Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manathin Maanaseega Thiravukol
Manathin Maanaseega Thiravukol
Manathin Maanaseega Thiravukol
Ebook126 pages52 minutes

Manathin Maanaseega Thiravukol

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By R.Prema
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466626
Manathin Maanaseega Thiravukol

Read more from R.Prema

Related to Manathin Maanaseega Thiravukol

Related ebooks

Related categories

Reviews for Manathin Maanaseega Thiravukol

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manathin Maanaseega Thiravukol - R.Prema

    27

    1

    அந்த ஊரின் தெருக்கோடியில் செல்வ விநாயகர் என்ற பெயரில் ஒரு பிள்ளையார் கோவில் இருந்ததால், அந்த தெருவுக்கு பிள்ளையார் கோவில் தெரு என்றே பெயர் இருந்தது!

    அந்த ஊர் கந்தக பூமியை சேர்ந்தது. எனவே அந்த ஊரில், தீப்பெட்டி தொழிற்சாலைகள், அதிகமாகவே இருந்தது. அதனால் அந்த ஊரில், பிழைப்புக்கு நல்ல வழி இருந்தது.

    "தீப்பெட்டி தொழிற்சாலையை நம்பி ஏராளமான குடும்பங்கள் என்று பிழைத்து வந்தன. பெண்கள் வீட்டிலிருந்தபடியே, தீப்பெட்டியின், அடிப்பாகம், மேல்பாகம் போன்றவற்றை தயாரித்து வந்தனர். சில குடும்பங்கள், கட்டை அடுக்குவது என்ற பெயரில் வீட்டில் தொழில் செய்து வந்தனர். சில குடும்பத்திலுள்ள பெண்கள், நேரே தீப்பெட்டி தொழிற்சாலைக்கு சென்று வேலை பார்த்தனர். வாரம், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆனதால்.

    திங்கள் முதல் சனிக்கிழமை வரை வேலைபார்த்ததற்கான சம்பளம் கணக்கிட்டு கொடுக்கப்படும். சில குடும்பங்கள் ஞாயிற்றுக்கிழமைக்குண்டான வேலையையும் சேர்த்து வாங்கி வருவார்கள். அந்த ஊரிலிருந்து பொழுது போக்கு சினிமா மட்டுமே. ஒரு வாரம், வேலை செய்த அலுப்புதீர, சனிக்கிழமை வாங்கிய சம்பளத்தை, கணக்கிட்டு, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சினிமாவுக்கு சென்று விடுவார்கள்.

    அந்த ஊரில் நாடார் இனத்தவர் அதிகம் இருந்தனர். அவர்களுக்கென உரித்தாக பத்திரகாளியம்மன் கோவில் இருந்தது. செட்டியார்களுக்கென, மாலையம்மன் கோயிலும், இருந்தது. மிகப்பெரிய கோயிலாக செண்பக வல்லியம்மனும், பூவணநாதசுவாமியும், அருள் பாலிக்கும், செண்பக வல்லியம்மன் கோயில் இருந்தது. வருடம் தோறும் சித்திரைமாதம், தேரோட்டம் நடைபெறும். அப்போது, தொட்டில் ராட்டினம், குடை ராட்டினம் என்று அமர்க்களப்படும். சிறுவர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.

    அந்த திருவிழாவின் போது, எல்லா குடும்பத்தினரும், கையில் சீனிமிட்டாய், காராச் சேவு போன்ற பலகாரங்களை தவறாது வாங்கிச் செல்வர்.

    நாடார் இனத்தவர்க்கென்று, பெயரில், பள்ளி இருந்தாலும், எல்லா சாதி குழந்தைகளும் படித்தனர். அதே போன்று செட்டியார், இனத்தவர்க்கென்று, பள்ளி இருந்தாலும், அங்கேயும் எல்லா சாதிக் குழந்தைகளும் படித்தனர்.

    ஊரிலே லாயல் மில், லட்சுமி மில் என்று இரண்டு மில்கள் இருந்தன. இது தவிர, ஜில் விலாஸ் சோடா, பாக்டரி இருந்தது. பிக்னிக் செல்லும் இடமாக தோப்பாளம், கதிரேசன் மலைக்குன்று, அங்கு விலாஸ் தோட்டம், முக்கர் பிள்ளையார் கோவில் என்று பல இடங்கள் இருந்தன. அரசாங்க பெண்கள் உயர்நிலை பள்ளியும் இருந்தது. இது போக, அம்மையார் பட்டி, ஜவுளி ஸ்டோர், நீயூ ஜவுளி ஸ்டோர், இரண்டு பெரிய துணிக்கடைகள் இருந்தன.

    மூக்கர் பிள்ளையார் கோவில் என்று சொல்லப்படுகின்ற கோவிலில் அங்குள்ள அரச மரத்தில் பிள்ளையாரின் மூக்கு ஒட்டிக்கொண்டு இருக்கும். கோவில் சிலையும் மூக்கு இல்லாது இருக்கும். அதனால் இந்த பெயர் வந்தது என கூறுவர். இதற்கு உபரியாக ஒரு கதை உண்டு. (எல்லாம் செவி வழி செய்தி)

    திருடன் ஒருவன், தினமும், தன் தொழிலை தொடங்குவதலும் முன், பிள்ளையாரிடம், இன்று எனக்கு நிறைய கிடைக்கணும், யாரிடமும், அகப்பட்டு கொள்ளக்கூடாது. என்றும், தனக்கு கிடைக்கும். பொருளில் பாதியை உன் கோவில் உண்டியலில் போட்டுவிடுவேன் என்றும் வேண்டிக் கொள்வானாம்.

    இப்படியே நாட்கள் போய் கொண்டிருக்கும் போது, ஒரு நாள் அத்திருடன் பிடிபட்டுவிட்டான். அந்த கோபத்தில் அவன், கோவிலுக்கு வந்து, பிள்ளையாரின் மூக்கை உடைத்து விட்டதாகவும், உடைந்த துண்டானது அங்கிருந்த அரச மரத்தில் ஒட்டிக்கொண்டு விட்டதாகவும் கதை உண்டு.

    இவையெல்லாம் தவிர, நாதஸ்வர வித்வான் என சொல்லப்படும், காருகுறிச்சி அருணாசலம் அவர்கள், அந்த ஊரிலுள்ள பங்களாத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தான் வசித்து வந்தார். பொது, தண்ணீர் நிலையங்களாக தோப்பாளம், ஒன்பது மோட்டர், யூனியன் கிணறு போன்றவைகள் இருந்தன. இப்போது லாரியில், தண்ணீர் அடிப்பது போல், அந்த ஊரில் வண்டியில் தண்ணீர் வரவழைப்பர். விசேஷ நாட்களில் சில குடும்பங்களுக்கு அதுவே தொழிலாகவும் இருந்தது. இவையெல்லாம். அப்போது - திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி ஊரின் நிலைமை இப்போதே, அந்த ஊர் முற்றிலும் மாறிவிட்டது. இப்போது வ.உ.சி மாவட்டத்தின் கீழ் உள்ளது.

    இன்றைக்கும் கோவில்பட்டி கடலை மிட்டாய் பிரசித்தி பெற்று விளங்குகிறது. கோவில்பட்டியின், முந்தைய நிலைமையை மனதிற்கொண்டு, இந்த கதை நடைபோடுகிறது.

    கோவில்பட்டி அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பக்கத்து கிராமங்களான திட்டக்குளம், வெங்கடாசலபுரம், படர்ந்தபுளி, அப்பநேரி போன்ற கிராமங்களிலிருந்து - பெண்கள் வந்து படித்தனர்.

    அப்போது, பெண்களுக்கென்று கல்லூரி இல்லாததால் சில பெண்கள், குற்றாலம் பராசக்தி கல்லூரிக்கு சென்று படித்தனர். அப்படி படித்த பெண்களில் ஒருத்தி தான். நம் கதையின் நாயகி மகாலட்சுமி.

    மகாலட்சுமியின் வீடு, பிள்ளையார் கோவில் தெருவில் இருந்தது. அவளுடைய அப்பா பெருமாள் நாடார். அம்மா உண்ணாமலை. அவர்களின் ஒரே செல்லப் பெண் தான் மகாலட்சுமி பெயருக்கேற்றாற்போல் நல்ல நிறத்துடனும், வசீகரமான முகத்துடனும் இருந்தாள். அவளுக்கு பாட்டு என்றால் மிகவும் பிடிக்கும். சங்கீதம் கற்றுக் கொள்ளுமளவுக்கு வசதி இல்லை. எனவே சினிமா பாட்டுக்களை எப்போதேனும் பாடுவாள். குரல் இனிமையாக இருந்தது.

    பக்கத்து ஊரான வெங்கடாசலபுர கிராமத்தில் தன் பாட்டியுடன் வசித்து வந்தாள். சுகன்யா சிறு வயதிலே, பெற்றோரை இழந்துவிட்ட சுகன்யாவை தாய் வழி பாட்டி தான் வளர்த்து வந்தார். அவர்களுக்கு சொத்து என்று சொல்லிக் கொள்ள பெரிதாக ஏதுமில்லை. தங்கியிருந்த சின்ன ஓட்டு வீடு தான். அவளின் தாத்தா அரசாங்க உத்தியோகம் பார்த்ததில், மாதா, மாதம் பென்ஷன் வந்தது. அதை வைத்துக்கொண்டு, கிராமத்தில் நல்ல விதமாக வாழ்ந்தனர்.

    2

    பக்கத்து ஊரான கோவில்பட்டியில், அரசினர் மகளிர் பள்ளியில் S.S.L.C வரை படித்தாள். அவள் படிக்கும் காலத்தில் S.S.L.C., PUC என்று தான் இருந்தது. பின்னர் தான் +1, +2 என்றும் வந்தது. சுகன்யா, சும்மா இருக்காது. ஓய்வு நேரங்களில் அங்குள்ள கோவில்களுக்கு சென்று மாலை தொடுத்து கொடுப்பாள். வித விதமான மாலைள் கட்டுவதில், கை தேர்ந்தவளாக, சில கடைகளுக்கும், மாலை கட்டி கொடுக்க, அதன் மூலம் சிறு வருமானம் வந்தது.

    பாட்டிக்கு தான் இருக்கும் போதே, பேத்தியை ஒரு நல்ல இடத்தில் கட்டி கொடுத்துடனும். பாவம், இந்த பட்டிக்காட்டில் அவளை கட்டி கொடுக்க விருப்பமில்லை பாட்டிக்கு, தனக்கு பின் தன் பேத்தி கஷ்டப்படக்கூடாது என எண்ணி, அந்த ஓட்டு வீட்டை தன் பேத்தி பெயருக்கு எழுதி வைத்து விட்டாள். இப்படியே சில ஆண்டுகள் கழிய பாட்டிக்கு உடல் நலமில்லாமல் போனது. பருவ எழில் இருந்த போதும், சுகன்யா, அந்த அழகை சரிவர பேணாது. கிராமத்து பட்டிக்காட்டு பெண் போலவே இருந்தாள்.

    தன் பேத்தியை பற்றியே கவலைப்பட்ட பாட்டிக்கு திடீரென, தூரத்து சொந்தமான, சகுந்தலாவின் நினைவு வர, தன் பேத்தியை அழைத்து, தன்னுடைய தகர பெட்டியிலிருந்த, சகுந்தலாவின், விலாசத்தை தேடி எடுக்கச் செய்து, தனக்கு உடல் நிலை சரியில்லை. உடனே தன்னை வந்து பார்க்கும்படி தன் பேத்தியின் உதவியில், ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1