Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அவளுக்கு பெயர் அக்னி..!
அவளுக்கு பெயர் அக்னி..!
அவளுக்கு பெயர் அக்னி..!
Ebook104 pages32 minutes

அவளுக்கு பெயர் அக்னி..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரும்பிப் பார்ப்பதற்குள் இரண்டு மாத காலம் ஓடிவிட்டது.
 விடிந்தால் கல்யாணம்.
 முதல் நாள் காலை மாப்பிள்ளை வீட்டார் வந்து இறங்கிவிட்டார்கள். சேது பரபரப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். பெரிய மண்டபமாக எடுத்து தடபுடலாகத்தான் கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
 அவர்கள் வந்தது முதல் பார்த்துப் பார்த்து செய்தார்.
 வினாயகத்திடம் 'பந்தா' அளவுக்கு மீறியே இருந்தது.
 அவனைப் பெற்றவர்களே தாங்கும் அளவுக்கு நடந்து கொண்டான் வினாயகம்.
 அங்கு - பெண் பார்க்க வந்தபோது - இருந்த வினாயகத்தின் முகமா இது. முற்றிலும் மாறிப்போயிருந்தது.
 அப்பா கொஞ்சம் கவலையேபட்டார்.
 சுப்பையா கல்யாணத்துக்கு வந்திருந்தார்.
 "என்ன சுப்பையா இது? மாப்ளை முகத்துல ஒரு சிரிப்புகூட இல்லை. அங்கே இருந்த மாதிரி இல்லையே"
 "நான் சொன்னேன் இல்லையா? அவன் அப்படித்தான் இருப்பான். பிஸினஸ்ல நிறைய சம்பாதிக்கறான். படிப்பு சரியா இல்லை. கொஞ்சம் திமிராத்தான் இருப்பான்"
 அவன் பேச்சைக் கேட்டுக்கொண்டு அவனைப் பெற்றவர்களும் ஆயிரம் குறை சொன்னார்கள்.
 பலமுறை நேரடியாக அவமானப்பட்டார்.
 அம்மா பேச்சு வாங்கினாள்தங்கை தாரா வாங்கிக் கட்டிக்கொண்டாள்.
 எப்படியோ நந்தினியின் கழுத்தில் மூன்று முடிச்சு ஏறிவிட்டது.
 மாலை ரிசப்ஷன் தடபுடலாக நடந்தது.
 முதலிரவுக்கு சத்திரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 வினாயகம் மறுத்து விட்டான்.
 ஐந்து நட்சத்திர ஓட்டலில், ஏஸி அறை வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டான்.
 அப்பா பல ஆயிரங்களைக் கொட்டி ஒரு ராத்திரிக்காக அதையும் தயாரித்து விட்டார்.
 இரவு ஒன்பதுக்கு வாசலில் பெரிய கார் வந்து நிற்க, நந்தினியும் வினாயகமும் ஏறிக்கொண்டார்கள்.
 அந்த நட்சத்திர ஓட்டலை நோக்கி நகர்ந்தது.
 நந்தினியும் அப்பா, அம்மா, தங்கை படும் அவமானங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.
 ஆனாலும் பேச முடியவில்லை.
 'சரி! பெரிய பணக்காரர்... அப்படித்தான் இருப்பாரோ, என்னவோ?'
 ஒட்டல் அறைக்குள் நுழைய, ஒரு சொர்க்கலோகம் அங்கே இருந்தது.
 "நீ இப்பத்தான் ஸ்டார் ஓட்டல் வர்றியா?"
 "ம்"
 "நான் பெரும்பாலும் தங்கறதே அங்கேதான். பிஸினஸ்னு வரும்போது இதெல்லாம் சகஜம்"
 நந்தினி பேசவில்லை.
 "சரி! பாலை எடுத்துக் குடு சொல்லித்தரலையா யாரும்?"
 "மன்னிச்சிருங்க"
 எடுத்துத் தந்தாள்.குடித்தான்.
 அவளைக் குடிக்கச் சொன்னான்.
 கட்டிலில் அவளை இழுத்து உட்கார வைத்தான்.
 அதில் கொஞ்சம் முரட்டுத்தனம் இருந்தது.
 நந்தினிக்கு பயமாக இருந்தது.
 'பெண் பார்த்த அன்று இன்னும் கொஞ்சம் மென்மை, நாசூக்கு தென்பட்டதே'
 'அது காணாமல் போய்விட்டதா?'
 'ஏன்?'
 'கணவன் ஆனதும் கனம் கூடிவிட்டதா?'
 அவன் அவளுக்கு ஏதேதோ உபதேசம் செய்தான்.
 சுயபுராணம் காது செவிடாகும் வரை பாடினான்.
 நந்தினிக்குக் கொட்டாவி வந்தது.
 அவன் முரட்டுத்தனமாக அவளை மல்லாத்தி, சம்போகம் நிகழ்த்தினான்.
 நந்தினிக்கு சந்தோஷமாக இல்லை.
 கணவனுடன் கூடிய முதல் சங்கமத்தில் உண்டாகும் கிளர்ச்சியோ, சிலிர்ப்போ இல்லை.
 மாறாக, யாரோ ஒரு முரடன் தன்னைக் கற்பழிப்பதைப்போல இருந்தது.
 முடிந்து விலகினான்.
 உறங்கத் தொடங்கினான் அசிங்கமான குறட்டையுடன்.
 நந்தினி பாத்ரூம் போக முடியாமல் தள்ளாடினாள்.
 உடலும், மனதும் அந்த அளவுக்குப் புண்பட்டுப் போயிருந்தது. அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223406587
அவளுக்கு பெயர் அக்னி..!

Read more from Devibala

Related to அவளுக்கு பெயர் அக்னி..!

Related ebooks

Reviews for அவளுக்கு பெயர் அக்னி..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அவளுக்கு பெயர் அக்னி..! - Devibala

    1

    "நான் தலைதலையா முட்டிக்கிட்டேன். அப்ப நீயும் கேக்கலை! உங்கப்பா வேற உனக்கு வக்காலத்து. இப்பப் பார்த்தியா?"

    நந்தினி பதில் பேசாமல் நின்றாள்.

    அம்மா பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தாள்.

    எனக்கு உன்னை வேண்டாம்னு அவங்க சொன்னதுகூட உறுத்தலை! உன் தங்கச்சி தாராவைக் கேட்டாங்க பாரு! அதுதான் தாங்கலை!

    இப்போதும் நந்தினி பேசவில்லை.

    ஏன் கேட்டாங்க தாராவை? உன்னைவிட உன் தங்கச்சி அழகா? நிச்சயமா இல்லை. நல்ல நிறமா? அதுவும் இல்லை! உயரம், உடம்பு... எல்லாமே உன்னைவிடக் குறைச்சல்தான்! ஆனா... ஆனா... மாசம் முடிஞ்சா, கையில முள்ளங்கி பத்தையாட்டம் மூவாயிரத்து ஐநூறு ரூபா சம்பளம். பட்டப் படிப்பு... வாயைத் திறந்தா மழையா ஆங்கிலம்... உங்கிட்ட இந்த ஏதாவது இருக்கா? ஒண்ணே ஒண்ணாவது இருக்கா?

    நிறுத்துடி!

    அப்பா உள்ளே நுழைந்தார்.

    நானும் கூடத்துல நின்னு கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன். நீ பாட்டுக்கு பேசிட்டே போனா, என்ன அர்த்தம்?

    பெத்த வயிறு பத்திக்கிட்டு எரியுது!

    ஏன் எரியுது?

    நேத்திக்கு வந்து பார்த்துட்டுப் போனவன், ஏழாவது வரன். இவனும், படிக்கலையா, வேலைக்குப் போகலையானு கேக்கறான். என்ன சொல்றது?

    இல்லைனு சொல்லு!

    சரி! இல்லை... இல்லைனு சொல்லிட்டு கடைசியா இல்லைனே ஆயிடும். நந்தினிக்கு வயசு இருபத்தி ஆறு!

    நந்தினி!

    அப்பாவைத் திரும்பிப் பார்த்தாள்.

    உங்கம்மா வறட்டுத் தவளை மாதிரி கூச்சல் போட்டுட்டே இருப்பா. நீ மனசுல வச்சுக்காதேம்மா! உனக்கு நிச்சயமா கல்யாணம் நடக்கும். உன் அழகை, உன்னை... மதிக்கற ஒருத்தன் கட்டாயம் வருவான்.

    அப்பாவும், பொண்ணும் காத்துட்டு இருங்க!

    நிச்சயமாடீ

    எனக்கு வேலை இருக்கு. நான் பேசினா இந்த வீட்ல எடுபடாது. எப்படியோ போங்க

    உள்ளே போய்விட்டாள்.

    அப்பா நந்தினியின் அருகில் வந்தார்.

    உனக்கு வருத்தமாம்மா?

    எதுக்கப்பா?

    அம்மாவும் உன்னைத் திட்டலை! ஒரு ஆதங்கம் பொம்பளைதானே! நீ பெரிசு படுத்திக்காதேம்மா!

    இல்லைப்பா

    நான் டவுனுக்குப் போறேன். நீயும் வர்றியாம்மா?

    சரிப்பா

    இரண்டுபேரும் மாலை ஐந்து மணிக்குப் புறப்பட்டுப் போனார்கள்.

    ஆபீஸ் முடிந்து தாரா ஆறுக்குள் வந்துவிட்டாள்.

    அம்மா காபி கலந்து தந்தாள்.

    ஏம்மா... உன் முகம் என்னவோ போலிருக்கு?

    ஒ... ஒண்ணுமில்லை தாரா!

    அக்காவைப் பெண் பார்க்க வந்துட்டு என்னைக் கேட்டது உன்னை பாதிச்சிருக்கு. இது எந்த வீட்லம்மா நடக்கலை. போகட்டும் இனிமே அவளைப் பெண் பார்க்க வரும்போது நான் ஊரைவிட்டே போயிர்றன். போதுமா?

    அது மட்டுமே காரணமில்லைடி

    பின்ன?

    வர்றவன் எல்லாம் உத்யோகம் கேக்கறான். ரெண்டு சம்பாத்யம் வந்தா நல்லதுதானேனு பாக்கறான். குறை சொல்ல முடியாது. இங்கே உங்கப்பா மட்டுமே சம்பாதிக்கும் போது இருந்ததைவிட இப்ப வசதியா இருக்கு. காரணம், நீ கணிசமா கொண்டு வர்றே

    அம்மா!

    உத்யோகம் இல்லைனா படிப்பைக் கேக்கறான். ஏன்? வேலை தேடிக்க அது உதவும்னு. இவ எட்டாம் கிளாஸ் ஃபெயில்னு எப்படீடி சொல்றது? படிக்க காலத்துல முட்டிக்கிட்டேன். கேக்கலை. அப்பவும் உங்கப்பா செல்லம் குடுத்து கெடுத்துட்டார். பொட்டப்புள்ளைக்கு படிப்பில்லைனா என்னானு கேட்டார். படறம் இப்ப.

    தாரா எழுந்து வந்தாள்.

    பொறும்மா! பதட்டப்படாதே! அக்காவுக்கு அபாரமான மாப்ளை வரபோறார், நீயே ஆச்சர்யப்படும்படியா

    உன் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்.

    அம்மா சன்னமாக அழத் தொடங்கினாள்.

    ஏம்மா அழற?

    தங்க விக்ரம் மாதிரி இருக்கா! என்ன குறை நந்தினிக்கு? பணம், படிப்பு பாக்காம நல்ல ஒரு மனைவி, வீட்டுத் தலைவி வேணும்னு நினைக்கற ஒருத்தனாவது வரமாட்டானா?

    வருவான்மா! கூடிய சீக்கிரம் அது நடக்கும். நீயும் உன் ஆதங்கத்துல அக்ககிட்ட கடுமையாப் பேசிறாதே! ஒரு நேரம் போல இருக்காது. புரியுதா? அடக்கி வாசி

    சரிடீ தாரா

    அவர்கள் இரண்டு பெண்கள்தான் சேதுபதிக்கு. நந்தினி கொஞ்சம் ரிசர்வ்ட் டைப்தான். பத்து வார்த்தை பேசினால், ஒருவார்த்தைதான் பதிலாக வரும். சிரிப்பு அத்தனை சீக்கிரம் வராது. பத்து பேர் இருக்கும் இடத்தில் கலகலப்பாக கலந்து கொள்ளும் குணம் கிடையாது. ஒதுங்கியே நிற்பாள்.

    புத்தகம் படிக்கமாட்டாள்.

    உலக ஞானம் பூஜ்யம்.

    டீவியில் சினிமா போட்டால் மட்டும் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

    சமையலும் வெகு சுமார்தான்.

    ஒரு மாதிரி சோம்பேறிப் பெண்தான்.

    எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இல்லை.

    சங்கீத ஞானமும் குறைச்சல்தான்.

    ஆனால் தாரா?

    நேர் எதிர்!

    அழகு மட்டும்தான் இல்லை.

    மற்ற அத்தனையும் உண்டு.

    இலக்கியச் சர்ச்சை, உலக ஞானம், சங்கீதம், கவிதை... எது பாக்கி?

    நடமாடும் பல்கலைக்கழகம் போல.

    தாராவைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.

    அவளை சைட் அடிக்கும் ஆண்கள் கூட்டம் குறைவு.

    ஆனால் அவளது நட்பில் லயித்து, அவளிடம் பேசத் துடிக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1