Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Odi Vaa Iniyaa
Odi Vaa Iniyaa
Odi Vaa Iniyaa
Ebook67 pages33 minutes

Odi Vaa Iniyaa

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajendrakumar
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466732
Odi Vaa Iniyaa

Read more from Rajendrakumar

Related to Odi Vaa Iniyaa

Related ebooks

Related categories

Reviews for Odi Vaa Iniyaa

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Odi Vaa Iniyaa - Rajendrakumar

    1

    இனியா கிளம்பிக் கொண்டிருந்தவள் அவசரமாக கொசுவிக் கொண்டிருந்தவள் -

    தம்பி விக்கியின் (முழுப் பெயர் விக்னேஷ்) அலறலைக் கேட்டதும். கொசுவது நின்றது. சற்றே நிமிர்ந்து அடிவயிற்றில் செருகிக் கொண்டாள் திரும்பிப் பார்த்தாள்.

    ‘ப்த்சு’ அலுப்புடன் இடது இடையை சுற்றிய முந்தானையை வலது பக்கமாக மார்பில் படரவிட்டு தோளில் தவழவிட்டாள்.

    ஹாலுக்கு வந்து நின்றவளுக்கு சிரிப்பு வந்தது.

    கதறிக்கொண்டே ஓடிய விக்கியை துரத்திக்கொண்டிருந்த அம்மா தன்னை கடக்கும்போது -

    இழுத்துப் பிடித்து நிறுத்தினாள்.

    ‘விடு’ அம்மா முரண்டு பிடித்தாள் ‘விடு சொல்றேன்’

    அட சும்மா நில்லும்மா. அவனோட ஓடிபிடிச்சு ஆடற வயசா உனக்கு?

    எங்கிட்ட மாட்டு வெட்றேனில்லையா பாரு.

    அம்மா. சும்மாயிருன்னு சொன்னேன்.

    நீ சும்மாயிருடி குழந்தே. வரவர வாய் ஜாஸ்தியாயிட்டே போகுது கழுதைக்கு, விடு சொல்றேன்.

    விட்டா ஓடிப்போயி பிடிக்கப் போறியா? சும்மார். அப்புறம் ஆஸ்துமா வந்து ராத்திரி பூராவும் அவஸ்தை படுவாய். பட்டென்று கும்பிட்டாள். இப்ப இருக்கிற பிரச்சனைகளே போறும் நீ வேற புதுசா செலவு வைக்காதே.

    அம்மா நின்று ஏகமாக மூச்சு விட்டாள்.

    கொஞ்சம் தள்ளி நின்று கண்ணை பிசையும் சின்ன உருவத்தைப் பார்த்தாள் இனியா.

    வா இங்கே

    மாட்டேன் அம்மா அடிப்பாங்க.

    அடிக்கமாட்டாங்க, சும்மா வா.

    வந்தான்.

    மண்டியிட்டு அமர்ந்தபோது அவன் முகத்துக்கு நேராக இவள் முகம் வந்தது.

    மெலிதாக சிரித்தாள்.

    ஏய். என்ன தப்பு பண்ணினே?

    நான் ஒண்ணும் தப்பு பண்ணல்லே.

    தப்பு பண்ணாம பின்னே அம்மா சும்மாவா அடிப்பாங்க? என்ன நடந்தது சொல்லு.

    சிரித்தாள்.

    பிறகு பேயாக முறைத்தாள் இல்லேன்னா அம்மாவையே கேட்பேன்

    வாணாம்

    பின்னே நீயே சொல்லு

    தயங்கினான்.

    அவள் அவன் தலையை இழுத்து கன்னத்தில் மெதுவாக முத்தமிடவே கொஞ்சமாக தெம்புடன் சொன்னான்.

    இட்லிக்கு சட்னி ரொம்ப காரம்

    கொஞ்சம் நெய் போடுன்னேன்க்கா; அம்மா அடிக்கிறாங்க

    இனியா முகம் மாறினாள்

    துரைக்கு இன்னும் பழைய ஞாபகம்டி; நெய் வேணுமாமில்லே நெய் என்றவள் -

    அம்மா என்று இவள் அதட்டியதும்;

    அடங்கினாள்.

    ஏம்மா நெய் தீர்ந்துப் போச்சா?

    நெய் புட்டியை கழுவி காயவைச்சு ஒரு வாரத்துக்கும் மேலே ஆகுது அம்மா பொலுமினாள். பொறக்கறதுக்கு முந்தி எல்லாமே இருந்தது. இவனும் பொறந்து அப்பாவையும் முழுங்கிட்டு இப்ப பழைய வசதியையும் எதிர்பார்த்தா எப்படி?

    ஷட் அப் மம்மீ.

    என்னை ஏண்டி திட்டறே?

    சின்ன பையனை வைச்சுகிட்டு கண்டபடி பேசாதே. அப்புறம் அவனுக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடும்.

    பின்னே என்னடி நிலைமை புரியாம பேசினா?

    அது புரியற வயசு அவனுக்கில்லே. தவிர இவனை ஏன் குற்றம் சொல்றே? அப்பா செத்ததுக்கு அவரே காரணம்

    இனியா

    அப்புறமா சொத்துக்களை தாரை வார்த்ததுக்கு நீதான் காரணம். இடையில இவனை ஏன் திட்டரே?

    அம்மா வாயடைத்துப் போனாள். கண்ணீருடன் பார்த்தாள்.

    பரிதாபமாக இருந்தாலும் தம்பி பக்கமாக திரும்பிக் கொண்டாள்

    இதபார் விக்கி. நீ நல்ல பையனாம்; அக்கா சொன்னாள் அப்படியே கேட்பியாம் ஓ.கே?

    ஓ.கே.

    சாயங்காலம் வர்றச்ச நெய் வாங்கிட்டு வரேன். இப்ப இட்லிக்கு சட்னி காரம்னா சர்க்கரை தொட்டுகிட்டு தின்பியாம். சரியா?

    Enjoying the preview?
    Page 1 of 1