Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbu Manithar Abdul Kalam
Anbu Manithar Abdul Kalam
Anbu Manithar Abdul Kalam
Ebook65 pages22 minutes

Anbu Manithar Abdul Kalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழகத்தின் இராமநாதபுரத்தில் பிறந்து இன்று அனைவரது மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், இவர் இந்திய விண்வெளி ஆய்வில் இந்தியர்களின் நிலையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர். இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வாழ்கை வரலாறு பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாமா?

Languageதமிழ்
Release dateMay 31, 2022
ISBN6580122808207
Anbu Manithar Abdul Kalam

Read more from Kalaimamani Sabitha Joseph

Related authors

Related to Anbu Manithar Abdul Kalam

Related ebooks

Reviews for Anbu Manithar Abdul Kalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbu Manithar Abdul Kalam - Kalaimamani Sabitha Joseph

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அன்பு மனிதர் அப்துல்கலாம்

    Anbu Manithar Abdul Kalam

    Author:

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha Joseph

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கடைக்குட்டி சிங்கம்

    அன்பில் பேதமில்லை...

    கடற்கரையின் நேசர்

    தந்தை பஞ்சாயத்து தலைவர் - மகன் குடியரசுத் தலைவர்

    காலை எழுந்ததும் படிப்பு

    பெற்றோர் தரும் நன்மை

    கனவு காணுங்கள்

    தந்தையிடம் பெற்ற பாடம்

    மறக்க முடியாத ஆசிரியர்

    லட்சியம் உதயமான நாள்

    உயர்நிலைப் பள்ளி விஜயம்

    அடித்த ஆசிரியர் பாராட்டினார்

    மாணவனை சிறப்பித்த ஆசிரியர்

    மனதில் மணக்கும் ஆசிரியர்கள்

    அக்கா செய்த உதவி

    தாய் மொழியில் படிப்பதே சிறப்பு

    புத்தகங்களை நண்பனாக்கிக் கொள்ளுங்கள்

    உயர்வு தரும் உண்மையை பேசுங்கள்

    அப்துல் கலாமின் ஆளுமைப் பண்புகள்

    அப்துல்கலாமின் அறிவுரைகள்

    இளைஞர்களுக்கு கலாம்

    அன்பால் வென்றவர்

    அன்பு மனிதர் அப்துல்கலாம்

    குர் ஆன்

    உன்னைப் பெற்ற தாய்

    குறள்

    உன்னை வளர்த்த தாய்

    அதனால் தான்

    நீ சாதித்தாய்

    அரசுப் பள்ளியில்

    படித்தவன்

    உருப்பட மாட்டான் என்றார்கள்

    இப்போது எல்லாப் பள்ளியின்

    மாணவர்களும்

    உன் பெயரை அல்லவா

    உருப் போடுகிறார்கள்.

    சாதி மதம் கடந்தவன் நீ

    அதனால்

    எல்லாச் சாதியினரும்

    உன்னை நேசிக்கிறார்கள்

    எல்லா மதத்தவர்களும்

    உன்னை வாசிக்கிறார்கள்...

    கனவு நாயகன் ஆ.ப.ஜெ. அப்துல்கலாமை தன் கவிதை நாயகனாய் வார்த்தைகளில் சிற்பம் வடித்திருக்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

    கவிக்கோ சொன்னது போல சின்ன வயதில் தேடி சென்று குர்ஆன் எனும் மார்க்க கல்வி கற்றவர். அதோடு உலக பொதுமறையாம் குறளும் கற்று தேர்ந்தவர். தம் வாழ்வின் இறுதி நிமிடம் வரை குறள் வழியே வாழ்ந்தவர்.

    கற்க கசடறக் கற்பவை கற்றபின்

    நிற்க அதற்குத் தக.

    எனும் வள்ளுவனின் குறளுக்கு ஏற்ப வாழ்ந்துகாட்டி, அந்தக் குறளுக்கு உருவமும் உயிரும் கொடுத்தவர் மாமனிதர் அப்துல்கலாம் அய்யா அவர்கள் என்பது உலகறிந்த உண்மை.

    நூற்றி முப்பது கோடி இந்தியர்களின் இதயங்களில் இடம்பிடித்த உயர்ந்த மனிதர்.

    உலக நாடுகளில் இந்தியாவை தலைநிமிர வைத்த சிறந்த விஞ்ஞானி.

    எளிமைக்கும், நேர்மைக்கும் முன் உதாரணமான இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர்.

    மாணவ மாணவியர்களுக்குப் படிப்பின் மீதும் தாய் நாட்டின் மீதும் நேசம் பெருகச் செய்த பேராசிரியர்.

    சிறியவர், பெரியவர், முதலாளி, தொழிலாளி, குடும்பத்தலைவர், தலைவி ஆட்டோமேன், டாக்சி மேன், ஆசிரியர்கள், மாணவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1