Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Raman: Oru Maaberum Manitha Kula Vilakku
Raman: Oru Maaberum Manitha Kula Vilakku
Raman: Oru Maaberum Manitha Kula Vilakku
Ebook491 pages2 hours

Raman: Oru Maaberum Manitha Kula Vilakku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தங்கமும், வைரமும் அனைவருக்கும் நன்கு அறிமுகமானதுதான். இருந்தும் ஒன்றை உருக்கி வெவ்வேறு வடிவத்திலும், அளவிலும் நகைகளாகவும், மற்றதை வெவ்வேறு கோணங்களில் பட்டை தீட்டியும், வெவ்வேறு இடங்களில் பொருத்தியும் அழகு பார்க்கிறோம். அதுபோல நம் அனைவருக்குமே நன்கு அறிமுகமான இராமாயண காவியத்தை, வால்மிகி முனிவரின் மூலச் செய்யுட்களில் சிலவற்றை எடுத்தாட்கொண்டு, வேறு கோணத்தில் அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட ஆங்கில மூலக் கட்டுரையின் தமிழாக்கம் இந்தப் படைப்பு. ராம ராஜ்ஜியம் நமக்கு வேண்டும் என விரும்புவோர் அனைவருமே, முதலில் காவியத் தலைவன் இராமனைப் போலத் தனது வாழ்க்கை நெறியை அமைத்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னால் மிகையாகாது.
இந்திய விமானப் படையின் வானிலைப் பிரிவில் சுமார் முப்பது வருடங்கள் பணியாற்றிய பின் ஒய்வு பெற்ற மூல ஆசிரியர் திரு. லக்ஷ்மிநாராயணன் அவர்களுக்கு, 1989-ம் வருடம் அவரது அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவில், அவரது விருப்பங்களை நன்கு புரிந்து கொண்ட சக ஊழியர்கள், ஒரு வால்மிகி ராமாயணம் புத்தகம் ஒன்றை நினைவுப் பரிசாக அளித்தனர். அந்த நூலை வான்மிகி முனிவர் 24,000 செய்யுட்கள் வடிவில் 500 அத்தியாயங்களில் இயற்றியுள்ளார். அதை ஆசிரியரும் நாள் ஒன்றுக்கு ஒரு அத்தியாயமாக படித்து, தனது குறிப்புகளையும் எழுதி வந்தார். அப்படி அவர் அந்த நூலை மூன்றாம் முறையாகப் படித்து வரும் போது, வால்மிகி முனிவர் எந்தக் காரணத்தை முன்னிட்டு ராமாயணத்தை எழுதியிருக்கக் கூடும் என்று அவருக்குத் தோன்றியதை “Rama: a Model for Mankind” என்ற தலைப்பில் தனது ஆங்கில நூலாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனக்குப் பொருத்தம் என்று தோன்றிய சில மூல சம்ஸ்க்ருத சுலோகங்களை தேர்ந்தெடுத்து, அதை ஆங்கிலத்தில் விளக்கி அதன் தொடர்பான இராமாயண நிகழ்ச்சிகளையும் விவரித்துள்ளார்.
அந்த மூல நூலை நான் படிக்க நேர்ந்தபோது, நான் பெற்ற இன்பத்தைத் தமிழ்ஹிந்து இணையதள வாசகர்களுக்கும் மொழியாக்கம் செய்து அளிக்கலாமே என்று எனக்குத் தோன்றியது. உடனே மூல ஆசிரியரை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு அதற்கு அவர் அனுமதியைக் கேட்டேன். அவரோ, "பகீரதன் தனது முன்னோர்களுக்கு அர்ப்பணம் செய்வதற்கு என்று கங்கை நதியைக் கொண்டு வந்தான்; நாம் எவருடைய அனுமதியைப் பெற்று கங்கை நீரைப் பருகுகிறோம் என்று போஜ மகராஜா சம்பு ராமாயணத்தில் சொல்வதைச் சொல்லி, தாங்கள் மொழியாக்கம் செய்ய அனுமதி அளிப்பதற்கு நான் யார்? ராமாயணம் மக்கள் அனைவரின் சொத்து. தங்கள் பணியைத் தாராளமாகச் செய்யுங்கள்" என்று மிக்க பெருந்தன்மையுடன் ஆசீர்வதித்தார்.
இந்த மொழியாக்கத்தில் நூற்றுக்கு தொண்ணூற்றியொன்பது பகுதி, மூலத்தில் உள்ளதை மொழிபெயர்த்து நான் எழுதியுள்ளேன்.
S. ராமன்
Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580130404830
Raman: Oru Maaberum Manitha Kula Vilakku

Read more from S. Raman

Related to Raman

Related ebooks

Reviews for Raman

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Raman - S. Raman

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இராமன்

    (ஒரு மாபெரும் மனித குலவிளக்கு)

    Raman

    (Oru Maaberum Manitha Kula Vilakku)

    Author:

    எஸ். ராமன்

    S. Raman

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-raman

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    முகவுரை

    முன்னுரை

    ஆங்கில மூல நூலாசிரியரைப் பற்றி…

    1. குணவான் ஒருவனின் இலக்கணம்

    1.1 கற்ற பின் நிற்க அதற்குத் தக

    1.2 பதினாறும் பெற்ற பெருவாழ்வு

    2. தசரதர் ஆட்சியின் மாட்சி

    2.1 காலம் கனிந்தது

    2.2 தசரதர் ஆட்சியில்

    2.3 தானம் தருவோனின் மனநிலை

    3. விஸ்வாமித்திரருடன் இராம-லக்ஷ்மணர்கள்

    3.1 ஆள்பவன் மக்களின் காவலன்

    3.2. பொறுமை என்னும் நகை

    3.3. விழிமின்! எழுமின்!!

    3.4. உலகே மாயம்

    3.5 மனைவி ஒரு தோழி

    4. கைகேயி கேட்ட வரம்

    4.1 மனம் ஒரு குரங்கு

    4.2 வெள்ளம் வடிந்தபின் பாலமா?

    4.3 சொன்னதைச் செய்பவன்

    5. இராமன் கூறும் சமாதானங்கள்

    5.1 தர்மத்தின்படி வாழ்வு

    5.2 தர்மம் தலை காக்கும்

    5.3 சமத்துவ மனப்பான்மை

    5.4 வலிமையே வெல்லும்

    5.5 வாழ்க்கைத் துணையின் கடமை

    6. சீதை, கைகேயியின் நியாயங்கள்

    6.1 பதவி தரும் பாடம்

    6.2 தோள் கொடுக்கும் தோழி

    6.3 வேப்பமரம் இனிக்கும் கனியையா தரும்?

    6.4 சாக்கடையில் எறிந்த கல்

    6.5 யானை விற்றபின் அங்குசம் எதற்கு?

    7. இராமர் வனவாசம் தொடங்குதல்

    7.1 துணையின் மடமையும், கடமையும்

    7.2 அகத்தின் அழகு

    7.3 செய்வன திருந்தச் செய்

    7.4 ஒரு கொடியில் இரு மலர்கள்

    8. தசரதரின் இறுதிக் காலம்

    8.1 மதி மயங்கலும் மன்னிப்புக் கேட்டலும்

    8.2 வினை விதைத்தவன் வினை அறுப்பான்

    8.3 அரசின் கடமை

    8.4 வாழ்வில் தவிர்க்க முடியாதவை

    8.5 பெண்களுக்குத் தனி மரியாதை

    9. பரதனின் வேண்டுகோள்

    9.1 தவறுதலும், திருந்துதலும்

    9.2 பாவத்தினால் விளையும் பதவி

    9.3 இருப்பதை விட்டு பறப்பதைப் பார்ப்பதா?

    9.4 உண்மை ஒன்றே என்றும் உள்ளது

    9.5 செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்கமுடியுமா?

    9.6 வருத்தியவரையும் வருத்தாதே

    10. தண்டகாரண்ய வன வாழ்க்கை

    10.1 இராமன் இருக்குமிடமே சொர்க்கம்

    10.2 தீயவனுக்கு நல்லவனே வில்லன்

    10.3 அரசின் கடமை

    10.4 சொல்வதைச் செய்வான்

    10.5 சாதுக்கள் கண்ணால் கண்டிடவே

    11. பஞ்சவடி வாசம்

    11.1 யானைக்கும் அடி சறுக்கும்

    11.2 வீசும் காற்றும் வெப்பநிலைத் தோற்றமும்

    11.3 குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை

    11.4 விளையாட்டு வினை ஆகக்கூடாது

    11.5 வருமுன் காப்போன்

    11.6 இன்னா செய்பவர்க்கு இன்னல் வரும்

    12. சூர்ப்பனகையின் தூண்டுதலும் மாரீசனின் வேண்டுதலும்

    12.1 தனக்கு உதவி தங்கையா தன் கையா?

    12.2 ஆட்சி ஒன்றே மாட்சிமை தரும்

    12.3 சொல்பவர் சிலரே, சொல் கேளார் பலரே

    12.4 பாவிகளின் நடுவில் அப்பாவியின் கதி

    12.5 அமைச்சர்களின் பொறுப்பு

    13. சீதையை ராவணன் அபகரித்தல்

    13.1 வீண்பழி விதைக்கும் வினை

    13.2 வேதனையின் வெளிப்பாடும் கலாச்சாரமும்

    13.3 பாத்திரம் அறியாத பிச்சை

    13.4 வேதம் சொல்லும் உண்மைகள்

    14. ஜடாயு மோட்சம்

    14.1 தீதும் நன்றும் பிறர் தர வாரா

    14.2 தினை விதைத்தால் தினை விளையும்

    14.3 கோபம் கண்ணை மறைக்கும்

    14.4 சீவராசிகள் எல்லாம் ஒன்றே

    14.5 ஊக்கமது கைவிடேல்

    15. வாலி வதம்

    15.1 அக்னி சாட்சி

    15.2 காணும் சாட்சியும் கவலை நீக்கலும்

    15.3 உயிர் காப்பான் தோழன்

    15.4 கூட்டணியால் வரும் குழப்பம்

    16. சுக்ரீவனின் கால தாமதம்

    16.1 இறப்பின் சிறப்பு

    16.2 மாரிக்காலத்து இன்னிசை மழை

    16.3 பருவ நாடகம்

    16.4 வாக்கினிலே இனிமை வேண்டும்

    16.5 குடி குடியைக் கெடுக்கும்

    17. சுக்ரீவனின் ஏற்பாடுகள்

    17.1 எவர்க்கும் தடுமாற்றம் வரும்

    17.2 நன்றி மறப்பது நன்றன்று

    17.3 எண்ணித் துணிக கர்மம்

    17.4 இதை இவன் முடிக்கும்

    17.5 பட்டறிவு

    17.6 சிறப்பு, சிறப்பு இல்லையேல் இறப்பு

    18. அனுமனின் சாகஸம்

    18.1 உறவுகள் பலவிதம்

    18.2 மனதில் உறுதி வேண்டும்

    18.3 உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்…

    18.4 புத்துணர்ச்சி பெறல்

    18.5 நன்றி மறவேல்

    18.6 வல்லவர்கள் நல்லவர்கள்

    19. கண்டான் சீதையை

    19.1 எண்ணங்களே மனம்

    19.2 உயர்ந்த உள்ளத்தால் உயர்வாய்

    19.3 ஆர்ய மகிமை

    19.4 காலம் வெல்லும்

    19.5 தோற்பன தொடரேல்

    20. அனுமன் - சீதை சந்திப்பு

    20.1 இராமாயணப் பாராயண மகிமை

    20.2 பெரியோரைத் துணைக் கொள்

    20.3 பாம்பின் கால் பாம்பறியும்

    20.4 தூக்கி வினை செய்

    21. இலங்கையில் இட்ட தீ!

    21.1 தீவினை அகற்று

    21.2 குற்றத்திற்கேற்ற தண்டனை

    21.3 ஆறுவது சினம்

    21.4 வெற்றியாட்டமா? வெறியாட்டமா?

    21.5 உயர உயரத் தாழ்மை தேவை

    22. கண்டேன் சீதையை

    22.1 செய்வன திருந்தச் செய்

    22.2 துன்பத்திற்கு இடம் கொடேல்

    22.3 நிலையில் பிரியேல்

    22.4 போர்த் தொழில் புரியேல்

    23. விபீஷணனின் வீண் முயற்சி

    23.1 நேர்பட ஒழுகு

    23.2 அளந்தறிந்து பிளந்தெறிவான் அமைச்சன்

    23.3 வீட்டுக்கு வீடு வாசற்படி

    23.4 கெடுவான் கேடு நினைப்பான்

    23.5 வஞ்சமில்லாத் தஞ்சம்

    24. விபீஷணனின் சரணாகதி

    24.1 அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

    24.2 அடி பணிந்தோரை அரவணை

    24.3 பரிபூரண சரணாகதி

    24.4 பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு

    24.5 ஒற்றர்களின் மகிமை

    25. சுக்ரீவனின் சவால்

    25.1 மாற்றான் வலி தூக்கான்

    25.2 நல்லாள் இல்லாக் குடி

    25.3 தலை காப்பான் தலைவன்

    25.4 இறுதிவரை போரைத் தவிர்

    26. இன்று போய் நாளை வா!

    26.1 பெரிதினும் சிறிதே தடை

    26.2 தாக்கு! தாக்கப்படாதே!!

    26.3 பகைவனுக்கு அருள்வாய்!

    26.4 திண்ணைப் பேச்சு

    27. அரக்கர்கள் அழிவு

    27.1 சவாலுக்குச் சவால்

    27.2 சொல்வதைச் செய்

    27.3 இனப் படுகொலை கூடாது

    27.4 போரில் பின்வாங்காதே

    27.5 செயல்களும் அதன் விளைவுகளும்

    28. இந்திரஜித் வதம்

    28.1 சேரிடம் அறிந்து சேர்

    28.2 தர்ம வாழ்வே முக்கியம்

    28.3 கோபம் தவிர்

    28.4 பாச மலர்கள்

    28.5 ஆதித்ய ஹ்ருதயம்

    29. ராவணன் வதம்

    29.1 சித்திர விசித்திரம்

    29.2 தூய்மைப்படுத்தும் மரணம்

    29.3 மரணம் ஒரு முடிவா?

    29.4 தானாகக் கனிவதே கனியும், கனிவும்

    30. அக்னிப் பரீட்சை

    30.1 நன்னடத்தையே நல்ல பாதுகாப்பு தரும்

    30.2 பெண் பாவம்

    30.3 அக்னிக் குஞ்சொன்று வைத்தே

    30.4 மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

    30.5 காலத்தினால் செய்த நன்றி

    31. இராமர் பட்டாபிஷேகம்

    31.1 இறைவனிடம் செல்

    31.2 காக்க காக்க, கனிவுடன் காக்க

    31.3 மனிதனின் பார்வையில்

    31.4 ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ!

    பின்னுரைக்குப் பின் உறை

    அணிந்துரை

    இராமபிரானைப் பற்றி அறியாதவர்கள் இந்திய நாட்டிலே இருக்க முடியாது. அவரது அயனங்கள் - அதாவது வழிநடந்த கதைகள் - பற்றித் தெரிந்துக்கொண்டால், நாமும் நமது வாழ்க்கைப் பயணத்தை ஒழுங்காக நடத்திச் செல்லலாம் என்பதே இந்த நூலின் கருத்து. அதில் எவருக்குமே கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தின் பல வெளியீடுகளிலும், வேறு பல பதிப்புகளிலும் இதே கருத்துக்கள் பலமுறை சொல்லப்பட்டிருந்தாலும், இவை மீண்டும் மீண்டும் வெளிவந்து கொண்டிருந்தால்தான் மக்களின் நினைவில் நன்கு பதியும். இவ்வாறுதான் நாட்டின் நன்மைக்கு ஒரு பலத்த அடித்தளம் அமைக்க முடியும்.

    இந்நூலின் ஆங்கில மூலநூல் இந்திய விமானப் படையில் உயர் பதவி வகித்த அதிகாரி ஒருவரால் எழுதப்பட்டு, அதன் தமிழாக்கம் நாட்டின் முன்னணி மாணவர்களுக்கு மின்னணு மற்றும் கணினிக் கல்வி போதித்த பேராசிரியர் ராமனால் செய்யப்பட்டு, வலைத்தளத்தில் தொடராக வந்து, இப்போது நூலாக அச்சேறியிருக்கிறது.

    ஸ்ரீராமபிரான் அவதரித்து சுமார் 5000 ஆண்டுகள் ஆனாலும், அவருடைய மனிதாபிமான குணங்கள் இன்றும் பலருக்கு முன் மாதிரியாக இருந்து வழி நடத்தி வருகின்றன. சுவாமி விவேகானந்தர், ஸ்ரீராமரின் நாமமந்திரத்தைப் பெற்ற மாத்திரத்தில் பல நாட்கள் தொடர்ந்து அதை ஜபித்து ஸ்ரீராமபிரான் காட்டிய மார்க்கத்திலேயே இணைந்துவிட்டார். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரும் ஸ்ரீராமபிரான், சீதை, ஹனுமான் அவர்களுடைய தரிசனம் மற்றும் அருளைப் பெற்றார்.

    சமீபத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் 175 - வது பிறந்தநாளைக் கொண்டாடி, இப்பொழுது சுவாமி விவேகானந்தரின் 150 - ஆவது பிறந்தநாளை விமரிசையாக அனுசரித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் வெளியாகவிருக்கும் இந்நூல், படிக்கும் ஒவ்வொருவரையும் நல்வழியில் நடத்திச் செல்ல எல்லாம்வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

    சிரத்தையுடன் தமிழாக்கம் செய்த பேராசிரியர் இராமனுக்கு நல்வாழ்த்துக்கள்.

    சுவாமி அபிராமானந்தர்

    முகவுரை

    சென்னை கலாக்ஷேத்ராவில் ஒரு விரிவுரையைக் கேட்கப் போயிருந்த இடத்தில், முனைவர் எஸ். ராமன் எனக்கு அறிமுகமானது 2010-ல் என்று நினைக்கிறேன். எப்படி தான் வசிக்கும் பகுதியிலேயே இந்த நூலின் ஆங்கிலமூல எழுத்தாளரும் குடியிருக்கிறார் என்று ராமன் பின்பு தெரிந்து கொண்டாரோ, அதேபோல நானும் அங்கேயே வசிக்கிறேன் என்பதை பின்புதான் நாங்கள் இருவருமே கண்டு கொண்டோம். நாங்கள் மூவருமே சென்னையில் ஒரே குடியிருப்புப் பகுதியில் வசிக்கிறோம் என்று மட்டும் அல்லாது, எங்கள் மூவரின் பூர்வீகங்களான தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் மூன்று கிராமங்களும் அதிகம் போனால் 3 கிலோமீட்டருக்கு மேல் இருக்காது என்பதையும் நாங்கள் பின்பே அறிந்து கொண்டோம். உலகம் சிறியது என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதுபோல இருக்கிறதா?

    எங்கள் இருவரின் அறிமுகம் ஆன சில மாதங்களில் நண்பர்கள் கேட்டதற்கு இணங்க நான் சம்ஸ்க்ருத வகுப்பைத் தொடங்க, அதில் ராமனும் சேர்ந்து கொண்டார். இன்றும் அவர் கையெழுத்து என் கண்முன் நிற்கிறது. ஆனால் தலையெழுத்து வேறு மாதிரி இருந்ததே! வேறு அலுவல்கள், பிரயாணங்கள் நடுவே அவரால் வகுப்பில் தொடர முடியவில்லை. அதனால் தன்னை மாணவன் என்று சொல்லிக் கொள்வதை விட வகுப்பிலிருந்து விலகியவன் என்று உண்மை மாறாது எங்கும் சொல்லிக் கொள்வார். அப்போது அவரது கட்டுரைகள் தமிழ்ஹிந்து இணையதளத்தில் வந்து கொண்டிருந்தன. இராமாயணம் பற்றிய அவரது தொடர் வந்தப்போது நான் அவர் அருகில் இல்லை. இப்போது அதைக் கொண்டுவந்து, அதில் இருந்த சம்ஸ்க்ருத ஸ்லோகங்களுக்குச் சரியான பதங்கள் வேண்டுமென்று கேட்டபோது, அனைத்திற்கும் அவருடன் உட்கார்ந்து முழு விவரங்களையும் சரி பார்த்தேன். வெகு நாட்கள் கழிந்து எனக்கும் வால்மிகி ராமாயணம் படித்த மாதிரியும் இருந்தது.

    நான் ஓர் அறிவியல், கணிதம் தொடர்பானவன் ஆதலால் என்னைப் பொருத்தவரை இந்த நூலின் ஆசிரியர்களது மனிதப் பார்வை தற்போது மக்களுக்கு மிகவும் தேவை என்றே நினைக்கிறேன். வால்மிகி ஒருவரே இராமாயண காலத்து வர்ணாஸ்ரமத் தர்மங்களை சரியாகக் குறிப்பிட்டு, ராமரின் மனித குணாதிசயங்களை பலருக்கும் பயன்படும் முறையில் நன்கு விளக்கியிருக்கிறார் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது.

    அதைச் சரியாகக் கடைந்தெடுத்து, சுமார் 200 ஸ்லோகங்கள் மூலம் வெண்ணெய் போல வழங்கியுள்ள ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுக்கள். அதில் எனக்குமொரு பங்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. இப்போது நூலாகவும் வெளிவந்திருப்பதால், மேலும் பல மக்களைச் சென்றடைந்து பயன் தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    ந. பாலசுப்ரமணியன்

    முன்னுரை

    தங்கமும், வைரமும் அனைவருக்கும் நன்கு அறிமுகமானதுதான். இருந்தும் ஒன்றை உருக்கி வெவ்வேறு வடிவத்திலும், அளவிலும் நகைகளாகவும், மற்றதை வெவ்வேறு கோணங்களில் பட்டை தீட்டியும், வெவ்வேறு இடங்களில் பொருத்தியும் அழகு பார்க்கிறோம். அதுபோல நம் அனைவருக்குமே நன்கு அறிமுகமான இராமாயண காவியத்தை, வால்மிகி முனிவரின் மூலச் செய்யுட்களில் சிலவற்றை எடுத்தாட்கொண்டு, வேறு கோணத்தில் அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட ஆங்கில மூலக் கட்டுரையின் தமிழாக்கம் இந்தப் படைப்பு. ராம ராஜ்ஜியம் நமக்கு வேண்டும் என விரும்புவோர் அனைவருமே, முதலில் காவியத் தலைவன் இராமனைப் போலத் தனது வாழ்க்கை நெறியை அமைத்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னால் மிகையாகாது.

    இந்திய விமானப் படையின் வானிலைப் பிரிவில் சுமார் முப்பது வருடங்கள் பணியாற்றிய பின் ஒய்வு பெற்ற மூல ஆசிரியர் திரு. லக்ஷ்மிநாராயணன் அவர்களுக்கு, 1989-ம் வருடம் அவரது அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவில், அவரது விருப்பங்களை நன்கு புரிந்து கொண்ட சக ஊழியர்கள், ஒரு வால்மிகி ராமாயணம் புத்தகம் ஒன்றை நினைவுப் பரிசாக அளித்தனர். அந்த நூலை வான்மிகி முனிவர் 24,000 செய்யுட்கள் வடிவில் 500 அத்தியாயங்களில் இயற்றியுள்ளார். அதை ஆசிரியரும் நாள் ஒன்றுக்கு ஒரு அத்தியாயமாக படித்து, தனது குறிப்புகளையும் எழுதி வந்தார். அப்படி அவர் அந்த நூலை மூன்றாம் முறையாகப் படித்து வரும்போது, வால்மிகி முனிவர் எந்தக் காரணத்தை முன்னிட்டு ராமாயணத்தை எழுதியிருக்கக் கூடும் என்று அவருக்குத் தோன்றியதை Rama: a Model for Mankind என்ற தலைப்பில் தனது ஆங்கில நூலாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனக்குப் பொருத்தம் என்று தோன்றிய சில மூல சம்ஸ்க்ருத சுலோகங்களை தேர்ந்தெடுத்து, அதை ஆங்கிலத்தில் விளக்கி அதன் தொடர்பான இராமாயண நிகழ்ச்சிகளையும் விவரித்துள்ளார்.

    அந்த மூல நூலை நான் படிக்க நேர்ந்தபோது, நான் பெற்ற இன்பத்தைத் தமிழ்ஹிந்து இணையதள வாசகர்களுக்கும் மொழியாக்கம் செய்து அளிக்கலாமே என்று எனக்குத் தோன்றியது. உடனே மூல ஆசிரியரை மின்னஞ்சலில் தொடர்புக் கொண்டு அதற்கு அவர் அனுமதியைக் கேட்டேன். அவரோ, பகீரதன் தனது முன்னோர்களுக்கு அர்ப்பணம் செய்வதற்கு என்று கங்கை நதியைக் கொண்டு வந்தான்; நாம் எவருடைய அனுமதியைப் பெற்று கங்கை நீரைப் பருகுகிறோம் என்று போஜ மகராஜா சம்பு ராமாயணத்தில் சொல்வதைச் சொல்லி, தாங்கள் மொழியாக்கம் செய்ய அனுமதி அளிப்பதற்கு நான் யார்? ராமாயணம் மக்கள் அனைவரின் சொத்து. தங்கள் பணியைத் தாராளமாகச் செய்யுங்கள் என்று மிக்க பெருந்தன்மையுடன் ஆசீர்வதித்தார்.

    இந்த மொழியாக்கத்தில் நூற்றுக்கு தொண்ணூற்றியொன்பது பகுதி, மூலத்தில் உள்ளதை மொழிபெயர்த்து நான் எழுதியுள்ளேன்.

    S. ராமன்

    ஆங்கில மூல நூலாசிரியரைப் பற்றி…

    தஞ்சை மாவட்டம் வரகூர் கிராமத்தில் சம்ஸ்க்ருதம் படிப்பதும், தரங்கங்கள் பாடுவதும் தொன்றுதொட்ட பழக்கங்கள். அங்கு தங்கியிருக்கத் தீர்மானித்த ஸ்ரீ நாராயண தீர்த்தர் கிருஷ்ண லீலா தரங்கிணி என்ற சம்ஸ்க்ருத நாடக வடிவில் இருந்த நூலை இயற்றிய காலம் தொடங்கி இந்தப் பழக்கங்கள் அங்கு தொடர்ந்து வந்தன. ஆனால் கடந்த 100 வருடங்களாக அங்கிருந்தவர்கள் வேறு இடங்களுக்குக் குடிபெயற, இப்போதுள்ள பலருக்கும் சம்ஸ்க்ருதத்திலும், சங்கீதத்திலும் பயிற்சி வெகுவாகக் குறைந்து போயின.

    நூலாசிரியரின் பாட்டி வரகூரில் பிறந்து வளர்ந்தவர். பாட்டியின் தந்தையும், அவரது உடன் பிறந்தவர்களும் சம்ஸ்க்ருத மொழியிலும், இலக்கியத்திலும் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். நூலாசிரியரோ சென்னையில் பிறந்து, பின்பு தன் பாட்டியுடன் ஸ்ரீரங்கத்தில் தங்கி வசித்தவர். வரகூர் பழக்கங்களை நன்கு அறிந்த பாட்டியின் முயற்சியால், அவர் ஒரு சம்ஸ்க்ருத ஆசிரியரிடம் தனிப் பயிற்சி எடுத்துக்கொண்டார். அதனால் அவருக்கு சம்ஸ்க்ருத மொழியிலும், இலக்கியத்திலும் ஒரு கவர்ச்சியும், ஈடுபாடும் வளர்ந்தது.

    சம்ஸ்க்ருதம் தவிர அவருக்கு விஞ்ஞானமும், கணிதமும் மிகவும் பிடித்தமான பாடங்கள். 1950-ல் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் கணிதத்திலும், விஞ்ஞானத்திலும் பட்டம் பெற்று, மறு வருடமே இந்திய வானிலைத் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கிருந்து 1958-ல் இந்திய விமானப் படையில் போய்ச் சேர்ந்தார். அங்கு அவர் செய்த வானிலை ஆராய்ச்சியில், கணித முறைப்படி புயல்கள், சூறாவளிகள் பற்றி ஆய்ந்து புத்தகங்களும் எழுதியிருக்கிறார். அவர் படிப்படியாக உயர்ந்து 1985-ல் ஏர் வைஸ் மார்ஷல்-ஆக ஒய்வு பெற்றார். அந்தப் பணியில் அவர் இந்திய ஜனாதிபதி அளிக்கும் AVSM (அதி விசிஷ்ட சேவா மெடல்) பெற்று கௌரவிக்கப்பட்டார்.

    1989-ல் அவரது அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவின் போது, அவருக்கு சம்ஸ்க்ருத மொழி மற்றும் இலக்கியத்தில் இருந்த ஆர்வம் தெரிந்த அவரது நண்பர்கள், வால்மீகி ராமாயணம் நூல் ஒன்றைப் பரிசளிக்க, அவர் அதைப் பாராயணம் செய்துகொண்டிருந்தபோது தோன்றியதன் விளைவுதான் இந்த நூலின் மூல நூல். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த நூல் Rama: A Model for Mankind என்று தலைப்பிடப்பட்டது,.

    1. குணவான் ஒருவனின் இலக்கணம்

    1.1 கற்ற பின் நிற்க அதற்குத் தக

    तपःस्वाध्यायनिरतं तपस्वी वाग्विदां वरम् ।

    नारदं परिपप्रच्छ वाल्मीकिर्मुनिपुङ्गवम् ।। 1.1.1 ।।

    தப: ஸ்வாத்யாய-நிரதம் தபஸ்வீ வாக்-விதாம்

    வரம் |

    நாரதம் பரிபப்ரச்ச வால்மீகி: முனி-புங்கவம் ||

    तपस्वी தபஸ்வீ, முனிவர் वाल्मीकि: வால்மீகி: வால்மிகி तप: स्वाध्यायनिरतम् தப: ஸ்வாத்யாய-நிரதம், வேதம் ஓதுதல் மற்றும் மதச் சடங்குகளின் மரபுகளை அப்யாசித்துக் காப்பதில் ஈடுபட்டவர் वाग्विदां वरम् வாக்-விதாம் வரம், சொல்லில் சிறந்தவர் मुनिपुङ्गवम् முனி-புங்கவம், முனிவர்களில் முதன்மையானவர் नारदम् நாரதம், நாரதரிடம்  परिपप्रच्छ பரிபப்ரச்ச, (பேசுகையில்) கேட்கிறார்.

    முனிவர்களுள் சிறந்தவரும், வேதம், யக்ஞம் மற்றும் பலவிதமான கலைகளைக் கற்று அவை சொல்வதற்கு ஏற்ப வாழ்பவருமான நாரத முனியை வால்மிகி முனிவர் கேட்கிறார் ( உலகில் வாழ்வாங்கு வாழ்பவனின் குணங்கள் எத்தகையது என்று).

    வால்மிகி முனிவர் தபஸ், ஸ்வாத்யாயம் என்ற இரண்டு உபநிடதச் சொற்களைக் கொண்டே ராமாயணத்தை எழுத ஆரம்பிக்கிறார். அவை இரண்டுமே யஜுர் வேதத்தில் உள்ள தைத்ரிய உபநிடத வார்த்தைகள். எவன் ஒருவனும் தானும் கற்று, தான் கற்றதை மற்றவர்களுக்கும் அளிப்பதையே ஒவ்வொருவரின் கடமை என்று தைத்ரிய உபநிடதம் வலியுறுத்திச் சொல்கிறது. மற்றெல்லாவற்றிலும் ருதம், சத்யம், தவம் என்ற மூன்று குணசீலன்களே தானும் உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்த்த வேண்டியவைகளில் முதன்மையாக இருப்பவை. ருதம் என்பது ஒரு மனிதன் வாழ்விலும், பிரபஞ்ச இயக்கங்களிலும் நடப்பதில் ஓர் ஒழுங்குமுறையை வகுத்துச் செல்லும் பேரியக்கம் என்று கொள்ளலாம். சத்யம் என்பது என்றும் எங்கும் உள்ளபடி உள்ளது என்றும், தவம் என்பது ஒருவனை உந்திச் சென்று இயக்கும் ஒரு தகிக்கும் உள்ளுணர்வு என்றும் ஆகும்.

    தபஸ் என்ற சொல்லே தப் என்ற சம்ஸ்க்ருத மூலத்தில் இருந்து வருவது. தப் என்பது உஷ்ணத்தைக் குறிக்கிறது. அந்த சக்தியே வெளிப்படும்போது இயக்கங்களாக, செயல்களாகப் பரிணமிக்கிறது. தவம் என்பது தீவிர அனுஷ்டானத்தையும், பிரார்த்தனையையும், தியானத்தையும் கடந்து இருப்பது. தவத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக வால்மிகி முனிவரே உள்ளார். ஒரு யோகியும், ஞானியுமான வால்மிகி முனிவருக்கு நற்குணங்கள் பொருந்தி, நல்லொழுக்கத்துடன் வாழும் ஒருவனின் குணாதிசயங்களைப் பட்டியலிட்டுக் காட்டி அதன்படி நல்வாழ்வு வாழ அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனாலும் வெறும் பட்டியலிட்டால் மட்டும் மனித குலத்திற்குப் போதாது; அதன்படி வாழ்ந்து காட்டும் ஒரு மனிதனை உதாரணமாகக் காட்ட வேண்டும் என்ற உந்துதலினாலேயே அவர் இராமனை முன்னிறுத்தி ராமாயணத்தை இயற்றியுள்ளார். இப்படியாக ராமாயணத்தை இயற்றி, அதனை லவ-குசர்கள் மூலம் பலருக்கும் கொண்டு சென்றதே அவர் செய்த தவம்.

    ஸ்வாத்யாயம் என்ற சொல்லில் ஸ்வ என்றும் அத்யாய என்றும் இரண்டு பாகங்கள் உள்ளன. அதற்கு சுயமாகவே கற்றுக் கொள்வது என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது, ஒருவன் எவ்வளவு படித்து அறிந்துக் கொண்டாலும், மற்றவர் மூலம் கற்றுக் கொண்டாலும், இறுதியில் அவன் தானாகவே எவ்வளவு புரிந்து கொள்கிறானோ அவ்வளவுதான் அவனுக்கு அறிவாக மிஞ்சும். எவ்வளவுக்கு எவ்வளவு அவன் உள் வாங்கிக்கொண்டு அதனைத் தன்னுடைய ஒரு பகுதியாக இருத்திக் கொள்கிறானோ அதுவே அவன் கற்ற கல்வியின் அளவாக இருக்கும். அதுவே அவனது தினப்படி எண்ணங்களிலும், செயல்களிலும் பரிமளிக்கும். மற்றவர்க்கு அவன் அளிக்கும் எண்ணப் பரிமாற்றங்களிலும், செயல்களிலும் அது ஒன்றே அவனது திறனைக் காட்டிக் கொடுக்கும். வெறும் வார்த்தைகளால் மட்டும் அன்றி, அவன் சொல்வதைத் தனது வாழும் நெறியில் காட்டும்போதுதான் அவனது சொல்லுக்கும் செயலுக்கும் மதிப்பு இருக்கும். காவிய காலத்து இராமபிரானும், நமது காலத்து மகாத்மா காந்தியும் அப்படியாக வாழ்ந்து காட்டியவர்கள்தான். இதைத்தான் உபநிடதங்களும் ஸ்வாத்யாய ப்ரவச்சநேச என்று கூறுகிறது. அதாவது கற்றுக்கொண்டு அதை மற்றவர்க்கும் கற்றுக்கொடு என்று கூறுகிறது. கற்றுக்கொள்பவன் அதன்படியே வாழ்ந்தால், கற்றுக் கொடுப்பதற்கும் எளிதாகும். ஆக வால்மிகி முனிவர் மிகப் பொருத்தமான உபநிடதச் சொற்களைக் கொண்டு தனது காவியத்தை ஆரம்பித்து வைக்கிறார்.

    வேதங்கள் எது எப்படி இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்று கூறுமே தவிர, அதன் காரணங்களை விவரமாகக் கூறி விளங்க வைக்காது. அதனாலேயே அவைகள் ஒருவன் இப்படி இருந்ததால் இப்படி ஆயிற்று என்று விவரங்கள் தராது. அதனாலேயே கலை மற்றும் கவி நயத்துடன் காவியங்கள் படைத்து வால்மிகி போன்றவர்கள் நமக்கு உதாரண புருஷர்களையும் காட்டி புராணங்களைப் படைத்தனர். அவை மூலம் வேதங்கள் கூறும் நீதி மற்றும் நேர்மை சார்ந்த நல்லொழுக்கம் மிக்க ஆன்மிக வாழ்க்கை வாழும் வழியை கதாபாத்திரங்கள் மூலம் காட்டி, நல்லுலகத்தைப் பற்றிய செய்தியைப் பரப்பினர். அப்படிப்பட்ட ஒரு பாத்திரம்தான் நம் காவிய நாயகனான இராமபிரான். அவரது குணாதிசயங்களைப் பற்றிப் படித்தோ, கேட்டோ அறிபவர்கள் அவரைப் போலவே நல்ல வாழ்க்கை வாழ மாட்டார்களா என்ற ஆதங்கமே வால்மிகி போன்றோரை காவியங்களைப் படைக்க வைத்தது. உபநிடத காலத்தில் வால்மிகி வாழ்ந்திருந்தார் என்றால், ராமாயணம் படித்து ராமபிரானைப் போல அனைவரும் வாழ்ந்து நன்னெறிகளைப் பரப்ப வேண்டும் என்று உபநிடத வாக்கியங்களே அமைந்திருக்கக் கூடும்! வேத ரிஷிகளைப் போல அல்லாது வால்மிகி வித்தியாசமாக இராமனை நன்கு விவரித்து அவர்போல வாழவேண்டும் என்று சொல்லாது சொல்கிறார். இராமாயணத்தைப் படித்தும், கேட்டும் நாம் அனைவரும் கற்க வேண்டியதைக் கற்று, அதன்படி வாழ்ந்து, அது சொல்லும் கருத்துக்களையும் பரப்புவோம் என்று வால்மிகி நம் மீது திடமாக நம்பிக்கை வைத்துள்ளார் என்றே சொல்லலாம்.

    1.2 பதினாறும் பெற்ற பெருவாழ்வு

    को न्वस्मिन् साम्प्रतं लोके गुणवान् कश्च वीर्यवान् ।

    धर्मज्ञश्च कृतज्ञश्च सत्यवाक्यो दृढव्रतः ।। 1.1.2 ।।

    கோ ந்வஸ்மின் ஸாம்ப்ரதம் லோகே குணவான் கஸ்-ச வீர்யவான்|

    தர்மஜ்ஞஸ்-ச க்ருதஜ்ஞஸ்-ச ஸத்யவாக்யோ த்ருட-வ்ரத: ||

    अस्मिन् लोके அஸ்மின் லோகே, இவ்வுலகில் साम्प्रतम् ஸாம்ப்ரதம், தற்காலத்தில் गुणवान् குணவான், சகல கல்யாண குணங்களுடன் क: नु க: நு, எவர்தான் वीर्यवांश्च வீர்யவான்-ச, வீரத்துடனும் धर्मज्ञ: च தர்மஜ்ஞஸ்-ச, தர்மத்தை அறிந்தவரும் कृतज्ञ: च க்ருதஜ்ஞஸ்-ச, நன்றியுடனும் सत्यवाक्य: ஸத்யவாக்ய:, வாய்மையுடன் दृढव्रत: த்ருடவ்ரத:, மனோதிடத்துடன் क: க:, யார்

    चारित्रेण च को युक्तः सर्वभूतेषु को हितः ।

    विद्वान्क: कस्समर्थश्च कश्चैकप्रियदर्शन: ।। 1.1.3 ।।

    சாரித்ரேண ச கோ யுக்த: ஸர்வபூதேஷு கோ ஹித: |

    வித்வான் க: க: ஸமர்த்தஸ்-ச கஸ்-சைக-ப்ரிய-தர்ஷன: ||

    क: க:, யார் चारित्रेण युक्त: சாரித்ரேண யுக்த:, நல்லொழுக்கம் உடையவன்

    क:, யார்  सर्वभूतेषु ஸர்வபூதேஷு, சகல சீவராசிகளுக்கும் हित: ஹித:, நல்லவன் क: யார், विद्वान्

    Enjoying the preview?
    Page 1 of 1