Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mutham Yaarudaiyathu?
Mutham Yaarudaiyathu?
Mutham Yaarudaiyathu?
Ebook158 pages1 hour

Mutham Yaarudaiyathu?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வணக்கம் நண்பர்களே, முத்தம் யாருடையது? ஆறு சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பாகும். வெவ்வேறு கால கட்டத்தில் காதல், குடும்பம், குற்றம், பாசம், வருந்துகின்றன மனம், நட்பு என அனைத்தையும் உள்ளடக்கிய விறுவிறுப்பான சிறுகதை தொகுப்பு. படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateAug 8, 2022
ISBN6580156908583
Mutham Yaarudaiyathu?

Read more from Kavignar. J. Tharvendhan

Related to Mutham Yaarudaiyathu?

Related ebooks

Reviews for Mutham Yaarudaiyathu?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mutham Yaarudaiyathu? - Kavignar. J. Tharvendhan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    முத்தம் யாருடையது?

    சிறுகதைகள்

    Mutham Yaarudaiyathu?

    Sirukadhaigal

    Author:

    கவிஞர் ஜெ. தார்வேந்தன்

    Kavignar. J. Tharvendhan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavignar-j-tharvendhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. முத்தம் யாருடையது?

    2. கொலுசு பூக்கள்

    3. ரைஃப்பில்

    4. நினைவில் மறந்த காதலி

    5. ஆத்தாக்கிழவி

    6. ஆர்கானிக் அண்ணாச்சி

    முன்னுரை

    வணக்கம் நண்பர்களே, முத்தம் யாருடையது? ஆறு சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பாகும். வெவ்வேறு கால கட்டத்தில் காதல், குடும்பம், குற்றம், பாசம், வருந்துகின்றன மனம், நட்பு என அனைத்தையும் உள்ளடக்கிய விறுவிறுப்பான சிறுகதை தொகுப்பு. படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

    1. முத்தம் யாருடையது?

    2. கொலுசு பூக்கள்

    3. ரைஃப்பில்

    4. நினைவில் மறந்த காதலி

    5. ஆத்தாக்கிழவி

    6. ஆர்கானிக் அண்ணாச்சி

    1. முத்தம் யாருடையது?

    அவளும் நானும் காதலிக்க ஆரம்பித்து ஒரு வருசமாச்சி. ஆனா இதுவரை மூணு முறைதான் சந்திச்சிருக்கோம். அதல ஒரு முறை காதல சொல்ல. ஒரு முறை அவ கல்லூரிக்கு போகும் போது மெய்ஞான மளிகை கடையான்ட அவள பாத்து விசிலடிச்சிப்புட்டேன் அத கண்டிக்க. அதோடு அவ சினேகிதியின் பரிட்சைக்கு பீஸ் கட்ட கடனா ஐந்நூறு வாங்கனு மூனு முறை. அந்த கடனையும் அவ சினேகிதி அந்த ஒன்ற கண்ணித்தான் எடுத்தாந்து கொடுத்தா.

    காதலென்றால் காமம் எண்ணும் இந்த காலத்தில். ஆதிகாலத்து அரை சாமத்து ஒழுக்க காதலுனு நெனச்சிட்டா போல சீம சிறுக்கி. பார்வையிலே நலம் விசாரிப்பா அவ்வப்போது. சந்தர்ப்பம் நேரும் போதெல்லாம் மடி சாய சாத்தியமில்லை. இந்த பாவப்பட்டவனின் காதலியிடம்.

    மதியானம் நாலு மணிக்கு ஏரிக்கரை காவா எறக்குத்துல அந்த புங்க மரத்தாண்ட வர சொல்லிருக்கா. அனேகமா ஒரு வருஷம் ஆனதை கொண்டாடத்தானு நெனைக்கிறேன் சரி நேரமாச்சு கிளம்புவோம் லேட் ஆனா கடுகடுப்பா பாதகத்தி. எப்படி பாலிவுட்டில் ஒரு பிரியங்கா சோப்ராவோ. அதுபோல இந்த சீம காட்டில் ஒரு பிரியங்கா கோப்ரா. எப்பொழுதும் எங் கிட்ட சீறுவதாலே இந்த பெயர் அவளுக்கு.

    இந்த முறை எப்படியாவது பூ வைத்து விடணும் அவ கூந்தலுக்கு. தங்க வெல விக்கும் மல்லிகை பூவ ஒரு சவரணும். அதை வைக்கும்போது சலசலக்காம இருக்க ஒரு துண்டு பேப்பரில் பதினஞ்சு வரியில காதல் கவிதையையும் எழுதிக்கிட்டு செகணன்டில் வாங்கிய ஹீரோ ஹோண்டா பைக்கில் புறப்பட்டான் ஏரிக்கரைக்கு.

    இதில் வேடிக்கை என்னவென்றால் இக் கவிதையை அவள் அண்ணனிடம் எழுதி வாங்கியது. அவள் அண்ணன் ஒரு வளர்ந்து வரும் எழுத்தாளர் ஆவார். சக்கரம் வச்ச பைக்கா இல்ல ரெக்க வச்ச ஏரோபிளானானு தெரியல தர மேல பறக்குது முறுக்குற முறுக்குல.

    பனைமரத்தின் பாதை யாத்திரையை பின் தொடர்ந்து அதிலுள்ள அணிலுக்கு ஹாய் சொல்லி முள்ளு காட்டின் முரண்பாட்டை சமாளித்து ஒருவழியாக அவள் இருக்கும் இடத்தை அடைந்துவிட்டான். ஆள்காட்டி கட்டை விரலில் நுனி தாவணியை திருகி திருகி, கண் கோளத்தை பயத்தால் அங்குமிங்குமாய் உருள விட்டு எச்சி விழுங்கி தரிச காட்டில் தயங்கி தயங்கி நின்றுகொண்டிருந்தாள்.

    வந்த வண்டியை மர்ம புதருக்குள் மறைத்து வைத்துவிட்டு மல்லிகை சரத்தோடும் கவிதை துண்டோடும் அவளிடம் நெருங்கினான். முதலில் அவளா இவனா யார் முதலில் பேசுவது என்ற போட்டி போதுமென்ற நிமிடங்கள் தொடர்ந்தது. இதற்கு மேல் தாங்காது. அவனே ஆரம்பித்துவிட்டான்.

    என்ன போன போட்டு வரச் சொன்ன

    ஒன்றும் தெரியாதவன் போல் கேட்டான்

    ஒனக்கு தெரியாதாக்கும்

    நாம காதலிக்க ஆரம்பித்து ஒரு வருஷம் ஆச்சு

    அதுக்குத்தான் வர சொன்னேன்

    எனக்கு ஜோடி போட்டு சுத்துறது

    கொஞ்சி கொஞ்சி குலாவரதுலாம் புடிக்காது

    அதுக்காக நான் ராட்சசி அமுக்குனி சிடுமூஞ்சினுலாம் நெனைச்சிக்காத

    காதலுனா கட்டுப்பாடு முக்கியம்

    சரி எனக்கு புரியுது இந்த மாதிரி ஒரு ஒழுக்கச்சின்னு தானே உங்கிட்ட விழுந்துட்டேன்

    இந்தப் பூவையாச்சி வைக்க அனுமதிப்பாயா இல்லை அதுக்கும் உன் சட்ட திட்டத்தில இடம் இல்லையா.

    சரி வையி இன்னிக்கு ஒரு நாள்தான் அதுக்குன்னு இதே வேலையா இருக்கக்கூடாது.

    வாழை இலையில் வதங்காமல் வாசம் வீசிக்கொண்டிருந்த மல்லிகையை எடுத்து ஏர்பின் இல்லாமல் பிரியங்காவின் கூந்தலில் செருகினான். பூவோடு பூமகளை புன்சிரிப்பில் அவளை அருகாமையில் பார்த்ததும் பொடிப் பட்டு போனான் ஆனந்த சில்லுகளாய்.

    சரி புள்ள உனக்காக ஒரு கவிதை எழுதி எடுத்தாந்திருக்கன். இதை நான் எழுதினதுனு பொய் சொல்ல மாட்டேன். ஒரு நண்பன் உண்மை நண்பன் உன்னை சகோதரியாய் நினைப்பவன் அவனிடம் என் மனதை கொடுத்து எழுதியது. உனக்காக பொய்யான கவிஞனாக இருப்பதை விட உண்மையான காதலனாகவே இருக்க விரும்புகிறேன். துண்டு பேப்பரை பிரித்து கவிதைக்குள் பிரவேசிக்க ஆரம்பிக்கிறான். இறுகிய குரலில் காமக் குரலில் காதல் குரலில்.

    காதல் காத்திருந்தேன்

    மடிச் சாய்ந்து மொழிப் பகிர்ந்து

    விழிக் கூர்ந்துத் தினம் மகிழ்ந்து

    நிழலில் உருவம் ஒன்றுச் சேர்ந்தது

    நிலவுக்கு நன்றி நிச்சயம்

    சொல்லுவேன்; காதலுக்காக

    காத்திருந்தேன் நற்குண

    தங்கைக்காக நான் கிடந்தேன்

    நிஜக்கதையில் தேவதை அழகு

    போதையில் மருகினேன் பூக்களின்

    பிறவி வாசம் அவள் நாக்கினில்

    பரவிப் பேசும் பாதம் பட்ட மண்

    சிலையாகும் பாதை கோயிலாகும்

    தண்ணீர் கோழியின் தலைக்குக் கீழ்

    வறட்சியில்லைப் பெண்ணே

    பெத்தவளின் அருமை உன்னிடம்

    பரிட்சையில்லை

    பூவுக்காக மொட்டுக் காத்திருக்கும்

    சாம வளர்ச்சியில் பூத்திருக்கும்

    பாலுக்காக கன்று வாய் திறக்கும்

    மடிக் காயாமல் காத்திருக்கும்

    மயில் தோகையின் ஒரு இறகு

    கண்மணியை உரசிய இரவு

    இருட்டை எரித்து வெயில்

    கொளுத்தும் நினைவில்

    வந்துவிட்டால் வாராதக்

    கற்பனைக்காக

    தோற்றம் பார்த்ததில்லை

    தோற்றுப் போனதில்லை

    மனப்பிரமை உண்மைக் கொள்ள

    ஊமைவிழிகள் தியானம் செய்யும்

    செய்கை உரையாடல் சாயும்

    நேரத்தில் வேண்டும் சத்தமின்றி

    சாந்தம் கொள்ள முகம்

    கேட்கவில்லை மூச்சோடு வாழ

    அகம் கேட்கிறேன் உன்னோடு வாழ

    உன்னைப் பார்க்கும் முன்னே

    உள்ளம் பார்த்தது என்னை

    காத்திருக்கிறேன் காலம் கழிய

    வந்து சேரு முதல் பார்வைக்காக.

    இரண்டாம் வரியில் முக்கால் போய்க்கொண்டிருக்க மூழ்கிப் போனாள் அவன் இதழ் அலையில். கண்கள் தானாக அடைத்துக் கொண்டது. அடங்கி போனாள் அவன் இதயத்தில். வரிகள் இறங்க இறங்க மதிவாணனின் நெருக்கம் ஆதிக்கம் செலுத்தியது. உடல் உஷ்ணம் தப்பின் உவமையை தலைக்கு ஏற்றுகிறது. கட்டுப்பாட்டின் கடைசி விளிம்பில் விறுவிறுத்து கொண்டிருந்தான். கண்கள் மூடிய பிரியங்காவிடம் பிடிபட்ட மதிவாணன் மயக்கத்தில் சட்டென்று முத்தம் வைத்துவிட்டான் கன்னத்தில்.

    கவிதை வரிகளில் வசப்பட்ட பிரியங்காவுக்கு எதிர்பாராத முத்தத்தால் உணர்வுகளின் ஆழத்திற்கு சென்றாள் கண்ணை மூடியே. சட்டத்தை மீறிய மதிவாணனை தண்டிக்க கூட அவள் அந்நிமிடம் அவளாக இல்லை.

    முத்தத்தின் வெப்பம் குளிர்ந்து கொண்டிருந்த வேளையில் வேடிக்கை பார்த்துக்கொண்டே பறந்து வந்த பட்டாம் பூச்சியை பிடித்து தந்து பிரியங்காவிடம் நல்ல பெயர் வாங்க மூளைக் கெட்ட மதிவாணன் பட்டாம்பூச்சியின் பின்னாலே சென்று விட்டான். காதலின் தற்சமய போதை தெளிந்ததும் கண்விழித்தாள் பிரியங்கா.

    மதிவாணனை காணோம். பூ வைக்கும்போது இருந்தவன், கவிதை வாசிக்க தொடக்கத்தில் இருந்தவன், முடியும் போது எங்கே போனான். முத்தம் கொடுத்தது அவனா இல்லை வேறு எவன்? ஐயோ போச்சே நல்லவன் என்று தானே நம்பி வந்தேன். எங்கே போனான்னு தெரியலையே வறண்ட நிலத்தில் கண்ணீரை ஊற்றி ஈரமாக்குகிறாள். அங்கும் இங்கும் ஓடி அவனை தேடுகிறாள். உள்ளுக்குள் ஓடும் ரத்தம் வேகமெக்கிறது. எரிமலை குழம்பாய் கொதிக்கிறது. சூரியன் சாய்கிறது சத்தமில்லாமல். சத்தத்தோடு நடையை கட்டுகிறாள் வீட்டுக்கு.

    செல்லும் வழியில் பனை மட்டையோடு சண்டையிட்டுக்கொண்டிருக்கிறது சமை கட்ட ஒரு பெருசு. அந்த கிழவனை பார்த்து அவளுக்குள் கேள்வி எழுப்புகிறாள் முத்தத்தின் சொந்தக்காரன் இந்த கிழவனாக இருக்குமோ? பின்னர் விடையும் அவளே போடுகிறாள் இருக்காதென்று. கொஞ்ச தூரம் கடந்து போனதும் நான்கு குடிகாரர்கள் கூட்டு சேர்ந்து குடித்துக் கொண்டிருந்தனர். வினா எழுகிறது இவர்களாக இருக்குமோ? விடை விழுகிறது இருக்காதென்று. சற்று தூரம் நடக்கிறாரள். ஒரு பொடியன் அவசரத்தில் டவுசரை கிழட்டிவிட்டு சட்டையை தூக்கிக்கொண்டு பூண்டு செடி கூட்டத்தில் ஒதுங்குகிறான். அவனைப் பார்த்ததும் வினா எழுகிறது இவனாக இருக்குமோ? விடை விழுகிறது இருக்காதென்று.

    பாதையெல்லாம் கண்ணீர் திவலைகள் சிந்திக் கொண்டே வீட்டை அடைகிறாள். வாயில் திண்ணையில் அரிசியை துழாவிக் கொண்டும் கல் பொறுக்கி வீசிக்கொண்டும் உட்கார்ந்திருக்கிறாள் பிரியங்காவை பெற்ற தாட்சாயணியம்மா. அம்மாகிட்ட மகள் வேஷம் போட்டு ஏரிக்கரை காட்சியை முகத்திலிருந்து கிழற்றி மனதோடு குமுற வைத்துவிட்டு. என்ன தாட்சாயிணி நல்ல அரிசிக்கு தகுதித்தேர்வோ நடக்கட்டும் நடக்கட்டும். அடியே… ஒய்யாரம் இம்புட்டு நேரம் எங்கடி போய் தொலைஞ்ச. அது ஒண்ணும் இல்லமா என் பிரண்டு அமுதா இருக்கால்ல அவளுக்கு பொறந்தநாளு அதான் கோயிலுக்கு போயிட்டு வந்தோம் ன்னு சொல்லிக்கிட்டே தன் ரூமுக்கு தப்பித்து ஓடிவிட்டாள்.

    தினம் இரவு கஞ்சிக்கு தன் அம்மாவை அடுப்படிக்குள் அனுமதிக்காத அவள் அன்னைக்கு ஒல கொதிக்க ஆளில்லை. சிறைப்பட்ட ஊமை கிளி எப்படி தவிக்குமோ, பதறுமோ அதுபோல வெம்பி கொண்டிருந்தாள். வற்றிய கண்ணீரை மீண்டும் மீண்டும் ஊற்றெடுத்து தலையணையை நனைத்துக் கொண்டிருந்தாள் பிரியங்கா.

    பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு கல்லு பொறுக்கிய அரிசியை ஒல வச்சி பூண்டு தக்காளி மிளகை இடிச்சி

    Enjoying the preview?
    Page 1 of 1