Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unarvu Pookkal
Unarvu Pookkal
Unarvu Pookkal
Ebook171 pages58 minutes

Unarvu Pookkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கார்முகில் மழையை கருத்தாங்கி கலைந்து செல்வது போல வாழ்க்கையில் கண்ட காட்சிகளும், இதயத்தை மெல்ல வருடிய உணர்வுகளும் தோன்றி மறைந்தபோது வந்து பிறந்த சிறுகதை பூக்கள் இவை.

இக்கதைகளை சுவாசித்த சிலரது பார்வை உணர்வியல் குவியலுக்குள் என்னை அசைப் போட்டு பார்த்ததை உணர்ந்தேன். சமூகத்தில் நான் பார்த்துப் பழகிய நட்பு வட்டங்களின் வாழ்வில் நடந்த எதார்த்த நிகழ்வுகளும், எனது மன உணர்வுகளுக்கு உந்து சக்தியை ஏற்படுத்திய கதாபாத்திர படைப்புகளையுமே இச்சிறுகதை தொகுப்பு மாலையில் சரமாகத் தொடுத்துள்ளேன்.

Languageதமிழ்
Release dateJul 16, 2022
ISBN6580153608301
Unarvu Pookkal

Read more from Kavitha Albert

Related to Unarvu Pookkal

Related ebooks

Reviews for Unarvu Pookkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unarvu Pookkal - Kavitha Albert

    http://www.pustaka.co.in

    உணர்வுப் பூக்கள்

    சிறுகதைகள்

    Unarvu Pookkal

    Sirukadhaigal

    Author :

    கவிதா ஆல்பர்ட்

    Kavitha Albert

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavitha-albert

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. இசையோடு இதயம்

    2. கனவுப் பறவைகள்

    3. புலி பூனையானது

    4. இன்னொரு மறத்தாய்

    5. என் கண்களை நானே…

    6. காகிதப் பூ

    7. ஒரு நாள் வாடகை

    8. உயிரின் விலை

    9. பூவையின் நெஞ்சம்

    10. கண்களில் கனல் ஏந்தி

    11. தாய்மையின் பூரிப்பு

    12. உணவே உயிரின் எமன்

    13. இசை பாடும் இனியன்

    14. நிழல் வேறு நிஜம் வேறு

    15. மாறியது நெஞ்சம்

    16. கனவுப் பறவை

    17. வானவில்

    18. புயலுக்குப் பின் அமைதி

    19. ஓர் இரவின் வெளிச்சம்

    20. உறவின் ஸ்பரிசம்

    21. எண்ணத்தின் பரிசு

    22. இன்னொரு ஆயுள் தண்டனை

    23. பூவின் நெஞ்சம்

    24. வேப்பமரம்

    25. விட்டில் பூச்சி

    என்னுரை

    எனது பேனா படைப்புகளை பிரசவிக்க ஆரம்பித்த ஆரம்பக் கால நாட்கள் முதல் பல்வேறு வார, மாத, தின இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட படைப்புகள்தான் உணர்வுப் பூக்கள் சிறுகதை தொகுப்பு. சில பரிசுகளையும், சில பாராட்டுக்களையும், சில விமர்சனங்களையும் பெற்றவை. அவை சிகரம் தொட்டவை என்று சொல்லும் அளவுக்கு மிக உயர்ந்தவை அல்ல, உங்கள் உள்ளங்களை தொடும் அளவிற்கு உணர்ச்சி வாய்ந்தவை.

    கார்முகில் மழையை கருத்தாங்கி கலைந்து செல்வது போல வாழ்க்கையில் கண்ட காட்சிகளும், இதயத்தை மெல்ல வருடிய உணர்வுகளும் தோன்றி மறைந்தபோது வந்து பிறந்த சிறுகதை பூக்கள் இவை.

    பூக்கள் தன்மையாலும், தரத்தாலும், வண்ணங்களாலும், வாசனையாலும் வேறுபடுவதுபோல ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொருவிதமான தோற்ற மாற்றங்கள் நிகழ்வது உண்டு.

    இக்கதைகளை சுவாசித்த சிலரது பார்வை உணர்வியல் குவியலுக்குள் என்னை அசைப் போட்டு பார்த்ததை உணர்ந்தேன். சமூகத்தில் நான் பார்த்துப் பழகிய நட்பு வட்டங்களின் வாழ்வில் நடந்த எதார்த்த நிகழ்வுகளும், எனது மன உணர்வுகளுக்கு உந்து சக்தியை ஏற்படுத்திய கதாபாத்திர படைப்புகளையுமே இச்சிறுகதை தொகுப்பு மாலையில் சரமாகத் தொடுத்துள்ளேன்.

    படைப்பாளி அத்தனைக்கும் கற்பனை வடிவம் கொடுப்பதில்லை. தன் கண்களால் கண்ட உண்மை பாத்திரங்கள் உள்ளங்களை உரசும்போது அதிர்வுக்குள்ளாகும் மனம் கற்பனையால் வர்ணம் பூசி வடிவம் கொடுக்கிறது.

    கதையின் மாந்தர்களை நல்லது கெட்டது என்று பார்ப்பதற்கு பதிலாக எனக்குப் பிடித்த பெயர்களை பாத்திரங்களின் பெயராகப் பதிந்தேன். அதையும் சிலர் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதையும் உனார்ந்தேன்.

    ஆழமான விமர்சனங்களை படித்தபோது எனக்கு ஆத்திரம் வரவில்லை. மாறாக, இந்த அளவுக்கு என் படைப்புகளில் வாசம் செய்து வாழ்ந்திருக்கிறார்களே. என்று எண்ணும்போது அவர்கள் மீது நல்ல மதிப்பீடும், நன்றி சொல்லும் ஆவலும் உருவாகிறது.

    முன் பதிப்பில் விமர்சித்த நல்ல உள்ளங்கள் மீண்டும் இந்நூலை வாசிக்க நேர்ந்தால், அவர்கள் தூய நல்உள்ளங்களுக்கு நன்றி மலர்கள்.

    மரத்தின் பயனை சிறு வயது முதலே பார்த்து, இரசித்து பரவசமடைந்த நான் என் அருமை தாத்தாவோடு பல நாட்கள் மர நிழலில் அமர்ந்து உறவாடிய அந்த நாட்களில் தூய்மையான பிராண வாயுவை சுவாசித்ததை இன்று நான் எண்ணிப் பார்க்கிறேன்.

    இன்று எங்கு தேடினாலும் தூய்மையான காற்று கிடைக்குமா என்றால், சந்தேகம்தான். அந்த அளவுக்கு காற்று மண்டலத்தை மாசுக்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. மீண்டும் காற்று மண்டலம் தூய்மை அடைய வேண்டும். ஒவ்வொரு மனிதருக்கும் மரத்தின் பயன் உணரப்பட்டு அதன்மீது பற்று வர வேண்டும். அப்துல் கலாம் கூறியது போல மரக்கன்றுகளுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    இப்படியெல்லாம் சிந்தித்ததின் பயனாக பிறந்ததுதான் வேப்பமரம் சிறுகதை. ஒழுக்கத்தை வலியுறுத்தும் ஒரு கதை. நம்பிக்கைத் துரோகம் செய்யக்கூடாது என்பதற்கு உதவும் ஒரு கதை. இப்படி சமூகத்தின் நலனை நாடிப் பிறந்த படைப்புகளின் தொகுப்பே இந்நூல்.

    இந்நூல் உலகம் முழுவதும் உன்னதமான இரசிகர்களை பெற்று தந்தது. உணர்வு பூக்களின் பாத்திர படைப்புகளில் நிச்சயமாக நீங்களும் ஒருவராக இருக்கலாம். பாத்திரம் உங்கள் பாதையை மாற்றினால் நூலுக்குப் பெருமை. பாத்திரம் உங்கள் பார்வையை மாற்றினால், அதுவே இனிவரும் சிறுகதை நூலுக்கு அடித்தளமாகும்.

    அஞ்சலை அனுப்பி பதிலுக்காக காத்திருக்கும் அஞ்சலையின் மனநிலையோடு இந்நூல் தொகுப்பினை உங்கள் நடுவே அனுப்பி வைப்பதில் மகிழ்கிறேன். பாத்திரம் உங்கள் உணர்வுப் பூக்களை வருடியோ, வருத்தியோ இருந்தால், உங்கள் எண்ணங்களை வண்ணமான விமர்சனப் பூக்களாக்குங்கள்.

    அன்புடன்,

    கவிதா ஆல்பர்ட் M.A.

    ###

    1. இசையோடு இதயம்

    ஆ… அம்மா… ஆ… அம்மா என்ற முனகல் சத்தம், நேரம் செல்லச் செல்ல கதறலாக வெளிப்படத் துவங்கியது.

    கயிற்றில் கட்டப்பட்டிருந்த குட்டி நாயொன்று பசியால் கத்திக்கொண்டே இருந்தது.

    சௌமி தாயில்லாப்பிள்ளை, தகப்பனாரின் அரவணைப்பில் வளர்ந்தவள். சிறு வயது முதலே அவள் இசை மீது அதிக மயக்கம் கொண்டிருந்தாள்.

    அந்த மயக்கம்தான் இன்று அவள் வயிற்றில் ஒரு கருவை சுமக்க காரணமாக அமைந்தது.

    இசை மீது கொண்டிருந்த மயக்கத்தால்தான், அவள் இன்னிசை பாடும் இளவல் ஜீவா மீது காதல்கொள்ள காரணமாக அமைந்தது.

    அந்த காதலின் பரிசைத்தான் அவள் கருவில் சுமந்து கொண்டிருந்தாள்.

    மணமாலை சூடும் முன்னே காதல் பரிசை சுமந்தபோதுதான், நிலவரம் அறியாமல் அவளிடம் ஊடல் கொண்டு விடுகிறான்.

    இந்நிலையில், ஜீவாவுக்கு திரைப்படத்தில் பாட அழைப்பு வரவே சென்னைக்கு சென்று விட்டார். நிலவு போல் வளர்ந்த வயிற்றை மறைக்க முடியாத நிலை வந்த போதுதான், அவள் தனது தவறுக்கு வருந்தினாள்.

    அவள் கர்ப்பத்தை கலைத்துவிடுமாறு அவளது தந்தையார் அவளை வற்புறுத்தியும் கேட்காமல் மறுத்துவிட்டாள். அதனால், அவளது தந்தையார் மகளின் வாழ்க்கை விதி விட்டப்படி அமையட்டும் என்று கண்ணீரோடு அவளை நூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தன் தமக்கை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

    சௌமியின் அத்தை ஒரு விதவை. அவர் ஓர் அரசாங்க பள்ளிக்கூடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அன்று பள்ளிக்கூட வேலை நாள் என்பதால், அவர் பள்ளிக்கூடத்துக்குச் சென்றுவிட்டார். சௌமி மட்டுமே தனிமையாக இருந்தாள்.

    அப்போது அவளுக்கு பிரசவ வலி எடுத்தது. அக்கம் பக்கத்தில் கூட வீடுகள் இல்லை. அதனால், அவள் யாரையும் உதவிக்கு அழைக்கவும் முடியாமல், வலியையும் தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தாள்.

    நேரம் ஆக ஆக நாய்க்குட்டி ஒன்று பசி அதிகரிக்க அதுவும் வேகமாக கத்திக் கொண்டிருந்தது.

    அந்த வலியிலும் அவளது இதயம் கடந்த கால நினைனவுகளை அசை போட்டது.

    மதுவை அமுதத்தில் குழைத்தது போன்ற அவனது இனிமையான குரல், அவளது இதயத்தை வருடுவது போல மேனி சிலிர்த்த அவள், வலியை மறந்தாள்.

    என்ன அதிசயம்… எங்கோ ஒரு குயிலின் இனிய கானம் அவளது காதுகளில் வந்து தேன் பாய்ச்சியது.

    அதனைத் தொடர்ந்து வந்த ஹம்மிங்… கேட்டு காதுகளை கூர்மையாக்கினாள். ஏற்கெனவே, பலமுறை நெஞ்சத்துக்கு நெருக்கமாக இந்த ஹம்மிங்கை கேட்டு ரசித்தவளாயிற்றே. அந்தக் குரலை ஸ்பரிசித்தபோது, அவள் அந்தக் குரலோடு ஜீவ சமாதி நிலையை அடைந்து விட்டதுபோல உணர்ந்தாள்.

    ஆம்… இது ஜீவாவின் குரல்தான். இது எப்படி? அவன் இந்தப் பாடலை திரைபடத்திற்காக பாடியிருக்க வேண்டும். அதை ஏதோ ஒரு வானொலி ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறது என்று எண்ணிக் கொண்டாள்.

    பொன் வண்டு இசை மீட்டுது

    ரோஜாவைத் தாலாட்டுது

    வருடிய வார்த்தைகளில் அவள் வசமானபோது, காக்கை ஒன்றின் வாயிலிருந்த இறைச்சித் துண்டு ஒன்று நாய்க்குட்டி அருகே விழுந்தது. அது கத்துவதை நிறுத்திக்கொண்டு பசியாறிக் கொண்டிருந்தது.

    அவன் குரல் கேட்டு இரசிக்கும் ஜீவித லயனத்தில் எனது வாழ்க்கையை இணைத்துக்கொண்டு இனி நான் வாழ்ந்துவிடுவேன், என்று வலியை மறந்து அவள் சுக நினைவுகளில் கண்களை

    Enjoying the preview?
    Page 1 of 1