Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mannai Pasanthiyin Katturaigal
Mannai Pasanthiyin Katturaigal
Mannai Pasanthiyin Katturaigal
Ebook119 pages33 minutes

Mannai Pasanthiyin Katturaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மன்னை பாசந்தயின் (ஆன்மிகம் - இலக்கியம் - பொது) கட்டுரைகள் பற்பல வார மாத ஆண்டு மலர்களில் வெளிவந்து ஊக்கப்பரிசும் பெற்ற கட்டுரைகள். படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டும். திரும்பத் திரும்பப் படிக்கத் தோன்றும். மாணவ மாணவியர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் அருகிலுள்ள நூலகத்திற்கும் இந்நூலை வாங்கி பரிசாகவும் அன்பளிப்பாகவும் அளித்து மகிழலாம்.

Languageதமிழ்
Release dateMar 16, 2024
ISBN6580162310822
Mannai Pasanthiyin Katturaigal

Read more from Mannai Pasanthy

Related to Mannai Pasanthiyin Katturaigal

Related ebooks

Reviews for Mannai Pasanthiyin Katturaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mannai Pasanthiyin Katturaigal - Mannai Pasanthy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மன்னை பாசந்தியின் கட்டுரைகள்

    Mannai Pasanthiyin Katturaigal

    Author:

    மன்னை பாசந்தி

    Mannai Pasanthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mannai-pasanthy

    பொருளடக்கம்

    என்னுரை

    விக்னம் போக்கிடும் விக்ன விநாயகர்

    ராம நாம ஜெபத்தின் மகிமை

    ‘நந்தலாலா’ ஸ்ரீகிருஷ்ணன் மகிமை

    கண்ணன் களிப்புற்ற நர்த்தனம் ‘காளிங்க நர்த்தனம்’

    அன்பினால் அரங்கனை ஆண்ட ஸ்ரீ ஆண்டாள்

    கருடனும் அனுமனும்

    அறுபடைவீடு கொண்ட திருமுருகன்

    மணிகண்டன்

    பிரதோஷ வழிபாடு

    இகபரசுகம் தந்திடும் இஞ்சிமேடு திருத்தலம்

    ஆசார்யர்கள் - மகான்கள்

    ஸ்ரீ இராமானுஜர்

    ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன்

    ஸ்ரீ மணவாளமா முனிகள்

    ஸ்ரீ சத்ய சாயிபாபா

    பொது கட்டுரைகள்

    நாக்கு

    கூந்தல்

    கை

    கண் அவன் கணவன்

    கவிநயச்செல்வர் மன்னை பாசந்தி ஆன்மிக அருள்நிதி பா. சந்தானம்

    என்னுரை

    மன்னை பாசந்தயின் (ஆன்மிகம் - இலக்கியம் - பொது) கட்டுரைகள் பற்பல வார மாத ஆண்டு மலர்களில் வெளிவந்து ஊக்கப்பரிசும் பெற்ற கட்டுரைகள்.

    படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டும். திரும்பத் திரும்பப் படிக்கத் தோன்றும்.

    மாணவ மாணவியர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் அருகிலுள்ள நூலகத்திற்கும் இந்நூலை வாங்கி பரிசாகவும் அன்பளிப்பாகவும் அளித்து மகிழலாம்

    அன்பன்

    மன்னை பாசந்தி

    "தும்பிக்கையானே உன் திருவடியே சரணம்

    நம்பிக்கையுடன் எழுதிட அருள்நீயே தரணும்"

    விக்னம் போக்கிடும் விக்ன விநாயகர்

    பார்வதி பரமசிவனை வலம் வந்து மாம்பழத்தைப்பெற்ற திருவிளையாடல் கதை நாம் அனைவரும் அறிந்ததே.

    சனீஸ்வரனையே விளையாட்டு காட்டிய விளையாட்டு விநாயகர்.

    எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கிவிட்டுத் தான் நாம் அனைவரும் துவங்குவோம்.

    விக்னமில்லாமல் துவங்கி நன்கு முடிய விநாயகர் துதி மிகவும் முக்கியமானது.

    எந்த ஒரு ஹோமம் மற்றும் பூஜையிலும் விநாயகருக்குத்தான் முதலில் பூஜை. மற்றவர்களுக்குப் பிறகுதான்.

    தலையில் இரண்டு குட்டு நெற்றிப்பொட்டில் இரண்டு தட்டு என்று வேண்டிக்கொள்வதை நாம் கண்கூடாகப் பார்ப்பதுமுண்டு

    சிலர் தன் இரு காதுகளையும் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடுவதுமுண்டு.

    மாதா மாதம் வருகின்ற சங்கடஹர சதுர்த்தியில் எல்லா விநாயகர் ஆலயங்கள்pலும் அபிஷேகம் அலங்காரம் என்று தடபுடலாக இருப்பார் விநாயகர்.

    வருடா வருடம் விநாயகர் சதுர்த்தியன்று உலகம் முழுவதும் அனைத்து மக்களும் கொண்டாடி மகிழ்வர்.

    பண்டிகையில் அதிக பக்தர்கள் கொண்டாடுவது விநாயகர் சதுர்த்தி.

    அரசமரம் - ஆலமரம் - குளக்கரை - முட்டுச்சந்து - முச்சந்தி- தெருக்கோடி - மலையடிவாரம் என்று கண்ணில் படும் இடங்களெல்லாம் விநாயகப் பெருமான் கோயில் கொண்டிருப்பதை நாம் காண்கின்றோம்.

    விநாயகப்பெருமான் - கணேசமூர்த்தி – பிள்ளையாரப்பா - கணபதி - மூஷிகவாகனா என்று பல பெயர்களில் விநாயகரை அழைப்பர்.

    எல்லாக் கோயில்களிலும் விநாயகர் சன்னதி முதலில் இருக்கும்.

    வைணய ஆலயங்களில் தும்பிக்கை ஆழ்வாராக விநாயகர் சன்னதி கொண்டுள்ளார்.

    விநாயகர் அகவல் - கணேச பஞ்சரத்னம் போன்ற பல ஸ்தோத்திரங்கள் விநாயகரைப் போற்றும் வண்ணம் உள்ளன.

    கொழுக்கட்டை – அவல் - சுண்டல் - சர்க்கரைப் பொங்கல் போன்றவை விநாயகருக்குப் பிடித்த நைவேத்ய ப்ரசாதங்கள்.

    அருகம்புல் - எருக்கம்பூ மாலை விநாயகருக்கு மிகவும் பிடித்தவை.

    தலையில் தமது இருகைகளாலும் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் இடும் வழக்கும் பல பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    பெரும்பாலும் எங்கு பார்த்தாலும் விநாயகர் அமர்ந்த (வீற்றிருந்த) திருக்கோலத்தில்தான் காட்சிதருவார். வெகு அபூர்வமாக நின்ற திருக்கோலத்தில் விநாயகரைக் காணலாம்.

    விநாயகரைப் பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை எனலாம். விநாயகரைப் பற்றி பாடாத பாடகர்களும் இல்லை எனலாம்.

    ஆன்மிகப் பாடல்கள் - சினிமாப் பாடல்கள் - பக்திப் பாடல்கள் என்று விநாயகருக்குத்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

    இவ்வுலகில் ஸ்ரீவிநாயகருக்குத்தான் அதிக அளவில் திருக்கோயில்கள் உள்ளன.

    விநாயகர் கோயில் இல்லாத தெருக்கள் ஊர்கள் காண்பது அரிது.

    இந்தியாவில் உள்ள விநாயகர் கோவில்களில் தமிழகத்தில் கோவையில் ஈச்சனாரி – சிவகங்கை பிள்ளையார்பட்டி – திருச்சி உச்சி பிள்ளையார் - பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் கோயில்கள் மிகவும் ப்ரசித்தம்.

    இந்தியாவில் உள்ள விநாயகர் பெயர்களை அகர வரிசையில் ‘விநாயக மணிமாலை 108’ ஆக தொகுத்துள்ளேன். பொதுவாக இந்த பெயர்களில்தான் பெரும்பாலான விநாயகர் கோயில்கள் அமைந்துள்ளன.

    வேடிக்கையான கதை ஒன்று உண்டு. ஒரு விவசாயி கிராமத்தில் உள்ள பிள்ளையாரிடம் வேண்டிக்கொண்டான் இப்படி. எனது நிலத்தில் அறுவடை செய்ய வேண்டியுள்ளது. அதனால் மழை பெய்து கெடுத்து விடாமல் இருக்க 108 தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டான்.

    மறுநாள் இன்னொரு விவசாயி வேறு விதமாக அதே பிள்ளையாரிடம் வேண்டிக்கொண்டான் இப்படி. எனது நிலத்தில் நாத்து நடவு இருப்பதால் லேசான மழை தூறினால் மிகவும் நல்லது. பிள்ளையாரே நீதான் அருளவேண்டும். 108 தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டிக்கொண்டான்.

    பிள்ளையார் யாருக்கு அனுகூலம் செய்வார் என்று நீங்களே சொல்லுங்கள்.

    பிள்ளையாருக்கே இந்த கதி என்றால் நமக்கு!

    Enjoying the preview?
    Page 1 of 1