Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Perumaganaar Saviripillai
Perumaganaar Saviripillai
Perumaganaar Saviripillai
Ebook250 pages58 minutes

Perumaganaar Saviripillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த நினைவுக் காவியத்தை நாங்கள் வெளியிடுவதன் நோக்கம் ‘சவிரிப்பிள்ளை மாஸ்ரர்’ எங்கள் தந்தை என்பதற்காக மட்டுமல்ல; எனது தந்தை, தனது வாழ்நாளில், தன்னை எதிர்கொண்டு வந்த சவால்களை, எவ்வாறு வெற்றிகொண்டு, தனது குடும்பத்துக்கும், தனது சமூகத்துக்கும், தனது இனத்துக்கும் தன்னை அர்ப்பணித்து, ஈற்றில், “தந்தையே என்னை மன்னியும், நான் ஆயத்தம்” என்ற வார்த்தைகளோடு தன்னை படைத்து, பராமரித்த பேரிறையின் பதத்தில் சரணடைந்தார் என்பதை உலகம் அறிய வேண்டும். குறிப்பாக எமது தமிழினம் அறிய வேண்டும். இன்னும் விசேடமாக, எமது இனத்தின் விடிவை அவர் எவ்வாறு நோக்கினார், அதற்காக எவ்வாறான பங்களிப்புகளைச் செய்தார் போன்ற விடயங்களையும் வெளிக்கொணர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துக்காகவே இந்த நினைவுக் காவியத்தைத் தொகுக்க முடிவு செய்தேன்.

Languageதமிழ்
Release dateMar 30, 2024
ISBN6580153610924
Perumaganaar Saviripillai

Read more from Kavitha Albert

Related to Perumaganaar Saviripillai

Related ebooks

Reviews for Perumaganaar Saviripillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Perumaganaar Saviripillai - Kavitha Albert

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பெருமகனார் சவிரிப்பிள்ளை

    Perumaganaar Saviripillai

    Author:

    கவிதா ஆல்பர்ட்

    Kavitha Albert

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavitha-albert

    பொருளடக்கம்

    தொகுப்புரை

    பதிப்புரை

    இறை இரக்கத்துக்கு இறைஞ்சுதல்

    இறையாசிக்கு இறைஞ்சுதல்

    இன்னிசைக் கீதம்

    ஓர் இனம் வாழாமல் ஒரு மொழி வாழாது

    கயித்தானு மாமுனிக்குப் பாவாரம்

    In Appreciation of a Teacher who Loved his Land and People

    தமிழ் மக்களின் தேசிய விடுதலை என்ற தாகம் கொண்டவர்

    கயித்தானு முனீந்திரன் பேரில் தேவாரம்

    ஆண்டவரின் அருட்செயல்களால் நிறைந்த அப்பாவின் வாழ்க்கை

    எனது கணவரின் நினைவலைகள்

    பூரணத்துவம் அடைந்த ஒரு மனிதர்

    ஈழ விடுதலையை போற்றிப் பாடிய பெருந்தகை

    அநாதையெனை அரவணைத்துக் காத்த என் தெய்வத்தின் திருவடிக்கு என்னுள்ளம் எந்நாளும் நன்றி சொல்லும்

    இனமான உணர்வுமிக்க மனிதம் மாரீசன்

    காலத்தின் பெருந்தலைவன்

    நினைவுகூரல்

    தியாக வேங்கை தனேந்திரன்

    தனேந்திரன் தியாக பூமி

    தாய்மண் தின்ற வீர வேங்கை தனேந்திரன்

    பயிற்சிக் கலாசாலையில் முகிழ்த்த நட்பு

    எழுத்தே தவமாக

    சவிரிப்பிள்ளை மாமா

    கலையாற்றல் உங்கள் குருதியில் கலந்த திறமை

    பேரிறையின் இரக்கத்துக்கு வேண்டுதல்

    வணக்கம் குருவே

    தமிழீழம் படைத்துவிட்டால் பொங்கல் பொங்கும்

    சோளகம் பெயர்ந்துவிட்டால்

    இன்ப நினைவுகள்

    யார் இந்த மாவீரர்

    தமிழின ஒருமைப்பாட்டை விரும்பியவர் சவிரிப்பிள்ளை

    எனது அம்மானும் யாழ்ப்பாணத் தண்ணீர் தட்டுப்பாடும்

    சவிரிப்பிள்ளை மாஸ்ரர்

    அமரர் ஆசீர்வாதம் சவிரிப்பிள்ளை

    காலத்தால் அழியாத கவிஞனுக்கு கண்ணீர்த் துளிகளினால் கவிதை

    இதயமே நம்ப மறுக்கின்றதே

    நீங்காத நினைவுகளுடன்

    காலத்தால் அழியாத என் அப்பாவின் நினைவுகள்

    எங்கள் அப்பா

    அன்புள்ள அப்பா

    அப்பாவினுடைய வாழ்வு ஒரு மகத்துவமான சாதனை

    எங்களின் வழிகாட்டியும் எங்களின் பெருமையும்

    ஒலிவியாவின் அப்பப்பா!

    90வது பிறந்த நாள் வாழ்த்து

    அன்புள்ள அம்மப்பா

    90வது பிறந்த நாள் பாடல்

    Ammappa is always such a bright light in all our Lives

    Appappa always showed everyone his love and support

    Ammappa always want to do something meaningful with his time

    எங்கள் அன்பு அப்பாவின் 91 ஆவது பிறந்த நாள் வாழ்த்துப்பா

    கற்றுக்கொடுத்த அனைத்தையும் நினைக்கிறேன்

    இசை எங்கள் இருவரையும் இணைக்கிறது

    ஒன்றிணைந்து உரிமைகளை வென்றெடுப்போம்

    நினைவுச் சாரல்கள்

    நன்றி மலர்கள்

    அமரத்துவம் அடைந்துவிட்ட எனது அப்பா ஆசீர்வாதம் சவிரிப்பிள்ளை அவர்களுக்கு, ‘பெருமகனார்’ என்ற அடைமொழியைத் தந்தவர் கனடாவிலிருந்து வெளிவருகின்ற உலகத்தமிழர் பத்திரிகையின் ஆசிரியர் திரு. கமல் நவரட்ணம் அவர்கள். ஒரு கவிஞனாக, கட்டுரையாளனாக எனது அப்பா மாரீசன் உலகத்தமிழர் பத்திரிகைக்கு வழங்கிய பங்களிப்பை மேன்மைப்படுத்தி, இந்த அடைமொழியை அப்பாவுக்கு அவர் வழங்கியிருந்தார். கமல் அவர்கள் தந்த இந்த அடைமொழியே அந்த நினைவுக்காவியம் கருக்கொள்ள காரணமாக அமைந்தது. அந்த வகையில் எனது தந்தைக்கு இவ்வாறான உயர் மதிப்பைத் தந்த திரு கமல் அவர்களுக்கு எனது ஆழமான நன்றியைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    இந்த நூலின் உருவாக்கத்துக்கு மிகவும் கடுமையாக உழைத்தவர், தமிழகத்தைச் சேர்ந்த ஆற்றல்மிக்க எழுத்தாளர் கவிதா ஆல்பர்ட் அவர்கள். எழுத்துத் துறையில் அவர் கொண்டிருக்கும் சிறப்பான அநுபவம் இந்த நினைவுக்காவியத்தை தொகுக்க எனக்குப் பெரிதும் உதவியிருக்கிறது. கவிதா ஆல்பர்ட் அவர்களுக்கு விசேட நன்றிகள்.

    இந்த நூலுக்கான வடிவமைப்புக்காக தனது தூக்கத்தையும் தியாகம் செய்து பங்களிப்புச் செய்த திரு ஆரோக்கிய ராஜ் அவர்களுக்கும், அட்டைப்படத்தை மிகவும் அழகாகவும், தரமாகவும் ஆக்கித் தந்த அருள் அவர்களுக்கும், இந்த நினைவுக்காவியத்தை மிகவும் கவர்ச்சிகரமான வகையில் அச்சாக்கம் செய்து தந்த ரவி பிரின்டர்சுக்கும் எனது நன்றிகள்.

    ஈற்றில் இந்த நினைவுக்காவியத்துக்கான ஆக்கங்களை மிகவும் குறுகிய கால அவகாசத்தில் தந்துதவிய அருட்தந்தையர்கள், ஆர்வலர்கள், நண்பர்கள், உறவினர்களுக்கும் இந்நினைவுக்காவியத்தை வெளிக்கொணர எனக்குத் துணைநின்ற அம்மா, சகோதரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்.

    மணக்கும் நன்றி மலர்களால்,

    ச. எ. றெஜினோல்ட் அ.ம.தி.

    தொகுப்புரை

    தொலைநோக்குப் பார்வை

    உடையவர் என் அப்பா

    ‘சவிரிப்பிள்ளை மாஸ்ரர்’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட எனது தந்தை, ஆசீர்வாதம் சவிரிப்பிள்ளை, இறையடி இணைந்து ஓராண்டு (23.03.2023), நிறைவு பெறுகின்றது. இந்த ஓராண்டு நிறைவில், அவரது நினைவுகளைத் தொகுக்க வேண்டும் என்ற ஆசை அவரது மூத்த மகன் என்ற வகையில், என் உள்ளத்தில் உதித்தது. இந்த ஓராண்டு நினைவுக் காவியத்தின் ஊடாக, அவரது வரலாற்றையும், அவரது பன்முக ஆளுமையையும் அவரை நினைவுகூர்பவர்களின் வார்த்தைகள் மூலமாக வெளிக்கொணர வேண்டும் என்று எண்ணினேன்.

    இந்த நினைவுக் காவியத்தை நாங்கள் வெளியிடுவதன் நோக்கம் ‘சவிரிப்பிள்ளை மாஸ்ரர்’ எங்கள் தந்தை என்பதற்காக மட்டுமல்ல; எனது தந்தை, தனது வாழ்நாளில், தன்னை எதிர்கொண்டு வந்த சவால்களை, எவ்வாறு வெற்றிகொண்டு, தனது குடும்பத்துக்கும், தனது சமூகத்துக்கும், தனது இனத்துக்கும் தன்னை அர்ப்பணித்து, ஈற்றில், தந்தையே என்னை மன்னியும், நான் ஆயத்தம் என்ற வார்த்தைகளோடு தன்னை படைத்து, பராமரித்த பேரிறையின் பதத்தில் சரணடைந்தார் என்பதை உலகம் அறிய வேண்டும். குறிப்பாக எமது தமிழினம் அறிய வேண்டும். இன்னும் விசேடமாக, எமது இனத்தின் விடிவை அவர் எவ்வாறு நோக்கினார், அதற்காக எவ்வாறான பங்களிப்புகளைச் செய்தார் போன்ற விடயங்களையும் வெளிக்கொணர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துக்காகவே இந்த நினைவுக் காவியத்தைத் தொகுக்க முடிவு செய்தேன்.

    யாழ் மாவட்டத்தில், இளவாலைக்கும், மாதகலுக்கும் இடையே அமைந்திருக்கின்ற மாரீசன்கூடல் என்ற கிராமத்தில் 21.03.1932 அன்று பிறந்த எனது தந்தையின் பெற்றோர், மிக்கேல் ஆசீர்வாதம், ஆசீர்வாதம் எலிசபேத் என்பவர்களாவர். தனது மூன்று வயது வரை அப்பா, தனது தாய், தந்தையுடனும், தனது நான்கு சகோதரிகளுடனும் (அன்னப்பிள்ளை, மேரிப்பிள்ளை, ஆச்சிப்பிள்ளை, பாக்கியம்) எவ்வித குறையுமின்றி வளர்ந்தார். ஆனால் அவரது மூன்றாவது வயதில், அவரது தாயார் எலிசபேத் நோய் காரணமாக திடீரென இறந்துவிட்டார்.

    இவ்வாறான ஓர் இக்கட்டான சூழலில், அப்பாவின் மூத்த சகோதரி மேரிப்பிள்ளை அவரை மிகவும் அன்பாக ஆதரித்து வந்தார்.

    1942 ஆம் ஆண்டில் திருமணம் முடித்த அந்தச் சகோதரி, பின்னர் குழந்தைப் பேற்றின்போது, திடீரென இறந்துவிட்டார். அப்பாவின் தாயார் இறந்தபின்பு அந்த வெற்றிடத்தை மேரிப்பிள்ளை என்ற அந்தச் சகோதரி நிரப்பியிருந்தார். இதனால் அப்பாவின் தந்தை ஆசீர்வாதம் மிகவும் ஆறுதல் அடைந்திருந்தார். ஆனால் எதிர்பாராத சூழலில், அப்பாவின் முத்த சகோதரி இறந்தபோது, எனது அப்பப்பா, ஆசீர்வாதம் அவர்கள் நொறுங்கியே போய்விட்டார். இந்த இழப்பின் காரணமாக, ஆழ்ந்த கவலையுற்றிருந்த எனது அப்பப்பாவும் நோயுற்று ஓராண்டில் இறையடி சேர்ந்தார்.

    இப்படி மூன்று வயதில் தன்னை அன்பாகப் பராமரித்து வந்த தாயாரை இழந்து, தாயாரின் இறப்புக்குப் பின்னர், அந்த வெற்றிடத்தை நிரப்பி வந்த தனது மூத்த சகோதரியை தனது பத்தாவது வயதில் இழந்து, தன்னை அன்போடும், கண்டிப்போடும் வளர்த்து வந்த தந்தையாரையும் இழந்து கலங்கி நின்றார் எனது தந்தை.

    எனது அப்பப்பா ஆசீர்வாதம் நன்கு கற்றவர். இளமைக் காலத்தில், மாதகல், லோப்பருடைய அச்சுக்கூடத்தில் வேலை செய்தவர். தனது ஊரிலுள்ள ஆலயத்தைப் பராமரித்து வந்தவர். அருட்தந்தையர்களின் மரியாதையைப் பெற்றவர். இவ்வாறான ஒரு பின்புலத்தில், அப்போது இளவாலைப் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை ஷேம்ஸ் அடிகளார், அப்பாவுக்கு உதவ முன்வந்தார். அருட்தந்தை ஷேம்ஸ் அ.ம.தி அவர்களின் உதவியுடன் 1943 ஆம் ஆண்டில், கொழும்புத்துறை புனித சூசையப்பர் விடுதியில் அப்பா சேர்க்கப்பட்டார்.

    கொழும்புத்துறையில் விடுதி வாழ்க்கை அப்பாவுக்கு முற்றும் ஒரு புது அனுபவமாக அமைந்தது. பெற்றோரை இழந்து வாடிய எனது தந்தையாரை, இன்முகத்துடன் வரவேற்றார்கள், அந்த விடுதியை நிர்வகித்து வந்த அமலமரித் தியாகிகள் துறவற சபையைச் சார்ந்த அருட்பணியாளர்கள். விடுதியில் இருந்து கொண்டு, கொழும்புத்துறை சாதனா பாடசாலையில் அப்பா ஏழாம் வகுப்பிலிருந்து தனது கல்வியைத் தொடர்ந்தார். மிகவும் விவேகமான ஒரு மாணவனாக அப்பா இருந்த காரணத்தினால், ஆசிரியர்கள் உட்பட எல்லோரது அன்பும், அரவணைப்பும் அப்பாவுக்குக் கிட்டியது.

    மிகவும் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்த எனது அப்பப்பா, ஆசீர்வாதம் எட்டு வயதிலேயே அப்பாவை இளவாலை இரட்ணையா மாஸ்ரரிடம் அனுப்பி, பூசைப் பரிசாரகருக்குரிய இலத்தீன் செபங்களை கற்க வைத்தார். இதனால் கொழும்புத்துறை விடுதிக்குச் சென்றபோது, அப்பாவால் இலகுவாகப் பூசைப்பரிசாரகர் பணியை ஆற்ற முடிந்தது.

    விடுதியைப் பராமரித்த அருட்தந்தையர்களில் ஒருவரான அருட்தந்தை ஞீ.ழி. குரூஸ் அடிகளார், விடியற்காலையில் தூங்கிக் கொண்டிருக்கும் அப்பாவின் பெருவிரலை நுள்ளி, அவரை எழுப்ப, அப்பாவும் உடனே எழுந்து, தனது காலைக்கடன்களை நிறைவு செய்தபின், கொழும்புத்துறை புனித சூசையப்பர் மூதாளர் இல்லம் சென்று, அங்கே ஞீ.ழி. குரூஸ் அடிகளாருக்கு திருப்பலியில் பூசைப் பரிசாரகராகப் பணி செய்து வந்தார். வசதி குறைந்த குடும்பத்தில் இருந்து வந்த மாணவர்களையும், வசதி படைத்த குடும்பங்களிலிருந்து வந்த மாணவர்களையும், லி.கி. சிங்கராயர், ஞீ.ழி. குரூஸ் ஆகிய அருட்தந்தையர்கள், சமமாக நடத்தியது அப்பாவை நன்கு கவர்ந்தது மட்டுமல்லாமல் அது அவரது உள்ளத்திலும் ஆழப்பதிந்தது.

    1943 ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம், 1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை, கொழும்புத்துறையில்

    Enjoying the preview?
    Page 1 of 1