Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mamannan Karikaal Chozhan
Mamannan Karikaal Chozhan
Mamannan Karikaal Chozhan
Ebook191 pages1 hour

Mamannan Karikaal Chozhan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சோழ மன்னர்களில், ‘மாமன்னன்’ என்ற அடைமொழியுடன் வாழ்ந்தவர்கள் ‘மாமன்னன் கரிகால் சோழனும்’, ‘மாமன்னன் இராசராச சோழனும்’ தான். அதனால்தான் இராசராச சோழனைப் பற்றிய பல நூல்கள் இருந்தாலும், கரிகால் சோழனைப் பற்றி எழுத விருப்பம் கொண்டேன். இது ஆய்வு நூலும் அல்ல; ஆய்வுக்குரிய நூலும் அல்ல. சோழர்களைப் பற்றி அறிய உதவும் ஓர் எளிய நூல். இந்நூலை என்னால் முடிந்த அளவு செப்பனிட்டு, செம்மைப்படுத்தி, அனைவரும் அறிந்து கொள்ளும்படி எளிய தமிழில் எழுதி உள்ளேன்.

Languageதமிழ்
Release dateOct 9, 2021
ISBN6580147707458
Mamannan Karikaal Chozhan

Read more from Thanjai Ezhilan

Related to Mamannan Karikaal Chozhan

Related ebooks

Related categories

Reviews for Mamannan Karikaal Chozhan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mamannan Karikaal Chozhan - Thanjai Ezhilan

    https://www.pustaka.co.in

    மாமன்னன் கரிகால் சோழன்

    Mamannan Karikaal Chozhan

    Author:

    தஞ்சை எழிலன்

    Thanjai Ezhilan

    For more books

    http://www.pustaka.co.in/home/author//gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    C:\Users\asus\Pictures\Saved Pictures\TN.jpg

    முனைவர் கா.மு. சேகர்

    எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி.,

    தமிழ் வளர்ச்சி இயக்குநர்

    தமிழ் வளர்ச்சி இயக்ககம்

    எழும்பூர், சென்னை - 600 008

    திருவள்ளுவராண்டு 2046/சய/பங்குனி-17

    நாள்: 31.03.2015

    அன்புடையீர்,

    வாழ்த்துரை

    தமிழகத்தின் வரலாற்றில் சோழர்களின் ஆட்சிக்காலம் ஒரு பொற்காலம். சோழர்கள் ஆட்சியில் நீர்வளமும், நிலவளமும் மட்டும் பெருகியிருக்கவில்லை, தமிழின் வளமும் பெருக்கெடுத்து ஓடியது என்பதை தமிழர் அறிவர். தமிழின் - தமிழரின் அன்பு, மானம், வள்ளன்மை, போர்த்திறம், பொதுநலம் பேணும் நட்பு இவற்றுக்கெல்லாம் சோழர்கள் கொடுத்த கொடை பெரியது!

    வரலாற்றைப் பற்றி எழுதுகிறபோது கைக்கு வந்ததை எல்லாம் எழுதிவிட முடியாது. முந்தைய அறிஞர்கள் முனைப்புடன் ஆய்ந்து அறிந்த கருத்துகளையெல்லாம் நுணுகிப் பார்த்து எழுத வேண்டும். உண்மையான வரலாற்றின் உரைகல்லாக அது திகழ வேண்டும். இத்தகு பணியை நூலாசிரியர் தஞ்சை எழிலன் திறம்படச் செய்துள்ளார்.

    அன்னைத் தமிழை அகிலம் உயர்த்தவே என்னை எந்தை நன்றாய் படைத்தார். என்னும் திருமூலரின் வாக்கின்படி முன்னைப் பழந்தமிழகத்தின் சிறப்புகளையெல்லாம் வண்ணமுற சொல்கின்றார் ஆசிரியர்.

    சோழர்களின் சிறப்பியல்புகள் தொடங்கி - கரிகாலனின் சிறப்புகள் வரை 12 தலைப்புகளிலும் சோழர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டையும் தமிழகத்திற்கு போற்றிப் புரந்த பொன்னார்ந்த புகழ்சால் செயல்களையும் எண்ணி வியக்கும் வண்ணம் இனிது எழுதியுள்ளார்.

    சோழ மன்னர்களின் கொடைச்சிறப்பையும், போர்த் திறனையும், மத நம்பிக்கைகளையும், வாழ்வியல் நிலைகளையும் வானளாவ நெடிதுயர்ந்த கோவிற்கலைகளையும் கொஞ்சமும் குறையாது கொட்டித் தந்துள்ளார் நூலெங்கிலும்.

    கல்லணை கட்டிய கரிகால் பெருவளத்தானுக்கு சொல்லணை கட்டி மகிழ்கிறார் தஞ்சை எழிலன்.

    நூல் நுவலும் செய்திகள், ஆசிரியர் வரலாற்றின்பால் நுண்மாண் நுழைபுலம் மிக்கவர் என்பதை உணரச் செய்கிறது. சோழர்கள் மீது கொண்டிருந்த ஆழமான, அன்பு உணர்வுக்கு இந்நூல் தரும் கருத்துகள் சாமரம் வீசுகின்றன.

    திரு. மா. இராசமாணிக்கனார், திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார் பரிமேலழகர், டி.வி. சதாசிவபண்டாரத்தார், இரா. மதிவாணன் ஆகிய ஆய்வறிஞர்கள் ஆய்ந்து எழுதிய அரிய தகவல்களின் மேற்கோள்கள், வரலாற்றை முழுமையாய் உணரச் செய்யும் பெரும் பணியைச் செய்தன. இதற்கு ஆசிரியரின் அர்ப்பணிப்பே காரணம். அவருக்கு எனது பாராட்டுகள்.

    இந்நூல் மூலம் கலிங்கத்துப்பரணியில் சோழர்களின் போர்ச்சிறப்பை அறிய முடிகிறது. பரணி, உலா, பெரியபுராணம், மூவர் உலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் போன்ற தமிழின் இலக்கியங்களை சோழர் காலத்தில் மலர்ந்தவை என முகர்ந்த போது மகிழ்வின் சாயல் தெரிந்தது.

    சைவத் திருமுறை வளர்த்த நம்பியாண்டார் நம்பி சோழ காலத்தவரே என்பன போன்ற குறிப்புகள் ஆராய்ச்சியாளருக்குப் பெரிதும் உதவும் தன்மையதாகும்.

    சோழ மன்னர்கள் தமிழை வாழ வைத்தவர்கள். தமிழகத்தை உயர்ந்தி வாழ்ந்தவர்கள் என்கிற பெருமித உணர்வு இந்நூலை படித்தபோது ஏற்பட்டது. நூலாசிரியர் தஞ்சை எழிலன் அவர்களுக்கு எனது அன்பு கலந்த வாழ்த்துகள்.

    நன்றி.

    அன்புடன்

    (கா.மு. சேகர்)

    பெறுநர்

    தஞ்சை எழிலன்

    219 எஸ்.ஐ.எஸ் தனுப் அடுக்ககம்

    ஜெயச்சந்திரன் நகர்

    பள்ளிக்கரணை

    சென்னை – 600 100

    செல்பேசி – 98841 44575

    முன்னுரை

    ‘மாமன்னன் கரிகால் சோழன்’ என்ற இந்நூல் என்னுள்ள நீண்ட நாட்களாக ஊற்றெடுத்துக் கொண்டிருந்ததன் விளைவு. பல இடங்களில், புத்தக கடைகளில், நூலகங்களில் எல்லாம் ‘இராசராச சோழன்’, ‘இராசேந்திர சோழன்’ பற்றிய நூல்கள் அதிகம் எனது கண்ணில் தென்பட்டன, மற்ற சோழ மன்னர்களைப் பற்றிய நூல்கள் அவ்வளவாக இல்லை என்றே கூலறாம். எனக்கோ, சோழ அரசர்களில் அதுவும் முற்கால சோழர்களில் ‘மாமன்னன் கரிகால் சோழன்’ தானே அதிகப் புகழ் பெற்றவன், அவனைப் பற்றி அதிகம் அறிய ஏதாவது நூல் இருக்குமா என்று பல நூலகங்களில் தேடினேன். ஆனால் நான் எதிர் பார்த்தபடி ஏதும் தென்படவில்லை. ‘தமிழக வரலாறு, சோழர் வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு’ போன்ற நூல்களில் ஆங்காங்கே பல செய்திகள் கிடைத்தன. முனைவர் ரா. நிரஞ்சனாதேவி அவர்கள் எழுதிய ‘கரிகால் சோழன்’, ‘கல்லணை கட்டியவனின் கம்பீர வரலாறு’ என்ற நூல் கொஞ்சம் விரிவாக பல செய்திகளை ஒட்டி நின்றது. ஆனால் அது நூலாசிரியர் ஆய்வுக்குச் சமர்பித்தவையாக இருந்தன. இதுபோன்ற மேலும் பல நூல்களை, நூலகங்களில் தேடிப் படித்து எனக்கு வேண்டிய தகவல்களை சேகரித்து ஓர் எளிய நூலாக தொகுத்துள்ளேன். இதில் மாமன்னன் கரிகால் சோழன் பற்றிய அனைத்து செய்திகளையும் அடக்கியுள்ளேன் என்று கூற இயலாது. ஆனால் கூறப்பட்டுள்ள செய்திகள் அனைத்தையும் நன்கு திறனாய்வு செய்தே அமைத்துள்ளேன். இதில் எங்கேயும் என்னுடைய கற்பனையான செய்திகள் நிச்சயமாக இல்லை.

    சோழ மன்னர்களில், ‘மாமன்னன்’ என்ற அடைமொழியுடன் வாழ்ந்தவர்கள் ‘மாமன்னன் கரிகால் சோழனும்’, ‘மாமன்னன் இராசராச சோழனும்’ தான். அதனால்தான் இராசராச சோழனைப் பற்றிய பல நூல்கள் இருந்தாலும், கரிகால் சோழனைப் பற்றி எழுத விருப்பம் கொண்டேன். இது ஆய்வு நூலும் அல்ல; ஆய்வுக்குரிய நூலும் அல்ல. சோழர்களைப் பற்றி அறிய உதவும் ஓர் எளிய நூல். இந்நூலை என்னால் முடிந்த அளவு செப்பனிட்டு, செம்மைப்படுத்தி, அனைவரும் அறிந்து கொள்ளும்படி எளிய தமிழில் எழுதி உள்ளேன். இந்நூலையும், என்னுடைய மற்ற நூல்களையும் வாங்கிப் படித்து மேலும் என்னை ஊக்குவிக்குமாறு வேண்டிக்கொள்ளுகின்றேன்.

    தன்னுடைய பல்வேறு அயராத அரசுப் பணிகளுக்கு இடையேயும் அணிந்துரை வழங்கிய தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் மதிப்பிற்குரிய முனைவர் கா.மு. சேகர் அவர்கட்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. இந்த நூலை சிறந்த முறையில் ஒளி அச்சு செய்த ஐகான் கிராபிக்ஸ் திருமதி பிரேமா அவர்களுக்கும், எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

    தஞ்சை எழிலன்

    இந்நூலாசிரியரின் வாழ்க்கைப் பயணத்திலே என்ற நூலைப் பற்றி

    வாழ்க்கை என்பது வெறும் ஒரு வரி வார்த்தையல்ல. ஓராயிரம் புதிர்களும், சிக்கல்களும், சந்தேகங்களும் பொதிந்து கிடக்கிற அர்த்தம் நிறைந்தது வாழ்க்கை.

    எளிய மொழியியல், அனைவரும் நூலைப் படிக்கவேண்டும் என்கிற உயரிய எண்ணத்தோடு, சுருக்கமாகவும் சுவைபடவும் எழுதியுள்ளார் தஞ்சை எழிலன்.

    பொழுதுபோக்கிற்காக படிக்கிற நூலாக இல்லாமல், நல்வாழ்வின் பழுதுகளை நீக்கி, சிறந்த வாழ்க்கை அமைய வழி காட்டுகின்ற நூலைப் படைத்துள்ள தஞ்சை எழிலனுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

    டாக்டர் மு. ராஜேந்திரன், இ.ஆ.ப.,

    வேளாண்மை இயக்குநர், தமிழக அரசு

    அழகிய பட்டுத்துணி ஒன்றை நெய்வது போன்று மிகத் திறமையாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. ஒரு சிறந்த உளவியல் நிபுணருடன் அருகமர்ந்து உரையாடிய உணர்வினை நல்குகிறது. இதனை ஒரே மூச்சில் படித்து முடித்துவிட முடிகிறது. தன்னம்பிக்கை நூல்கள் என்னும் பூஞ்சோலையில் பூத்திருக்கும் இந்தப் புதிய மலர் எல்லோர் மனத்தையும் கவரும். இதன் நறுமணம், வாசிப்பவர்களுக்கு இதமான சுக நலன்களை வாரி வழங்கும் என்பது உறுதி.

    கௌதம நீலாம்பரன்

    எழுத்தாளர்

    வாழ்வில் சோர்வடைந்தவர்கள், தோல்விகளால் துவண்டு போகிறவர்கள் வாழ்க்கை இத்துடன் முடிந்து விட்டதாக நினைத்து தற்கொலைக்கு முயற்சிப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்டவர்கள் இந்நூலைப் படித்தாலே போதும் தங்களின் வாழ்க்கைப் பயணம் இன்னும் தொடர்கிறது என்பதை உணர்ந்து தற்கொலை முடிவை மாற்றிக் கொள்வார்கள்.

    வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்கள், சந்தித்த மனிதர்கள், அவர்களின் பிரச்சினைகள் என்று அலசி ஆராய்ந்து உளவியல் நோக்கில் தீர்வும் வழங்கும், இந்நூல் படிப்போரை தன்னம்பிக்கை கொள்ள வைக்கிறது.

    குமுதம் வார இதழ் 23-4-2014

    பொருளடக்கம்

    1. சோழர்களின் சிறப்பியல்புகள்

    2. இலக்கிய வளர்ச்சி

    3. கரிகால் சோழன்

    4. கரிகால் சோழன் - காலம்

    5. கரிகாலனின் போர்கள்

    6. உறையூர்

    7. காவிரிப்பூம்பட்டினம்

    8. இந்திர விழா

    9. காவிரி ஆறு

    10. கல்லணை

    11. கரிகாலனின் சிறப்புகள்

    12. கரிகால் சோழன் உதவிய நூல்கள்

    1. சோழர்களின் சிறப்பியல்புகள்

    தென்னிந்தியாவில் தமிழகம் என்பது பல நூறு ஆண்டு காலமாக நன்மக்களின் பிறப்புக்கும் வாழ்வுக்கும் நிலைக்களனாக விளங்குவதோடு விடுபாடு நாடு என்றும் கூறுதல் அமையும். நமது பாரத நாடு முழுவதுமே தமிழர்களால் ஒரு நேரத்தில் ஆளப்பட்டு, ‘பாரதம்’ என்றும் ‘தமிழகம்’ என்றும் கூறுபவர் ஒரு சாரார். பின்னாளில் வடக்கில் வேங்கடமும் தெற்கில் குமரியும், கிழக்கு மேற்கில் கடல்களையும் எல்லையாகக் கொண்ட நிலப்பரப்பே ‘தமிழகம்’ என அறியப்பட்டதாக கூறப்படுகின்றது.

    தொன்மைக் காலத்தில் தமிழகம் சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று பிரிக்கப்பட்டு மூவேந்தர்களால் ஆளப்பட்டு வந்தது. சிற்றரசர்கள் பலரும் இக்காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்து வந்தாலும் மூவேந்தர்களின் ஆட்சிதான் வளர்ந்து சிறந்து இருந்துள்ளது. இம்முப்பெரும் வேந்தர்களில் சோழ அரசர்களே பிற்காலத்தில் பேரரசர்களாகச் சிறப்புடன் ஆட்சி நடத்தியுள்ளனர் பாண்டியர்கள் சங்கம் வைத்து தமிழை வளர்த்தனர். சோழர்கள் அரசியல் பண்பாட்டை வளர்ந்தனர். மற்றும் கலை, இலக்கியம், ஓவியம், சிற்பம் முதலியவைகளும் வளர்ச்சியடைந்துள்ளன. சோழர்களின் ஆட்சியில் தமிழ் மொழியும், தமிழ் நாடும் உச்சநிலையை அடைந்து இருந்தது. சோழர்களின் வரலாற்றை இலக்கியங்கள் மூலமும், கல்வெட்டுகள் மூலமும் மிகவும் நுட்பத்துடன் நமது ஆய்வாளர்கள் தத்தம் திறமைக்கேற்றவாறு தொகுத்து அளித்துள்ளனர். ஆய்வாளர்களிடையே சோழர்களின் அரசர்களை வரைமுறைப்படுத்துவதிலும், காலத்தை நிர்ணயம் செய்வதிலும் பல்வேறு மாறுபாடுகள் தெரிந்தாலும் அனைவரும் தனக்கென தனிப்பாணியை வகுத்துக் கொண்டு தமக்கு கிடைத்த கல்வெட்டு மற்றும் இலக்கிய ஆதாரங்களை கொண்டு தங்களின் வாதத்தை நிலை நிறுத்தியுள்ளனர். இப்படி மூவேந்தர்களின் தொன்மை குறித்தும் குறிப்பாக சோழமன்னர்களின் தொன்மை குறித்தும் ஆராய்ந்துள்ள ஆய்வாளர்களின் கருத்துக்கள் இதுவரை முழு வடிவம் பெறாமலேயே இருக்கின்றது. அவை சில இடங்களில் சிலரைப் பற்றிக் கூறும்போது, கற்பனையாகவும் சில இடங்களில் குறைபாடுடையனவாகவுமே காட்சியளிக்கின்றது.

    சோழர்களின் நிர்வாகத் திறமைக்கு எடுத்துக்காட்டாக மக்களாட்சி தத்துவங்கள் குடியாட்சி நடைமுறையான ‘குட வோலை’ முறைத் தேர்தல் மற்றும் கிராமநிர்வாக நடைமுறைகள் இருக்கின்றன. சுமார் 300 ஆண்டு காலம் தென்னிந்தியா முழுவதும் ஒரே ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டு ஒரே நாடாக ஆளப்பட்டு வந்தது. சோழர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழர் நாகரிகம் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்திருந்தது. நாடெங்கும் அமைதி நிலவியது. சிறிய பெரிய கோயில்கள் பல நாடு முழுவதும் கட்டப்பட்டு பக்தி மார்க்கம் தழைத்தோங்கியது. கோயில்களில் பல பக்தி இசைகள் ஒலித்துக் கொண்டேயிருந்தன. அழகு மிளிர்ந்த சிற்பங்கள் செதுக்கப்பட்டன.

    Enjoying the preview?
    Page 1 of 1