Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Srimad Ramayana Kathapaathirangalin Deiveega Pinnani
Srimad Ramayana Kathapaathirangalin Deiveega Pinnani
Srimad Ramayana Kathapaathirangalin Deiveega Pinnani
Ebook100 pages38 minutes

Srimad Ramayana Kathapaathirangalin Deiveega Pinnani

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தற்போது உள்ள நாட்டின் எல்லைகளும், ஆளும் வரைமுறைகளும் தோன்றுவதற்கு வெகுகாலம் முன்பிருந்தே நம் பாரத தேசத்தில் நடந்த பழம்பெரும் நிகழ்ச்சிகளையும், ஆய்வுகளையும், அறிவுப் பொக்கிஷங்களையும் நாம் எழுத்து மூலம் தக்க வைக்காது, செவி வழி மட்டுமே பரவவிட்டு தக்க வைத்திருக்கிறோம். அதனால் ஒரே நிகழ்வுக்கு வெவ்வேறு இடத்திலும், வேறுபல காலத்திலும் விதவிதமான விளக்க வடிவங்களும் இருந்திருக்கின்றன. செவி வழி செல்வது நெறியுடன் வாழ்வோர் மூலம் பரவுவதால் அடிப்படை விவரங்கள் மாறாது என்ற ஆழ்ந்த நம்பிக்கையும், அன்று எழுத்து வடிவங்கள் உருவாகாத நிலை என்பதாலும், செவி வழியே விவரங்களை மற்றவர்க்கு அறிவித்தது நமது பாணியாக இருந்தது. இன்று நாம் ஆவணங்கள் மூலம் எழுத்து வடிவில் அனைத்தையும் அறிவித்தாலும், நெறியுடனான வாழ்வு தளர்ச்சி அடையும் போது எழுத்து மூலம் வருவதற்கு மட்டும் எவ்வளவு பெரியதாக உத்திரவாதம் கொடுத்துவிட முடியும்?

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் - மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற குறளை எடுத்துக்கொண்டோமானால், “அப்பொருளில் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பதுதான் இன்றைய பாடமாக இருக்கிறது. ஆனால் வாய்வழி-செவிவழியாக அனைத்தும் நமக்கு வந்த நேர்மை நிறைந்த அந்தக் காலத்திலேயே குறள் இருந்திருந்தால் “அப்பொருளே மெய்ப்பொருள் என்று காண்பது அறிவு” என்பதே பாடமாக இருந்திருக்கும் என்று சொல்லலாம். மேலும் இப்போதுகூட புதிதாக மொழி ஒன்றைக் கற்கும்போது, கேட்பதும் பேசுவதும்தான் முதன்மை பெறுகிறது. எழுதுவது என்றுமே இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கிறது. அதனாலேயே படிக்கவோ எழுதவோ இயலாதவர்கள் பலரும் எந்த மொழியையும் பேசிப்பேசியே கற்க முடிகிறது என்பதும், அதேபோல எழுத்தறிவு மட்டும் உள்ள பலரும் பேச முடியாது தவிப்பதையும் நாம் பார்க்கிறோம் அல்லவா? அதனால் வாய்வழி-செவிவழி வருவது என்றுமே மகத்துவம் வாய்ந்ததுதான். அதனாலேயே நா நயம் என்பதுதான் நாணயமாக அன்று அறியப்பட்டதோ?

அவ்வாறு செவி வழி வந்து, பின்பு எழுத்துக்கள் மூலம் நம்மை அடைந்ததுதான் நமது புராணங்கள், மற்றும் இதிகாசங்கள் என்பதை நாம் அறிவோம். வேத-உபநிஷத்துகள் கூறும் உயர்ந்த தத்துவங்களை, பேச்சு வாக்கில் மக்களிடம் பரப்புவதற்காக, நடந்த நிகழ்ச்சிகளை தத்துவங்களோடு ஒப்பிட்டு, வாழும் வகையைக் காட்டுவதில் இதிகாசங்கள் மென்மையான, மற்றும் மேன்மையான வழிகாட்டிகளாக விளங்கின. இதிகாசங்கள் பாரதத்தில் நடந்த நிகழ்வுகளின் கோவையான நமது பண்டைய சரித்திரங்களாக இல்லாமல் வேறு என்னவாகத்தான் இருக்க முடியும்? ஏனென்றால், எவ்வாறு வேத மந்திரங்களை ஒருவர் சொல்லி மற்றவர்கள் கேட்டு பதிவு செய்துகொண்டார்களோ, அதேபோல நடந்த நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்க வேண்டும். அத்துடன் அனைவருக்கும் பயன்படும் முறையில் நீதி, நேர்மைக்கான கோட்பாடுகளையும் எடுத்துச் சொல்லியிருக்கின்றனர்.

இதிகாசங்கள் நமது சரித்திரங்கள் அல்லது சரித்திரக் கதைகள் என்று எவ்வாறு எடுத்துக்கொண்டாலும், அவைகளில் கூறப்பட்டிருப்பவைகள் பலவும் அக்காலத்திற்கு மட்டுமின்றி தற்போதைய நடைமுறை வாழ்விற்கும் பயனுள்ளதாக அமைகின்றன என்பது அறிவார்ந்து படிப்பவர்களுக்கு நன்கு புரியும். தான் எழுதுவது மட்டும் அல்லாது, மற்றவர்கள் பார்வையையும் பலர் அறியவேண்டும் என்ற எண்ணத்தில் வருவதுதான் பல மொழியாக்கப் படைப்புகளும்.

எனது முந்தைய தமிழாக்கமான “ராமாயணப்” புத்தக வடிவின் பிரதி ஒன்றை சென்னை பல்கலைக் கழகத்தில் சம்ஸ்க்ருதப் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றிருந்த முனைவர் வீழிநாதனிடம் தருவதற்காகச் சென்றிருந்தேன். அதைப் பெற்றுக்கொண்டவர், அவர் வழி நடத்தும் “ஆதி சங்கர அத்வைத ஆராய்ச்சி மையம்” வெளியிட்டுள்ள ஆங்கில நூல்களை அன்பளிப்பாகக் கொடுத்து அருளினார். அவற்றில் ஒன்றுதான் நாம் இப்போது தமிழில் காணவிருக்கும் “Divine Design in Srimad Ramayana” என்ற ஓர் ஆய்வு நூல். அதை எழுதியவர் காலம் சென்ற முனைவர் T.P. ராமச்சந்திரன். ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணியின் விளக்கங்களை நமது வலைத் தள வாசகர்கள் அறிய ஆவல் கொண்டிருப்பார்கள் என்ற எனது எதிர்பார்ப்பில் எழுதுகின்றேன்.

வால்மீகி மற்றும் கம்ப ராமாயணங்களின் இலக்கிய ஒப்பீடுகளின் மூலம், எவ்வாறு முன்னவர் இராமபிரான் மற்றும் சீதாப் பிராட்டியின் மனித குணங்களையும், பின்னவர் அவர்களது தெய்வீகப் பின்னணியையும் மனதில் முதன்மையாக இருத்தித் தங்களது காப்பியங்களைப் புனைந்துள்ளார்கள் என்பதை வாசகர்கள் இப்போது அறிந்திருக்கக் கூடும். எனது முந்தைய தமிழாக்கப் படைப்பு இராமபிரானின் அரும்பெரும் மனித குணங்களை வாசகர்களுக்கு விளக்கியது என்றால், அவரது அவதாரத்தின் தெய்வீகப் பின்னணியை இந்த ஆய்வு நூல் மூலம் இப்போது நாம் அறிந்துகொண்டு தெளிவு பெறலாம்.

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580130404819
Srimad Ramayana Kathapaathirangalin Deiveega Pinnani

Read more from S. Raman

Related to Srimad Ramayana Kathapaathirangalin Deiveega Pinnani

Related ebooks

Reviews for Srimad Ramayana Kathapaathirangalin Deiveega Pinnani

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Srimad Ramayana Kathapaathirangalin Deiveega Pinnani - S. Raman

    https://www.pustaka.co.in

    ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி

    Srimad Ramayana Kathapaathirangalin Deiveega Pinnani

    Author:

    எஸ். ராமன்

    S. Raman

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-raman

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    எனது முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    எனது பின்னுரை

    நன்றியுரை

    எனது முன்னுரை

    தற்போது உள்ள நாட்டின் எல்லைகளும், ஆளும் வரைமுறைகளும் தோன்றுவதற்கு வெகுகாலம் முன்பிருந்தே நம் பாரத தேசத்தில் நடந்த பழம்பெரும் நிகழ்ச்சிகளையும், ஆய்வுகளையும், அறிவுப் பொக்கிஷங்களையும் நாம் எழுத்து மூலம் தக்க வைக்காது, செவிவழி மட்டுமே பரவவிட்டு தக்க வைத்திருக்கிறோம். அதனால் ஒரே நிகழ்வுக்கு வெவ்வேறு இடத்திலும், வேறுபல காலத்திலும் விதவிதமான விளக்க வடிவங்களும் இருந்திருக்கின்றன. செவிவழி செல்வது நெறியுடன் வாழ்வோர் மூலம் பரவுவதால் அடிப்படை விவரங்கள் மாறாது என்ற ஆழ்ந்த நம்பிக்கையும், அன்று எழுத்து வடிவங்கள் உருவாகாத நிலை என்பதாலும், செவிவழியே விவரங்களை மற்றவர்க்கு அறிவித்தது நமது பாணியாக இருந்தது. இன்று நாம் ஆவணங்கள் மூலம் எழுத்து வடிவில் அனைத்தையும் அறிவித்தாலும், நெறியுடனான வாழ்வு தளர்ச்சி அடையும்போது எழுத்து மூலம் வருவதற்கு மட்டும் எவ்வளவு பெரியதாக உத்திரவாதம் கொடுத்துவிட முடியும்?

    "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

    மெய்ப்பொருள் காண்பது அறிவு"

    என்ற குறளை எடுத்துக்கொண்டோமானால், அப்பொருளில் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதுதான் இன்றைய பாடமாக இருக்கிறது. ஆனால் வாய்வழி, செவிவழியாக அனைத்தும் நமக்கு வந்த நேர்மை நிறைந்த அந்தக் காலத்திலேயே குறள் இருந்திருந்தால் அப்பொருளே மெய்ப்பொருள் என்று காண்பது அறிவு என்பதே பாடமாக இருந்திருக்கும் என்று சொல்லலாம்.

    மேலும் இப்போதுகூட புதிதாக மொழி ஒன்றைக் கற்கும்போது, கேட்பதும் பேசுவதும்தான் முதன்மை பெறுகிறது. எழுதுவது என்றுமே இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கிறது. அதனாலேயே படிக்கவோ எழுதவோ இயலாதவர்கள் பலரும் எந்த மொழியையும் பேசிப்பேசியே கற்க முடிகிறது என்பதும், அதேபோல எழுத்தறிவு மட்டும் உள்ள பலரும் பேச முடியாது தவிப்பதையும் நாம் பார்க்கிறோம் அல்லவா? அதனால் வாய்வழி, செவிவழி வருவது என்றுமே மகத்துவம் வாய்ந்ததுதான். அதனாலேயே நா நயம் என்பதுதான் நாணயமாக அன்று அறியப்பட்டதோ?

    அவ்வாறு செவிவழி வந்து, பின்பு எழுத்துக்கள் மூலம் நம்மை அடைந்ததுதான் நமது புராணங்கள், மற்றும் இதிகாசங்கள் என்பதை நாம் அறிவோம். வேத-உபநிஷத்துகள் கூறும் உயர்ந்த தத்துவங்களை, பேச்சுவாக்கில் மக்களிடம் பரப்புவதற்காக, நடந்த நிகழ்ச்சிகளை தத்துவங்களோடு ஒப்பிட்டு, வாழும் வகையைக் காட்டுவதில் இதிகாசங்கள் மென்மையான, மற்றும் மேன்மையான வழிகாட்டிகளாக விளங்கின. இதிகாசங்கள் பாரதத்தில் நடந்த நிகழ்வுகளின் கோவையான நமது பண்டைய சரித்திரங்களாக இல்லாமல் வேறு என்னவாகத்தான் இருக்க முடியும்? ஏனென்றால், எவ்வாறு வேதமந்திரங்களை ஒருவர் சொல்லி மற்றவர்கள் கேட்டு பதிவு செய்துக்கொண்டார்களோ, அதேபோல நடந்த நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்க வேண்டும். அத்துடன் அனைவருக்கும் பயன்படும் முறையில் நீதி, நேர்மைக்கான கோட்பாடுகளையும் எடுத்துச் சொல்லியிருக்கின்றனர்.

    நீதி, நேர்மை என்றாலே இறைவனை முன்னிறுத்தி அனைத்தையும் காண வைப்பார்கள். இவ்வாறு அக்காலத்தில் செவிவழி வந்த பலவும் இறையியல் பற்றியே இருந்திருக்கின்றன; உலகியல் பற்றி இருந்ததும் இறைக்கோட்பாட்டை வலியுறுத்தியே வந்திருக்கின்றன. பின்னர் எழுத்து முறை வந்தபோதும், அந்த மரபே கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. ஊடகங்கள் பலவாகி அண்மையில் திரைப்பட வழி உருவாகிய போதும், அந்த மரபு தொடர்ந்து வந்ததை நாம் கண்கூடப் பார்த்தவர்கள்தானே? தொடக்கத்தில் பக்திப் படங்களே வந்தன என்பதைத் தவிர, அக்காலத்தில் சுபம் என்ற Title card ஒன்று இறுதியில் வராத படங்களையே நான் பார்த்ததில்லை. திரைப்படத்தில் அசுபமான முடிவுகள் அப்புறமாக வரத்தொடங்கியதால் தமிழை முன்னிறுத்தி வணக்கம் என்றும், இயக்குனரை முன்னிறுத்தி இது இவரின் படம் என்றும் வரத் தொடங்கின.

    தொடக்கத்தில் செவிவழி வந்ததால் இங்கங்கு சில இடைச்செருகல்கள் இருந்திருக்கலாம் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனாலும் நமக்குப் பண்டைய வழிகளில் வந்த அனைத்தையும் ஒட்டு மொத்தமாக ஆராயும்போது அந்தப் பதிவுகளைக் கேட்போரும், பின்னர் படிப்போரும், அவ்வாறு அனைவருமே நல்ல வழிகளைப் பின்பற்றி, நெறியுடன் வாழ்ந்து, நலமாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையே அவைகளின் மூலகாரணமாக இருந்திருக்கிறது என்பதை நாம் பொதுவாகக் காணலாம். அதனாலேயே பாரதத்தில் மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து, பக்தி இலக்கியமும் நன்கு மலர்ந்து ஒரு முழுமை அடைந்திருந்தது என்று உறுதியாகக் கூறலாம். பாரதத்தின் எந்த மூலையில் வழங்கும் தொன்மையான மொழியில் உள்ள இலக்கியங்களுக்கும் இந்தக் கூற்று சாலப் பொருந்தும். அதனாலேயே நமது கலாச்சாரத்தில் மத அடிப்படையில் ஓர் ஒற்றுமையும், வேறு மதங்கள் தலையெடுத்தபோது அவைகளைப் புரிந்துகொள்ளும் தன்மையும், சகிப்புத் தன்மையும் தென்பட்டது. அக்பர் போன்ற முகலாய மன்னர்கள்கூட அதை நன்கு அறிவார்கள்.

    இதிகாசங்கள் நமது சரித்திரங்கள் அல்லது சரித்திரக் கதைகள் என்று எவ்வாறு எடுத்துக்கொண்டாலும், அவைகளில் கூறப்பட்டிருப்பவைகள் பலவும் அக்காலத்திற்கு மட்டுமின்றி தற்போதைய நடைமுறை வாழ்விற்கும் பயனுள்ளதாக அமைகின்றன என்பது அறிவார்ந்து படிப்பவர்களுக்கு நன்கு

    Enjoying the preview?
    Page 1 of 1