Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nonbugal Arivom
Nonbugal Arivom
Nonbugal Arivom
Ebook138 pages53 minutes

Nonbugal Arivom

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.

இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.

காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.

இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.

1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.

2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.

Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580115704999
Nonbugal Arivom

Read more from Lakshmi Rajarathnam

Related to Nonbugal Arivom

Related ebooks

Reviews for Nonbugal Arivom

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nonbugal Arivom - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    நோன்புகள் அறிவோம்

    Nonbugal Arivom

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. நலம் தரும் வராத்திரி!

    2. புண்ணியம் தரும் துலா ஸ்நானம் தெரியுமா?

    3. அள்ள அள்ள செல்வம் தரும் குபேர லக்ஷ்மி பூஜை!

    4. குழந்தைப் பேறு தரும் சஷ்டி விரதம்!

    5. குடும்பத்தின் மேன்மைக்கு ஆன்மிக கதைகள்.... பூஜைகள்... பலன்கள்....

    6. சஷ்டியில் இருந்தால் கருப்பையில் வரும்!

    7. அப்பனுக்கும், சுப்பனுக்கும் ஒரு திருநாள்!

    8. மனம்போல மாங்கல்யம் அமைய… பாவை நோன்பு

    9. கேட்டதெல்லாம் தரும் தைபூச விரதம்

    10. நீண்ட ஆயுள் தரும் மாசி மக விரதம்!

    11. பெரும்பேறு தரும் பங்குனி உத்திரம்!

    12. நோய் தீர்க்கும் ரதசப்தமி விரதம்

    13. நல்ல கணவர் நல்ல குழந்தை இரண்டும் தரும் ஸ்ரீராம நவமி

    14. கிள்ளித்தந்தாலும் அள்ளித்தரும் அட்சயதிருதியை!

    15. கல்விச் செல்வத்தை திகட்டத் திகட்டத் தரும் வைகாசி விசாகம்!

    16. மனம் விரும்பிய மணாளனைத் தரும் ஆடி நோன்பு!

    17. செல்வத்தை அள்ளித் தரும் வரலக்ஷ்மி பூஜை!

    18. சகோதரர்கள் வாழ்வு உயர ஒரு விரதம்!

    19. சுபிட்சமும் மாங்கல்ய பலமும் தரும் சோமவார விரதம்!

    20. சகல ஸம்பத்து தரும் சுக்ரவார விரதம்

    21. விரதம் பிறந்த கதை

    22. பித்ருகளின் ஆசிர்வாதம் கிடைக்கச் செய்யும் ஏகாதசி விரதம்!

    1. நலம் தரும் வராத்திரி!

    நவராத்திரி வந்து விட்டது. இனி ஒரே கொண்டாட்டம்தான். நாளுக்கு ஒரு டிரஸ், நகைகள், அலங்காரம் என்று ஒரே அமர்க்களம்தான். ஒவ்வொரு வீட்டின் கொலுவும் ஒவ்வொரு அழகு. சிலர் ஒன்பது படிகள் கட்டி பெரிதாக வைப்பார்கள். சிலர் ஐந்து படிகள், ஏழு படிகள் என்று சின்ன அளவில் வைத்தாலும் ரசனையுடன் அதிக சிரத்தை கொண்டு வைப்பார்கள். பார்க்க வருபவர்கள் பிரமிக்க வேண்டும் என்று கலை நயம் மிளிர வைப்பார்கள்.

    வருஷத்தில் நான்கு நவராத்திரிகள் உண்டு. ஆனி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களும் ஆஷாட நவராத்திரி என்பார்கள்.

    புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களை சாரதா நவராத்திரி அல்லது மகா நவராத்திரி என்பார்கள்.

    பங்குனி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களை வஸந்த நவராத்திரி என்பார்கள்.

    தை மாத அமாவாசைக்குப் பின்வரும் ஒன்பது நாட்களை மகா நவராத்திரி என்பார்கள்.

    நாம் சாதாரணமாக வழக்கத்தில் அனுஷ்டிப்பது சாரதா நவராத்திரியைத் தான்.

    வஸந்த நவராத்திரியை வஸந்த உற்சவம் என்று கோயில்களில் கொண்டாடுவார்கள்.

    இந்த நாலு நவராத்திரிகளையும் அனுஷ்டிக்க முடியாதவர், சாரதா நவராத்திரி ஒன்றையேனும் அனுஷ்டிக்க வேண்டும்.

    சாரதா நவராத்திரி!

    புரட்டாசியும், பங்குனியும் யமனுடைய கோரப் பற்கள். இவற்றிலிருந்து தப்ப வேண்டுமானால் நவராத்திரி விரதத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்று அக்னி புராணம் கூறுகிறது.

    சாரதா நவராத்திரியை நாம் வீடுகளில் கொலு வைத்துக் கொண்டாடுகிறோம். பூஜைகள் செய்கிறோம். காலையில் லலிதா சகஸ்ர நாமம், லக்ஷ்மி சகஸ்ர நாமம், தேவி பாகவதம் என்று படிக்கலாம்.

    நவம் என்றால் ஒன்பது. நவராத்திரிகள் என்றால் ஒன்பது ராத்திரிகள்.

    சிவனுக்கு ஒரு ராத்திரி - சிவராத்திரி அம்பாளுக்கு ஒன்பது ராத்திரிகள் நவராத்தி

    புரட்டாசி மாதம் வரும் சாரதா நவராத்திரியன்று வீட்டில் கொலு வைத்து சுண்டல் செய்து, சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு, தேங்காய், ரவிக்கைத் துணி, முடிந்தால் புடவை வைத்துக் கொடுக்க வேண்டும்.

    ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான அன்னம், ஒன்பது வகையான பூக்கள், ஒன்பது வகையான அலங்காரங்கள் என்று செய்யலாம்.

    அம்பாள் பாவை வடிவானவள். அதனால் சின்னக் குழந்தைகளை நவராத்திரி தினங்களின் போது வரச்சொல்லி சாப்பாடு போட்டுப் பாவாடை சட்டை தைத்துக் கொடுக்கலாம்.

    இதில் ஒரு முறையும் உண்டு. முதல் நாள் ஒரு பெண்களை குழந்தை. இரண்டாவது நாள் இரண்டு குழந்தைகள், மூன்றாவது நாள் மூன்று குழந்தைகள் என்று வரச்சொல்லி சாப்பாடு போட்டு ஒன்பதாவது நாள் ஒன்பது குழந்தைகளையும் ஒன்றாக வரச் சொல்லி எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, சாப்பாடு போட்டு, ஒன்பது பேருக்கும் பாவாடை சட்டை தைத்துக் கொடுக்கலாம்.

    வசதி இல்லாத குழந்தைகளுக்கு வஸ்திரம் கொடுத்தால் அது பெரிய புண்ணியமாகும்.

    இதே போல் சுமங்கலிக்கு வெற்றிலை பாக்கு தேங்காய், ரவிக்கை துண்டு என்று வைத்துக் கொடுக்கலாம். இது ரொம்ப விசேஷமாகும். முடிந்தால் இரண்டு, மூன்று பேர்களுக்குப் சாப்பாடு போட்டு தாம்பூலத்தில் புடவை வைத்துத் தரலாம். இப்படிச் செய்யும் நவராத்திரி பூஜை பலனை ஆதிசேஷனனாலும் அளவிட்டு கூறமுடியாது என்று புராணங்கள் கூறுகின்றன. நவராத்திரியன்று வீட்டிற்கு வரும் பெண்களை அம்பாளாகவே ஆராதிக்க வேண்டும்.

    மாலை நேரங்களில் அம்பாளைத் துதிக்கும் பாடல்களாகப் பாட வேண்டும். தோடி, கல்யாணி, பிலஹரி, காம்போதி, மோகனம், புன்னாகவராளி, பந்துவராளி, ஹரிகாம்போதி, நீலாம்பரி, வஸந்தா போன்ற ராகங்களில் பாடல்களைப் பாடலாம். நவராத்திரி

    தினங்களில் பாடுவதற்கு என்றே முத்துஸ்வாமி தீக்ஷதர் நவாவர்ண கீர்த்தனைகள் என்ற கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.

    மல்லிகை, முல்லை, சம்பங்கி, இருவாட்சி, ஜாதி, செம்பருத்தி, தாமரை, தாழம்பூ போன்ற பூக்களை வைத்துப் பூஜை செய்யலாம். இவற்றுடன் மரிக்கொழுந்து, வில்வம் துளசி, மரு. கதிர்பச்சை, சந்தன இலை, தும்பை இலை, விபூதி பச்சை போன்றவற்றையும் வைத்துப் பூஜிக்கலாம்.

    நவராத்திரி தினங்களை மூன்று மூன்று தினங்களாகப் பிரித்துக் கொள்வார்கள்.

    முதல் மூன்று தினங்கள் மலைமகளாம். பார்வதிக்கு உகந்தது.

    நடுவில் வரும் மூன்று தினங்கள் அலைமகளாம். லட்சுமிக்கு உகந்தது.

    கடைசி மூன்று தினங்கள் கலைமகளாம். சரஸ்வதிக்கு உகந்தது.

    நம் அனைவருக்கும் கல்வி, செல்வம், வீரம் என்ற மூன்றுமே தேவைதான். ஆச்சர்யம் என்னவென்றால் மூவருமே பெண் தெய்வங்கள் தான்.

    ஆதிசங்கரர் அம்பாளை வீணா வேணு மிருதங்க வாத்ய ரசிகாம் என்று மீனாட்சி பஞ்சரத்னத்தில் கூறியிருக்கிறார்.

    கலசம் வைக்கும் முறை!

    கொலு வைக்கும் பொழுது நிறைய கடவுள் பொம்மைகளை வைக்க வேண்டும். மூன்றாம்படியில் ஒரு செம்பில் அரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், நாணயங்கள் போட்டு மேலே வாயில் மாவிலை சொருகி நடுவே தேங்காயை வைக்க வேண்டும். இது கலசம். இதில் அம்பாளை ஆவாஹணம் செய்து நவராத்திரியை ஆரம்பிக்கிறோம். நவராத்திரி முடிந்து அதில் உள்ள அரிசியை பாயசம் செய்யலாம்.

    விஜயவாடா கனக துர்காதான் மகிஷனைக் கொன்றாள் என்பார்கள். இங்கு நவராத்திரி மிக விசேஷம். இந்த நவராத்திரிப் பண்டிகை விரதம் ஒரு கலாச்சார பரிவர்த்தனையாகும். தவிர சுண்டல் என்றாலும் நவராத்திரி ஞாபகம் வருமே!

    2. புண்ணியம் தரும் துலா ஸ்நானம் தெரியுமா?

    கங்கை புனித நதி. கங்கையில் மூழ்கினால் பாவங்கள் தொலையும் என்பது புராணங்கள் கூறும் செய்தி. சிவபெருமானின் ஜடாமுடியினுள் கங்கை இருக்கிறாள். அதனால் சிவனுக்கு கங்காதரன் என்றும் ஒரு பெயர் உண்டு. கங்கையைக் கடவுள் நதி என்று கம்பன் போற்றுகிறான். கங்கையை விடப் புனிதமான ஒரு நதி இருக்கிறது என்று புராணங்களும், மகரிஷிகளும் கூறுகிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா, ஆனால் அதுதான் உண்மை.

    கங்கையிற் புனிதமாய் காவிரி என்கிறார் ஆழ்வார்.

    சேர நாட்டினரான இளங்கோவடிகள்

    Enjoying the preview?
    Page 1 of 1