Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vidiyattum Paarkalam!
Vidiyattum Paarkalam!
Vidiyattum Paarkalam!
Ebook82 pages29 minutes

Vidiyattum Paarkalam!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

லட்சுமி ஒரு நல்ல பண்புள்ள ஏழைப்பெண். தந்தையை இழந்த அவள்,தன் தாயின் ஆபரேஷனுக்கு தேவையான பணம் சம்பாதிக்க பிரபல நடிகை அமிர்தாவின் எடுபிடி வேலை செய்யும் பணிக்கு சேர்கிறாள். அங்கு சுபேந்திரன், அமிர்தா மற்றும் அவள் தாய் தனத்தின் நம்பிக்கைக்கு உரியவனாய் பணிபுரிகிறான். சுபேந்திரனின் நயவஞ்சக குணத்தை லட்சுமி அறிய காரணமென்ன? தனத்திற்கும் லட்சுமிக்கும் ஏற்பட்ட தகராறின் முடிவு என்ன? லட்சுமியின் மேல் விழுந்த பழியை துடைத்து விடியலைக் கண்டாளா? கதையிலிருந்த அறியலாம்.

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580132407644
Vidiyattum Paarkalam!

Read more from Nc. Mohandoss

Related to Vidiyattum Paarkalam!

Related ebooks

Reviews for Vidiyattum Paarkalam!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vidiyattum Paarkalam! - NC. Mohandoss

    https://www.pustaka.co.in

    விடியட்டும் பார்க்கலாம்!

    Vidiyattum Paarkalam!

    Author:

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    அமிர்தா! சீக்கிரம் ரெடியாகு! கம்பெனி வண்டி வந்துருச்சு!

    இதோ வந்துட்டேம்மா!

    லட்சுமி! நீ இங்க என்ன பண்ணிட்டிருக்கே? பொண்ணோட மேக்கப் பெட்டி ஃப்ரீப் கேஸையெல்லாம் கொண்டு போய்க் காரில் வை!

    வெச்சாச்சும்மா.

    அப்புறம் இன்னும் ஏன் நிற்கிறாயாம்?

    நல்ல நேரத்தில் கிளம்பலாம்னுதான்!

    அமிர்தா நல்ல நேரம் ஆரம்பிச்சதும் வருவா. நீ போய் ஏறு! தனம் விரட்ட, லட்சுமி தாவணியை சரிபண்ணிக் கொண்டு வாசலுக்கு ஓடினாள்.

    அவளுக்கு இருபது. இன்னுங்கூட தாவணி போதும் என்கிற அளவிற்கு அளவோடு இருந்தாள். அவள் நடிகை அமிர்தாவின் உதவிப் பெண்! உதவி எனும்போது மேக்கப், டச் அப், வேலைக்காரி, சமையல் காரி, சலவைக்காரி எல்லாமே அடக்கம். சொந்த ஊர் காங்கேயம்.

    அமிர்தா மைசூர் சில்க்கில் அறையிலிருந்து வெளியே வந்தபோது தேவதைபோல் காட்சியளித்தாள். முடியை லூஸ் பண்ணி படர விட்டிருந்தாள். விரல்களில் வைரம். பாதி முகத்தை ரேபான் கிளாஸ் மறைத்திருந்தது.

    ஹாலுக்கு வந்தவள் அங்கே போனில் ஐக்யமாயிருந்த சுபேந்தரைப் பார்த்து வண்டி ரெடியா?

    அவன் போனை பொத்தி ரெடி மேடம் என்று எழுந்து நின்றான். மேடம்! டி.வி.க்கு பேட்டி கேட்டிருந்தாங்களாமே வரட்டுமான்னு கேட்கிறாங்க!

    இப்போ எப்படி முடியும்? அவுட்டோராச்சே!

    அங்கேயே வந்திடறோம்ங்கிறாங்க. பேசறீங்களா? என்று நீட்டினான்.

    அவள் வாட்ச்சை பார்த்தபடி. முடியாதே! கஷ்டம்! ஷூட்டிங் பொள்ளாச்சியா இல்லை, திருப்பூரான்னு தெரியலே! அங்கே வந்திருங்களேன்! என்று சுபேந்தரிடம் நீட்டி சுபே! நீயே அவங்களை அழைச்சு வந்திரு! என்று வாசலுக்கு வாசத்தோடு விரைந்தாள்.

    ஹாலின் சுவர் முழுக்க அமிர்தா நடித்த பட ஸ்டில்கள் பிரேமில் தொங்கின. கண்ணாடி அலமாரில் ஷீல்டுகள்! வரவேற்பு மேஜையில் சினிமா இதழ்களும். தினசரிகளும் கலைந்து கிடக்க, தனம் அவற்றை அடுக்கி வைத்து அமிர்தா! அங்கேப் போனதும் போன் பண்ணு! எங்க ரூம் போட்டிருக்காங்கன்னு தெரிவி! என்ன தெரிஞ்சுதா?

    சரிம்மா!

    அமிர்தாவின் கார் தெருவிலிருந்து மறைகிற வரை தனம் அங்கேயே நின்றிருந்து அவளே கேட்டை இழுத்து மூடினாள். அன்று வாட்ச்மேனுக்கு லீவ். லீவ் கொடுத்து அனுப்பினது தனம் தான்.

    அமிர்தா வெளியூர் படப்பிடிப்புக்கு போகும்போதெல்லாம் அவனுக்கும் லீவ் கொடுக்கப்படுவது வழக்கம். ஏம்மா இப்படி பண்றே? உனக்கும் வீட்டுக்கும் பாதுகாப்பு வேண்டாமா? என்று அமிர்தா கண்டிப்பாள்.

    இந்த வயசுல எனக்கு பாதுகாப்பு தேவையில்லை. அப்புறம் வீட்டை பார்த்துக் கொள்ளத்தான் நானிருக்கிறேன்! பாவம் வாட்ச்மேன்! கிடந்து சாகிறான். இடையிடையே வீட்டுக்கும் போய் அனுபவித்து வரட்டுமே!

    தனம் அப்படிச் சொன்னாலும்கூட, வாட்ச்மேனை அனுப்புவதற்கு காரணம் அதுவல்ல என்பதுதான் உண்மை.

    உண்மையான காரணம்.

    சுபேந்தர். அவர்களுக்கிடையேயுள்ள உறவு!

    தனம் கதவை மூடிவிட்டு உள்ளே வர, சுபேந்தர், வேகமாய் ஓடிவந்து அவளைக் கட்டிக் கொண்டு, யூ ஆர் லுக்கிங் ஸ்மார்ட்! என்று மூச்சு முட்டினான்.

    தனம் அந்த ஸ்பரிசத்தில் நெளிந்து, விடு! விடு! அமிர்தா வந்திரப் போறா!

    அவதான் போயிட்டாளே!

    2

    காங்கேயம்.

    சிதம்பரம் மருத்துவமனையின் வாசலில் ரிக்‌ஷாக்களும் ஆட்டோக்களுமாய் தவமிருக்க லட்சுமி டிரான்ஸ்போர்ட் என பெயரிடப்பட்டிருந்த அந்த மண் லாரி அவசரமாய் வந்து நின்று ஹாரனடித்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1