Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavil Nanaindha Ninaivugal
Kanavil Nanaindha Ninaivugal
Kanavil Nanaindha Ninaivugal
Ebook136 pages53 minutes

Kanavil Nanaindha Ninaivugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

யாருக்கும் தூக்கத்தில் கனவுகள் வருவது சகஜம்.. ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்பவான கலர்க்கலராக கனவுகள்.

மூச்சு மட்டும் இழையோட நமது சகல அவயவங்களும் உறக்கத்தில் அமைதி கொண்டிருக்க கனவுகள் எப்படி நம்மை ஆட்கொள்கின்றன என்பது அதிசயமான விஷயம்.

வாழ்க்கையில் நமக்கு ஆசைகளும் அபிலாஷைகளும் அதிகம். சொல்லப்போனால் சில இலட்சியங்கள் நிறைவேற அது பற்றி ஆசை ஆசையாகக் கனவு காணச் சொல்லியிருக்கிரார்கள், சில பெரியோர்கள்.

கனவுகளே இந்தக் கதையல்ல. ஆனால் கனவுகள் இந்தக் கதையை நடத்திச் செல்ல பின்புலத்தில் ஆதர்ச சக்தியாக செயல்படுகிரது.

இந்தக் கதையில் வரும் ரங்கண்ணாவும், ரகுவும், மாதவராவும், கனகசபையும் மறக்க முடியாதவர்கள். ஏன் ரகுவின் அம்மாவும் அவன் மனைவி வாஸந்தியும், இவனின் மனைவி ஜலஜாவும் கூடத் தான். கும்பகோண எழுத்தாளர் அமரர் எம்.வி. வெங்கட்ராமும் கூட நடுநடுவே நினைவு கொள்ளப்படுகிறார். ‘இவனின்’ நினைவுகளாகவே மொத்தக் கதையும் சொல்லப்படுவது கூட ஒரு புதுமை.

Languageதமிழ்
Release dateMay 18, 2017
ISBN6580118702079
Kanavil Nanaindha Ninaivugal

Read more from Jeevee

Related to Kanavil Nanaindha Ninaivugal

Related ebooks

Reviews for Kanavil Nanaindha Ninaivugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavil Nanaindha Ninaivugal - Jeevee

    http://www.pustaka.co.in

    கனவில் நனைந்த நினைவுகள்

    Kanavil Nanaintha Ninaivugal

    Author:

    ஜீவி

    Jeevee

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jeevee

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    முன்னுரை

    யாருக்கும் தூக்கத்தில் கனவுகள் வருவது சகஜம்... ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்பவான கலர்க்கலராக கனவுகள்.

    மூச்சு மட்டும் இழையோட நமது சகல அவயவங்களும் உறக்கத்தில் அமைதி கொண்டிருக்க கனவுகள் எப்படி நம்மை ஆட்கொள்கின்றன என்பது அதிசயமான விஷயம்.

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள். கனவுகளைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. கனவுகள் நம் நினைவுகளின் படிமங்கள் என்று கனவுகளைப் பற்றிப் பொதுவான முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

    வாழ்க்கையில் நமக்கு ஆசைகளும் அபிலாஷைகளும் அதிகம். சொல்லப்போனால் சில இலட்சியங்கள் நிறைவேற அது பற்றி ஆசை ஆசையாகக் கனவு காணச் சொல்லியிருக்கிரார்கள், சில பெரியோர்கள். கனவுகள் நனவு நடவடிக்கைகளாக தன் வீச்சைக் கொண்டு நாம் கனவு காணும் இலட்சியங்களுக்காக நம்மைச் செயல்பட வைக்கும் என்பது அந்தப் பெரியோர்களின் கனவு. தாமும் அவற்றையெல்லாம் பரிசோதித்துப் பார்த்து விட்டுத் தான் நமக்கும் அவற்றின் சக்தியை பரிந்துரைக்கிறார்கள் என்பது புரிகிறது.

    கனவுகளே இந்தக் கதையல்ல. ஆனால் கனவுகள் இந்தக் கதையை நடத்திச் செல்ல பின்புலத்தில் ஆதர்ச சக்தியாக செயல்படுகிரது.

    இந்தக் கதையில் வரும் ரங்கண்ணாவும், ரகுவும், மாதவராவும், கனகசபையும் மறக்க முடியாதவர்கள். ஏன் ரகுவின் அம்மாவும் அவன் மனைவி வாஸந்தியும், இவனின் மனைவி ஜலஜாவும் கூடத் தான். கும்பகோண எழுத்தாளர் அமரர் எம்.வி. வெங்கட்ராமும் கூட நடுநடுவே நினைவு கொள்ளப்படுகிறார்.

    ‘இவனின்’ நினைவுகளாகவே மொத்தக் கதையும் சொல்லப்படுவது கூட ஒரு புதுமை.

    எழுத்தின் விதவிதமான நல்ல முயற்சிகள் தமிழ் இலக்கிய உலகில் வெளிப்பட்டு தனக்கான பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்கிற ஆர்வத்தை இயல்பாகவே கொண்டுள்ள புஸ்தகா.காம் மென்புத்தகமாக உங்கல் கைகளில் இந்த நாவலைச் சேர்ப்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி.

    அரைத்த மாவையே அரைகாமல் மேல்நாடுகள் போல பத்திரிகைகளில் பிரசுரமாகாத கதைகள் நூல்களாக அச்சேறுவதும் வாசகர்களும் தளாரத ஊக்குவிப்பாக அவற்றை வாங்கி வாசிப்பதும் பல தளங்களில் தாம் வாசித்ததை பகிர்ந்து கொள்வதும் இன்றைய கால கட்ட புத்தக வாசிப்பில் ஒரு ஆரோக்கியமான போக்கு. அந்த வாசகர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

    அன்புடன்,

    ஜீவி

    கனவில் நனைந்த நினைவுகள்

    1

    கனவுகள் தற்செயலானவை அல்ல. கனவுகள் வருவதற்கும் காரணங்கள் உண்டு. அத்துடன் அவற்றிற்கு குறிக்கோளும், பயன்பாடும் ஏன் தீர்வுகளும் கூட உண்டு. எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தால் 'கனவுக் கல்வி' என்று ஒரு பாடதிட்டத்தின் அறிமுகமும் கூட நமக்குக் கிடைக்கும்.

    ------

    பட்டென்று அறுந்து விட்டது.

    தியேட்டரில் பாதிப்படம் பார்த்துக் கொண்டிருக்கையில், பிலிம் சுருள் அறுந்து விளக்குப் போட்ட மாதிரி இவன் உணர்ந்தான்.

    கனவென்ற உணர்வே இல்லாமல் காட்சி காட்சியாய். எத்தனை வருஷத்திற்கு முன்னால் நடந்தது?... நாற்பது வருஷம் இருக்குமா?... அதுக்கு மேலேயே. மனசில் வருஷக் கணக்குப் போட்டுப் பார்த்தால் நாற்பந்தைந்துக்கு மேலேயே இருக்கும் என்று அனுமானித்துக் கொண்டான்...

    நடந்தது தான். இப்பொழுது கனவாய் வந்தது. அத்தனையும் நடந்தது தான். நடந்தது நடந்தபடியே, மீண்டும் இன்னொரு தடவை அப்படியே நடந்த மாதிரி, எந்தவித சேர்க்கையும் தவிர்த்தலும் இன்றி கனவாய் வந்தது தான் ஆச்சரியமாய் இவனுக்கு இருந்தது... நடந்ததின் தொடர்ச்சியாய் என்ன நடந்தது என்று இவனுக்குத் தெரியாததும் கனவில் வந்திருக்கக் கூடாதா என்ற நப்பாசை ஒரு ஏக்கமாய் இவனுள் உருக்கொண்டது.

    கண்மூடி மறுபடியும் தூங்க முயற்சித்தால் துண்டித்த கனவு மீண்டும் துளிர்க்குமோ என்கிற ஆசையில் தூங்க முயன்றான். முடியவில்லை. விழிப்பு வந்தது வந்தது தான். திறந்திருந்த ஜன்னல் வழியே சூரியக் கதிர் ரொம்ப செளஜன்யமாய் உள்நுழைந்து தரையில் நீண்ட செவ்வகமாய் நிலைக்குத்தியிருந்தது. இவன் கொஞ்ச நேரம் அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு சடடென்று எழுந்திருந்தான்.

    பல் விளக்குகையிலும் கண்ட கனவின் சுழல் இவனுள் தொடர்ந்தது. நடந்தது தான் என்றாலும், அந்தப் பூனை பாய்ந்து குறுக்கே போனது கூட தெளிவாக, காட்சிப் பிழையாகாமல் எவ்வளவு தீர்க்கமாக கனவில் வந்திருக்கிறது என்று பிரமிப்புடன் நினைத்துக் கொண்டான்.

    என்றைக்கோ நடந்தது டேப் பதிவு மாதிரி மூளை செல்களில் பதிந்து போய்விட்டதோ என்று திகைத்தான். அப்படிப் படிந்தது தான் என்றால் இன்னொரு தடவை இன்னொரு கனவில் இன்னொரு நாள் மறுபடியும் இதன் தொடர்ச்சி வந்தாலும் நல்லது என்கிற ஆசை திடுதிப்பென்று இவனுக்கு வந்தது. அப்படி இன்னொரு தடவை இந்தக் கனவின் நீட்சியே கனவாய் வந்தால் இப்போதைக்குத் தெரிந்ததுக்கு மேல் என்ன நடந்தது என்று தெரியாததெல்லாம் தெரிய வாய்ப்பு கிடைக்குமே என்று இவன் நினைப்பு போயிற்று. உண்மையில், அது தான் அதற்குத் தொடர்ச்சியாய் நடந்தது என்று இல்லாவிட்டாலும், கனவு தன் இஷ்டப்படி நடந்ததற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து முடித்து வைக்குமே என்கிற நினைவில் அதைத் தெரிந்து கொள்ள இவன் மனசு குறுகுறுத்தது. அப்படி முடித்து வைக்காவிட்டாலும், வேறொன்றுக்குத் தாவி முடிவில்லாமல் நீண்டால் அதைத் தொட்டு ஏதாவது தெரிந்து கொள்ளலாமே என்ற யோசனை அசட்டுத்தனமாய் இவனுக்கு வந்தது. எப்படியோ அதற்குப் பிறகு நடந்ததாகப் பிறர் மூலம் கேள்விப்பட்டதில், உண்மையிலேயே அப்படி நடந்ததா என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற பரிதவிப்பு இவனுள் படர்ந்தது. கனவில் கூட அதைத் தெரிந்து கொள்கிற வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே என்று சுயபரிதாபம் கொண்டான்... இன்னொரு தடவை இதே கனவு வந்து இதற்கு மேல் நீள்கிறதா என்று பார்க்கலாம் என்று நினைத்தவுடனேயே அப்படி நீள வேண்டும் என்று மனசு ஏங்குவதால் தான் இப்படியெல்லாம் யோசனை போகிறது என்றும் இவன் நினைத்துக் கொண்டான்.

    எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாடி நடந்தது; சொல்லப்போனால் இவனே கூட அதையெல்லாம் மறந்து போயிருந்தான். இன்றைக்கு திடுதிப்பென்று அதெல்லாம் காட்சி காட்சியாய் கனவாய் வந்து பழைய நினைவுகளில் இவன் மனசைப் புரட்டி எடுத்து விட்டது. அன்று நடந்தையெல்லாம் நினைத்து பேதலித்து இவன் மனசு மருகியது. . 'ஏன் அன்று அப்படிச் செய்தேன்?... ஒரு வேகம். உண்மையின் சார்பாக இருக்க வேண்டும் என்கிற உணர்வின் வேகம்' என்று ஆழமாக இவன் நினைத்துப் பார்த்துக் கொண்ட போது, காலம் தான் உருண்டோடியிருக்கிறதே தவிர, எத்தனையோ அனுபவங்களுக்குப் பிறகும் இன்றைக்கும் அதே வேகம் இத்தனை வயதாயும் அழிந்து போய் விடாமல் தன்னிடம் அப்படியே இருப்பதாக உணர்ந்தான்...

     கோயில் திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து ஒரு வாரத்திற்கு நிறைய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. கும்பாபிஷேகத்திற்கு அடுத்த நாள் மாலை பொழுது சாய்ந்ததும் இசைக் கச்சேரி. கோயில் பிரகார மதில் சுவர் தாண்டி வெளிப்பக்கம் பெரிய பந்தல் போட்டு, கச்சேரிக்கு மேடை அமைத்திருந்தார்கள். பாடப் போவது பிரபல சங்கீத

    Enjoying the preview?
    Page 1 of 1