைக்கு அவை வந்திருக்குமோ? அவன் அந்த ரொட்டித் துண்டைப் பொடியாக்கி அதைத் தன் அகன்ற கையில் பிரித்து வைத்து நீட்டினான். ஒரு சிட்டுக்குருவி கையில் வந்து அமர்ந்து முகர்ந்தது. அதன் மிருதுவான கதகதப்பான ஸ்பரிசம் அவனுள் ஏற்படுத்திய சிலிர்ப்பில் அவன் கண்களில் நீர் நிறைந்தது. மெல்ல மெல்ல எல்லாக் குருவிகளும் வந்து அமர்ந்தன. சின்னஞ் சிறியவை. அவன் கையை மூடினால் அதற்குள் அடக்கமாகி விடும் ஆகிருதி கொண்டவை. மெத்து மெத்தென்ற அந்தச் சிறிய உடம்பை வருடினான். பிரபஞ்சத்தை வியாபிக்கும் உயிர்த்துடிப்பைக் கண்ட திவ்ய தரிசனமாக அவனது நாடி நரம்பெல்லாம் உசுப்பப்பட்டதாக அவன் உணர்ந்தான். இது ரொட்டித் துண்டினால் ஈர்க்கப்பட்டோ, அவனுடைய ஸ்பரிசம் தந்த இதத்தாலோ சிட்டுக் குருவிகள் வருவதை வழக்கமாக்கிக் கொண்டன. மாலையில் அவற்றிற்காக காத்திருப்பதும் அதற்காகவே தனக்குக் கிடைத்த உணவில் மிகுதி வைத்து உள்ளங்கையில் பரத்தி குருவிகள் அவனது பிரம்மாண்ட கையில் உண்பதைப் பார்ப்பதும் அவற்றுடன் சல்லாபிப்பதும் அவனது சலிப்பூட்டும் தினசரி அட்ட வணையில் உற்சாகம் தரும் அங்கமாயிற்று.

    அந்த எட்டடி சதுரத் தனிமையில் வேறு சினேகிதங்களும் கிடைத்தன. கழிப்பறை பைப்பிலிருந்து அறையின் மூலையிலிருந்த ஓர் ஓட்டைக்கு ஏதோ உணவு மூட்டைகளைத் தூக்கிச் செல்வது போல கடுகைவிட சிறிய துகள்களைச் சுமந்து எறும்புகள் அணிவகுப்பதை ஒருநாள் கண்டுபிடித்தான். இராணுவக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவைபோல வரிசையாகச் செல்லும் ஜந்துக்களை அவன் தரையில் குப்புறப்படுத்து மணிக்கணக்கில் ஆராய்வான். அவன் செவிக்குப் புலப்படாத மிக மென்மையான மொழியில் அவை பேசிக்கொண்டு செல்வது போல் இருக்கும். நிச்சயமாக ஏதோ ஒரு சங்கேதத்தின் புரிதலோடு அவை நடந்தன. அந்த வரிசையின் ஒழுங்கில் அது வெளிப்பட்டது. ஓர் எறும்பு தன்னிச்சையாக வரிசையை விட்டு விலகிச் சென்றால் மற்றொன்று வேலை மெனக்கெட்டுச் சென்று அதை மீண்டும் வரிசைக்கு இழுத்து வரும். இது அவனுக்கு மிகப்பெரிய அற்புதமாக இருந்தது. முதல் முதலில் அதைப் பார்த்தபோது, அவனை அறியாமல் கண்களில் நீர் நிறைந்தது. எறும்பாகப் பிறந்திருந்தால் பாதுகாப்பு இருந்திருக்கும் என்று தோன்றிற்று. இரவெல்லாம் தனது வாழ்வைப் பற்றி யோசிக்க வைத்தது.

    யோசிக்க இனி ஏதுமில்லை என்று இப்போது தோன்றுகிறது. பழசெல்லாம் நினைத்த நேரத்தில் சினிமாச் சுருள் போல் மனத்தில் விரிந்ததாகச் சொல்ல முடியாது. அநேகமாக, யோசிக்க முற்படும் போதெல்லாம் ஓர் அந்தகார சூன்யத்தைத் துழாவுகிற பரிதவிப்பு ஏற்பட்டது. யோசிக்கும் திறனையே இழந்ததுபோல் மனசு அசைவற்று இருந்தது.

    ஒருமுறை அப்பா சொன்னார் என்பதற்காக அவன் ஒரு தியான வகுப்பிற்குச் சென்றான். ஒரு வார பயிற்சிக்கு ரூபாய் இரண்டாயிரம் கட்டணம் என்று அங்கு போனதும் தெரிந்து கொண்டான். சுவாமிஜி இளைஞராக இருந்தார். அமெரிக்க ஆடியன்ஸுக்குப் பேசுவது போல ஆங்கிலம் பேசினார். அமெரிக்காவுக்கு அதிகம் சென்று வந்ததால் அவரது ஆங்கில உச்சரிப்பு மாறிவிட்டது என்றார் ஒரு தாசர். சுவாமிஜி வார்த்தைக்கு வார்த்தை சிரித்தார்.

    அவனுக்குச் சிரிப்பு வந்தது. சுவாமிஜி சிரிக்கும்போது அவனும் சிரித்தான். சந்தோஷமாக இருப்பது மிகச் சுலபம் என்றார் சுவாமிஜி. மூச்சை சரியாக விடத்தெரிந்தாலே எல்லாத் துன்பங்களும் போகும் என்றார். சுவாசத்தை இழுத்துப் பிடித்து, நாபியை உள்ளுக்கு இழுத்து, பெரு விரலை மூக்கின் ஒரு பக்கமாக வளைத்துப் பிடித்து மனசை வெறுமையாக்கி… எண்ணங்கள் இல்லாத வெறுமையாக… அவன் கண்களை மூடி, சொன்னபடி செய்ய முனைந்தான். மனசு குதர்க்கத்துடன் திமிறிற்று. உள்ளே புதைந்திருந்த கூளங்களைக் கிளறி எட்டுக்கால் பாய்ச்சலில் பிரபஞ்சத்தைச் சுற்றிற்று. அவன் அதனுடன் சுழன்றான். டீச்சர் முட்டியிடச் சொன்னார். அவன் ஓட்டமெடுத்தான். ஹெட்மாஸ்டர் துரத்திக் கொண்டு வந்தார். அவன் அம்மாவைத் தேடினான். வெகுநாள் தேடிய தேடல் அது. மும்பையில் ஆரம்பித்து ஒரு பனிக்கால பின் இரவில் நியூயார்க் நகர வீதிகளில் அவனைக் கண்ணீர் வழிய நடக்க வைத்த முடிவற்ற தேடல். ஓம் சாந்தி ஓம் சாந்தி என்றார்கள். நியூயார்க் வீதிகளில் பனி கொட்டிற்று.

    'பாக் அப்!' அவன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். எல்லாரும் எழுந்து கிளம்பிக் கொண்டிருந்தார்கள். தாசர் அவனைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தார்.

    சுவாமிஜியின் மகிமை அது என்றார். 'பார், ஒரே அமர்வில் உள்ளேயிருந்த கசடுகள் எல்லாம் கண்ணீராய் கரைந்து போயிற்று உனக்கு. இனிமேல் நீ ஆனந்தத்தைத் தவிர வேறு எதையும் உணர மாட்டாய்!'

    அவன் பதில் சொல்லாமல் கிளம்பினான். சுவாமிஜி இன்னும் சிரித்துக் கொண்டிருந்தார். 'ஆனந்தத்தின் எல்லையில் மனசு நிர்மலமாகும். எண்ணங்களே இல்லாத நிர்மலம்.'

    ஒரு வாரத்திற்கு ஐம்பதினாயிரம், ஏன் சிரிக்க மாட்டீர்?

    யோவ், நீ ஒரு ஃப்ராட்! 'ரிலாக்ஸ்' என்றார் சுவாமிஜி அமெரிக்க உச்சரிப்பில்.

    ரிலாக்ஸ். ப்ரீத் இன் ப்ரீத் அவுட். மூச்சை உள்ளுக்கிழு. வெளியே விடு - அனுலோம் - விலோம், அனுலோம் விலோம். மனசு மெல்ல மெல்ல ஆற்று மணலாய் சரிந்தது…

    அருகில் அருணா அமர்ந்திருந்தாள். அவளது மெத்து மெத்து தொடையில் முகம் பதித்து அவன் படுத்திருக்கையில் அவள் போட்டிருந்த கிருஸ்தியோன் தியோ ஸெண்ட் வாசனை அவனைத் தழுவியது.

    அப்பா, உன் தலை என்ன கனம் கனக்கிறது? என்றாள் அருணா,

    அத்தனையும் களிமண்ணு என்றான் அவன் கண்ணை மூடியபடி.

    எனக்கு அதிலே சந்தேகமில்லே.

    அருணா சிரித்தால் கன்னங்களில் குழி விழும். அதைப் பார்க்கவே அவன் கண் திறப்பான். அந்தச் சிரிப்பு எப்படிப் பட்டது என்று அவனுக்குச் சொல்லத் தெரியாது. சலசலத்து ஓடி வரும் ஆற்று நீர் நினைவுக்கு வரும். மனசுக்குள் ஏதோ பூத்தது போல இருக்கும். கிண்கிணிச் சிரிப்பு: சலங்கைச் சிரிப்பு போன்ற வர்ணனைகளை மிஞ்சிய சிரிப்பு அது. சிவந்த உதடுகள் விரியும் போதே கண்கள் மலர்ந்து சிரிக்கும். அது ஓர் அற்புதம். அவனிடம் இல்லாதது. அவன் சிரித்தால் அவனது கண்கள் ஒத்துழைப்பதில்லை என்று வெகுநாள் வரை அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒருநாள் அஜெய்யுடன் அமர்ந்திருந்த போது காஃபி கஃபேயில் திடுதிப்பென்று ஓர் ஆசாமி எதிரில் வந்தமர்ந்தார். நான் ஒரு சினிமா டைரக்டர் என்றார் ஆங்கிலத்தில்.

    அவன் குழப்பத்துடன் அஜெய்க்குத் தெரிந்த ஆளாக இருக்கலாம் என்று அவனைப் பார்க்க, அஜெய் உதட்டைப் பிதுக்கித் தோளைக் குலுக்கினான்.

    ஆசாமி அவனிடம் தன் விசிட்டிங் கார்டை நீட்டியபடி சொன்னார்.

    நான் ஒரு படம் எடுக்க இருக்கிறேன். ஹாஜி மஸ்தானைப் பற்றி.

    யார்? கடத்தல் பேர்வழி மஸ்தானா?

    ஆமாம்.

    குட் என்று அவன் சிரித்தான், குழப்பம் குறையாமல்.

    அதில் மஸ்தானாக நீங்கள் நடிக்க வேண்டும்.

    அவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. சிரிப்பு வந்தது. நானா? நான் நடிகன் இல்லே!

    பரவாயில்லை என்றார் ஆசாமி அலட்சியமாக. நடிக்க வைக்கிறது என் பொறுப்பு.

    அவன் மீண்டும் சிரித்தான். முன்பின் சினிமா இயக்கிப் பழக்கமில்லாத கிறுக்கன் இவன் என்பதில் சந்தேகமில்லை. ஐயோ பாவம், யாருடைய பணம் கரையவிருக்கிறதோ என்றிருந்தது.

    என் உருவத்தைப் பார்த்து கடத்தல்காரன் வேஷம் கொடுக்கலாம்னு தீர்மானித்து விட்டீர்கள் போலிருக்கு. ஹாஜி மஸ்தான் புகைப்படம் பார்த்திருக்கிறேன். அவருக்குக் கட்டுமஸ்தான உடம்பு இல்லே.

    தெரியும். ஆனால் அவனுடன் ஒரு அதிசயமான ஒத்துமை உங்களிடம் இருக்கிறது!

    என்னய்யா அது? என்றான் அவன் கிண்டலும் வியப்புமாக.

    ஹாஜி மஸ்தான் சிரித்தால் உதடு மட்டும்தான் சிரிக்கும். கண்கள் சிரிக்காது. அதே மாதிரி நீங்களும் சிரிக்கிறீர்கள்.

    அவன் திடுக்கிட்டு அஜெய்யைப் பார்த்தான். அஜெய் மீண்டும் தோளைக் குலுக்கிச் சிரித்தான். கஃபேயின் சிப்பந்திக்கு பில் கொண்டா என்று சைகை காட்டினான். இவன் டைரக்டரைப் பார்த்து லேசாகப் புன்னகைத்து. மிக்க நன்றி! என்றான்.

    ஆனால் சாரி. என்னால் உங்கள் அழைப்பை ஏற்க முடியாது. வேறு ஆளைப் பாருங்கள். பெஸ்ட் ஆஃப் லக்!

    சினிமாவில் நடிக்க சான்ஸ் கிடைக்காதா என்று மும்பையின் தெருக்களில் அலைந்தபடி பல இளைஞர்கள் இருக்கிறார்கள் என்றான் அஜெய்.

    கஃபேயிலிருந்து வெளியேறும் போது அஜெய்யும் அவனும் வாய்விட்டுச் சிரித்தார்கள். அன்று படுக்கப் போவதற்கு முன் வெகு நேரம் கண்ணாடியின் முன் நின்று தன்னை ஆராய்ந்தான். பலவிதமாகச் சிரித்துப் பார்த்தான். கால் புன்னகை, அரைப் புன்னகை, அகன்ற புன்னகை, உதட்டைப் பார்த்தால் கண்களைப் பார்க்க முடியவில்லை. கண்களைப் பார்த்தால் உதட்டைப் பார்க்க முடியவில்லை. கண்களில் என்ன கோளாறு இருக்க முடியும்? அம்மாவின் கண்கள். தனது முகத்தில் அவன் பெருமிதப்படும் ஒரே அங்கம், அந்தக் கண்கள். அம்மாவுக்குக் கவிதை பேசும் கண்கள். நிரந்தர காதலில் இருப்பது போன்ற சொக்கும் கண்கள். அந்தக் கண்கள் தனக்கும் இருப்பதாக இதுநாள் வரை அவன் நம்பியிருந்தான். இன்று ஒரு முட்டாள் அந்த நம்பிக்கையை நொடிப் போதில் தகர்த்து விட்டான். நீ சிரித்தால் உன் கண்கள் சிரிக்கவில்லை என்கிறான். அது சாத்தியமா?

    நான் ஹாஜி மஸ்தான் போல இருப்பதாக ஒரு மடையன் சொன்னான் என்றான் அருணாவிடம்.

    அவள் அவனை உற்றுப் பார்த்தாள். "ஹாஜி மஸ்தானை நா பார்த்ததில்லே. ஆனா நீ கடத்தல் காரன்

    Enjoying the preview?
    Page 1 of 1