Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manam Pona Pokkile
Manam Pona Pokkile
Manam Pona Pokkile
Ebook104 pages35 minutes

Manam Pona Pokkile

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவரைப் பற்றி...

இவரது மூதாதையர்கள் வசித்த ஊர் மாமண்டும் என்றாலும் இவர் பிறந்தது வளர்ந்தது காஞ்சியில் தான் பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு எல்லாமே காஞ்சிபுரம் தான். வங்கிப் பணியில் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். சிறுகதை வேந்தர், சிறுகதை நன்மணி, சிறுகதை செம்மல், பாரதியார் விருது போன்றவை இவர் பெற்ற விருதுகளாகும்.

சிறுகதை எழுத்தாளர், நாவல் ஆசிரியர், நடிகர் என்ற பலவேறு கோணங்களில் இவருக்கு பரிச்சய முண்டு. சன் தொலைக்காட்சி, புதுவை தொலைக்காட்சி, சென்னை பொதிகை, விஜய் தொலைக்காட்சி, ஜெயா தொலைக் காட்சிகளில் இவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன.

“இவன் தந்திரன்" என்ற படத்தில் நூலகராக ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். "தீ பரவட்டும்" என்ற குறும்படத்திலும் இவரது பங்களிப்பு உண்டு.

இவரது நாவல்கள் கண்டிப்பாக வாசகர்களை கவரும் என்பதில் ஐயமில்லை. இவர் மேன்மேலும் தொடர்ந்து பல படைப்புக்களை எழுதி வாசக வாசகிகளின் பாராட்டுக்களை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

அவள் ஒரு பூந்தொட்டி, மனம் போன போக்கிலே, நிஜம் போன்ற பொய், பணமா பாசமா என்பவை உள்ளிட்ட பல நாவல்களும், வாரங்கள் வார்த்த நிலாக்கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பும் ஏற்கனவே வெளிவந்து, அரசு நூலகங்களில் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. பல்வேறு வார இதழ்களில் இவரது எண்ணற்ற சிறுகதைகளும், நாவல்களும் வெளிவந்துள்ளன.

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580128604696
Manam Pona Pokkile

Read more from Kanchi Balachandran

Related to Manam Pona Pokkile

Related ebooks

Reviews for Manam Pona Pokkile

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manam Pona Pokkile - Kanchi Balachandran

    http://www.pustaka.co.in

    மனம் போன போக்கிலே

    Manam Pona Pokkile

    Author:

    காஞ்சி பாலச்சந்திரன்

    Kanchi Balachandran

    For more books

    http://pustaka.co.in/home/author/kanchi-balachandran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    என்னுரை

    சிறுகதைத் தொகுப்பிற்கு தொடர்ந்து பல்வேறு அன்பு உள்ளங்கள் பாசத்தோடு பாராட்டின.

    மனம் போன போக்கிலே, கண்ணிலே அன்பிருந்தால் நாவல்களைப் படித்து உரிமையோடு விமர்சனங்களை பகிர்ந்து கொள்ள உங்களை கேட்டும், ஆலோசனைகளை எதிர்பார்த்தும் முடிக்கின்றேன்.

    நன்றி! வணக்கம்!

    என்றும் நட்புடன்

    காஞ்சி.பாலச்சந்திரன்

    1

    ஆரணி அரசு பொது மருத்துவமனை உள் நோயாளி வெளி நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது.

    வாரத்தில் முதல் நாள் திங்கட்கிழமை வழக்கமான டாக்டர்களும், நர்ஸ்களும் மற்றும் உதவியாளர்களும் படு சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

    அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை டாக்டர்கள் விடுமுறையைப் பயன்படுத்தி வராமல் இருப்பதால், கூட்டம் குறைவாகவே இருந்தது.

    ஒரு சில டூயூட்டி டாக்டர்கள் மட்டுமே இருந்தனர். டாக்டர் அனுராதா டூயூட்டி டாக்டராக பணியில் இருந்தபோது தான் அந்த சம்பவம் நடந்தது. இரவு எட்டு மணியிருக்கும் அவசர அவசரமாக அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றி வந்தனர். ஆட்டோ அவசர சிகிச்சைப் பிரிவின் முன்னால் வந்து நின்றது.

    ஆட்டோவிலிருந்து இறங்கி வந்த பெண்ணை அவசர அவசரமாக தூக்கி வந்து படுக்கையில் படுக்க வைத்தனர்.

    டாக்டர் அனுராதா அந்த பெண்ணை பரிசோதித்தார்!

    என்ன ஆச்சு?

    விஷம் குடிச்சிடுச்சி டாக்டர்!

    என்ன காரணம்?

    சொல்ல மாட்டேன்கிறது!

    தெரியல்லே டாக்டர்!

    எப்போ தான் பார்த்தீங்க?

    "ஞாயிற்றுக்கிழமையிலே எப்போதும் பிரண்ட்ஸ் அது இதுன்ன வெளியே போயிடுவா..!ஆனா இன்னிக்கு பார்த்து எங்கேயும் போகல்லே டாக்டர்! வீட்டிலே அடைஞ்சிகிடந்தா ரொம்ப சோர்வாயிருந்தாலே உடம்பு சரியில்லையான்னு கேட்டோம் அதெல்லாம் ஒன்னுமில்லேன்னு சொல்லிட்டா அவளை தனியா விட்டுட்டுப் போனது தப்பா போச்சு டாக்டர்.

    நாங்கள் கோயிலுக்குப் போயிட்டு வந்து பார்த்தப்போது தரையில் படுத்திருந்தா பேச்சு மூச்சில்லே வாயிலே நுரையெல்லாம் தள்ளிடுச்சு பயந்து தூக்கிட்டு வந்தோம் டாக்டர்."

    இவங்களுக்கு நீங்க என்ன உறவு?

    என் பொண்ணுத்தான் டாக்டர் அவரு அவங்க அப்பா இவன் என் தம்பி உறவுகளை அடையாளம் காட்டினாள்.

    தூக்க மாத்திரை சாப்பிட்டாங்களா இல்லே எதாவது லிக்யூடா (திரவமாக)....

    தெரியல்லே டாக்டர் சரி எல்லோரும் அப்படி, ஓரமாகப்போய் உட்காருங்க! "நான் பேஷண்டை பரிசோதிக்கனும்.

    உயிருக்கு ஒண்ணும் ஆபத்து இல்லையே டாக்டர்.

    இப்போ எதுவும் சொல்றதுக்கில்லை எல்லா முதல் உதவியும் செய்தும் அவளின் நிலை மிகவும் ஆபத்தான கட்டத்திலேயிருந்தது.

    அவளுக்கு சுயநினைவு சில நேரங்களில் வருவதும் போவதுமாகயிருந்தது.

    டாக்டர் அனுராதா காலை எட்டு மணியோடு தன் பணி முடிவடைந்ததால் அடுத்து வந்த டாக்டரிடம் பொறுப்பை ஒப்படைத்து தான் பார்வையிட்ட நோயாளிகளின் குறிப்புக்களை அவரிடம் விளக்கினாள்.

    நேற்று இரவு வந்து அட்மிட் ஆன அந்த விஷம் குடித்த கேஸ் பத்தியும் தெளிவாகவே விளக்கினாள்.

    டாக்டர் அந்த பேஷண்ட் கண்டிஷன் ரொம்ப வீக்காயிருக்கு நேற்றே போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்பார்ம் பண்ணிட்டேன். அவங்க வந்ததும் இமிடியெட்டா வாக்குமூலம் வாங்கச் சொல்லுங்க.

    ஓ.கே. சொல்லி விட்டு விடை பெற்றாள் டாக்டர் அனுராதா காவல் துறை காவலர் காலை 9.00 மணிக்கு மேல் சர்வ சாதாரணமாக மருத்துவமனைக்கு வந்தார்.

    விஷம் குடிச்ச பொண்ணு சொந்தக்காரங்க யாரு?

    நாங்கதாங்க! இரவு முதல்லே மரத்தடியிலே காத்திருந்த செண்பகம் மார்த்தாண்டம் செண்பகம் தம்பி முருகேசன் ஓடி வந்தாங்க!"

    பொண்ணு பேரு என்ன?

    காயத்ரி

    ஏன் விஷம் குடிச்சிது?

    இந்த மருத்துவமனையிலே அட்மிட் செய்த நேரத்திலிருந்து இதுவரையில் வருவோர் போவோர் எல்லாம் இந்த கேள்வியைக் கேட்டு அவர்களை சங்கடப்படுத்தி விட்டார்கள். உயிரைக் காப்பாற்ற முயற்சி எடுத்தார்களோ இல்லையோ நடைமுறை சம்பிராதயாங்களை ஒன்றுக்கூட விடவில்லை.

    என்னம்மா கேட்கிறேனில்லே, விஷம் ஏன் குடிச்சிது?

    தெரியாது சார்!

    என்னம்மா பெத்தவங்களா இருக்கீங்க ஒரு பொண்ணு விஷத்தைக் குடிச்சிருக்கு பொறுப்பில்லாமல் பேசறீங்க! அந்த காவலர் பேசிக் கொண்டே பேப்பரும் பேனாவும் எடுத்தார் வாக்குமூலம் வாங்குவதற்கு!

    காயத்ரிக்கு மூக்கிலும், வாயிலும்

    Enjoying the preview?
    Page 1 of 1