Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kakkaigalin Iravu
Kakkaigalin Iravu
Kakkaigalin Iravu
Ebook165 pages1 hour

Kakkaigalin Iravu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தனது மேற்படிப்புக்காக ஓலைச்சுவடிகளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள தன் இரட்டை பெண் குழந்தைகள் இந்து, பிந்துவுடன் அம்பிளி மாளிகைக்கு வருகிறாள் தேவி என்ற கணவனை இழந்த பெண். அம்பிளி மாளிகையில் லைப்ரரி பாதுகாப்பாளரான கார்த்தியாயினியின் நடவடிக்கை ஒரு புரியாத புதிராக அமைகிறது. இயற்கைக்கு முரணாக இரவில் திரியும் காக்கைகளின் மர்மம் என்ன? அம்பிளி மாளிகையின் அமானுஷ்யம் என்ன? இந்த ஆபத்திலிருந்து தாயும் குழந்தைகளும் மீண்டு வந்தார்களா? மர்மம் நிறைந்த காக்கைகளின் இரவுக்குள் செல்வோமா?

Languageதமிழ்
Release dateDec 27, 2021
ISBN6580132407645
Kakkaigalin Iravu

Read more from Nc. Mohandoss

Related to Kakkaigalin Iravu

Related ebooks

Related categories

Reviews for Kakkaigalin Iravu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kakkaigalin Iravu - NC. Mohandoss

    https://www.pustaka.co.in

    காக்கைகளின் இரவு

    Kakkaigalin Iravu

    Author:

    மூலம்: மோகன சந்திரன்

    தமிழில்: என்.சி. மோகன்தாஸ்

    NC. Mohandoss

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    அவர்கள் பாடினர்.

    பாடல் அவர்களுக்கு புதிதில்லை. எப்போதும் போலதான் அன்றும் பாடினர். ஆனால் ராகமும் சப்தமும் மனிதர்களுடையதாய் இருக்கவில்லை. அவர்களுடைய குரலில் ஒரு மாற்றம். தொண்டை வரண்டு போய் அவைகள் பறவைகளைப் போல ஹீனமாய் ஒலித்தன.

    - டபிள்யூ.பி. ஏட்ஸ் – 13-1-1939

    ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போதே நன்றாக இருட்டியிருந்தது. தேவி பெட்டிகளை தூக்க இயலாமல் தூக்கியபடி நடந்து கொண்டிருந்தாள். அவளின் இரண்டு பக்கமும் இரட்டை பிறவிகளான இந்துவும், பிந்துவும் ஒட்டி உரசியபடி வந்தனர்.

    கிராமமும் அந்த மாதிரி ஒரு பரிசரமும் அவர்களுக்கு புதிது. பிறந்து ஒன்பது வயது வரை சென்னையிலேயே கழித்துவிட்டதால், அங்கே காண்பதெல்லாம் அவர்களுக்கு விநோதமாய் தெரிந்தது. மழை! கருமேகக் கூட்டம்! போதும் போதாதிற்கு அன்று அம்மாவாசை வேறு. நட்சத்திரங்களையும் காணவில்லை. வழியில் விளக்குகளே இல்லை. குண்டும் குழியுமான மண் சாலை! பார்த்து பார்த்து கால் பதிக்க வேண்டியிருந்தது. கண்ணுக்கும் காதுக்கும் எட்டுகிறவரை ‘சோ’வென இரைச்சல்!

    பகலில் வந்திருக்கலாமோ என்று தேவிக்கு தோன்றிற்று. அடித்த காற்றின் வேகத்தில் அவளது சேலை வேகமாய் நழுவி நழுவி நர்த்தனம்!

    இரண்டு குழந்தைக்கு தாய் என்று மதிப்பிட முடியாத அளவிற்கு அவளிடம் இன்னமும் இளமை மிச்சமிருந்தது. தலையில் அடர்ந்த மலையாள கேசம். கோவா இடை! மும்பையின் நளினம்!

    அம்மா ரொம்ப குளிருது!

    இதோ... ஊர் வந்துருச்சு!

    இதையேதான் அரை மணி நேரமாய் சொல்கிறாய் இன்னும் எவ்வளவு தூரம்?

    அதோ… அந்த ஆலமரம் தெரியுது பார்... அதைத் தாண்டினால் ஊர்தான்!

    ஆலமரமே அந்த பிஞ்சுகளுக்கு தெரியவில்லை. கால்கள் கடுகடுத்தன. பசி வேறு. அவர்களுடைய சலிப்பிற்கு அது மட்டும் காரணமில்லை. புதிய இடம், புரியாத காட்டுக்குள் பிரவேசித்துவிட்ட பயம். அக்கம் பக்கமெல்லாம் பூச்சிகளின் ரீங்காரம்! இரண்டு நாள் முன்பு பெய்த மழை. தேங்கின குட்டைகளில் த்ரட்… த்ராட் என்று மீட்டும் தவளைகள்! மரங்களில் படபடக்கும் பறவைகள்!

    அவர்களுக்கு நெஞ்சுக்குள் படபடப்பு! அம்மாவுடன் வந்திருக்கக் கூடாதோ என்று நினைக்க ஆரம்பித்திருந்தனர்.

    தேவி, மியூசிக் காலேஜில் எம்.ஏ முடித்திருந்தாள். இப்போது ஒரு ஆராய்ச்சிக்கு வேண்டி சுசீந்திரத்திற்கு பயணம். அவள் எடுத்துக் கொண்ட தலைப்பு - கோயில்களில் சங்கீதம்!

    மூன்று மாதத்தில் ஆராய்ந்து தீஸிஸ் ஒப்படைத்துவிட்டால் டாக்டரேட்டுடன் ஃபெலோஷிப்பும் கிடைத்துவிடும். அதை வைத்து வேலை வாங்குவது எளிது. சென்னையிலேயே நிரந்தரமாய் தங்கிவிடலாம். அப்புறம் பிள்ளைகளின் படிப்பு, எதிர்காலம் எல்லாமே நன்றாக அமைந்துவிடும்.

    சுசீந்திரத்தில் பழைய ஓலைச்சுவடிகளை ஜெர்மன்காரர் ஒருவர் சேகரித்து, லைப்ரரியில் பராமரித்து வருகிறாராம். அதைப் பார்த்துக் கொள்வது கார்த்தியாயினி என்கிற மூதாட்டி!

    அவள்தான் தேவியை வரும்படி அழைத்திருந்தாள். முதலில் நாகர்கோயில் வரை போக வேண்டுமே என்கிற மலைப்பு தேவிக்கு. அப்புறம், தெரியாத ஊரில் எங்கே தங்குவது. சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவது, என்கிற தயக்கமும்.

    அதைப் பற்றியெல்லாம் நீ கவலைப்பட வேண்டியதில்லை எனக்கு மாளிகை மாதிரி வீடு இருக்கிறது என் வீட்டிலேயே தங்கிக் கொண்டு நீ ஆராய்ச்சியை நடத்தலாம். எனக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம். உன் குழந்தைகளையும் அழைத்து வா. அவர்களும் ஊரைச் சுற்றி பார்க்கட்டும்.

    கார்த்தியாயினி கடிதம் எழுதவே தெம்பாயிற்று. பிள்ளைகளும் நாங்களும் வரோம்மா. எங்களுக்கு இப்போ லீவுதானே! என்று கெஞ்சவே, அழைத்து வந்துவிட்டாள்.

    சென்னை என்பது மாநகரமாயிருக்கலாம். அங்கே என்னென்னவோ அதிசயங்கள் நிகழலாம். ஆனால் இந்துவுக்கும், பிந்துவுக்கும் விதித்தது ஒட்டுத்துணி - ஒண்டு குடித்தனம்! அதிலிருந்து கொஞ்ச நாட்களுக்காவது விடுதலை கிடைக்காதா என்று ஏங்கியவர்களுக்கு இந்த அழைப்பு குஷியை கிளப்பிற்று.

    அம்மாபாட்டிற்கு ஆராய்ச்சிக்கு போய்விடுவாள். நாம் ஊரை சுற்றலாம். கண்டிப்பதற்கும், தண்டிப்பதற்கும் ஊரில் போல அங்கே சுகுணா ஆண்டி இருக்க மாட்டாள்.

    எப்போதுமே புதியதின் மேல் ஒரு மவுசும் எதிர்பார்ப்பும் ஏற்படுவதுண்டு. பழகின இடமும், மனிதர்களும், புதியது கிடைக்கும்போது புளிப்பாகிவிடுகிறது.

    சாதாரணமாய் பள்ளிக்கூடத்து பிக்னிக் அல்லது டூரில் கலந்துக்கொள்ள இவர்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை. அறுந்த வாலுகள்! தனியாய் அனுப்பினால் ரெண்டு பண்ணிவிடும்ங்கள் என்கிற பயம் ஒருபக்கம். டூருக்காக செலுத்த வேண்டிய கட்டண சுமை ஒருபக்கம்!

    அதனால் இப்போது கிடைத்த இந்த வாய்ப்பை அவர்கள் விட்டுவிடத் தயாராயில்லை. உடனே கிளம்பி விட்டிருந்தன. ஆனால் அதற்காக அம்மா இப்படியா நடக்கடிப்பாள்?

    ஏம்மா ஆட்டோ, டாக்ஸியெல்லாம் இங்கே கிடையாதா…?

    சும்மாருடி. கிராமத்தில ஏது டாக்ஸி! தேவி இந்துவை அடக்கின அந்த சமயம், பின்பக்கமிருந்து பட...படவென ஒரு ஓசை கேட்டது. அந்த ஓசை எங்கிருந்தோ நெருங்கி நெருங்கி வந்து, இடது பக்கம் முதுகை தாக்குகிற மாதிரி உணரவே இந்து! என்று அலறினபடி அவளை பிடித்து தள்ளிவிட்டாள்.

    தள்ளின வேகத்தில் இந்து குப்புற விழ, அந்த இடைவெளியில் கரிய நிறத்தில் பறவை ஒன்று விருட்டென்று அவர்களின் தலைக்கு மேல் பறந்து போயிற்று.

    தேவிக்கு எதுவும் விளங்கவில்லை. பதற்றம். என்ன அது? பருந்தா இல்லை ஆந்தையா? ஆனால் பருந்திற்கு எப்படி கறுப்பு நிறம்? அவளுக்கு வியர்த்துப் போயிற்று.

    அவள் திடீர் தாக்குதலிலிருந்து இருந்து மீள முடியாமல் அப்படியே தரையில் கிடக்க, இந்து...! அடிபட்டிருச்சா...? என்று பெட்டியைக் கீழே வைத்துவிட்டு அவளை தூக்கி நிறுத்தி உடையையெல்லாம் தட்டிவிட்டாள். அடி ஏதும் பட்டுடுச்சா?

    இல்லேம்மா என்றாள் பறந்துப்போன அந்த பட்ஷியையே வெறிக்க வெறிக்க பார்த்தபடி. அவளது நெஞ்சுக்குள் இன்னமும் திடுக் திடுக்கென ரயில் ஓடிக்கொண்டிருந்தது.

    அச்சச்சோ! காலில் சிராய்ச்சு ரத்தம் வருது போலிருக்கே... வலிக்குதா?

    திகு திகுன்னு எரியுது!

    இரு துடைச்சு விடறேன். வீட்டுக்குப் போய் மருந்து போட்டுக்கலாம் என்று இடுப்பில் செருகியிருந்த கைக்குட்டையை எடுக்கப் போக, பின்பக்கமிருந்து இன்னொரு தாக்குதல்!

    இம்முறை பிந்து! அவள் அப்படியே முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்து விட்டதால் தப்பித்துவிட்டாள். இல்லாவிட்டால் பறவை வந்த வேகத்திற்கு, அவளது முகமெல்லாம் பிராண்டப்பட்டு ரத்த களறியாகியிருக்கும்!

    அம்மா! எனக்கு பயமாயிருக்கு!

    சரி... சரி... எங்கூட சேர்ந்து வாங்க! சீக்கிரம் போயிரலாம்! என்று தேவி எட்டி நடைபோட, ஆரம்பித்தாள்.

    நான்கு தப்படிதான் போயிருப்பாள். அதற்குள் மேகம் இருண்டுக் கொண்டு வந்தது. காற்று சொண்டி சொண்டி அடிக்க ஆரம்பித்து குளிர் நடுங்கிற்று. மின்னலின் சீற்றம் வேறு. தூரத்தில் மலையின் கீற்று இறங்கி அந்த ஈரப்பதம் உடலில் பட்டு ஜில்!

    வெளியே குளிர்! வேகமாய் நடக்க நடக்க உள்ளுக்குள் வியர்வை! உஷ்ணம் பொங்கிற்று.

    அப்போது –

    யா...மி...னி? என்று ஹீனமாய் அழுகுரல் கேட்டு, யாமினி... யா... என்று காற்றில் கரைந்துப் போன மாதிரி இருந்தது.

    இந்து உற்று கேட்க அடுத்து ரஜனி ரஜனி...!

    அப்புறம் நிசா... நிசா... நிசா...! என்று தேம்பல்.

    இந்துவுக்கு உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அவள் பீதியுடன் விழிகளை இங்கும் அங்கும் வட்டமடிக்க, எதுவுமே புரியவில்லை. புலப்படவில்லை. கண்களுக்கு எட்டின வரை சூன்யம்! அண்ணாந்து பார்க்க மரக்கிளையில் காக்கைகள் தெரிந்தன.

    அவள் கமறின குரலில் அம்மா! யாரோ அழுத மாதிரி இல்லே?

    அழுதாங்களா...? என்ன உளர்றே?

    ஆமாம்மா. நானும் கூட கேட்டேன்! என்று பிந்துவும் சப்போர்ட்டிற்கு வந்தாள். குழந்தைகள் சிணுங்கற மாதிரி இருந்தது.

    சேச்சே! குழந்தையாவது... அழுவரதாவது! இந்த அனாந்திர காட்டில் ஏது குழந்தைங்க? பிரம்மையாயிருக்கும். பேசாம வாங்க!

    பசங்களை சமாதான படுத்தினாலும் கூட, தேவிக்கு உள்ளுக்குள் பயம் இருக்கவே செய்தது. அதற்கு காரணம் - அவளும் அந்தக் குரல்களை கேட்டிருந்ததுதான். அதை ஒப்புக்

    Enjoying the preview?
    Page 1 of 1