Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kal Vaazhai
Kal Vaazhai
Kal Vaazhai
Ebook251 pages1 hour

Kal Vaazhai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சமுதாயத்தின் திறந்த வெளிச் சிறைச்சாலையில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக அல்லல்படும் எண்ணற்ற மனிதர்கள்! அவர்களில் ஒருவனே நடேசன்! நான்கு சுவர்களுக்குள் அனுதினமும் இவன் அனுபவிக்கும் தண்டனை, விடுதலையே இல்லாத தண்டனை! ‘உயிருள்ளவரை அனுபவி’ என தனக்கு இதை வழங்கிய மூலகர்த்தாக்களை இவனும் விடாமல் இன்னமும் தேடிக் கொண்டிருப்பதை வாசித்து அறிந்துகொள்வோம் வாருங்கள்…!

Languageதமிழ்
Release dateDec 30, 2023
ISBN6580171510433
Kal Vaazhai

Read more from Suryaganthan

Related to Kal Vaazhai

Related ebooks

Reviews for Kal Vaazhai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kal Vaazhai - Suryaganthan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கல் வாழை

    Kal Vaazhai

    Author:

    சூர்யகாந்தன்

    Suryaganthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/suryaganthan

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    முன்னுரை

    வாழ்க்கையில், மனிதர்கள் சந்திக்கும் இன்ப துன்பங்களுக்கு அடிப்படைக் காரணங்கள் பலவாக உள்ளன. துன்பங்களையே மிகுதியாக அனுபவிக்கும் மனிதர்கள், அவற்றிலிருந்து மீள்வதற்காக நடத்தும் இடையறாத போராட்டமே வாழ்க்கையாக நீண்டுகொண்டு செல்கிறது! அந்த நீட்சியே ஒரு தேடலைப் போன்றது. அந்தத் தேடலின் முடிவில் வெற்றி அல்லது தோல்வி அவர்களுக்குக் கிடைக்கிறது! வெற்றியை, அனுபவ வரவு, என்றும்; தோல்வியை, அனுபவ விரயம், என்றும்... அவர்கள் தீர்மானிக்கலாம். ஆனால், இதை பொருளாதாரம் என்னும் வரையறையைத் தாண்டி நாம் பார்த்தோமானால்; வாழ்க்கையின் அர்த்தம் என்கிற பொருளைச் சேமித்தவர்கள், சேமிக்கத் தவறியவர்கள் என இரு பிரிவுகளுக்குள் அவர்கள் அனைவருமே அடங்கிவிடுவது புலப்படும்! காலவெளியில் இந்த வாழ்க்கையைத் தோண்டியதில் கிடைத்த புதையல்கள் இப்படிப்பட்ட அனுபவங்களே... என்பதும் விளங்க வரும்.

    மரணம் எனும் நிலைப்பாடு இல்லாவிட்டால் இவர்களின் தேடுதல் தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஆக, மரணமென்பது தேடுதலுக்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமைந்துவிட்ட போதிலும், அடுத்து வருகின்ற சந்ததியானது தனது முன்னோர்கள் விட்ட பயணத்தை தொடர்ந்து வழி நடத்திச் சென்றாக வேண்டும். தந்தையின் ரத்தம் மகனுக்குள்ளேயும், மகனின் ரத்தம் பேரனுக்குள்ளேயும் அந்தப் பயணத்தை நிகழ்த்துவதைச் சகலரின் வாழ்விலும் வாழையடி வாழையாக நாம் பார்க்கிறோம்.

    ஆங்காங்கே சிலருக்கு மட்டும் அந்தச் சந்ததி இல்லாமல் போய் ‘இந்தப் பிறவி, காலம் உனக்குத் தந்த கடைசி வாய்ப்பு’ என்பதுபோல் அமைந்து விடுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கோ அந்தத் தேடலின் வேகம்... அதிகமாகி, அது ரத்த ஓட்டத்தின் வேகத்தையும் அதிகமாக்கி வாழ்வையும் துரிதப்படுத்துவதாய் ஆகிவிடுகிறது. அதன் விளைவாக அடுத்தடுத்தே துன்பங்கள் கற்சங்கிலிகளைப்போல் நாலாத் திசைகளிலும் ஒன்றாய்ப் பிணைந்து அவர்களைக் கட்டிப் போட்டுத் தண்டிக்கும் நிலைமைக்கும் கொண்டு சென்று விடுகின்றது.

    இப்படி, சமுதாயத்தின் திறந்த வெளிச் சிறைச்சாலையில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக அல்லல்படும் எண்ணற்ற மனிதர்கள்! அவர்களில் ஒருவனே இந்த நாவலின் மையக் கதாபாத்திரமான நடேசன்! நான்கு சுவர்களுக்குள் அனுதினமும் இவன் அனுபவிக்கும் தண்டனை, விடுதலையே இல்லாத தண்டனை! ‘உயிருள்ளவரை அனுபவி’ என தனக்கு இதை வழங்கிய மூலகர்த்தாக்களை இவனும் விடாமல் இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறான்!

    இவனுடைய குற்றங்களுக்கு இவன் மட்டுமே காரணமானவன் இல்லை என்றாலும்; தண்டனை மட்டும் இவனுக்கென்றே ஒதுக்கப்பட்டுள்ளது. இரும்புக் கம்பிகளின் கணுக்களைப்போல் கெட்டியாக இறுகி, அது இவனை இம்சைப்படுத்துகிறது. அந்த இம்சைகளின் இறுக்கத்தால் இவன் இற்றுப்போய், பொடிப் பொடியாகி விடவும் கூடும். அல்லது வாழ்க்கையென்பதே இதுதான் என முற்று முழுக்கக் கற்றுக்கொண்டு ஈடேறி விடவும் கூடும்.

    இவன் முற்றும் துறந்த முனிவனா...! இல்லை சுற்றங்கள் வெறுத்த கூரை வீட்டு முற்றத்துப் பறவையா...!! எதுவென நீங்களே இனங்கண்டு கொள்ளலாம். ஏனெனில், இவன் உங்களில் ஒருவன். உங்கள் ஊருக்குள் வசிப்பவர்களில் ஒருவன். உங்கள் தெருக்கள் தோறும் சிந்திக் கிடக்கும் துளிகளில் ஒரு துளி இவனது உயிர்த்துளி...! அத்தகு துளிகளின் சங்கமிப்பில் திரண்ட பெருவெள்ளமே இந்த நாவலாக உங்களை சந்திக்கிறது.

    எனக்கு ஆக்கப்பூர்வமான யோசனைகளையும், நல்ல வழிகாட்டுதலையும் நல்கி வரும் வானம்பாடிக் கவிஞர் புவியரசு, இந்தப் படைப்பை எழிலுற வெளியீடு செய்யும் புஸ்தகா டிஜிட்டல் மீடியாவுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வணக்கம்.

    அன்புடன்,

    சூர்யகாந்தன்

    16.11.2001

    கோவை - 10.

    1

    இளம் பச்சை நிறத்தில் சின்னஞ்சிறு இலைகளைச் சுமந்துகொண்டு பிரண்டைக்கொடி, வேலியின் மையத்தில் தெரிந்தது, அந்தக் கொடியைத் தவிர அடுத்திருந்தவைகள் முள் செடிகளாகவும், மலைத் தாவர வகையறாக்களாகவும் இருந்தன. அண்மையில் பெய்திருந்த மழைக்கு, செம்மண்ணில் ஈரம் நன்றாகவே பிடித்திருந்ததால், செடி, கொடிகளில் பசுந்தளிர்களின் உயிர்ப்பு செழுமையாகத் தட்டுப்பட்டது.

    விதைப்புச் செய்வதற்கு இந்த மழை போதாது என்பதால், செம்பாட்டு உழவு போட்டு நிலத்தைப் பண்படுத்தி வைக்கலாம். பிடித்திருக்கும் கோரைகளையும், அருகம்புற்களையும் வேர்ப் பிடுங்காய்ப் பிடுங்கி எறிந்து விட்டு, அடுத்த மழை ‘போதுமான படிக்கு’க் கிடைத்தால்... விதைப்பு உழவுக்கு இலகுவாகப் பண்ணி வைக்கலாம். ஆங்காங்கே காட்டுக்குள் எருக்கஞ்செடிகளும், காளாச்சி முள் செடிகளும் ஊடுருவி முழங்கால் மட்டத்துக்கு மேல், தலைதூக்கி நிற்பது மனசுக்கு சுணக்கமாய்த்தான் தோணியது.

    கருவேலா மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நின்றிருந்த போதிலும் தங்கள் பங்குக்கு அவை முட்களைக் கிளை கிளையாய்க் கீழே போட்டு வைத்திருந்தன. காட்டுக்காரனுக எங்களுக்குப் பாவுனை பண்ணுலீனாப் போவுது. எங்க பாட்டுக்கு நாங்க போடுறதைப் போடாமலா இருப்போம்? வேணும்னா முள்ளுகளெப் பொறுக்கி சுத்தப்படுத்திக்குங்க! வேணாம்னா அப்பிடியே உட்டுப் போட்டுப் போங்க! அப்பறம் எங்க பக்கத்தாலெ ஆரு வருவாங்கனு பாக்கறோம் என்னும்படி அவைகளின் தோரணைகள் காணப்பட்டன.

    வேலியின் நடுவில் இருந்த வேப்பமரம் கிளைகளை விரித்தபடி நிழலைக் காட்டுக்குள்ளும், மேபுறத்து இட்டேறித்தடத்திலும் பரப்பியிருந்தது. பழுப்பு இலைகளும், வேப்பம் பழங்களும், கொட்டைகளும் வேலியின் இருமருங்கிலும் பரவிக்கிடந்தன.

    நடேசன், காட்டுக்கு வந்து இரண்டு வருசங்களுக்கு மேலேயே ஆகியிருந்ததால், அக்கம் பக்கங்களில் உண்டாகியிருக்கும் மாறுதல் எளிதாகத் தெரிந்தது. பாட்டன் காலத்திலிருந்து வழிவழியாக வேளாண்மை செய்யப்பட்டு வந்த இந்தப் புஞ்சை நிலம், இவனது அப்பாவின் காலத்திலும்கூட ஓரளவுக்கு விளைச்சலைத் தந்து கொண்டுதான் இருந்தது.

    அவரால் இந்த நிலத்துக்குப் போதுமானபடி உழைப்பையும், கவனிப்பையும் கொடுக்க முடியவில்லை, மகன்கள் மூலமாகவும் இதற்குப் பாங்கு பண்ண முடியவில்லை. என்றாலும் சதா, மனசுக்குள் ஒரு இழையோட்டம் நினைவுகளோடு பின்னிப் பிணைந்து கொண்டு அவரை இம்சிக்கத்தான் செய்தது.

    மகன்கள், இந்தக் காட்டை அப்பாவிடமிருந்து தங்களுக்குக் கிடைத்தாக வேண்டிய சொத்துக்களில் முக்கியமானதாகக் கருதிக் கொண்டிருந்தனர்.

    ஆம்பளைமக்க அப்பனாத்தாளுக்குப் பண்ற ஆதரவுக்கு நாங்க எந்த வகையில கொறஞ்சு போயிட்டோம். பின்னெயும் அவுனுக வேணும்னா பொண்டாட்டிமாருக பேச்சுகளெக் கேட்டுப் போட்டு களவாணித்தனம் பண்ணுலாம். நாங்க ஒண்ணும் அப்பிடிக் கெடையாது. என்னைக்கும் உண்ட ஊட்டுக்கு ரண்டகம் பண்ணீற மாட்டோம்.

    - என்னும் விதமாக அவர்களின் எண்ணங்கள் இருந்தன.

    வீட்டுக்கு மூத்த பிள்ளையாக இருந்த அண்ணன்காரனான சுப்ரமணிக்கு அப்பாவோடும் இணக்கமில்லை. தங்கச்சிமார்கள், தம்பிமார்கள் உடனும் பிடித்தமில்லாத ஆளாக வளர்ந்து விட்டிருந்தான். முடிந்தவரை உள்ளூர்ப் பள்ளிக்கூடப் படிப்பையாவது அவன் படித்து முடிக்கட்டும் என்று ஆசைப்பட்ட அப்பாவையும் ஏமாற்றிவிட்டான். சரிவரப் பள்ளிக்கூடம் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த அவனை... ரெண்டு மூன்று எருமை மாடுகளையாவது ஓட்டிச்சென்று காடு கரைப்பக்கம் மேய்த்துக் கொண்டு வரச்சொல்லியும் முயன்று பார்த்தார் அப்பா! அதுவும் பலிக்கவில்லை. ரொம்பவும் வற்புறுத்தினால்... அதுகளை எங்காவது சந்தைசாரிக்கு ஓட்டிப் போய் விற்றுவிட்டு வந்து விடுவானோ என்கிற ஐயப்பாட்டினால்தான் எப்படியோ... தொலை என்று விட்டுவிட நேர்ந்தது.

    ‘வந்தும் போயி’ நடுவலவன் நடேசனும், கடைசித் தம்பியான ஆறுமுகனும்தான் சிலேட்டும், புத்தகப்பையுமாக வீட்டுக்கு அருகாமையில் இருக்கிற பள்ளிக்கூடத்துக்கு ‘ஆஜரவு’ ஆனார்கள். அப்பாவுடன் கூடமாட இருந்து அவரின் தொழில்காரியங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள்.

    அந்தத் தெருவில் இருந்து நாலைந்து பேர், கோயமுத்தூர்க் கடைவீதிக்கு வேலைக்குப் போய் வந்தனர். துணிக்கடைகளிலும், பஞ்சு குடோன்களிலும், தலையணை மெத்தைகள் செய்யும் இடங்களிலும் அவர்களுக்கு வேலைகள் கிடைத்து வந்தன.

    பள்ளிக்கூட லீவு நாட்களில், நடேசனையும் தன்னுடன் அந்தத் தலையணை செய்யும் பணிக்குக் கூட்டிப் போய் பழக்கப்படுத்தி விடலாம் என்று அவனுடைய அப்பாவுக்கு ஆர்வம் இருந்தது. விவசாயம் அப்படியொன்றும் ‘வயித்துப் பாட்டுக்கு வழி பண்ணும்’ என்கிற நம்பிக்கையை உண்டாக்கி விடவில்லை. வருசம் பூராவும் அந்த மேட்டாங்காட்டையே நம்பிக்கொண்டு வெறுமனே வீட்டில் உட்கார்ந்திருப்பதும் உடன்பாடாக இல்லை.

    அன்றன்றைய உழைப்புக்குக் கிடைக்கிற நாள் சம்பாத்தியம்தான் என்ற போதிலும், கடைவீதி வேலையை நம்பிச்செய்யலாம் என்கிற திருப்தி முக்கியமானதாக இருந்தது. கிடைக்கிற பணத்தைக் கொண்டு வீட்டுக்கு வேண்டிய மளிகைப் பொருட்களை அன்றன்றைய தேவைக்கேற்பவும்கூட வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு தெம்போடு வீட்டு வாசலை மிதிக்கலாம்.

    காய்கறிகளானாலும், அரிசி பருப்பானாலும், மக்கமாருகளுக்குக் கடலை பொரியோவானாலும் எது ‘சலீசாக’ அகப்படுகிறதோ அவைகளை வாங்கி நிரப்பிக் கொண்டு பஸ் ஏறி... எட்டு மணிக்கு மேலானாலும் அலுப்பில்லாமல் அப்பா வந்து சேர்வதை மற்றவர்களை விட நடேசன்தான் அக்கறையோடு கவனிப்பவனாக இருந்து வந்தான்.

    அவனிடத்தில்தான், இவரும் ‘இன்னிக்கு இந்திந்த எடங்கள்லெ வேலை கெடைச்சுது...! இத்தனை தலையணைக செஞ்சு குடுத்தேன். இத்தனை படுக்கைகளுக்கு விரிப்புகள் தச்சுக் குடுத்தேன்’ என்கிற கணக்குகளை சொல்பவராக இருந்தார்.

    அதில் சலிப்பு நீங்கி, அடுத்தநாள் வேலைக்குச் செல்வதற்கான உற்சாகம் உள்ளத்துக்குள் ஊறுவதையும் உணர்ந்து கொள்ள முடிந்தது. சில நாட்களில் கடைகளிலிருந்து எடுத்து வருகிற ‘பஞ்சு சுத்தமாக்கும் வேலை’களை இந்த மகனுடைய ஒத்துழைப்போடு காலை வேளைகளில் செய்வதையும் பக்கத்து வீட்டுக்காரர்கள் சகஜமாகப் பார்க்க முடியும். தேவைப்பட்டால் பள்ளிக்கூடத்துக்கு லீவு போட்டுவிட்டு நடேசனை கடைவீதிக்குக் கூட்டிக்கொண்டு போகிற சந்தர்ப்பங்களும் கூட உண்டாகும்.

    பள்ளிக்குடம் போறவனெ நிறுத்தி, வேலெய்க்கு ஒத்தாசையாக இருக்குட்டும்னு கூட்டிட்டுப் போகிறதப் பாரு...! இவனுக்கு என்ன கூலி கெடைக்கும்? படிக்கிற ரெண்டு எழுத்தும்... உங்க அப்பங்காரனாலெ தடுதலாகிரும்...

    தன்னுடைய தாளாமையை நடேசனின் அம்மா பொன்னிதான் இப்படி வெளிப்படுத்தியவாறு வாசலுக்கும், தெருவுக்குமாக நடந்து கொண்டிருப்பாள்.

    மகள்கள் இதைக் கேட்டு, அம்மாவுக்கு ஒன்றும் அவ்வளவாக ஆதரவு கொடுக்க மாட்டார்கள். அதே சமயத்தில் அப்பாவின் செய்கையையும் ஒத்துக் கொண்டதாகத் தெரிவிக்க மாட்டார்கள். ஆனாலும், மகனுடைய படிப்பின் பேரில் அம்மாவுக்கு இருக்கிற பற்றுதல் அவர்களுக்குப் பிடித்தமான ஒன்றாகவே இருந்தது.

    பள்ளிக்கூடத்து ஆசிரியர்களும், நடேசன் பேரில் நல்ல அபிப்பிராயங்கள் கொண்டிருப்பதை அக்காமார்களும், தங்கச்சியும் அவ்வப்போது அறிய முடிந்தது.

    எப்படியும், தங்கள் வீட்டில் கருத்தாகப் படிக்கக்கூடிய ஒரு ஆள் இருப்பதில் அவர்களுக்கு திருப்திதான் உண்டாகி வந்தது. உள்ளூர்ப் பள்ளிக்கூடப் படிப்போடு நிறுத்திவிடாமல் மேற்கொண்டும் சுண்டக்காமுத்தூருக்கோ, அல்லது பேரூர்க்கோ... அனுப்பி அங்கு உள்ள மேல் படிப்பையும் படிக்க வைக்க வேண்டும் என்கிற ஆசையானது உள்ளூர எல்லோருக்குமே இருந்தது.

    இதை நடேசனைப் போலவே அவனுடைய அப்பாவும் அறிந்துதான் வைத்திருந்தார். தன்னைப் போல் கையெழுத்துப் போடுகிற அளவோடு படிப்புப் போதும் என்று நிறுத்திவிடலாம் என அவரும் கருதவில்லை.

    முடிஞ்ச மட்டுலும், படிக்க வெய்க்கலாம்னுதா நானும் ஆசப்பட்டுட்டு இருக்குறேன். அதுக்கு ‘சாமி சதாசிவன்’ கண் முழிக்கோணும்!

    - என ஆண்டவன்பேரில் பாரத்தைப்போட்டு விட்டு, குடும்பப்பாரத்தில் சுமையில் ஒரு பகுதியை மட்டும், தான் சுமந்து கொண்டிருப்பதாக அவர் சொல்லி வருவது நடேசனுக்கு மனசுக்குள் பக்தியுணர்வை உண்டு பண்ணுவதாக இருக்கும்.

    தன்னுடைய வீட்டுக்கும் நேர் கிழக்கில் தெரியும் சதாசிவன் கோயிலை, திண்ணையில் இருந்து கொண்டே நம்பிக்கையோடு அவனது கைகள் வணங்கும். ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது... அந்தக் கோயிலுக்குப் போய் வராவிட்டால் தூக்கம் வராமல் முரண்டு பண்ணும்.

    படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு முக்கியமான ஒன்றை எங்கோ தொலைத்துவிட்டு வந்தவனைப்போல் யோசனைகள் செய்து கொண்டிருப்பான். காலையிலிருந்து சாயங்காலம் வரையிலும் அது இதுவென வேலைகள் இருந்து கொண்டேயிருந்ததால், அந்தக் கோயிலுக்குப் போய் வர நேரமில்லாமல் போய்விட்டதா...? அல்லது கோயிலுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு அந்தக் கடவுளாலேயே தனக்குக் கொடுக்கப்படாமல் போய்விட்டதா...? என்றெல்லாம் எண்ணியவாறு கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருப்பான்.

    நள்ளிரவுக்கு மேல்தான் தூக்கம் வரும். அப்படி வரும் தூக்கத்தில் கூட கனவுகள் உண்டாகி... அந்த ஊரின் தெருக்களிலும், சுற்றுப்புறங்களிலும் அவனை அலைக்கழிப்ப துண்டு. வகுப்பறையில் தன்னிடம் சக மாணவன் உதவி கேட்பதைப் போலவும், அந்த உதவியைச் செய்ய முடியாமல் போனதால், ஆசிரியரிடம் அந்த மாணவன் அகப்பட்டுக் கொண்டு அடிவாங்கியதைப் போலவும் உணர நேரிடும். அவன் கையில் பட்ட பிரம்படி... இவனுக்கு வருத்தத்தையுண்டாக்கும். இப்படித் தன்னால் ஒருவன் அடிபட நேர்ந்ததைப் பக்கத்துத் தெருவில் உள்ள கோயிலில் இருந்து இறைவன் பார்க்காமல் இருந்திருப்பானா? கண்டிப்பாகப் பார்த்திருப்பான்! பார்த்ததோடு நில்லாமல்... இதற்குக் காரணமானவன் யார் என்றும் தெரிந்து கொண்டிருப்பான்.

    சரியான சமயம் வரும்போது, அதற்குரிய தண்டனையைக் கொடுத்துவிடலாம் என்று, தன் கணக்கில் குறித்து வைத்துக் கொள்வான். ஒரு மாதமோ, இரண்டு மாதமே அல்லது ஒரு வருசமோ கழித்தாவது கொடுத்து விடுவான்.

    அப்படியானால் அந்தத் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு என்ன செய்யலாம்? தப்பித்துக் கொள்வதென்பது இறைவனை ஏமாற்றுவதைப் போல் ஆகிவிடுமே...! அதனால் அவனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதே நல்லது. அந்தத் தவறு நடந்து முடிந்த அன்றைக்கே கூட கோயிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு அதோடு சேர்த்தே கேட்டிருக்கலாம். அதுதான் முடியாமல் போய் விட்டது. மறுநாளாவது முதல் வேலையாக அதைச்செய்து தன்னைக் கடவுளின் கோபத்திலிருந்து மீட்டுக் கொண்டாக வேண்டும் என்றும் நடேசனின் உள்ளம் அவசரப்படும்.

    தெருவில் எதேச்சையாகக் கண்டெடுத்த காசைக் கூட மற்ற பையன்களைப்போல் தின்பண்டம் வாங்கப் பயன்படுத்தாதவனாய் நடேசன் இருந்ததைக் கண்டு அவர்களெல்லாம் கெக்கலித்துச் சிரித்ததும் உண்டு. நேராகத் தண்ணீர்ப் பைப்புக்குச் சென்று கைகால் முகம் கழுவிக் கொண்டு, கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டுவிட்டு அதை உண்டியலிலேயே காணிக்கை செலுத்தியவனாய் நிம்மதியாக வீடு வந்து சேர்ந்ததையும் காண நேரிட்டது.

    வீட்டுக்கு வெளியில் இருக்கிற பொருட்கள் எல்லாமும் குறிப்பாகத் தெருவிலும், தான் காண்கிறவைகளில் கடவுளுக்குத்தான் சொந்தமானவைகள் அதிகம் என்பது இவனது கருத்தாக இருந்தது.

    அப்படின்னா உங்க காடு தெக்கெ இருக்குதே. அது யாருக்குச் சொந்தம்?

    இது நடேசனின் தாய்மாமன் சாமிக்கண்ணுவின் கேள்வி. நிதானமாக எங்க அப்பாவுக்கு - என்றான்.

    அதுமட்டும் எப்பிடி உங்க அப்பாவுக்குச் சொந்தமானதாகும்? உன்ர யோசனைப்படி பார்த்தால் தப்பாச் சொல்றியே!

    நடேசன் சற்று நிதானித்துவிட்டு "நெலம்... எங்க

    Enjoying the preview?
    Page 1 of 1