Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oonjalaadum Ninaivugal
Oonjalaadum Ninaivugal
Oonjalaadum Ninaivugal
Ebook45 pages16 minutes

Oonjalaadum Ninaivugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

படித்தல் பார்த்தல் இவை இரண்டையும் விட அனுபவத்தால் கிடைக்கும் அறிவே சாலச் சிறந்தது ஆகும். இதிலுள்ள சிறுகதைகள் அனத்தும் என் அனுபவ அறிவால் விளைந்த முத்துக்கள் என்றால் அது மிகையாகாது. இந்த சிறுகதைகள் கோகுலம் கதிர், பாக்யா, குங்குமம் போன்ற வணிகப் பத்திகையில் வெளிவந்து கனிசமான வாசகர்களை கவர்ந்தவைகள் ஆகும்.

இந்தக் கதைகளை எல்லாம் “ஊஞ்சலாடும் நினைவுகள்” என்ற தலைப்பில் தொகுத்துள்ளேன். கதைகளை வாசியுங்கள். வாழ்க்கையை நேசியுங்கள் வாழ்க! வளர்க!!

Languageதமிழ்
Release dateJun 14, 2023
ISBN6580164909838
Oonjalaadum Ninaivugal

Read more from Kavingar Selvaraja

Related to Oonjalaadum Ninaivugal

Related ebooks

Reviews for Oonjalaadum Ninaivugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oonjalaadum Ninaivugal - Kavingar Selvaraja

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    ஊஞ்சலாடும் நினைவுகள்

    (சிறுகதைகள்)

    Oonjalaadum Ninaivugal

    (Sirukathaigal)

    Author:

    கவிஞர் செல்வராஜா

    Kavingar Selvaraja

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavingar-selvaraja

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முகவுரை

    ஊஞ்சலாடும் நினைவுகள்

    கன்றுக்குட்டி

    கோலிக்குண்டு

    தலைத்தீபாவளி

    ஊமைச்சி

    சற்றுமுன் கூறிய வார்த்தை

    உறவு

    மனைவி

    முகவுரை

    திரைப்பட பாடாலாசிரியரான கவிஞர் செல்வராஜா இதுவரை இருபத்தைந்திற்கும் மேற்பட்டப் பாடல்களை எழுதி மக்களால் அறியப்பட்டவர். இவர் பாடல் எழுதிய திரைப்படங்கள் முயல், இனிய உளவாக, மதுரை டூ தேனி பாகம்-2, படம் எடுக்கப் போறோம், புலிக்கொடி தேவன், அடையாளம், காயம், விழித்தெழு. இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட ஒரு பக்கக் கதைகள், 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 1000க்கும் மேற்பட்ட ஜோக்குகள், 500க்கும் மேற்பட்ட கவிதைகள் போன்ற படைப்புக்களை வெகுஜன இதழ்களிலும், சிற்றிதழ்களிலும் எழுதி உள்ளார். இதிலுள்ள சிறுகதைகள் அனைத்தும் உங்கள் நெஞ்சத்தை நெருங்கும். படியுங்கள். பகிருங்கள். வாழ்த்துங்கள்.

    வளர்வோம். வாழ்வோம்.

    23. 4. 2023

    கவிஞர் செல்வராஜா

    சேலம் - 636008.

    ஊஞ்சலாடும் நினைவுகள்

    நகர மையத்தில் அமைந்த வங்கியின் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்திருந்த எனக்கு குப்பென்று வேர்த்தது.

    என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. எதிரே சுமதி அக்கா!

    அவர்களது கோலத்தைப் பார்த்து ஒரு நிமிடம் அப்படியே ஆடிப்போய்விட்டேன்.

    காலக்காற்று எவ்வளவு பெரிய ஆலமரத்தையும் எப்படியோ புரட்டிப்போட்டு விடுகிறது? சிலரை கோபுரத்தின் உச்சியில் உட்கார வைத்து விடுகிறது. சிலரை படுபாதாளத்தில் தள்ளி விடுகிறது. சுமதி அக்காவைப் பார்த்ததும் பழைய நினைவுகள் நிழற்படமாக மனத்திரையில் ஓடின.

    அப்போது எனக்கு பதிமூன்று வயதிருக்கும். எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் ஊர் சின்ன கிராமம். ஊருக்கு ஒதுக்குப்புரத்தில் ஒரு அழகிய

    Enjoying the preview?
    Page 1 of 1