Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indraiya Thennaga Ilakkiya Pokku
Indraiya Thennaga Ilakkiya Pokku
Indraiya Thennaga Ilakkiya Pokku
Ebook291 pages1 hour

Indraiya Thennaga Ilakkiya Pokku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அறிவியல் தமிழறிஞர் மணவையாரின் பல்துறை நூல்களையும் பன்முகப்பட்ட அவர்தம் பணிகளையும் பற்றி தக்கவர்களைக் கொண்டு ஆயும் ஆய்வு நூல் என்பதைவிட அறிவியல் தமிழ் என்ற ராஜபாட்டையில் தமிழை 21ஆம் நூற்றாண்டுக்குப் பீடு நடைபோட்டு மணவையார் அழைத்துச் செல்லும் பாங்கை விவரித்துக் கூறுவதே நோக்கமாகும்.

கற்றறிந்த தமிழறிஞர்களெல்லாம் கடந்த காலத் தமிழை - சங்க காலத் தமிழைப்பற்றி அசைபோடுவதையே பெருந்தொண்டாக, தமிழ்ப் பணியாகக் கருதிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், அடுத்துவரும் நூற்றாண்டுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தமிழை அறிவியல் தமிழாக - வளர்த்தெடுக்கும் முயற்சியில் கடந்த நாற்பதாண்டுகளாக முனைப்போடு உழைத்து வரும் அன்னாரின் தகைமையை - முயற்சிகளை அதனால் தமிழ் பெற்றுள்ள வளமிகு சிறப்பை ஆய்வு உரைகல்லில் உரைத்துப் பார்ப்பதே இந்நூலின் நோக்கமாகும்.

Languageதமிழ்
Release dateApr 8, 2023
ISBN6580164809756
Indraiya Thennaga Ilakkiya Pokku

Read more from Manavai Musthafa

Related to Indraiya Thennaga Ilakkiya Pokku

Related ebooks

Reviews for Indraiya Thennaga Ilakkiya Pokku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indraiya Thennaga Ilakkiya Pokku - Manavai Musthafa

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இன்றைய தென்னக இலக்கியப் போக்கு

    Indraiya Thennaga Ilakkiya Pokku

    Author:

    மணவை முஸ்தபா

    Manavai Musthafa

    For more books

    https://www.pustaka.co.in/home/author/manavai-musthafa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. கன்னட இலக்கியம்

    2. தெலுங்கு இலக்கியம்

    3. மலையாள இலக்கியம்

    4. டாக்டர் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்

    5. பேந்த்ரே

    6. சிவராம காரந்த்

    7. டாக்டர் கே. வி.புட்டப்பா

    8. டாக்டர் வி. கே. கோகக்

    9. ஆத்ய ரங்காச்சாரியா

    10. ஆர். எஸ். முகளி

    11. அ. ந. கிருஷ்ண ராவ்

    12. பி. புட்டசாமையா

    13. கோவிந்த பை

    14. சங்கரபட்ட கடெங்கோட்லு

    15. மத்தூர் கிருஷ்ணமூர்த்தி

    16. விசுவநாத சத்தியநாராயணா

    17. ஸ்ரீ. ஸ்ரீ.

    18. பாலகும்மி பத்மராஜூ

    19. குடிபாடி வெங்கடாச்சலம் (சலம்)

    20. கொடவடிகண்டி குடும்ப ராவ்

    21. குர்ரம் ஜோஷ்வா

    22. டாக்டர் பிங்களி லட்சுமிகாந்தம்

    23. சிவசங்கர சுவாமி

    24. ராயப்ரோலு சுப்பா ராவ்

    25. அனந்தகிருஷ்ண சர்மா

    26. காசி கிருஷ்ணாச்சாரியா

    27. முப்பாள ரங்கநாயகம்ம

    28. டாக்டர் சி. ஆர். சர்மா

    29. மகாகவி ஜி. சங்கர குறுப்பு

    30. தகழி சிவசங்கரப் பிள்ளை

    31. கேசவ தேவ்

    32. பேராசிரியர் ஜோசஃப் முண்டசேரி

    33. பி.சி.குட்டிகிருஷ்ணன் (உருப்)

    34. வைக்கம் முஹம்மத் பஷீர்

    35. எம். டி. வாசுதேவன் நாயர்

    36. பாலாமணியம்மா

    என்னுரை

    குறிப்பிட்ட சில விஷயங்களையே வளைய வளைய வந்து அலுப்புச் சலிப்பின்றி எழுதிக் குவிப்பது நமக்குள்ள பெருமைகளுள் ஒனறு. நம்மைச் சுற்றியுள்ள பிற மொழிகளில் என்னதான் நடக்கிறது என்பதைப் பற்றி என்றுமே நாம் கவலைப்பட்டதில்லை. இங்கு மட்டுமா இந்நிலை, அங்கும் அதுதான் நிலைமை.

    இந்நிலைமையைச் சற்று நகர்த்திப் பார்க்க, நான் ஆசிரியனாக இருந்த ‘புத்தக நண்பன்' மாத இதழ் மூலம் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கன்னட, தெலுங்கு, மலையாள மொழிகளில் கவிதை, புதினம், சிறுகதை, திறனாய்வு போன்ற துறைகளில் புகழ் பெற்ற வாழும் எழுத்தாளர்களை வகைக்கு ஒருவராகத் தேர்வு செய்து அவர்தம் படைப்புகளை விமர்சிப்பதன் மூலம் அங்குள்ள இன்றைய இலக்கியப் போக்குகளை உரிய முறையில் நம்மவர்களுக்கு உணர்த்துவதே அம்முயற்சி, ‘புத்தக நண்பன்' மறைவுக்குப்பின் ‘நூலகம்' மாத இதழில் அப்பணியைத் தொடர்ந்தேன். திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஊட்டிய உற்சாகத்தால் அப்பணி மூன்றாண்டுகள் தொடர்ந்தது. அதன் விளைவே இப்போது உங்கள் கரங்களில் தவழும் இந்நூல். படித்துப் பாராட்டியதோடு அஃது நூல் வடிவில் வெளிவரவேண்டும் என வலியுறுத்தி வந்தவர் திறனாய்வுச் செல்வர் திரு சோ. சிவபாதசுந்தரம் அவர்கள். அதற்கிணங்க கன்னட, தெலுங்கு, மலையாள மொழி இலக்கிய வரலாற்றை மூன்று கட்டுரைகளில் ஒரு கண்ணோட்டமாக (சர்வே) கொடுத்திருக்கிறேன். இதன் மூலம் ஒரு அடிப்படை விஷய ஞானத்தோடு அம்மொழிகளின் இலக்கியப் போக்குகளை வாசகர் எளிதாக அறிந்துணர முடியும் என்பது என் நம்பிக்கை.

    கன்னட, தெலுங்கு, மலையாள மொழி இலக்கியப் போக்குகளைச் சுட்டிக்காட்டும்போது ஆங்காங்கே தமிழ் இலக்கியப் போக்குகளைச் சுட்டிக்காட்டி ஒப்பீட்டாய்வு செய்துள்ளேன். தமிழ் வாசகர்களுக்குத் தமிழ் இலக்கியப் போக்குகள் நன்கு தெரிந்த ஒன்றே என்பதால் அஃது தனியே விளக்கப்படாமல் தவிர்க்கப்பட்டு பிற தென்னக இலக்கியப் போக்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

    விடுதலைப் பொன்விழா ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நேரத்தில் இம்மறுமதிப்பு வெளிவருகிறது. 1947 ஆகஸ்ட் திங்ளுக்குப்பின் கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள தென் மொழிகள் இலக்கிய வளர்ச்சியையும் அதன் போக்குகளை ஆராயும் முயற்சியாகவும் ஒரு வகையில் இந்நூல் அமைந்துள்ளதெனலாம். இந் நூலுள் அலசப்பட்ட இலக்கிய வாணர்கள் பலரும் உருவாக்கிய இலக்கியப் படைப்புகள் விடுதலைக்குச் சற்று முன் பின்னாக வெளிவந்தவைகளாகும்.

    தென்னக மொழி இலக்கிய வளர்ச்சியை மட்டுமல்லாது அவர்களிடையே உருவாகி எழுத்து வடிவில் வெளிப்பட்ட சிந்தனைப் போக்குகளையும் உய்த்துணர இஃது வழியாயமைகிறது. ஒருமைப்பாட்டுணர்வு வலுப் பட, மனிதர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள உள்ளத்தால் நெருங்கிவர வேணடும். அப்போதுதான் உருவாகும் ஒருமைப்பாட்டுணர்வு வலுப்படவும் நிலைபெறவும் முடியும், அதற்கு இத்தகைய நூல்கள் கருவிகளாக அமைய முடியும் என்பது என திட தம்பிக்கை.

    இன, மொழி, பிராந்திய உணர்வுகளைக் கடந்த நிலையில் இதயங்கள் ஒருங்கிணையவும் அதன் மூலம் ஒருமைப்பாட்டுணர்வு வலுப்பெறவும் எனது இம்முயற்சி பயன்படும் எனப் பெரிதும் நம்புகிறேன்.

    இதற்குச் சிறந்ததோர் முன்னுரையை ஆங்கிலத்தில் வழங்கிய டாக்டர் சி.ஆர். சர்மா அவர்கட்கு என் இதயம் நிறைந்த நன்றி.

    அன்பன்

    மணவை முஸ்தபா

    1. கன்னட இலக்கியம்

    மேற்கே அரபிக் கடலையும் கிழக்கே ஆந்திர மாநிலத்தையும், வடக்கே மகாராஷ்ராவையும், தெற்கே கேரளாவையும், தமிழ்நாட்டையும் எல்லைகளாகக் கொண்டுள்ள கர்நாடக மாநிலத்து மொழியான கன்னடம் தமிழுக்கு அடுத்தபடியான பழம் பெருமைமிக்க மொழியாகும்.

    ராஷ்ட்ரகூடர்கள், சாளுக்கியர்கள், ஹொய்சாலர்கள், விஜயநகர சக்கரவர்த்திகள் எனப் பல்வேறு ஆட்சியாளர்களால் கர்நாடகாவின் இலக்கியம், பண்பாடு, கவின்மிகு நுண் கலைகள் செழுமையாகக் காலந்தோறும் வளர்க்கப்பட்டு வந்தன என்றாலும் கவிதையைப் பற்றிய கவிராஜ மார்கா (கி.பி. 825) தான் முதல் கன்னட நூலாகக் கிடைத்தது. உரைநடையில் கிடைத்த முதல் நூல் சிவக்கோட்டியாச்சார்யா எழுதிய வொட்டரா தனெ (கி.பி 925) என்பதாகும். அது ஒரு சிறுகதைத் தொகுப்பு நூல் என்பது இங்குக் கவனிக்கத்தக்கதாகும்.

    பிற தென்னக மொழிகளைப் போன்றே கன்னட மொழியும் சமஸ்கிருதத்தின் பலமான தாக்குதலுக்கு இலக்காகி அதன் செல்வாக்கு ஓங்கிய நிலையில் கனனட இலக்கியப் படைப்புகள் உருவாயின.

    சமய அடிப்படையில் உருவான இலக்கியப் போக்கில் ஒரு புது அகதியாயமாக, சமுதாயக் கண்ணோட்டத்தோடு, விஜயநகர சாம்ராச்சிய அழிவுக்குப் பிறகு ஏற்பட்ட சமூக மாற்றங்களைக் கருவாகக் கொண்ட கவிதைகளை சர்வக்ஞன் என்ற வசைக் கவிஞன் இயற்றியதாக கன்னட இலக்கிய வரலாறு கூறுகிறது.

    கன்னட இலக்கிய வளர்ச்சிப் பாதையில் சமஸ்கிருதத்தின் செல்வாக்கு எப்படி வடமொழி இலக்கியங்களும் அதன் செலவாக்கோடு இணைந்த புதிய கன்னட இலக்கியங்களும் உருவாகக் காரணமாக இருந்ததோ, அதே போன்று மேனாட்டினரின் வருகையின் வாயிலாக மேனாட்டு இலக்கியங்களும் அவற்றின் பல்வேறு வகைகளும், அவற்றின செல்வாக்கினால் எழுந்த இலக்கிய வகைகளையும் கனனட மொழி பெற ஏதுவாயிற்று. இத்தகைய புதிய இலக்கிய வகைகளின மூலமாக புதிய சிந்தனைகளும், கண்ணோட்டமும் படித்தவர்களிடையேயும் படைப்பாளர்களிடையேயும் எழலாயிற்று.

    ஒருபுறம் ஆங்கில மொழி மூலமாக அறிமுகமான மேனாட்டு இலக்கிய வகைகளின் பல்வேறு அமசங்களை அப்படியே கண்மூடித்தனமாகப் பின்பற்றி கன்னட இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன. மற்றொருபுறம் ஆங்கில இலக்கிய அமைப்புகளை கன்னட மொழிக்கேயுரிய இலக்கிய வடிவங்களோடு இணைத்து, ஒரு சில அம்சங்களில் மட்டுமே மாற்றங்களையும திருத்தங்களையும் ஏற்படுத்தி இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன. மொத்தத்தில் இவ்விரண்டு போக்குகளாலும் கன்னட இலக்கியம் தரத்தில் மட்டுமல்லாமல் அளவிலும் பெருக்கமடையலாயின.

    ஆங்கிலம் போன்ற மேனாட்டு மொழிகளிலிருந்து மட்டுமல்லாது மராத்தி, வங்காளி, இந்தி, தமிழ் போன்ற இந்திய மொழிகளிலிருந்தும் இலக்கிய இறக்குமதிகள் வெகுவாக நடைபெற்றன.

    பி.எம். ஸ்ரீ கண்டய்யா ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்த கவிதைகளும், கோலகநாத் மராத்தி மொழியிலிருந்து பெயர்த்த கதை இலக்கியங்களும் இளைஞர்களிடையே படைப்பிலக்கிய ஆர்வத்தை ஊட்டி வளர்க்கலாயின.

    கன்னட புத்திலக்கியத் துறையின் பொற்காலத்தைத் தோற்றுவித்து முடுக்கிய பெருமை முப்பெரும் இலக்கியக் குழாம்களைச் சாரும். பி.எம். ஸ்ரீ கண்டய்யா, மாஸ்தி வேங்கடேச ஐயங்கார், டி.வி. குண்டப்பா ஆகியோர் தலைமையில் இயங்கிய ‘தாளிரு’ குழு; பஞ்சே மற்றும் கோவிந்தபை தலைமையில் செயல்பட்ட ‘மங்களூர் மித்ர மணடலி’ பேந்தரே தலைமையில் இயங்கிய ‘கெலியர கும்போ' ஆகியவைகளே அவை.

    இன்னும் இவை போன்ற வேறுசில அமைப்புகளும் புதுமை இலக்கிய வளர்ச்சிக்கு வேகமும் விருவிருப்பும் ஊட்டின என்று கூட கூறலாம்.

    கன்னட இலக்கிய வரலாற்றில் தங்களுக்கென தனியிடம் பிடித்துக் கொண்ட கவிஞர்கள் கே.வி. புட்டப்பா, பி.டி.என். ராஜரத்தினம், வி. சீதாராமய்யா, சங்கரபட்ட கடெங்கோட்லு, மதுர சென்னா, ஆர்.எஸ். முகளி முதலானோர் இந்த குழாம்களைச் சேர்ந்தவர்களாவர்.

    விடுதலைக்கு முன்னர் எழுந்த இலக்கியங்களைப் படைத்தவர்கள் மண்ணின் மணம் கமழும் வண்ணம் படைக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு எழுத முனைந்தனர் எனக் கூறலாம். பெடிகெரி, காலி போன்றோர் கவிதைகளில் தேசிய மறுமலர்ச்சிப் போக்கு அதிக அளவில் இடம் பெற்று மக்களை தேசிய நீரோட்டத்தின்பால் ஈர்க்கலாயின.

    குவெம்புவும் பேந்த்ரேயும் கன்னட புதுமைக் கவிதையுலகின் மைய சக்திகளாவர். இலக்கிய வரலாற்றில் தனியிடம் பெற்ற இவர்கள் இருவருமே பாரதீய ஞானபீடப் பரிசைப் பெற்றிருப்பது இவர்தம் பெருமைக்கும் திறமைக்கும் மற்றுமோர் சான்று ஆகும்.

    இருவரும் ஒரே போக்கிலான கருவோடு கூடிய பலவித புனைவியல் கவிதைகளை இயற்றியிருந்த போதிலும் அவைகளிடையே வடிவம், சொல்லும் முறை, நுணுக்கம் இவற்றில் பெரும் வேறுபாடு உண்டு. குவெம்பு இயற்கையழகில் மயக்கம் கொண்டவராய், அதன் மூலம் பெற்ற அனுபவ உணர்வுகளைப் பாட்டால் வடித்து மக்களிடையே உலகவிட்டவர் பிற்காலத்தில் மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை அடியொற்றி படைப்பிலக்கியங்களை உருவாக்க விழைந்து, தன் எழுதுகோலை புனைகதைகளின்பால் திருப்பியவர் அவர். புதின இலக்கியங்களை உருவாக்கியபோது கூட அவர் ஒரு இயற்கை ஆர்வலர் என்ற உணர்வு படிப்போரிடையே எழும் வகையிலேயே அவரது படைப்பிலக்கியங்கள் அமைந்துள்ளதெனலாம்.

    பேந்த்ரேயினுடைய கவிதைகளில் தலையாய அம்சமாக அமைத்திருப்பது எளிமையும் வாய்மையுமாகும்.

    பேந்த்ரேயின் மற்றொரு சிறப்பம்சம் வாழ்வியல் தத்துவங்களை சாதாரண பாமர வாசகனும் நன்கு உணர்ந்து தெளியும் வண்ணம் எளிமைப்படுத்திச் சொல்லுவதாகும். ஆனால், குவெம்புவின் படைப்புகளை ஒப்பு நோக்கும்போது மற்றவர்கள் தன் கருத்துக்களை, தத்துவார்த்த உண்மைகளை எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைவிட, தான் சொல்ல வந்ததை இலக்கிய வடிவில் திறப்பட சொல்லிவிட வேண்டும் என்பதிலேயே கருத்தாக உள்ளதை நம்மால் உணரமுடிகிறது. மேலும் குவெம்புவின் படைப்புகளில் மிக அதிகமான சமஸ்கிருதச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. தனக்குள்ள சமஸ்கிருதப் புலமையைப் புலப்படுத்த வேண்டும் என்ற வேட்கை அவரிடம் மிகுந்திருப்பதை உணர முடிகிறது. அதேசமயத்தில் பேந்த்ரேயின் படைப்புகளில் இதற்கு நேர்மாறான நிலை இருப்பதைக் காணமுடிகிறது. மொழியடிப்படையில் பார்த்தால் கன்னட மொழி வாசகர்களோடு இரண்டறக் கலக்கும் தனித்தன்மை பேந்த்ரேயின் கவிதைகளுக்கு மிகுதியும் உண்டு என்பது தெளிவான உண்மை.

    குவெம்பு படைத்த ‘ராமாயண தரிசனம்' என்னும் காவியம் 23,000 வரிகளைக் கொண்டது. இக்கால வாழ்க்கைப் போக்கில் இக்காவியத்தை கூறிச் செல்லும் பாங்கு இவரது படைப்பாற்றலுக்கு என்றென்றும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.

    டி.வி.ஜி. என சுருக்கமாக கன்னட இலக்கிய ஆர்வலர்களால் அழைக்கப்படும் டி.வி. குண்டப்டா புத்திலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பணியாற்றிய கவிச் செல்வராவார். இவரது கவிதைகளில் இயற்கை எழிலோடு மனித வாழ்வின் இயல்புகளும் மனிதத்துவ மேன்மையும் அழகுறச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. இவரது படைப்புகளுள் மிகச் சிறந்த ஒன்றாகத் திறனாய்வாளர்களால் கருதப்படுவது ‘மங்கு திம்மன கக்க' எனும் காவியமாகும். இப்படைப்பில் அன்றாட மனித வாழ்வில் இழையோடி நிற்கும் வாழ்வியல் தத்துவக் கண்ணோட்டத்தைக் காணலாம். காவியப் போக்கில் மனிதர்களைச் சூழ்ந்துள்ள பிரச்சினைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் திறம்பட வெளிப் படுத்துகிறார். சுமார் ஆயிரம் பாடல்களைக் கொண்ட இக்காவியம் கன்னட மொழிக்கு அவரளித்த அற்புதக் காணிக்கை என்பதில் ஐயமில்லை.

    ‘மங்கு திம்ம’ எனத் தன்னை அழைத்துக் கொள்ளும் கிராமியச் சூழலில் வாழும் குரு ஒருவர் எழுதிய நூலாக ‘மங்கு திம்மனகக்க'வை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். இதில் பாத்திரப் படைப்புகள் அதிகமில்லை. கலையம்சமும் குறைவே. ஆனால் கீழை நாடுகளின், மேலை நாடுகளின் அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் திரட்டித் தரும் ஞானக் களஞ்சியம் போன்று இஃது விளங்குகிறது. காவியச் சாயலும், கட்டுக்கோப்பும் கொண்டு விளங்கும் இப்படைப்பு இன்றைய வாழ்வியல் போக்கை வசன காவியம போல் விணடுரைக்கிறது.

    ‘பூமியைத் தனியே விட்டுப் பிரிய இயலாத ஆவி அலைவது போன்று இவ்வுலகம் அலைகிறது. பழைய நெறி மடிந்து விட்டது. புதிய அறநெறியோ இன்னும் பிறக்கவே இல்லை. கவலையின் முடிவு எப்போது?"

    எனக் கூறும் இவர் இன்றைய வாழ்வின் போக்கை அப்பட்டமாக பின்வருமாறு கூறுகிறார்:

    வாழ்க்கை என்பது என்ன? அடி தவறி விழுதல், தள்ளாடி எழுதல், தீனி தின்பது, கசப்பு மருந்து குடிப்பது. அவசரத்தில் அறிவை இழந்து, தவறைச் சரியென்று சாதிப்பது. இவ்வளவுதானே!

    என இடித்துக் கூறுகிறார்.

    இவரைப் போன்றே ராஜரத்தினமும் புதுமை இலக்கிய வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தவர். வாழ்க்கையின் தாழ்ந்த தட்டில் தடுமாறிக் கொண்டிருக்கும் மக்களின் வாழ்வை அவர்தம் போக்கில் திறம்படச் சித்தரிப் பதில் வல்லவராக விளங்குகிறார்.

    இவரது படைப்பில் கருத்து, நடை, ஆழம் அனைத்திலும் புதுப்போக்கைக் கையாண்டுள்ளார். இவரது கவிதைகளில் ஒன்றில் குடிகாரனின் கண்ணுக்குச் சந்திரன் குடித்துவிட்டு ஆடுவதுபோல் தெரிகிறதாம். தெரு விளக்குகளும் குடிமயக்கத்தால் தலைகீழாக எரிகின்றனவாம். இத்தனை குடிகாரர்களுக்கு மத்தியில் தான் இருப்பது அவமானம் எனக் கருதி மீண்டும் கள்ளுக்கடைக்கே சென்று விடுகிறானாம். குடிகாரனின் இயல்பை எடுத்துக் கூறுவதுபோல் மனித விகார குணங்களை வெளிப்படுத்த முயலகிறார்.

    ‘விநாயக' என்ற புனை பெயரில் கன்னட இலக்கிய உலகில் எல்லோராலும் மதிக்கப்பெறும் வி.கே. கோகக் புதுமை இலக்கியப் படைப்பாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். பத்துக்கு மேற்பட்ட கவிதைத் தொகுதிகளை வெளியிட்ட இவரது பாடல்களில் அரவிந்தர் போன்ற இந்தியச் சிந்தனையாளர்களின் செலவாக்கு நீக்கமற நிறைந்துள்ளது.

    இவரது படைப்புகளுள் முத்தாரமாய் விளங்கும் ‘சமுத்ர கீதகலு' என்ற நூல், அவர் மேனாட்டிற்குக் கப்பல் பயணம் மேற்கொண்டபோது, எங்கும் வெறிச்சோடிக் கிடக்கும் கடல், வானம் அதில் காணும் பல்வேறு வகையான இயற்கைக் காட்சிகள் இவரது உள்ளத்தில் ஏற்படுத்திய இன்ப உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாக எழுந்ததே இந்நூல். பொருளுக்குத் தக்கபடி சந்தமும் அமைந்துள்ள இநநூல் கன்னட இலக்கியத்தில் தனித்துவம் பெற்றதாக விளங்குகிறது எனலாம்.

    மரபுப்போக்குக்கும் புதுமைப் போக்குக்கும் இடைப்பட்ட நிலையில்-ஏன் இரண்டையும் இணைக்கும் வகையில் கவிதைப் படைப்புகளை உருவாக்குவதில் ஒரளவு வெற்றி பெற்றவர் கே. எஸ். நரசிம்மசுவாமி ஆவார்.

    இவரது படைப்புகளுள் மக்களின் பேராதரவைப் பெற்றது. ‘மைசூரு மலலிகை" எனும் படைப்பாகும். திருமணத்திற்குப் பின் கணவன் மனைவியிடையே பொங்கி எழும் காதல் உணர்வுகளை அழகுறப் படம் பிடித்துக் காட்டுவதில் தனி முத்திரைகளைப் பதித்துள்ளார் எனலாம். இக்காதல் அனுபவங்களை குற்றங்குறை இல்லாது நுணுக்கமாக வெளிப்படுத்துவதில் தன் திறன் அனைத்தையும் காட்டியுள்ளார். காதலுக்குத் தனி அழகூட்டுவதுடன் தனி வழியும் காட்டுகிறார்கள்.

    ‘கிருஹ லட்சுமி’ என்ற தனது மற்றொரு படைப்பில் வருணனையாக ‘கண் அழகு’ ஒழுகி வரும் ஆற்றின் குமிழி களைவிட ஆழமானது; அவள் ஒருமுறை பின்னலை விரித்து கரிய கூந்தலை முதுகின் மேல் பரவ விட்டால் தொலைவிற்காணும் மலையின்பால் மாலை இருள் கவிந்தாற்போன்று காணும் என்றும், மற்றொரு இடத்தில் ‘தென்னை ஓலைகளின் மீது முழு நிலா நட்சத்திரமாகிய பசுவின் பாலைப் பொழியும்போது, முற்றத்தின் நடுவிலுள்ள துளசி மாடத்தின் அருகிருந்து அழகைக் கண்டு நாம் பாடுவோம். நட்சத்திரங்களை மீட்டுவோம். நிலவைத் தானடுவோம் அனபுப் பிணைப்பால் நாம் ஒருவர். பிணியும் இறப்பும் நமக்கில்லை' என்றெல்லாம் பாடுவது இவரது தனித்துவப் போக்கை எடுத்துக்காட்டு வனவாக உள்ளன.

    புதுமைக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்க இருவர் சென்ன வீர கணவியும், ஜி.எஸ். ருத்ரப்பாவும் ஆவர். இவ்விருவரும்

    Enjoying the preview?
    Page 1 of 1