Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ammavin Nizhal
Ammavin Nizhal
Ammavin Nizhal
Ebook177 pages1 hour

Ammavin Nizhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இருக்கிற இருப்பில் நடக்கிற நடப்பில் இலக்கியம் பற்றிச் சிந்திக்கவும் எழுதவும் படைப்பாளன் தன்னைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அல்லது அத்தகைய நெருக்கடிக்கு அவன் ஆளாவது என்பது தவிர்க்க இயலாததாகும்.

சமூக அமைப்பில் அன்றாடம் எத்தனையோ பிரச்சினைகள், கீழிருந்து மேல்மட்டம் வரை ஒவ்வொருவருக்கும் நேர்கிறது. அது படைப்பாளனை நோக்கியும் முட்டி மோதுகிறது. அவற்றிலிருந்து மனிதன் விடுவித்துக் கொண்டு மீளுவது என்பது மிகப் பெரிய சாதூர்யமான காரியம் தான்.

அத்தனையிலும் பங்கு பெறுகிற படைப்பாளன் தன்முன் நடக்கும் அனைத்துச் சம்பவங்களோடு, தானும் ஓர் அங்கமாகி நிற்பதோடு போராட்டக்களமாக வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்டிருக்கிற இச்சமூக அமைப்பு குறித்து ஒரு பார்வையை முன்வைக்க வேண்டியது அவசியமாகிறது.

கலைஞனின் பணி என்பது ஏதோ ஒரு நிகழ்வைப் பதிவாக்கிவிட்டு மட்டும் தப்பித்துப் போய்விட முடியாது. அவற்றுக்கப்பாலும் மனிதகுலம் என்பது சந்திக்க வேண்டிய அல்லது அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கிற பிரச்சினைகளுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவனாக கலைஞன் இருக்கிறான். அவனுக்குள்ள சமூகப் பொறுப்பு என்பது அளவிடற்கரியது. ஒரு சரியான திசைவழிக்கு அவனால் அழைத்துச் செல்லப்படவேண்டும்.

சமூகத்தளத்தில், குறிப்பானதொரு தாக்கத்தையும் விளைவையும் ஏற்படுத்தும் படைப்புக்கள் தாம் இலக்கிய வரலாற்றில் தொடர்ந்து நிலைத்து நிற்கக் கூடியவையாக இருக்கின்றன. அத்தகைய படைப்புக்களை நோக்கியும், உலகில் பிற தேசிய இனங்களில் தோன்றியுள்ள மற்ற இலக்கியத் தன்மையோடும் அதன் வளர்ச்சியோடும் ஒத்துப் போகிற படைப்பாக்கங்கள் நம் மொழியில் தொடர்வது என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிறது.

இத்தகைய இனிய இலக்கியச் சூழலில் என்னையும் அர்ப்பணித்துக்கொண்டு தொடர்வது தான் எனது இலக்கியப்பயணம். இது குறுகிய பயணமோ, குறுக்குவழிப் பயணமோ அல்ல;

நீண்ட பயணம்!

இந்த நீண்ட பயணத்தின், இடையில் நான் இலக்கியத்தின் இலக்கினை எட்டியிருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்; என்றாலும் எனது பணி தொடர்கிறது; பயணமும் தொடர்கிறது.

இந்த நீண்ட நெடிய பயணத்தில் பலரும் என்னோடு வந்து போயிருக்கிறார்கள். தொடர்ந்து என்னை அரவணைத்தும் கைபிடித்தும் வந்து கொண்டிருக்கிறார்கள் - தோழர்கள், விமர்சகர்கள், வாசகர்கள், பத்திரிக்கைகள், இதழ்கள்... என.

இத்தொகுப்பைச் சிறப்பாக வெளியிட அனைவருக்கும் எனது நன்றிகள்.

- விழி. பா. இதயவேந்தன்

Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580127404405
Ammavin Nizhal

Read more from Vizhi Pa. Idhayaventhan

Related to Ammavin Nizhal

Related ebooks

Reviews for Ammavin Nizhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ammavin Nizhal - Vizhi Pa. Idhayaventhan

    http://www.pustaka.co.in

    அம்மாவின் நிழல்

    Ammavin Nizhal

    Author:

    விழி பா. இதயவேந்தன்

    Vizhi Pa. Idhayaventhan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vizhi-pa-idhayaventhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    தண்ணீர்

    ஆதாரம்

    அம்மாவின் நிழல்

    சின்னஞ்சிறு பறவை போலே...

    அதிர்ச்சி

    கோமதி என்ன ஆனாள்?

    அலுவலகச் சிறை

    அன்றொரு நாள்

    அவனும் ஓர் அழுகிய பிணமும்

    அவளுக்காக அல்ல

    அந்நியன்

    நாற்றம்

    ஒரேயொரு பார்வையில்

    விளையாட்டு

    முள்ளோடை

    விளிம்பு

    பதிப்புரை

    பிரபல தமிழ் முன்னணிப் பத்திரிக்கைகள் மூலம் சிறந்த சிறுகதை எழுத்தாளராக வாசகர்கள் அறிந்துள்ள திரு. விழி. பா. இதயவேந்தனின் தேர்ந்த சிறுகதைகளின் புதிய தொகுப்புதான் 'அம்மாவின் நிழல்' என்னும் இந்நூல்.

    'கலை என்பது வாழ்க்கைக்காகவே' என்னும் சமூக இலக்கின் அடிப்படையில், சமூக பிரக்ஞையோடு கூடிய படைப்புக்களைத்தான் எழுத்தாளர் திரு இதயவேந்தனிடம் நாம் காண முடிகின்றது. இத்தொகுப்பில் உள்ள பற்பல கதைகளும் மானிடத்திற்கு அர்ப்பணிக்கும் ஏதேனும் ஒரு செய்தியை - ஒரு ஒளிக்கீற்றாகப் படிப்பவர் மனத்தில் பதிப்பதாக, பாதிப்பதாக அவர் தம் எழுதுகோல் வரைந்திருக்கிறது.

    சமூக நாட்டம் என்பது இவற்றுள் பொதுப்பண்பாக, இருப்பினும், அடித்தட்டு மக்களின் அவலங்களையும், அவற்றின் மீட்புக்கான விழிப்பையும் உணர்த்தும் பல கதைகள் இதனுள் மிளிர்கின்றன;

    'ஆதாரம்' என்றொரு சிறுகதை, நிர்க்கதியான ஒருவறிய தாயிடம் ஈவிரக்கமற்று நடந்துகொள்ளும் அரசு அதிகாரியின் ஆணவப் போக்கைச் சுட்டிக் காட்டுகின்றது.

    'அம்மாவின் நிழல்' என்னும் கதை, மிகச் சிறு வயதிலேயே தன் தாயைப் பறிகொடுத்த ஒரு சிறுவனின் மனவாட்டத்தை, ஒதுக்கத்தைத் துல்லியமாகப் படம் பிடிக்கின்றது.

    நம் பாரதத்தையே உலுக்கிய 'குஜராத் பூகம்பம்' அடிப்படையாக எழுந்த ஆசிரியரின் சுயமனக் குமுறலின் விளைவே 'அதிர்ச்சி' என்னும் கதை.

    அலுவலகக் கடமையில் தன்னை அர்ப்பணித்ததாலும், ஊர்க்கு எட்டிக்குடி பெயர்ந்ததாலும் நட்பு, உறவு வகையில் ஒருவனுக்கு ஏற்படும் சங்கடம் தான் - 'அந்நியன்' என்னும் சிறுகதை.

    நல்ல சகிப்புத்தன்மையோடு பாடுபடும் தோட்டி ஒருவனைக் குறித்த கதைதான் 'விளிம்பு' தனது கடமையின் போதே உயிரிழக்கும் பாதுகாப்பற்ற கடமைய வாழ்க்கையே அவனது வாழ்வு என்பதை உணர்த்துகின்றது.

    இவ்விதம் சிறுகதையாசிரியர் திரு விழி. பா. இதய வேந்தன், தமது பல்வேறு உண்மை அனுபவங்களைக் கருப்பொருளாகக் கொண்டு சமூகப் படிப்பினையாகப் படைத்துள்ள இனிய கதைகளின் தொகுப்பே இந்நூல். இச்சீரிய நூலை வெளியிட எங்கட்கு வாய்ப்பு நல்கிய நூலாசிரியர் அவர்களுக்கு, எங்கள் நன்றிகள் உரியன.

    *****

    நீண்ட பயணத்தின் இடையில்...

    இருக்கிற இருப்பில் நடக்கிற நடப்பில் இலக்கியம் பற்றிச் சிந்திக்கவும் எழுதவும் படைப்பாளன் தன்னைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அல்லது அத்தகைய நெருக்கடிக்கு அவன் ஆளாவது என்பது தவிர்க்க இயலாததாகும்.

    சமூக அமைப்பில் அன்றாடம் எத்தனையோ பிரச்சினைகள், கீழிருந்து மேல்மட்டம் வரை ஒவ்வொருவருக்கும் நேர்கிறது. அது படைப்பாளனை நோக்கியும் முட்டி மோதுகிறது. அவற்றிலிருந்து மனிதன் விடுவித்துக் கொண்டு மீளுவது என்பது மிகப் பெரிய சாதூர்யமான காரியம் தான்.

    அத்தனையிலும் பங்கு பெறுகிற படைப்பாளன் தன்முன் நடக்கும் அனைத்துச் சம்பவங்களோடு, தானும் ஓர் அங்கமாகி நிற்பதோடு போராட்டக்களமாக வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்டிருக்கிற இச்சமூக அமைப்பு குறித்து ஒரு பார்வையை முன்வைக்க வேண்டியது அவசியமாகிறது.

    கலைஞனின் பணி என்பது ஏதோ ஒரு நிகழ்வைப் பதிவாக்கிவிட்டு மட்டும் தப்பித்துப் போய்விட முடியாது. அவற்றுக்கப்பாலும் மனிதகுலம் என்பது சந்திக்க வேண்டிய அல்லது அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கிற பிரச்சினைகளுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவனாக கலைஞன் இருக்கிறான். அவனுக்குள்ள சமூகப் பொறுப்பு என்பது அளவிடற்கரியது. ஒரு சரியான திசைவழிக்கு அவனால் அழைத்துச் செல்லப்படவேண்டும்.

    சமூகத்தளத்தில், குறிப்பானதொரு தாக்கத்தையும் விளைவையும் ஏற்படுத்தும் படைப்புக்கள் தாம் இலக்கிய வரலாற்றில் தொடர்ந்து நிலைத்து நிற்கக் கூடியவையாக இருக்கின்றன. அத்தகைய படைப்புக்களை நோக்கியும், உலகில் பிற தேசிய இனங்களில் தோன்றியுள்ள மற்ற இலக்கியத் தன்மையோடும் அதன் வளர்ச்சியோடும் ஒத்துப் போகிற படைப்பாக்கங்கள் நம் மொழியில் தொடர்வது என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிறது.

    இத்தகைய இனிய இலக்கியச் சூழலில் என்னையும் அர்ப்பணித்துக்கொண்டு தொடர்வது தான் எனது இலக்கியப்பயணம். இது குறுகிய பயணமோ, குறுக்குவழிப் பயணமோ அல்ல;

    நீண்ட பயணம்!

    இந்த நீண்ட பயணத்தின், இடையில் நான் இலக்கியத்தின் இலக்கினை எட்டியிருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்; என்றாலும் எனது பணி தொடர்கிறது; பயணமும் தொடர்கிறது.

    இந்த நீண்ட நெடிய பயணத்தில் பலரும் என்னோடு வந்து போயிருக்கிறார்கள். தொடர்ந்து என்னை அரவணைத்தும் கைபிடித்தும் வந்து கொண்டிருக்கிறார்கள் - தோழர்கள், விமர்சகர்கள், வாசகர்கள், பத்திரிக்கைகள், இதழ்கள்... என.

    இத்தொகுப்பைச் சிறப்பாக வெளியிட உதவிய எழுத்தாளர் அனைவருக்கும் எனது நன்றிகள்.

    விழி. பா. இதயவேந்தன்

    *****

    தண்ணீர்

    ரங்கநாயகி வீட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்தும் தான், உயிர் அவளிடம் திரும்பி வந்த உணர்வு எழுந்தது. கொளுத்திப் போட்ட மேலே மேலே மண்ணெண்ணெய் ஊற்றி, கொழுந்து விட்டெரிகிற நெருப்பில் கிடந்த மாதிரி இருந்தாள். வெய்யில் அந்த அளவிற்கு உச்சக் கட்டத்தில் இருந்தது.

    கொஞ்சம் நேரம் ஒன்றுமே பேச முடியாமல் புடவைத் தலைப்பால் முகத்தில் உதவி, காற்று வாங்கினாள். நிழலுக்கு வந்து உட்கார்ந்ததும் கண்கள் இருட்டிப் போய் பழைய நிலைமைக்கு வரக் கொஞ்சம் தாமதமானது.

    சுப்பம்மாள் எங்கே போய் தொலைந்தாளோ என்று கண்கள் துழாவியது. குனிந்து சென்று உள்ளே செல்லும் கதவு திறந்தே கிடந்தன. ஒன்றிரண்டு தட்டுமுட்டு சாமான்கள் அப்படியே போட்டது போட்டபடிக் கிடந்தன.

    லோகநாதனும் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் காணவில்லை. அக்காவும் தம்பியும் ஆளில்லாவிட்டால் அவ்வளவு தான். தெருவே ரெண்டாயிடும், ரங்கநாயகி தனக்குள் சலித்துக் கொண்டே புலம்பத் தொடங்கினாள்.

    நறுக்கலும் முறுக்கலுமான தெருவில் எந்த வீட்டில் எந்த சந்தில் இருவரும் விளையாடிக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. யாரிடமாவது சொல்லி அனுப்பினால் அதட்டி அனுப்பி விடுவார்கள் என்று தெருவை நோட்டம் பார்த்தாள். கடைசியில் சுப்பம்மாளே எதிரே ஓடிவந்தாள்.

    வீடு நெருங்க நெருங்க அவள் முகம் மாறி வெளிறிக் காணப்பட்டது. கருத்த முகத்தில் கண்கள் கலங்கி ஒளிர்ந்தது. ரங்கநாயகி கோபத்தோடு உட்கார்ந்ததை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. ஏண்டி, சுப்பு இன்னாம்மா அவளது குரல் சற்று தாழ்ந்து ஒலித்தது.

    எங்கே போய்த் தொலைஞ்சிங்க

    தே இங்க தான்

    இங்கதான்னா

    பக்கத்து தெருவுல வெளையாடிக்கிட்டிருந்தேன்

    எங்க அவென்

    யாரு தம்பி லோகுவா

    ஆங் அந்த தடியன் தா

    அவனும் அங்க தான் வெளையாடுறான்

    வெளையாட்டே கதின்னு கெடந்தா அப்புறம் வீடு இன்னாவுறது

    ...

    எங்கனாபோய் வேல செஞ்சிட்டு வந்து ஆஞ்சி ஓஞ்சி ஒக்காரமுடியுதா, ம்...

    ...

    ஏண்டி வாயே தொறக்காம ம்முனு இருக்க

    அவள் என்ன சொல்வதென்று புரியாமல் விழித்தாள். அம்மாவின் வலியை அவளால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். கூடவே பலமுறை அம்மாவோடு இருந்ததோடு முடியாதபோது உதவியும் செய்வாள் சுப்பம்மாள். நகராட்சியின் துப்புரவு வேலையில் அம்மாவின் உடல் நலம் கெட்டுப் போய் இப்போது நாடி நரம்பெல்லாம் இற்றுப் போகிற அளவுக்கு ஆகிவிட்டது.

    வேலை செய்யும் தெருவில் ஏதாச்சும் இனாமாகக் கிடைத்தால் சாப்பிடுவாள். இல்லையெனில் அங்கேயே தெரு மூலையில் இட்லி சுட்டு விற்கும் ஆயாவிடம் கடனுக்கு வாங்கிச் சாப்பிட்டு வருவாள். இப்போதைக்கு அவள் சாப்பிட்டு வந்த மாதிரி தெரியவில்லை. இருந்த கொஞ்ச நஞ்சக் கஞ்சியை, ரெண்டு பேராகக் குடித்தாகிவிட்டது.

    ...

    உங்ககிட்டே கத்தி கத்தி தொண்ட தண்ணீர்தான் ஆவியாப் போவுது; சொம்புல ரவ தண்ணி எடுத்தாடீ

    சுப்பு உள்ளே சென்று குடத்தில் கைவிட்டுப் பார்த்தாள். ரெண்டு குடத்திலும் தண்ணீர் இல்லை. வாசல் குடமும் தண்ணீரின்றிச் சாய்ந்து கிடந்தது. செம்பை உள்ளேவிட்டு எடுத்தாள். கடாமுடாவென்று சத்தம் வந்ததேயெழிய தண்ணீர் வரவில்லை.

    என்ன தண்ணி இல்லியா

    இல்லம்மா

    காலைலேர்ந்து தண்ணிமொள்ளாம அப்டி இன்னாடி பண்ற

    தண்ணி கெடைக்கல

    சரி யாரு வூட்லயாச்சும் ரவமொண்டா, உயிரு போவுதுடி

    அவளுக்குத் தொண்டை வரண்டு தவித்தது. நாக்கு பசபசவென்று ஒட்டிப் பேச்சுக் குழறியது.

    சுப்பம்மாளை 'சுப்பு சுப்பு' என்று தான் தெருமுழுக்கக் கூப்பிடுவார்கள். தெருவில் நாலைந்து வீடுகள் பூட்டிக் கிடந்து. அடுத்து மாரியம்மா வீட்டில் எட்டிப் பார்த்தாள்.

    தண்ணீர் இருக்கிற மாதிரி தெரியவில்லை. பொன்னு ரங்கம் பெரியப்பாவிடம் நின்றிருந்தாள் சுப்பு.

    என்னாடி, ஏன் நிக்கிற

    பொன்னுரங்கம் வெடுக்கெனக் கேட்டான்.

    இல்ல பெரியப்பா, அம்மா ரவ தண்ணி கேட்டாங்க; செம்பில் தான், பானையில் இல்ல

    வொனக்கும் வொங்கம்மாவுக்கும் வேற வேல இல்லடி

    அவள் பேசாமல் மவுனமாய் நின்றிருந்தாள். பொன்னுரங்கத்தின் முடிவுக்காகக் காத்திருந்தாள். கொடுக்காமல் அவளும் போகிற மாதிரி இல்லையெனத் தெரிந்தது அவனுக்கு.

    "உள்ள

    Enjoying the preview?
    Page 1 of 1