Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tasmac Echarikkai
Tasmac Echarikkai
Tasmac Echarikkai
Ebook226 pages1 hour

Tasmac Echarikkai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குறும்பும் எள்ளலும் நையாண்டியும் உள்ள அரசியல் நையாண்டி சிறுகதைகளும் சமூகபிரச்சனைகளை அலசி ஆராயும் சமூக சிறுகதைகளும் கவித்துவமான காதல் சிறுகதைகளும் உள்ள சிறுகதைகள் தொகுப்பே 'டாஸ்மாக் எச்சரிக்கை.' நவரச அனுபவங்களை அள்ளித்தரும் இச்சிறுகதை தொகுப்பை படித்து பரவசப்படுங்கள்.

Languageதமிழ்
Release dateAug 26, 2023
ISBN6580111010069
Tasmac Echarikkai

Read more from Arnika Nasser

Related to Tasmac Echarikkai

Related ebooks

Reviews for Tasmac Echarikkai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tasmac Echarikkai - Arnika Nasser

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    டாஸ்மாக் எச்சரிக்கை

    (25 சிறுகதைகளின் தொகுப்பு)

    Tasmac Echarikkai

    (25 Sirukathaigalin Thoguppu)

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஆயுள் வாசகர்

    2. கோன்பனேகா குரோர்பதி

    3. நாகர்கோவில்

    4. வீடு விற்பனைக்கு

    5. உப்பிலி

    6. புகைப்படம்

    7. நான்கு கேள்விகள்

    8. குடிநோயாளி

    9. கிட்னி வாத்தியார்

    10. உடல் தானம்

    11. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    12. இடமாற்றம்

    13. பிரதீப்பம்மா

    14. மொட்டைக்கடிதம்

    15. மகள் சூரியன் அம்மா பூமி

    16. நசுக்கு

    17. நெருங்காதே விலகாதே

    18. வழக்கறிஞன்

    19. டாஸ்மாக் எச்சரிக்கை

    20. மூக்குக் கண்ணாடி

    21. வெள்ளி ரோஜா

    22. நேயர் விருப்பம்

    23. சித்ராவைத் தேடி

    24. இன்ஜினியர் தாத்தா

    25. சாலை விபத்து

    1. ஆயுள் வாசகர்

    ஆனந்த்ராகவ் ஒட்டகச்சிவிங்கி போல் தனது படுக்கையறைக்கு நடந்தார். பஞ்சகச்சமும் கைவைத்த பனியனும் உடுத்தியிருந்தார். தலையணை முட்டுக்கொடுத்த படுக்கையில் திங்க் பேடை வைத்தமர்ந்து ஒரு வார இதழுக்கான கட்டுரைத் தொடரின் 44வது வாரத்தை டைப்ப ஆரம்பித்தார். உலாதொலைபேசி சிணுங்கியது. எடுத்து காதில் இணைத்தார். எதிர்முனையில் சதுர்வேதி.

    சதுர்வேதி 46 வயது முதிர் இளைஞர். பில்லியனர். டைரக்டர் நாகரத்னம் மூலம் நண்பரானவர். நமஸ்காரம் ராகவ் சார்!

    இம்!

    நாப்பத்தியைந்து வருடங்களாக எழுதிவரும் உங்களை தமிழ் வாசகர்கள் ஏறக்குறைய மறந்துவிட்டார்கள். அவர்களுக்கு உங்களது பெயர் பிரபல்யமும் சமீபத்ய உங்கள் சிலபல கட்டுரைத் தொடர்களும் உங்களது சினிமா பணிகளும் மட்டுமே பரிச்சயம் என்றிருந்தீர்கள். உங்களுடைய படைப்புகளை ஏறக்குறைய முழுமையையும் படித்திருக்கும் வாசகர்கள் ஓரிருவராவது தேறுவரா என்பதே சந்தேகம் என ஆவலாதித்திருந்தீர்கள். ஒரு பிரைவேட் சர்வே ஏஜென்ஸிக்கு உங்களின் ஆயுள் வாசகர்களை கண்டறியும் மெஹா பணியினை ஒப்படைத்தேன். அவர்கள் உலகத் தமிழ் வாசகர்களை பல்வேறு உத்திகள் மூலம் அணுகி ஐந்து ஆயுள் வாசகர்களையும் ஐந்து ஆயுள் வாசகியரையும் கண்டெடுத்து பட்டியல் ஒப்படைத்துள்ளனர்!

    பிரமாதம் சதுர்வேதி! வார்த்தைகளின் குதூகலம் உச்சரிப்பில் வெளிப்படவில்லை.

    வருகிற 24.08.2008 ஞாயிறு நீங்கள் ப்ரீதான?

    ஃப்ரீ பண்ணிக்கலாம் சதுர்வேதி!

    அன்று மாலை ஆறுமணிக்கு லீ ராயல் மெரிடியனில் நீங்களும் பத்து ஆயுள் வாசகவாசகியரும் நேருக்குநேராய் சந்தித்து நிறைய பேசிக்கொள்ளப் போகிறீர்கள். அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டேன்!

    இந்த சிரமங்கள் உங்களுக்கு அவஸ்யமா சதுர்வேதி?

    நான் மதிக்கும் ஒரு புத்திசாலி எழுத்தாளருக்கு நான் செய்யும் சின்னஞ்சிறு அன்பு வெளிக்காட்டல். இந்த கெட் டுகெதரில் நீங்கள் + நான் + பத்து வாசக வாசகியர் மட்டுமே. வேறு யாரும் கிடையாது. நான் இதனை நாகுக்குக்கூட தெரிவிக்கவில்லை. நீங்க விமல்ஹாசனுக்கு கூட தெரிவிக்க வேணாம். சொன்னா பெப் போய்டும்!

    ஆகட்டும் சதுர்வேதி! எதிர்முனை மரித்தது. அதிகமாக எந்த நிகழ்வுக்கும் உச்சகட்ட முகபாவம் காட்டாதவர் தனிமை தந்த தைரியத்தில் ‘குஷி’ ஜோதிகாவாய் துள்ளினார். இரு மார்பகங்கள் மிகைத்து மறைந்தன.

    லீ ராயல் மெரிடியன். பட்டுவேட்டி முழுக்கை பட்டுசட்டை. பட்டு அங்கவஸ்திரத்தில் வித்தியாசமாக பளபளத்தார் எழுபது வயது ஆனந்த்ராகவ். வட்டமேஜை. 12 இருக்கைகள். சந்திப்புக்கு இதம் சேர்க்கும் விதமாய் உரையாடலுக்கு பின்னணி கோர்க்கும் விதமாய் ஒரு மெக்ஸிகன் வாத்தியக் கோஷ்டி. சதுர்வேதியுடன் பத்து வாசகவாசகியர் நடந்துவந்தனர்.

    ஒற்றைப்பூ பொக்கே. பூந்தொட்டி பொக்கே. சிவப்பு ரோஜாக்கள் பொக்கே.

    சில வாசகர்கள் காலில் விழுந்து சேவித்தனர். ஒரு வாசகி கூடுதல் ஓரடி உயரம் எக்கி ராகவ் கன்னத்தில் முத்தமிட்டாள். அமர்ந்தனர். அவரவர் விருப்ப உணவும் போதைத் திரவங்களும் மேஜை நிறைத்தன. ராகவ்வுக்கு மட்டும் டயட் கோக்.

    முதல் வாசகர், வணக்கம். எனது பெயர் அறிவானந்தம். கனடாவில் வசிக்கிறேன். புலம்பெயர்ந்த ஈழத்தமிழன் நான். எனக்கு வயது நாற்பது. பதினைந்து வயதில் கதைகள் வாசிக்க ஆரம்பித்த நான் உங்கள் கதைகள் எல்லாவற்றையும் வாசித்திருக்கிறேன். அதுவும் இருமுறை மும்முறை. உங்களின் ‘தாம்புக்கயிறு’ இன்றைய க்ரைம் கதைகளுக்கு தாத்தா. நீளவாக்கியம் அமைக்கும் சாண்டில்யன் வடதுருவம் என்றால் மைக்ரோ ஹைக்கூ வாக்கியங்கள் அமைக்கும் நீங்கள் தென்துருவம்!. முறுவலித்தார் ஆனந்த்ராகவ்.

    இரண்டாவது வாசகர், வணக்கம். எனது பெயர் வாசுதேவன். எனக்கு வயது அறுபது. ரமணா பிராய்லர்ஸ் உரிமையாளன் நான். தமிழின் எல்லா க்ரைம் கதை எழுத்தாளருக்கும் துரோணர் நீங்கதான். அமெரிக்காவில் பிறந்திருந்தால் எல்லா அமெரிக்க எழுத்தாளர்களையும் பின்னுக்கு தள்ளியிருப்பீர்கள். உங்களது ‘குளமெல்லாம் தாமரைப்பூ’, ‘ஆயிரத்திதோரு ரூபாய்தீவு’, ‘நட்சத்திரங்களை துரத்தினவன்’, ‘சுப்ரியா’, ‘களவுத் தொழிற்சாலை’, ‘ரவிபிரசாத்தின் முதல்தினம்’ - காலத்தால் அழிக்க முடியாத படைப்புகள். யூ ஆர் எ கன்வென்ஷனல் அண்ட் ஆர்தடக்ஸ் பிராமின். உங்க கதைகள் மூலம் உங்களின் செக்சுவல் பெர்வெர்ஷன்களை லிபரேட் செய்து கொண்டீர்கள். யூ ஆர் எ மல்டிபிள் ரீபைண்டு வெர்ஷன் ஆப் சரோஜாதேவி. அரைமணி நேரம் மற்ற கதைகளையும் அலசினார்.

    ‘நகாசுபடுத்தபட்ட சரோஜாதேவி’ காமென்ட்டுக்கு என்ன முகபாவம் காட்டலாமென மையமாக யோசித்தார் ஆனந்த்ராகவ்.

    மூன்றாவது வாசகர், மாலை வணக்கம். எனது பெயர் கார்மெல். பெந்தகொஸ்தே கிறிஸ்டியன் நான். உங்களின் 1960-70 கதைகள் விடலைத்தனம் கூடிய விஷமம்மிக்கவை. உங்களின் 1970-80 கதைகள் யூத்ஃபுல் அண்ட் பெனடிக் டராஷி. உங்களின் 1980-90 கதைகள் கிம்மிக்ஸ் தொலைத்த ஆண்மை பொங்கும் பக்குவ படைப்புகள். உங்களின் 1990-2000 கதைகளுக்கு மேல்-மெனோபாஸ் வந்துவிட்டது. உங்களின் 2000-2005 படைப்புகள் அதிகம் ‘நான்-பிக்ஷன்’ வகைகளைச் சார்ந்தவை. பிக்ஷன் ஏறக்குறைய உங்களை விவாகரத்து செய்துவிட்டது. மரண பயம் தொலைத்தால் இன்னும் 15 வருடங்கள் வாழ்ந்து நிறைய ‘நான்-பிக்ஷன்’ படைப்பீர்கள்!

    ‘மேல்-மெனோபாஸ்’ வார்த்தைக்கு முறுவலித்தார் ராகவ்.

    நான்காவது வாசகர், எல்லாருக்கும் வணக்கம். நான் ந்யூ டெல்லியில் வசிக்கும் தமிழன். பெயர் முஸ்தபா. இன்று நான் மிகப்பெரிய பதவியில் இருப்பதற்கே ராகவ்வின் எழுத்துக்கள்தான் காரணம். ராகவ்வின் எழுத்துகள் மெதுமெதுவாக போதை தரும். ஆனால் போதை அறவே இறங்காது. ராகவ்வின் எழுத்துகளில் மேல்தட்டு வக்கிரம் வழிந்தோடும். ராகவ்வுக்கு வறுமையைப் பற்றி தெரியாது. குளிர்பதனமூட்டப்பட்ட காரின் கறுப்பு ஜன்னல் கண்ணாடி வழியாக உலகை பார்த்தவர் நீங்க. உங்களின் ‘கிராமம்’, ‘பங்களா’, ‘சரண்’ கதைகள் சிறப்பானவை. ‘விஞ்ஞானத்தை கரைத்துக் குடித்துவிட்டேன். எனக்கு தெரிந்தது யாருக்கும் தெரியாது. பக்கத்தில் வராமல் எட்டி நில். நீளக்கை நீட்டி ஸ்பூன் ஸ்பூனாய் கற்பிக்கிறேன்’ எனும் பாவனை உங்க கதைகளில் வழிகிறது!

    ஐந்தாவது வாசகர், உங்களின் ‘சாவித்ரி’, ‘கவிதா அழகிய மனைவி’, ‘போலி முகங்கள்’, ‘வெளிச்சம் வந்த நேரம்’ எனக்கு பிடித்தவை!

    ஆறாவது வாசகி, எனது பெயர் மாலதி. சொந்த ஊர் திருச்சி. எனக்கு வயது 75. உன்னை நான் நீ, வா, போ எனவும் கூப்டலாம். ‘டேய் எழுத்தாள தம்பி’ன்னும் கூப்டலாம். நீ பெண்களுக்கு மிகவும் பிடித்த மேல்-ஷாவனிஸ்ட். இன்றைய சினிமா மாதவன் தெத்துப்பல்லன், கிழிந்த உதடன். ஆனாலும் பெண்களுக்கு அவனை பிடிக்கிறது. 1970-85களில் நீ வாசிக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கு ஒரு மாதவன். தமிழ் இலக்கணத்தை மென்மையாக கற்பழித்தவன் நீ. ‘வாசல் மலர்’, ‘யாருக்கும் யாரும் காவலில்லை’, ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘ஏற்கனவே மனோ’ - எனக்கு பிடித்தவை!

    ஏழாவது வாசகி, அறிவியல் தமிழின் தந்தை நீங்கள்!

    தாய் யார்? என கேட்டார் ராகவ்.

    எட்டாவது வாசகி, நீங்கள் ‘அறவாழி’ பத்திரிகையில் எழுதியவை எல்லாம் ஸ்பிளிட் பெர்சனாலிட்டியின் மருத்துவ அடையாளங்கள்!

    ஒன்பதாவது வாசகி – .....

    பத்தாவது வாசகி, எல்லாரும் உங்களை 90 சதவீதம் பாராட்டினார்கள். நான் உங்களது குறைகளை மட்டும் பட்டியலிட போகிறேன். உங்களின் வசீகர பூச்சு எழுத்துகள் ஆழ அழுத்தமான மற்ற படைப்புகளை காணடித்துவிட்டன. நீங்கள் ஆரம்பித்து வைத்த ஆபாசம் இன்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உயர்வு மனப்பான்மையுடன் காலமெல்லாம் வாசகரிடமிருந்து விலகியே நின்றுவிட்டீர்கள். சினிமாக்காரர்களுக்கு விஷயதானம் இலவசமாய் பண்ணிப்பண்ணி எழுத்தாளர்களின் படைப்புகளை தைரியமாய் திருட சினிமாக்காரர்களுக்கு பைபர் பிளாஸ்டிக் தளம் போட்டு குடுத்துவிட்டீர்கள். உங்களை மீறி உங்களிடம் பிராமணீயம் வழிகிறது. குழு மனப்பான்மையுடன் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களை மட்டுமே ஆதரிக்கிறீர்கள்!

    ஏற்புரையாய் ஆனந்த்ராகவ் எழுந்து, அனைவருக்கும் நன்றி! கைகூப்பினார்.

    சதுர்வேதி, நீங்கள் புறப்படுங்கள். நான் இவர்களை வழியனுப்பிவிட்டு வருகிறேன்!

    உணர்ச்சிகரமான பிரியாவிடை வைபவம். பிரிகிறோம் மீண்டும் சந்திக்க உயிருடன் இருப்பேனா?

    ராகவ் போனவுடன் சதுர்வேதி, தகவல் தொழில்நுட்ப புரட்சி ஒட்டுமொத்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை மார்ச்சுவரிக்கு அனுப்பிவிட்டதுதானே? ஐ ப்ளீவ் இட்ஸ் ட்ரூ. இருந்தாலும் என் மதிப்பிற்குரிய ஆனந்த்ராகவ்வை மகிமைபடுத்த உங்களை தேர்ந்தெடுத்து பதினைந்து நாள் பயிற்சி கொடுத்தேன். பயிற்சிகளை 1:100 விகிதத்தில் தாண்டி அசத்தோ அசத்திவிட்டீர்கள். உங்கள் அனைவருக்கும் தலா இருபதாயிரம் இருபதாயிரம் மதிப்புள்ள வைரமோதிரம் பரிசாய் அளிக்கிறேன்!

    பத்து வாசகவாசகியரும் கோரஸாய் மறுத்தனர். முதலில் நீங்க படிக்கச் சொன்ன ராகவ் புத்தகங்களை நாங்க விளையாட்டாய்தான் படிக்க ஆரம்பித்தம். ஆனால் அதுவோ சுனாமியாய் எங்களை இழுத்து வாரிக்கொண்டது. உங்களுக்குத் தெரியாமல் பிரசுரங்களை அணுகி அவரின் அனைத்து படைப்புகளையும் வாங்கி இரவு பகலாய் படித்து புதிய வினோத உலகில் சஞ்சரித்து நிகழுக்கு திரும்பியுள்ளோம். சிறுகதைகளும் நாவல்களும் தனிமனிதன் நிர்மாணிக்கும் மயன் மாளிகை. எழுத்தாளனின் பெண்கள் வாசகரை ஐஸ்வர்யாராய்க்கும் கோவை சரளாவுக்கும் இடையே ஆயிரம் அனாட்டமி யூகங்களை கிளப்பக்கூடியவர்கள். இலக்கியம் இறைவனின் ஆயுள்ரேகை. சோம்பேறிகளுக்கு எழுத்துலகம் விசா அனுமதிப்பதில்லை. பிள்ளையார் சுழி போட்டு எங்களுக்கு வாசிப்பு ஆர்வத்தை ஆரம்பித்து வைத்துவிட்டீர்கள். இனி ஆயுளுக்கும் நாங்கள் வாசகர்கள்தான். ஒவ்வொரு எழுத்தாளரையும் தேடித்தேடி வாசிக்கப்போகிறோம். புதுப்புது அதீத கற்பனை உலகங்கள் தரிசிக்கப்போகிறோம். எங்கள் நியூரான் ஸெல்களில் வாசிப்பு ரசனையை பதினைந்தே நாட்களில் கருவுறச் செய்த உங்களுக்கு நாங்கள்தான் பரிசளிக்க வேண்டும்!

    பத்து வாசகவாசகியரும் பத்து வைர மோதிரங்களை எடுத்து நீட்டினர்.

    ‘பரிசு வாங்குவதில் கூட இணை – எண்ண ஓட்டமா?’ பிரமித்தான் சதுர்வேதி.

    பத்து விரல்களிலும் வைர மோதிரங்கள் பூட்டிய சதுர்வேதி 1960ஆம் ஆண்டைய தவில் வித்துவான் போல் காட்சியளித்தான். இதென்னடா இனிய வம்பு! கிணறு வெட்ட நயாகரா நீர்வீழ்ச்சி கிளம்பிய கதையா போச்சு! எனிவே வாழ்க தமிழ்! காக்டெய்ல் புன்னகை பின்வாங்கியது.

    2. கோன்பனேகா குரோர்பதி

    நீலமும் சிவப்பும் வெண்மையும் சுழன்றடிக்கும் அரங்கம், நூறு பார்வையாளர்களுடன் நிரம்பியிருந்தது. குதிரை லாட வடிவில் பத்து பங்கேற்பாளர்கள் அமர்ந்திருந்தனர். கறுப்பு நிற ஃபுல் சூட்டுடன் 170 செ.மீ உயரமாய் தோன்றினார் ஷாரூக்கான். நடுவகிடு எடுக்கப்பட்ட சேவல் கொண்டைநிற தலைகேசம். ‘கோன்பனேகா குரோர்பதி போரு’க்கான விளம்பர வாசகங்களை உரக்க அறிவித்து பத்து பங்கேற்பாளர்களை கரகோஷங்களுக்கிடையே அறிமுகப்படுத்தினார். பத்து பங்கேற்பாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க கான் அறிமுக கேள்வியை வீசினார். இவா பிரவுன் யாருடைய காதலி? – அ) முஸோலினி ஆ) அலெக்ஸாண்டர் இ) நெப்போலியன் ஈ) ஹிட்லர்!

    5.69 நொடிகளில் சரியான பதிலை பட்டன் செய்து வெற்றிபெற்றான் சபரிவள்ளல். சபரி எல்லாரையும் வணங்கியபடி எழுந்துபோய் ஷாரூக்கானின் கைகளை பற்றிக்குலுக்கினான். சபரியை வாழ்த்தியபடி கான் அவனை அரங்கின் மையப்பகுதியில் இருக்கும் இரு லெனோவா எதிர்எதிர் கம்ப்யூட்டர்களுடன் கூடிய டைரக்டர் மாடல் ரிவால்விங் சேர்களுக்கு அழைத்துச் சென்றார். இருவரும் அமர்ந்தனர்.

    மிஸ்டர் சபரிவள்ளல்! நீங்கள் சென்னையில் என்ன செய்கிறீர்கள்?

    நான் தமிழ் வாரமாத இதழ்களுக்கு ஓவியம் வரைந்து கொடுக்கிறவன்!

    நிகழ்ச்சிக்கு உங்களது மனைவி வந்திருக்கிறார் இல்லையா!

    ஆம்! என்றதும் கேமிரா சபரியின் மனைவி சங்கீதாவைக் காட்டியது. வணங்கினாள்.

    போட்டியின் விதிகள் எல்லாம் உங்களுக்குத் தெரியுமல்லவா மிஸ்டர் சபரிவள்ளல்?

    தெரியும்!

    நிகழ்ச்சிக்குள் போகலாமில்லையா மிஸ்டர் சபரிவள்ளல்?

    போகலாம் சார்!

    ஷாரூக்கான் சிரித்தபடி முதல் கேள்வியை ‘கிளிக்’ செய்தார்.

    Enjoying the preview?
    Page 1 of 1