Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Urimai Meeral Sirukathai Thoguppu
Urimai Meeral Sirukathai Thoguppu
Urimai Meeral Sirukathai Thoguppu
Ebook198 pages1 hour

Urimai Meeral Sirukathai Thoguppu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொன் குலேந்திரன் இலங்கை யாழ்ப்பாண இராட்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணம் பரியோவான் (St Johns College)) கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று, கொழும்பு பல்கலைகத்தில் பௌதிகத்துறையில் சிறப்புப் பட்டம் பெற்று, அதன் பின் தொலை தொடர்பபில் பொறியியல் பட்டம் பெற்று, சந்தை படுத்தலில் (Chartered Institute of Marketing) பிரித்தானியாவில் பட்டம் பெற்றவர்.

பத்து வயதில் சிறு கதைகள் எழுதத் தொடங்கி, அதன் பின் பல கலாச்சர மக்களோடு பழகியதால் இவரது கதைகள் பல பரிமாணத்தில் உருவாக்கப் பட்டவை. அறிவியல் கதைகளும் உருவகக் கதைகளும், மனித உரிமை மீறளோடு தொடர்புள்ள பல சிறுகதைகள் பொன், நல்லூரான். விஷ்வா ஆகிய புனை பெயர்களில் எழுதி வருகிறார்.

ஒன்றாரியோ மாகாணத்தில் வெளிவரும் தமிழ் ஆங்கில பத்திரிகைகளுக்கும் எழுதி வருகிறார்; ஆங்கலத்திலும் தமிழிலும் பல நூல்களும் மின் நூல்களும் வெளியிட்டுள்ளார். பல இணயத்தளங்களுக்கும் எழுதி வரும் இவர் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பீல் பகுதி தமிழ் முதியோர் சங்கத்தின் தலைவராக 4 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

Languageதமிழ்
Release dateDec 8, 2017
Urimai Meeral Sirukathai Thoguppu

Read more from Pon Kulendiren

Related to Urimai Meeral Sirukathai Thoguppu

Related ebooks

Reviews for Urimai Meeral Sirukathai Thoguppu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Urimai Meeral Sirukathai Thoguppu - Pon Kulendiren

    http://www.pustaka.co.in

    அப்பாவி ஆன்மாக்களின்

    வேதனைகள்

    (இலங்கையின் மனித உரிமை மீறல் கதைகள்)

    Appavi Aanmakkalin Vethanaigal

    (Ilangaiyin Manitha Urimai Meeral Kathaigal)

    Author:

    பொன் குலேந்திரன்

    Pon Kulendiren

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pon-kulendiren

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியர் பேனாவில் இருந்து

    1. பொதுகைக் கப்பல் அகதி

    2. காணி நிலம் வேண்டும்

    3. வெள்ளை வான்

    4. சாதி

    5. கோவில் பிரவேசம்

    6. முடிவு

    7. கரும்புலி

    8. அன்று பெய்த மழையில்

    9. எழுத்தாளன் ஏகாம்பரம்

    10. பஞ்சிகாவத்தை பெரேரா

    11. கர்மாவின் பிரதிபலிப்பு

    12. தெருப்பாடகன்

    13. விதி

    14. ஆணாதிக்கம்

    15. உறையும் தோட்டாக்கள்

    16. போர்க் கைதி

    ஆசிரியர் பேனாவில் இருந்து

    இலங்கையின் மனித உரிமை மீறல்களைப் பற்றி பக்கம் பக்கமாக ஐநா சபை அறிக்கைகள் பிரசுரித்திருக்கிறது. பல தடவை ஜெனிவாவில் பல நாடுகள் கூடி இதை பற்றி விவாதித்திருக்கிறார்கள். தொடர்ந்தும் விவாதிக்கிறார்கள். அப்படி இருந்தும் பல மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இலங்கை தன்னை ஒரு பெளத்த நாடென்று பிரகடனப் படுத்தினாலும். மனித உரிமை மீறல்களில் முதலிடம் வகிக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. இது படிப்பது சிவபுராணம் இடிப்பது சிவன் கோவில் போன்றது.

    1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றப் பின் நடந்த இனக்கலவரங்கள், அரசியல் கொலைகள், அடுக்குமுறைச் சட்டங்கள், கல்வி. தரப்படுத்தல், சிங்களம் மட்டும் சட்டம் தமிழ் பகுதிகளில் சிங்கள குடியேற்றம். சிங்கள மொழி தெரிந்திருந்தால் மட்டுமே அரசில் பதவி உயிர்வு போன்றவை, போலீஸ். இராணுவம். விமானப் படை, கப்பல் படை போன்றவற்றில் 99 விகிதம் சிங்களவர்கள். இவை சிறுபான்மை இனமான இலங்கையில் தமிழ் பேசும் இனத்தை வெகுவாகப் பாதித்தது. அதன் விளைவே தனி நாடு கேட்டு ஈழத்துப் போர் வெடித்தது. அதனால் ஆயிரக் கணக்கான பல இனமக்கள் உயர் இழந்தனர். தாம் பிறந்த நாட்டிலேயே அகதிகளானார்கள் தமிழ் பேசும் மக்கள். அதோடு மட்டுமல்லாது அபயம் தேடி அகதிகளாய் பிற நாட்டுகளுக்குப் புலம் பெய்ர்ந்தனர். இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பிய பல தமிழ் பேசுபவர்கள் பிரஜா உரிமை இழந்தனர். தமிழர் வாழ்ந்த காணிகள் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. சாதி வேற்றுமை யாழ்ப்பாணத்தில் ஒருகாலத்தில் வெரூண்டி இருந்தது. தாழ்த்த பட்ட மக்களின் உரிமை உயர் சாதி மக்களால் மறுக்கப்பட்டது. ஈழப் போரினால் இதில் மாற்றம் ஏற்பட்டது இது போன்ற மனித உரிமை மீறல்களால் அப்பாவி ஆன்மாக்கள் வேதனைகளுக்கு ஆளாகினர். அதுவே இச் சிறு கதைத் தொகுப்பு உருவாகக் காரணம்.

    வாசியுங்கள். பகிருங்கள்.

    *******

    1. பொதுகைக் கப்பல் அகதி

    ஈழத்து போர் 1980 இல் நடந்து கொண்டிருந்த காலம் அது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும். கொழும்பிலும் மனித உரிமை மீறல்களுக்கு உற்படுத்தப் பட்டனர். இலங்கைக்கு 1948 இல் சுதந்திரம் கிடைத்தாலும் சிறுபான்மை இனத்துக்கு சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை. அடிக்கடி இனக்கலவரங்கள் அரசின் ஆதரவுடன் வெடித்தது. 1983 இல் நடந்த இனக்கலவரத்தை இன்றும் தமிழர்கலால் மறக்க முடியாது. அதன் விளைவே ஈழத்து போர். பல தமிழ் மக்கள் அகதிகளாக அபயம் தேடி பிறநாடுகளுக்ளுச் சென்றனர்.

    24 மைல்கள் பாக்கு நீரணையை 24 மைல்கள் தோணிகளில் அகதிகளாக தமிழ்நாடு சென்றவர்கள் பலர். அதிக பணம் கொடுத்து அகதிகள் பிறநாடுகளுக்குச் செல்வது எல்லோராலும் முடியாத காரியம், குறைந்த செலவில் பொதுகை கப்பலில் கனடா சென்ற அகதிகள் பலரின் கதை இது. முப்பத்தைந்து வருட காலத்தில் கனடாவுக்கு அகதிகலாக சென்ற பலர் இன்று படித்து ஆங்கிலம் சரளமாக பேசுபவர்களாக வாழத் தொடங்கினர். தமது கடுமயன உழைப்பினால் தங்கள் திறமையை பாவித்து நல்ல அந்தஸ்தில் வாழ்கிறார்கள். தாம் கனடாவில் வந்து இறங்கியபோது தங்களுக்கு உதவியவர்களை மறக்காமல், அகதிகளாக வந்த பலர் சென்று, உதவியவர்களை சந்தித்து. பரிசுகள் வழங்கி. பழைய அனுபவத்தைப் பேசி மகிழ்ந்தனர்.

    *****

    சமுத்திர இளவரசி என்ற பழைய பொதிகை கப்பலில் அகதிகளாக பயணித்தவர்களில் ஊடக வியலாளர், மின் கருவிகளை திருத்தும் ஒருவர், படித்து பட்டம் பெற்று வேலை இல்லாதவர்கள், கார் மெச்கானிக், வைத்திய துறையில் அனுபவம் பெற்ற ஒருவர், இரு சாரதிகள், இயக்கத்தில் இருந்து வெளியே வந்த போராளிகள். பெண்கள்... சிறியவர்கள் முதியோர் இப்படி பலதரப்பட்ட மக்கள் அந்த அகதிகள் கூட்டத்தில் இருந்தனர். ஒவொருவருக்கும் அகதிகளாக அபயம் தேடி பிற நாட்டுக்கு செல்ல முயற்சித்ததில் ஒரு காரணம் இருந்தது. இக் கூட்டத்தில் எமது கதையின் கதாநாயகன் ராஜா என்று அழைக்கபடும் ராஜலிங்கம் கப்பலில் பயணம் செய்த அகதிகள் கூடத்தில் பலரின் மனதை காவர்ந்தவன். கல்வியைத் தொடரமுடியாத திறமை உள்ள வாலிபர்களில்... சுயமாக கைத்தொழில் செய்து மேலும் முன்னேற முடியாதவர்களில் ராஜாவும் ஒருவன்... இலங்கை இராணுவத்தின் மனித உரிமை மீறல்களுக்கு பயந்த ஆண்களும், பெண்களும். முதியோரும். பல குடும்பங்களும் அபயம் தேடி செல்ல தேந்தது எடுத்த நாடுகளில் அவுஸ்திரேலியா... இங்கிலாந்து, ஐரோப்பியா, கனடா போன்ற நாடுகளாகும். வசதி படைத்தவர்கள் ஏஜென்சிக்கு அதிக பணம் கொடுத்து விமானம் மூலம் பல நாடுகளில் தங்கிச் செல்லும் வழியைக் கையாண்டார்கள். பணம் வசதி குறைந்தவர்கள் பொதிகைக் கப்பலில் பொதிகைகலோடு பொதிகைகலாய் குறைந்த செலவில் பயணம் செய்யும் வழியைக் கையாண்டவர்களில். கிளிநொச்சியை சேர்ந்த ராஜலிங்கம் என்ற ராஜாவும் ஒருவன்.

    இருபது வயதான ராஜா, புத்திசாலியான, அமைதியான மாணவன். சிறு வயதிலேயே மின்சார உபகரணங்களைத் திருத்தும் ஆற்றல் படைத்தவன். தான், ஒரு மின்சார பொறியியலாளனாக தகுதி பெறவேண்டும் என்ற இலட்சியத்துடன் பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கு காத்திருந்தான். ராஜா தனது கைகளையும் மூளையையும் பாவித்து எந்த ஒரு சிக்கலான மின் கருவியினது பிரச்சனையும் சில நிமடங்களில் தீர்த்து வைக்கும் திறமை வாய்ந்தவன். சிவலிங்கம் குடும்பத்துக்கு ராஜா மூத்த மகனாக இருப்பதால், அவன் ஒரு மின் பொறியியலாலனாவான் என்ற நம்பிக்கை பெற்றோருக்கு இருந்தது... அவனுக்கு தன் சகோதரி செல்வியை ஆதரிக்கும் கடமை வேறு அவனுக்கு இருந்தது செல்வி அவனுக்கு மூன்று வயது இளையள், அவளைத் திருமணம் செய்துவைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அவள் வாழ்வதை உறுதிப்படுத்துவது அவனது நோக்கமாய் இருந்தது. தான் வெளிநாட்டில் குடியேறியவுடன், அவளுக்கு நிதியுதவி அளித்து, அவளை தான் வாழும் நாட்டிற்கு வரவழைப்பது அவன் திட்டம்... ராஜாவின் பெற்றோர்கள் தங்கள் மகனின் தலைவிதி ஈழத்துப் போருடன் மாறும் என்று எதிர்பார்க்கவில்லை.

    *****

    ராஜாவுக்கு ஆஸ்துமா வியாதி, ஆறு வயது முதல் கொண்டே இருந்து வந்த படியால் சில சமையம் மூச்சு விட கஷ்டப்படுவான்... ராஜா தனது நோக்கை அடைய நோயோடு போராட வேண்டியிருந்தது. மருத்துவ வசதிகள் குறைந்த காலம் அது. ஈழத்து போர் நடந்து கொண்டிருந்த காலமாகையால் விடுதலைப் புலிகளுக்கு அவனது தொழில்நுட்ப திறமை அவர்கள் பாவிக்கும் இயந்திரங்களை திருத்த முக்கியமாகத் தேவைப் பட்டது. அவர்கள் அவனை அணுகி அவன் சேவையை இயக்கத்துக்குத் தரும்படி கேட்டார்கள். தான ஆரோக்கியமான இளைஞன் அல்ல, ஆஸ்துமா வியாதியால் கஷ்டப் படுபவன் ஆகையால்; அவர்களோடு சேர்ந்து சேவை செய்வதற்கு தகுதியற்றவன் என்று அவர்களிடம் ராஜா கூறினான்.

    ஒரு முறை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு சிக்கலான மின்சார வேலைக்கு அவர்களுக்கு ராஜா உதவ வேண்டும் என்று வலியுறுத்தினார். அவனால் மறுக்க முடியவில்லை பெற்றோர்களின் அனுமதியோடு அடிக்கடி இயக்கத்தின் மின்சார இயந்திரங்களை அவர்கள் கேட்டபோது பழுதுபார்த்தான்.

    ராஜாவின் பெற்றோரின் குடும்பத்தின் பகைவர்கள், ராஜா புலிகள் இயக்கத்துக்கு உதவுவதை இலங்கை இராணுவத்துக்கு சொல்லியதால், புலிகள் இயக்கத்தில் ராஜா உறுப்பினராக இருப்பதாக இராணுவம் சந்தேகித்தது., ராஜா இயக்கத்துக்கு உதவுவதை பற்றி ஒரு இராணுவ மேஜர் அறிந்ததால், அவனது பெற்றோரை அடிக்கடி சந்தித்து. விசாரணை செய்து துன்புறுத்த தொடங்கினார்.

    இராஜலிங்கத்தின் தந்தை சிவலிங்கம் தனது மகன் இலங்கையில் எதிர்கொள்ளும் அபாயத்தை சகித்துக்கொள்ள முடியாது என்பதை உணந்தார், இறுதியாக தனது மகனை பாதுகாப்பு காரணங்களுக்காக கனடாவுக்கு அனுப்பி வைக்க முடிவு எடுத்தார், ராஜா கனடாவில் உள்ள அவனின் தாய் மாமாவின் உதவியுடன் ராஜா தன திறமைகயையும் அறிவையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிவலிங்கம் முடிவு செய்தார்.

    பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த ஒரு அகதிகள் குழு தாய்லாந்தில் இருந்து ஒரு சரக்குக் கப்பல் மூலம் கனடா செல்ல திட்டமிட்டது., கனடாவை கப்லில் அடைய பல ஆயிரம் மைல்கள் தூரத்துக்குப் பயணிக்கும் சிரமங்களை எதிர்கொள்ள தயாராக இருந்தனர்... அவர்கள் பயணிக்கும் சமுத்திர இளவரசி பல நாடுகளின் துறைமுகளை தழுவிச் செல்வதால் பயணத்தில் ஏற்படும் கஷ்டங்களை நன்கு அறிந்திருந்தனர்,

    சிவலிங்கத்தின் நண்பரான செல்லையா, மாலைதீவு கப்பல் நிறுவனத்தில் பணிபுரிபவர். அவர் ஒரு சரக்குக் கப்பலில் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளை அனுப்பும் ஒரு ஏஜென்சியுடன் தொடர்பு கொண்டார். அகதிகளை இலங்கையிலிருந்து கப்பலில் வெளி நாடுகளுக்கு அனுப்புவது கடினமாக உள்ளது, ஏனென்றால் கப்பலில் பயணிப்பதற்கு முன்னர், பயணிகளிடமிருந்து பணம் பெற வேண்டும். கப்பல் இடைநிறுத்தப்பட்ட இடங்களில் தொடர்பு இடங்களுக்கு தேவையான கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

    சிவா, உங்கள் மகனை கனடாவுக்கு அனுப்ப முடிவு செய்தீர்களா? வியாபாரத்தின் மூலம் கமிஷனைப் பெறுவதில் செல்லயா மிகவும் ஆர்வமாக இருந்தார்.

    செல்லையா, நான் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறாய்? பலர் கப்பல் மற்றும் விமானம் மூலம் அகதிகளாக கனடா சென்றிருக்கிறார்கள். என் மகன் ஒரு திறமையான பையன் மற்றும் அவனால் ஆங்கிலத்தில் உரையாட முடியும். ஒரு பொறியாளராக பட்டம் பெறக் கூடிய தகுதி அவனுக்கு இருந்தும், இந்த நாட்டில் திறமையான மாணவர்களுக்கு இடமில்லை., அவன் தனது இலட்சியத்தை சந்திக்க வேண்டும். கனடாவிலிருந்த அவரது மாமா என்னிடம் பேசினார், என் மகனைப் போன்ற திறமையான இளைஞர்களுக்கு கனடாவில் நல்ல வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

    "நான் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டேன் என்று உனக்குத் தெரியுமா? கனடாவில் அகதிகளாக ஒரு தாய்லாந்து சரக்குக் கப்பலில் அகதிகள் குழு செல்கின்றனர். அக் கப்பல் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவவுக்கு செல்வதாக கேள்விப்பட்டேன். அந்த கப்பலில் வசதிகள் இல்லை. அந்த கப்பலில் சுமார் 00 அகதிகள் பயணம் செய்வதாக எதிர்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு நல்ல

    Enjoying the preview?
    Page 1 of 1