Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Annal Ambedkar
Annal Ambedkar
Annal Ambedkar
Ebook60 pages20 minutes

Annal Ambedkar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார். இந்தியா எனும் நாட்டில் காலம் காலமாக இருந்து வந்த மூடநம்பிக்கைகள், தீண்டாமை மற்றும் அடக்குமுறைகள் இவற்றையெல்லாம் உடைத்தெறிந்த அம்பேத்கரின் வரலாறு ஆகச்சிறந்ததாகும்.

இவர் வாழ்வில் சந்தித்த வலிகள் புறக்கணிப்புக்கள் கொஞ்சமல்ல. இவரது வாழ்க்கை வரலாறுகள், சாதனைகள் இவர் ஆற்றிய பணிகள் என்பனவற்றை இக்கதையில் காணலாம்.

Languageதமிழ்
Release dateMar 19, 2022
ISBN6580122808201
Annal Ambedkar

Read more from Kalaimamani Sabitha Joseph

Related authors

Related to Annal Ambedkar

Related ebooks

Reviews for Annal Ambedkar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Annal Ambedkar - Kalaimamani Sabitha Joseph

    https://www.pustaka.co.in

    அண்ணல் அம்பேத்கர்

    Annal Ambedkar

    Author:

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha Joseph

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    உலகத் தலைவர்

    வெளிச்சம் வந்தது

    கலங்க வைத்த கல்விக் கூடம்

    நிழலாய் தொடர்ந்த தீண்டாமை

    மீன் அங்காடியில் திருமணம்

    மேற்படிப்புக்கு வழி...?

    அமெரிக்காவில் அம்பேத்கர்

    மீண்டும் சோதனைக்காலம்

    தேம்பி அழுத அம்பேத்கர்

    கல்லூரி பேராசிரியர் அம்பேத்கர்

    ஊமைகளின் தலைவன்

    மீண்டும் மேற்படிப்பு

    பட்டங்கள் பதவிகள்

    பாரிஸ்டர் அம்பேத்கர்

    ஏழை மக்கள் தலைவர்

    குளத்தில் நீர் எடுக்க போராட்டம்

    பெண்கள் மாநாட்டில் பொன்மனச் செல்வர்

    கல்விக்கே முதன்மை

    அம்பேத்கர் அமுத மொழிகள்

    புத்தக காதலர்

    அம்பேத்கர் வாழ்க்கைக் குறிப்புகள்

    அண்ணலின் வேண்டுகோள்

    மத மாற்றமே தீர்வு

    உலகத் தலைவர்

    அவர் ஒரு மாபெரும் தலைவர். மாமேதை. உலகப் புகழ் பெற்ற சிந்தனையாளர். எழுத்தாளர். இவையெல்லாம் நாமறிந்த ஒன்றுதான்.

    ஒரு காலத்தில் அவர் சேரியில் பிறந்தவர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே உரிய தலைவர் என்கிற அளவில் ஊடகங்கள் அவரை இருட்டடிப்புச் செய்தன. அல்லது இந்திய அரசியல் உலகம் அவரை ஓரங்கட்டி வைத்திருந்தது. நெருப்பைப் பொட்டலம்கட்டி அடைத்து வைத்திருக்க முடியாது. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் புகழை யாராலும் ஒளித்து வைக்க முடியாது என்பதை 1991-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் அறிய முடிந்தது. அவருடைய நூற்றாண்டு விழா நாடு முழுக்க பெருவாரியான மக்களால் கொண்டாடப்பட்டது. இந்திய அரசும் தவிர்க்க முடியாமல் அதைக் கொண்டாடியது.

    அதன் பின்னர்தான் அவர் பிறந்த மாநிலமான மராட்டிய மண்ணில் மராட்டிய அரசு அவருடைய நூற்றாண்டு விழாவை ஒட்டி அவருடைய பேச்சுக்களையும் எழுத்துக்களையும் அரசுடைமையாக்கி அதைப் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்வதற்கான உரிமையை இந்திய அரசின் மூலமாகப் பெற்று, இன்றைக்கு நாடு தழுவிய அளவில் அவருடைய பேச்சுகளும், எழுத்துக்களும் நாடு முழுக்க மொழியாக்கம் செய்யப்பட்டுப் பரப்பப்படுகின்றன. தமிழில் அவருடைய பேச்சுகளும், எழுத்துக்களும் முப்பது தொகுதிகளுக்கு மேல் உள்ளன. மராட்டி, இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடத்தில் இருக்கின்றது. இந்தியாவில் இருக்கின்ற எந்தத் தலைவருக்கும் இந்தப் பெருமை கிடையாது.

    இந்திய அரசாங்கம்

    Enjoying the preview?
    Page 1 of 1