Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

V.O. Chidambaranar Vazhkkai Suvadugal
V.O. Chidambaranar Vazhkkai Suvadugal
V.O. Chidambaranar Vazhkkai Suvadugal
Ebook137 pages51 minutes

V.O. Chidambaranar Vazhkkai Suvadugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழகத்திற்கென்று தனியொரு பங்குண்டு. தேசிய விடுதலைக்காக பாடுபட்ட தமிழர்களில் வ.உ. சிதம்பரனார் அவர்களுக்கு தனியொரு இடமுண்டு. அவர் மெத்தப் படித்தவர். எழுத்தாற்றல் மிக்கவர். வீரமும் தீரமும் மிக்கவர். அவரைப்பற்றியும், அவர் செய்த தியாகங்களைப் பற்றியும், அவரது வாழ்க்கைப் பாதையின் ஒவ்வொரு பக்கங்களையும் நுணுக்கமாக அறிந்து படைக்கப்பட்ட முழுமையான நூல். வாருங்கள் வாசித்து அறிந்து கொள்ளுவோம்..!

Languageதமிழ்
Release dateOct 21, 2023
ISBN6580122808850
V.O. Chidambaranar Vazhkkai Suvadugal

Read more from Kalaimamani Sabitha Joseph

Related authors

Related to V.O. Chidambaranar Vazhkkai Suvadugal

Related ebooks

Reviews for V.O. Chidambaranar Vazhkkai Suvadugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    V.O. Chidambaranar Vazhkkai Suvadugal - Kalaimamani Sabitha Joseph

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வ.உ. சிதம்பரனார் வாழ்க்கைச் சுவடுகள்

    V.O. Chidambaranar Vazhkkai Suvadugal

    Author:

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha Joseph

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-sabitha-joseph

    சமர்ப்பணம்

    புதிய தலைமுறையின் திசைகாட்டி

    பத்திரிகையாளர், எழுத்தாளர்

    மாலன் அவர்களுக்கு...

    புரட்சி ஓங்கும்

    வியாபாரிகளாக இந்தியாவுக்குள் நுழைந்த வெள்ளையர்கள், கொள்ளையர்களாய் மாறி இந்தியாவையே ஆள ஆரம்பித்து இந்தியர்களை அடிமைகளாய் நடத்தினர்.

    கப்பல் தொழில் செய்வது மூலமே அந்த வர்த்தக கொள்ளையர்களை விரட்டி அடிக்க முடியும் என நினைத்து வீரச் சிதம்பரனார் கப்பல் வர்த்தகத்தைத் தொடங்கினார்.

    சிதம்பரனாரின் எழுச்சி தங்களின் வீழ்ச்சிக்குக் காரணமாகிவிடும் என்று அஞ்சிய வெள்ளையர்கள் சூழ்ச்சி வலை பின்னினர். 1908-ஆம் ஆண்டு கப்பல் ஓட்டிய தமிழர் சிதம்பரனார்மீது ராஜத் துரோக குற்றம்சாட்டி கூண்டிலேற்றினர்.

    அடிஷனல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் வழக்கு ஆரம்பமாகி, பின்னர் செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றலாகி, சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் (40 ஆண்டு) தண்டனை விதித்த அநீதி உலகறிந்த உண்மையாகும். அப்போது திருநெல்வேலி ஜில்லா செஷன்ஸ் நீதிபதியாயிருந்த ஏ. எஃப். பின்ஹே அளித்த தீர்ப்பின்போது:

    சிதம்பரம் பிள்ளையின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்தப் பிணம் உயிர்பெற்று எழும்; அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிஷங்களில் விடுதலை பெறும்; புரட்சி ஓங்கும் என்று சிதம்பரனாரின் வீரத்திற்கு நற்சான்று அளித்து குறிப்பிட்டிருந்தார்.

    நன்றி மறவா நல் உள்ளம்

    தமது வாழ்நாள் எல்லாம் திருக்குறளைப் போற்றிவந்த, குறள்நெறியில் வாழ்ந்த பெருமகனார் சிதம்பரனார், 102, 108 குறள்படி நன்றி மறவா நல் உள்ளம் கொண்டவர்.

    ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்ற வள்ளுவர் வாக்கை ஏற்று, தனக்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றியாக தமது பிள்ளைகளுக்கு அவர்களின் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தவர் வீரச் சிதம்பரனார்.

    ஞானசிகாமணி முதலியார் என்ற நண்பர் தமக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்ததின் நினைவாக தமது மூத்த மகளுக்கு ஞானவல்லி எனப் பெயரிட்டார்.

    தனது குடும்பத்திற்குப் பெரிதும் உதவிசெய்த சி. த. ஆறுமுகம் பிள்ளை அவர்களின் பெயரைத் தன்னுடைய இரண்டாம் மகனுக்குச் சூட்டினார்.

    கோவை வழக்கறிஞர் சி. கே. சுப்பிரமணிய முதலியார் தமக்காக வழக்குகளில் விவாதித்ததற்காக, அவரின் பெயரை மூன்றாவது மகனுக்குச் சூட்டினார்.

    தில்லையாடி வேதியப்பிள்ளை செய்த உதவிக்காக தன்னுடைய மகளுக்கு வேதவல்லி எனப் பெயரிட்டார்.

    சிறையிலிருந்து விடுதலை பெற்றப்பின்னர் வக்கீல் சன்னது மீண்டும் கிடைக்க உதவிபுரிந்த நீதிபதி வாலஸ் துரையின் நினைவாக, தமது கடைசி மகனுக்கு வாலேஸ்வரன் என்றும் பெயரிட்டு தமது நன்றி மறவா நல் உள்ளத்தைக் காட்டியிருக்கிறார் சிதம்பரனார்.

    வக்கீல் அய்யா வீடு

    நகரத்தில் கிராமத்தில், ஊர்களில் சில குடும்பங்களுக்கு அடையாளமாக இது டாக்டர் வீடு, வாத்தியார் வீடு, எஞ்சினியர் வீடு, ஜமீன்தார் வீடு என குறிப்பிட்டுச் சொல்வார்கள்.

    கப்பலோட்டிய தமிழர் சிதம்பரம்பிள்ளை அவர்கள் வழக்கறிஞர், அவரது பாட்டனார், தந்தையார், பெரிய தந்தையார், ஆகியோர் எல்லோருமே பரம்பரையாக வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். அதனால் சிதம்பரனாரின் இல்லத்தை அங்குள்ள மக்கள் ‘வக்கீல் அய்யா வீடு’ என்றே மரியாதையாக குறிப்பிட்டு வந்தனர்.

    ஒரு சமயம் ஒட்டப்பிடாரம் சப்-மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் வாதி சார்பில் சிதம்பரனாரும், பிரதிவாதி சார்பில் அவரது தந்தை உலகநாதரும் வழக்காடினார்களாம். முடிவில் வெற்றி மகனுக்கே கிட்டியது. இதைக் கண்டு தந்தை பூரித்தார். இந்த விஷயம் ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில் மிகவும் வியந்து பேசப்பட்டதாம்.

    சரித்திரம் ஆரம்பம்

    தமிழர்கள் உள்ளத்தால் வ.உ.சி. என அன்புடன் அழைக்கும் தேச பக்தர், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளை என்று நாடு போற்றும் நல்லவர் சரித்திரம் 1872-ம் ஆண்டு செப்டம்பர் 5-ல் தொடங்கியது.

    திருநெல்வேலி மாவட்டம் ஓட்டப்பிடாரம் என்னும் கிராமத்தில் சிதம்பரம் பிள்ளை தோன்றினார். தந்தையார் வழக்கறிஞர் உலகநாதம்பிள்ளை-தாயார் பரமாயி அம்மாள்.

    சிதம்பரனாருக்குப் பின் பிறந்தவர்கள் ஆறு பேர். அவர்களில் ஆண்கள் நால்வர், பெண்கள் இரண்டு பேர்.

    இனிய இல்லற வாழ்வு

    1894 பிப்ரவரியில் வ.உ. சிதம்பரனார் வழக்கறிஞராக தேர்ச்சி பெற்றார். பின்னர் தமது பரம்பரைத் தொழிலான வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கி சிறப்பாகச் செய்து வந்தார்

    1895-ஆம் ஆண்டு பிப்ரவரி வ.உ.சி. வள்ளியம்மை என்னும் நங்கை நல்லாளை வாழ்க்கைத் துணையாகக் கரம் பற்றினார். திருக்குறளின் வாழ்க்கைத் துணை நலத்துக்கு எடுத்துக்காட்டாக வள்ளியம்மை விளங்கினார்.

    நிறைவாய் தொடர்ந்த அவர்களது இல்வாழ்க்கையில் திடீர் பேரிழப்பாய் ஆறாம் ஆண்டில் வள்ளியம்மை காலமானார். அவரது பிரிவு பிள்ளை அவர்களுக்கு பெரும் துயரம் தந்தது. பின்னர் வள்ளியம்மையாரின் குடும்பத்தைச் சார்ந்த மீனாட்சி அம்மையை மணம்புரிந்து கொண்டார் வ.உ.சி.

    சிதம்பரனார் மீனாட்சி அம்மை தம்பதிகளுக்குப் பிறந்த நல் மக்கட் செல்வங்கள். ஆண்மக்கள் நால்வர். பெண்மக்கள் நால்வர். 1) உலகநாதன் 2) ஆறுமுகம் 3) ஞானவல்லி 4) வேதவல்லி 5) ஆனந்தவல்லி 6) மரகத வல்லி 7) சுப்பிரமணியன் 8) வாலேஸ்வரன் ஆகியோர்.

    பன்முக ஆளுமையாளர்

    வீரச்சிதம்பரனார் ஒரு வழக்கறிஞர் மட்டுமல்ல, பன்முக ஆளுமையாளர். தன் வரலாற்றை முழுமையாக முதல் முதலாக தமிழில் கவிதை நடையில் எழுதியவர். வ.உ.சி.

    அவர் ஒரு கவிஞர். எழுத்தாளர், பத்திரிகையாளர், மொழிப்பெயர்ப்பாளர், பதிப்பாசிரியர், தொழிலாளத்தலைவர், விடுதலைப் போராட்ட வீரர், வெள்ளையனுக்கு எதிராய் கப்பலோட்டிய தமிழர், சிறந்த உரை ஆசிரியர் என பன்முக ஆளுமை கொண்டு சிறந்து விளங்கியவர்.

    நினைவில் வாழும் நல்லவர்

    பல ஆண்டுகளுக்கு முன்னர், பினாங்கு துறைமுகத்தில் ‘தினமணி’ துணை ஆசிரியர் ஏ. ஜி. வெங்கடாச்சாரியாரும் சில நண்பர்களும் ஒரு நாட்டுப் படகில் சென்றனராம். படகோட்டி காயல் பட்டணத்தைச் சேர்ந்த வயோதிக முஸ்லீம்.

    தமது படகில் பிரயாணம் செய்பவர்கள் தமிழ் நாட்டவர்கள் என்பதை அறிந்ததும் அவர் மகிழ்ச்சியோடு தம்முடைய வாழ்க்கைச் சரித்திரத்தை கூறத் தொடங்கினார்.

    இந்த தண்ணிப்பழக்கம் (படகோட்டும் வேலை) எனக்கு நெடுநாளாக உண்டு. அந்த மகான் சிதம்பரம் பிள்ளை முதலில் இழுத்து விட்டாரு, அவர் காலமாயிட்டாராமே? என்று வருத்தத்துடன் கேட்டாராம்.

    முதன்முதலில் கப்பலோட்டிய தமிழரின் கீழ் பணியாற்றிய தமிழர்கள் சிலர் இப்போது மலேசியாவில் உழைத்து வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், குளிர்ந்த வேளையில் அவரை தினமும் நினைத்துக் கொள்வதாகவும் மனம் உருக கூறினாராம், அந்தப்படகோட்டிபெரியவர் இப்படி பல மனிதர் நினைவுகளில் வாழ்கிறார். வ.உ.சி.

    நானும் ஒருவன்

    1935-ஆம் ஆண்டு டாக்டர் ராஜேந்திர பிரசாத் (இந்தியாவின் முதல் ஜனாதிபதி) அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தார். அப்போது தென்னாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தூத்துக்குடிக்கு வருகை புரிந்தார்.

    அப்பொழுது சிதம்பரம் பிள்ளை அவர்கள் நோய்வாய்ப்பட்டு தம்முடைய இல்லத்திலே ஓய்வில் இருந்தார். டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் அதைக் கேள்விப்பட்டதும் வ.உ.சி. அவர்களின் வீட்டுக்குச் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு விடைபெற்று சென்றார்.

    அன்றையதினம் மாலையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் பேசும்போது சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழும் தூத்துக்குடிக்கு வரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது, அவர் சிறை சென்றதாக பத்திரிகைகளில் பார்த்து தேசாபிமான ஆர்வம் கொண்டவர்களில் நானும் ஒருவன் என்று குறிப்பிட்டார்.

    சிதம்பரனார் ஊர்க்காரரா?

    தூத்துக்குடி ஏ. சி. பால்நாடார் ஒரு வழக்கறிஞர் ரசிகமணி டி. கே. சி. யின் அன்பர்: அவர் 1936-ஆம் ஆண்டில் கொடைக்கானலுக்குச் சென்றிருந்தார். அவர் தங்கியிருந்த இடத்தில் அறிமுகமில்லாத ஆங்கிலேயர்களும் சில இந்தியர்களும் தங்கியிருந்தனர். அவர்களிடம் நாடாரை அறிமுகம் செய்துவைத்து ‘இவர் தூத்துக்குடி

    Enjoying the preview?
    Page 1 of 1