Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ishwaryam Tharum Athirsta Karkal
Ishwaryam Tharum Athirsta Karkal
Ishwaryam Tharum Athirsta Karkal
Ebook108 pages1 hour

Ishwaryam Tharum Athirsta Karkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எப்படி ஒரு நோயாளி இந்த மருந்தைச் சாப்பிட்டால் தனது நோய் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையோடு அந்த மருந்தை உட்கொள்ளுகிறானோ, அதைப் போலத்தான் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்ட, நஷ்டங்களையெல்லாம் தாண்டி நாம் ஒரு உன்னத நிலைக்கு வர வேண்டும் என்ற குறிக்கோள் உள்ளவர்கள், அவர்களுக்குரிய அதிர்ஷ்ட கற்களை நம்பிக்கையுடன் அணிந்தால் தான் அவர்களுடைய குறைகளெல்லாம் நிவர்த்தி ஆகும். மேலும் பல அதிர்ஷ்ட வாய்ப்புகளும் அவர்களுக்கு உருவாகும்.

கற்களைப் பற்றி தெரிய விரும்புவர்களும், அதைப்பற்றி ஓரளவு தெரிந்தவர்களுக்கும் மற்றும் பொதுவான வாசகர்களுக்கும் பயன்படும் வகையில் இப்புத்தகம் படைத்துள்ளேன். இந்நூலில் Precious Stones, மற்றும் முக்கியமான Semi precious Stonesகளைப் பற்றி ஒவ்வொரு அத்தியாயமாகக் குறிப்பிட்டிருக்கிறேன். இதைத் தவிர மற்ற துணை ரத்தினக் கற்களும் இருக்கின்றன. ஆனால் அவை நடை முறையில் எளிதாகக் கிடைக்க இயலாத காரணத்தினால் அவற்றைப்பற்றி நான் இப்புத்தகத்தில் குறிப்பிடவில்லை. இப்புத்தகத்தை உங்கள் அதிர்ஷ்டத்திற்கான பொதுவான வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

எந்த ரத்தினக் கல்லையும் அழகுக்காகவோ, கவர்ச்சிக்காகவோ, அவசரப்பட்டு வாங்கி அணிய வேண்டாம். ஒன்றிற்கு இரண்டு தடவை, உங்கள் ஜாதகத்தையும் (இராசி, அம்சம் உள்பட) பிறந்த எண்ணையும், கூட்டு எண்ணையும் (விதி எண்) மற்றும் பெயர் எண் முதலானவற்றை அனுபவமிக்க ஜோதிடர்கள் மூலமாக ஒத்துப் பார்த்து, அதன் பிறகு தான் உங்கள் ராசிக்கல்லை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

மேலும் இப்புத்தகத்தின் பின் பகுதியில் நீங்கள் விரைவாகவும், எளிதாகவும் தெரிந்து கொள்ள (Refer செய்து கொள்ள) கற்கள், கிரகங்கள், பிறந்த மாதம், எண் கணித சாஸ்திரம் பற்றிய பயனுள்ள குறிப்புகளை அட்டவணைகளாகத் தந்துள்ளேன். அதையும் படித்து பலன் பெறுங்கள்.

Languageதமிழ்
Release dateSep 6, 2020
ISBN6580137205866
Ishwaryam Tharum Athirsta Karkal

Related to Ishwaryam Tharum Athirsta Karkal

Related ebooks

Reviews for Ishwaryam Tharum Athirsta Karkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ishwaryam Tharum Athirsta Karkal - N. Deivasigamani

    https://www.pustaka.co.in

    ஐஸ்வர்யம் தரும் அதிர்ஷ்டக் கற்கள்

    Ishwaryam Tharum Athirsta Karkal

    Author:

    என். தெய்வசிகாமணி

    N. Deivasigamani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/n-deivasigamani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ‘முத்தான’ வாசகர்களே!…

    1. கற்க கசடற கற்களை…

    2. நவக்கிரகங்களும், நவரத்தினங்களும்

    3. ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை

    4. மாணிக்கம் (RUBY)

    5. முத்து (PEARL)

    6. பவளம் (CORAL)

    7 மரகதம் (EMERALD)

    8 புஷ்பராகம் (TOPAZ)

    9 வைரம் (DIAMOND)

    10 நீலம் (BLUE SAPPHIRE)

    11 கோமேதகம் (HESSONITE)

    12 வைடூரியம் (CATSEYE)

    13 துணை ரத்தினக் கற்கள்

    14 விரைவுப் பார்வைக்கு (REFERENCE)

    ‘முத்தான’ வாசகர்களே!…

    கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா… என்ற திரைப்படப் பாடலை சிறுவயதில் கேட்ட நாளிலிருந்தே, நான் கற்களைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். அதன் விளைவு? எங்கள் வீட்டில் வரும் விருந்தினர்கள், நண்பர்கள் அணிந்திருக்கும் கற்கள் பதித்த அணிகலன்களை கவனிக்க ஆரம்பித்தேன். பிறகு அவர்கள் கை விரல்களில் அணிந்திருக்கும் மோதிரங்களைப் பார்த்து அது என்ன கல்? இது என்ன கல், எதற்காக இதை அணிகிறீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்தேன். அப்படி குறிப்பிட்ட கல் பதித்த மோதிரங்கள் அணிந்தவர்களின் புகழ், பெருமை, வாழ்க்கை அந்தஸ்து போன்றவற்றை கவனிக்கும் போது, அந்த கற்களில் ஏதோ ஒரு சக்தியும், மகிமையும் இருக்கத்தான் செய்கின்றன என்பதையும் உணர ஆரம்பித்தேன்.

    ‘மணி, மந்திரம், ஒளஷதம்’ என்று சித்தர்கள் சொல்வார்கள். மனிதனின் உடல் ஆரோக்கியம், உத்யோகம் மற்றும் வாழ்க்கை மேன்மைக்கு முதலில் ‘மணி’ என்ற ரத்தினக் கல்லிற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

    இன்றும் நம்மில் பலபேர் அவனுக்கு நல்ல அறிவு இருக்கிறது. திறமை இருக்கிறது. உழைப்பும் இருக்கிறது. இவ்வளவு இருந்தும் இன்னும் அவனால் முன்னுக்கு வர முடியல… சரியான சம்பாத்தியமில்ல இதுக்கெல்லாம் ‘அதிர்ஷ்டம்’னு ஒண்ணு இல்லாததினால்தான் அவன் அப்படியே இருக்கான்… இப்படி பல சம்பாஷணைகளை நாம் வாழ்க்கையில் அடிக்கடி கேட்கிறோம். ஆக ‘அதிர்ஷ்டம்’ என்ற ஒரு அம்சமானது ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு ஆழமாக சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். சரி. ‘அதிர்ஷ்டம்’ என்பது எப்படிக் கிடைக்கும்?

    எந்த கிரகம் ஜாதகத்தில் ஒருவருக்கு அதியோகத்தை கொடுக்கிறதோ, அந்த கிரகத்திற்குரிய ரத்தினக் கல்லை அணிந்து (தோலில் படும்படியாக) அந்த கிரகத்தின் முழு ஆதிக்கத்தையும் அவர் உடலில் பாயச் செய்து, அதியோகப் பலன்களை அடையச் செய்யலாம். உடல் நலத்திற்கும், உடல் நோய்க்கும் எப்படி நாம் குறிப்பிட்ட மருந்தைப் பயன்படுத்திக் குணமடையச் செய்கிறோமோ, அதைப் போல நம் வாழ்க்கை கஷ்டங்களுக்கும், நஷ்டங்களுக்கும் அவற்றை நிவர்த்தி செய்து வாழ்க்கையில் ஒரு மேன்மையை அடைய அதற்குரிய கற்களை அணிந்து நாம் ஏன் அதிர்ஷ்டசாலிகளாக விளங்கக் கூடாது?

    எப்படி ஒரு நோயாளி இந்த மருந்தைச் சாப்பிட்டால் தனது நோய் குணமாகிவிடும் என்ற நம்பிக்கையோடு அந்த மருந்தை உட்கொள்ளுகிறானோ, அதைப் போலத்தான் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்ட, நஷ்டங்களையெல்லாம் தாண்டி நாம் ஒரு உன்னத நிலைக்கு வர வேண்டும் என்ற குறிக்கோள் உள்ளவர்கள், அவர்களுக்குரிய அதிர்ஷ்ட கற்களை நம்பிக்கையுடன் அணிந்தால்தான் அவர்களுடைய குறைகளெல்லாம் நிவர்த்தி ஆகும். மேலும் பல அதிர்ஷ்ட வாய்ப்புகளும் அவர்களுக்கு உருவாகும்.

    கற்களைப் பற்றி தெரிய விரும்புவர்களும், அதைப்பற்றி ஓரளவு தெரிந்தவர்களுக்கும் மற்றும் பொதுவான வாசகர்களுக்கும் பயன்படும் வகையில் இப்புத்தகம் படைத்துள்ளேன். இந்நூலில் Precious Stones, மற்றும் முக்கியமான Semi precious Stonesகளைப் பற்றி ஒவ்வொரு அத்தியாயமாகக் குறிப்பிட்டிருக்கிறேன். இதைத் தவிர மற்ற துணை ரத்தினக் கற்களும் இருக்கின்றன. ஆனால் அவை நடைமுறையில் எளிதாகக் கிடைக்க இயலாத காரணத்தினால் அவற்றைப்பற்றி நான் இப்புத்தகத்தில் குறிப்பிடவில்லை. இப்புத்தகத்தை உங்கள் அதிர்ஷ்டத்திற்கான பொதுவான வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

    எந்த ரத்தினக் கல்லையும் அழகுக்காகவோ, கவர்ச்சிக்காகவோ, அவசரப்பட்டு வாங்கி அணிய வேண்டாம். ஒன்றிற்கு இரண்டு தடவை, உங்கள் ஜாதகத்தையும் (இராசி, அம்சம் உள்பட) பிறந்த எண்ணையும், கூட்டு எண்ணையும் (விதி எண்) மற்றும் பெயர் எண் முதலானவற்றை அனுபவமிக்க ஜோதிடர்கள் மூலமாக ஒத்துப் பார்த்து, அதன் பிறகு தான் உங்கள் ராசிக்கல்லை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

    மேலும் இப்புத்தகத்தின் பின் பகுதியில் நீங்கள் விரைவாகவும், எளிதாகவும் தெரிந்து கொள்ள (Refer செய்து கொள்ள) கற்கள், கிரகங்கள், பிறந்த மாதம், எண் கணித சாஸ்திரம் பற்றிய பயனுள்ள குறிப்புகளை அட்டவணைகளாகத் தந்துள்ளேன். அதையும் படித்து பலன் பெறுங்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1