Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaanal Neerum Pournami Nilavum
Kaanal Neerum Pournami Nilavum
Kaanal Neerum Pournami Nilavum
Ebook153 pages1 hour

Kaanal Neerum Pournami Nilavum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அருகில் சென்றால் தான் அது கானல் நீர் என்று தெரியும். தூரத்திலிருந்து பார்க்க அது தாகம் தீர்க்கும் நீராகத்தான் தெரியும். சுஜாவுக்கு ரமேஷ் அப்படித்தான் தெரிந்தான். வாழ்க்கையின் காதல் தாகம் தீர்க்கும் நல்ல கணவனாகத் தான் தெரிந்தான். இல்லை என்று தெரிந்தபின் சுஜா என்ன செய்கிறாள்.? அவள் வாழ்வில் பௌர்ணமியாக வரும் ஸ்ரீதரை அவள் நம்பவில்லை. திரும்ப வரும் ரமேஷ்க்கு அவள் மாலை வாங்கிப் போடுகிறாள்.! அந்த மாலை எதுக்கோ.? மாலை சூடிவிட்டாள். ரமேஷ்க்கு பயங்கர அதிர்ச்சி. ஸ்ரீதருக்கோ இன்ப அதிரிச்சி.

மாலை அவனுக்கு சூடவில்லை அவள். அப்புறம் அவனுக்கு எப்படி இன்ப அதிர்ச்சி.? படித்துப் பாருங்கள்....சுஜாவின் இறுதி முடிவின் நியாயம் உங்களுக்குப் புரியும் அவள் எப்படி தன் சுயமரியாதையை காப்பாற்றிக் கொண்டாள் என்று தெரியும்.

Languageதமிழ்
Release dateMar 16, 2024
ISBN6580174610678
Kaanal Neerum Pournami Nilavum

Read more from Sankari Appan

Related to Kaanal Neerum Pournami Nilavum

Related ebooks

Reviews for Kaanal Neerum Pournami Nilavum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaanal Neerum Pournami Nilavum - Sankari Appan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கானல் நீரும் பவுர்ணமி நிலவும்

    Kaanal Neerum Pournami Nilavum

    Author:

    சங்கரி அப்பன்

    Sankari Appan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sankari-appan

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 1

    காலைக் காற்று சுகமாக வீசிற்று. மஞ்சளும் சிவப்புமாய் கீழ்வானம் மென்மையாய் வெல்வெட் கம்பளம் விரித்திருந்தது. இதையெல்லாம் ரசித்துக் கொண்டு சுஜாதா நிதானமாக காரோட்டிக் கொண்டிருந்தாள். மதியத்திற்குள் மதுரை அடைந்து விடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தாள். கார் ஸ்டீரியோவிலிருந்து தேனினும் இனியக் குரலில் பி. சுசீலா. டி. எம். எஸ் பாட்டு ஒழித்துக் கொண்டிருந்தது.

    "அல்லி என்றால் சந்திரனோடு

    தாமரை என்றால் சூரியனோடு

    வள்ளி என்றால் வேலவனோடு

    மன்னவனே நான் என்றும் உன்னோடு."

    பழைய பாடல்கள் கருத்தாழம் மிக்கவை. அவள் மன்னன்—ரமேஷ். அவனைக் கணவனாக அடைய அவள் எவ்வளவு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்! ரமேஷ் என்றும் அதிகாரம் செய்கிறவனல்ல. அவன் குரல் எப்பொழுதும் மிருதுவாக இருக்கும். அவன் சுருக்கமாக பேசுபவன். ஆழமாக நேசிப்பவன். கவனமாக மனைவியின் மனம் அறிந்து நடப்பவன். இதை விட வேறு என்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு? அவள் முகம் வட அவன் சம்மதிக்க மாட்டான்.

    சுஜா என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கே? என்று வீட்டில் இருந்தாலும். அல்லது ஏதோ இரு விசேஷம் நடக்கும் கூட்டத்தில் இருந்தாலும் அருகில் போய் வாஞ்சையுடன் கேட்பான்.

    ஒன்னுமில்லே...ஜஸ்ட் லைக் தட்... என்று அவள் மறைத்தாலும் விட மாட்டான்.

    சின்ன அத்தை எல்லோர் முன்னும் என்னை கேலி செய்கிறார்கள். நான் மார்டன் கேர்ளாம். கோலம் போடாத தெரியலையாம். மதுரையில் வசிக்க லாயக்கில்லாதவளாம். சின்ன சின்ன நீர் துளிகள் திரள சொல்வாள்.

    "பார், என் புறங்கையில் உன் கண்ணீர்த் துளிகள் போட்டிருக்கும் கோலங்கள். உனக்கா கோலம் போடத் தெரியவில்லை.? சுஜா சீர் அப். என் சித்தி எப்பவும் இப்படித்தான். வெடுக்கென்று இங்கிதமில்லாமல் பேசிவிடுவார்கள். நாம் தனிக்

    குடித்தனம் தானே இருக்கோம். எப்போதாவது வந்து போகிறவர்கள் தானே? விடு...நான் இருக்கேன்லே.?"

    அவன் சமாதானமாக பேசும் போது மனசு லேசாக்கும் சுஜாவுக்கு. அவன் தோளில் சாய்ந்து அழுதிருக்கிறாள். மடியில் படித்து விம்மியிருக்கிறாள்.

    என் அம்மா லெட்டர் போடலை.

    என் அண்ணன் ஈமெயில் பண்ணலை...

    தங்கை சுதா பிளஸ் டூவில் பெயிலாகி விட்டாள்."

    இப்படி ஒரு வரிக் கவலைகளை கொட்டி விடுவாள் அவனிடம்.

    எதுக்குத் தான் அழுவது என்றில்லையா? என்று அவன் ஒரு நாளும் அவன் எறிந்து விழுந்ததில்லை.

    சுஜா... டேக் இட் ஈஸி. அவர்களுக்கு என்ன பிரச்சனையோ.? பதில் வரும். உன் தங்கையிடம் நான் பேசறேன். அடுத்த முறை நல்ல மார்க் வாங்குவாள். அது என் பொறுப்பு. ஓ. கே யா?... சரி இப்ப கொஞ்சம் சிரியேன். என்பான். அவன் சொன்னபடியே நடக்கும். அதனாலே சுஜா எப்பொழுதும் அவனை வழக்கு தீர்க்கும் நீதிபதி போல் நினைத்து, அவனுடய சொல்லுக்கு மரியாதை கொடுப்பாள். ஆர்த்தி பிறந்த போது அவன் அடைந்த சந்தோஷத்தால், அவன் கண்களில் அன்பு நீர் கட்டியது கண்டு அவளுக்கு பெருமிதமாக இருந்தது. தன்னையும் தன் குழந்தையையும் நேசிக்கும் அன்பான கணவன் என்ற கர்வமும் வந்தது.

    சுஜா... தேங்க்ஸ். லவ்லி பேபி. நீ கொடுத்த பரிசு. நான் அப்பான்னு பிரமோஷன் கிடைச்ச பெருமையில் இருக்கேன். லவ்லி... லவ்லி அவன் பெருமிதப்பட்டது ஸ்பஷ்டமாக தெரிந்தது.

    குட்டி விழிகளில் மினுமினுப்பு தெரிய, குழந்தை இதழ் பிரித்து முறுவலித்து, அவர்களைப் பெற்றோர்களாக அடைய கொடுத்து வைத்திருப்பதை அறிவுறுத்தியது. எல்லாமே இனிமை என்றால், அப்புறம் வெறுமை என்ற சொல் அகராதியில் இருக்குமா?

    இப்பொழுது கார் வேகமெடுத்து ஓடிற்று. வெறுமை படர்ந்த அந்த நாள், அவள் நியாபகத்துக்கு வந்தது. ஆர்த்திக்கு மூன்று வயதான போது, அந்த வெறுமை ஊர்ந்து வந்து, அந்த வீட்டில் டெண்ட அடித்தது. கலக்கத்துடன் கேட்டாள் சுஜா.நிஜமாகத்தான் சொல்றீங்களா?

    ம்ம்ம்...

    வேறு வழியே இல்லையா?

    இது என் ப்ரெஸ்டிஜ் இஷ்யூ சுஜா. என்னுடய ஜூனியரை பிரமோட் பண்ணிட்டாங்க. என்றான் வருத்தமாக. சுஜாவுக்கு தாங்கவில்லை.அதுக்காக நான் பிரியணுமா?

    பிரிவு என்பது மனசுக்கு இல்லை சுஜா.

    சோர்வு தாக்க அவள் பதில் பேசாதிருந்தாள்.

    நான் செட்டில் ஆனதும் உன்னையும் ஆர்த்தியையும் அழைத்துக் கொள்வேன். சரியா.?

    தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அவள் வழக்காட ஒன்றுமில்லை. மனதை திடப்படுத்துவது அத்தனை சுலபமான விஷமாக இருக்கவில்லை. முணுக்கென்றால் அவன் தோள் சாய்ந்து பலம் தேடுகிற சுலப வாழ்க்கை வாழ்ந்தவள், இனி தனக்குத் தானே பலமாக வாழக் கற்றுக் கொள்கிற புதிய திருப்பத்தை வாழ்க்கை கொடுக்கும் என்று அவள் நினைக்கவே இல்லை. அவளால் முடியுமா? திக்கென்று உணர்ந்தாள்.

    அவனை விமான நிலையத்தில் வந்து வழி அனுப்பிய போது அவள் அழவில்லை. புற அழுகை நின்றுவிட்டிருந்தது. ஆனால் மனதின் அழுகை நிசப்த வலியாக மாறி இதயத்தை சுட்டது. அவன் துபாய் சென்றுவிட்டான். அதற்கு பிறகு ஒரு வெறுமை கருநிழலாக மனதில் படிந்தது.

    லேசாக தூற ஆரம்பித்திருந்தது. சுஜா வைப்பரை இயக்கினாள். அது மழைத் துளிகளைத் துடைத்து வழி காட்டியது. தொலைபேசி என்கிற வைப்பர் மூலமாக சுஜா தன் பிரிவுத் துயரை துடைக்க கற்றுக் கொண்டாள். லேசான வெளிச்சத்தில் நடக்க துவங்கும் அனுபவம் போல.

    துபையில் இப்பொழுது வெயில் சுட்டெறிக்கிறது. அடுப்பில் இருப்பது போல் சூடு. ஆனாள் கார், வீடு எல்லாம் ஏ. சி குளிர்ச்சியில் இருப்பதால் வெயிலின் சூடு தணிக்க பழகி விட்டோம்.

    ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு புதுச் செய்தியோடு ரசனையும் காதலுமாக பேசுவான் ரமேஷ். சுஜா அந்த வெள்ளிக்கிழைமைகளில் தான் உயிர் வாழ்ந்தாள்.

    முதலில் அப்பா ஊருக்குப் போனதும் ஆர்த்தி கேட்டாள்...மூன்று வயது மழலைக் குரலில் அப்பா எங்கம்மா போறாங்க? வானத்தில் சின்னதா தெரியுது விமானம்.

    ஆர்த்தி ஜாக் அண்ட் த பீன் ஸ்டாக் கதை படிச்சே இல்லே.? அதிலே பீன் ஸ்டாக்கிலே ஏறி ஜாக் வானத்திலே உள்ள ஜயண்ட் வீட்டுக்கு போனா மாதிரி... அப்பா ஒரு அட்வென்சர் போயிருக்கா.

    அய்யய்யோ... ஜயண்ட் வீட்டுக்கா?

    இல்லே. அது ஒரு தேவதையோட உலகம். அழகான ரோஜாத் தோட்டம் இருக்கும். மயில்கள் பேசும். கிளிகள் கொஞ்சும்... என்று உடான்ஸ் விட்டாள் குழந்தையின் பயம் போக்க.

    ஐ...நாமும் போலாமா?

    ம்... கட்டாயம் போலாம். நீ சமத்தா பள்ளிக்குப் போணும். அம்மா சொல் பேச்சு கேக்கணும். அப்ப தான் அப்பா வந்து கூட்டிப் போவார்.

    சமத்தா இருக்கேன்மா...

    குழந்தை கைதட்டி சிரித்தது. முகமே வானவில்ல ஆயிற்று. இந்தப் பிரிவும் வானவில் போல் மறைந்துவிடாதா என்று ஏங்கினாள். மனம் மறுபடியும் நிகழ் காலத்துக்கு வந்தது.

    தூறல் நின்று விட்டது. அது செல்லத் தூறல். கோயம்பத்தூர் மண்ணுக்கே உரித்தானது. உடுமலைபேட்டை வழியாக கார் வழுக்கி கொண்டு போனது.

    சுஜா மேடம்...கோயம்பத்தூரில் ஆரம்பித்திருக்கும் நம் புதிய கிளைக்கு நீங்க நேரில் சென்று செக் பண்ணிவிட்டு வரணும். பல்காக வந்திருக்கும் புதிய ரக செல்போன்களின் விலைப் பட்டியலை நிர்ணயித்து, அங்கு சேல்ஸ் ஆவதற்கு டிப்ஸ் கொடுத்துவிட்டு, வரவு செலவு கணக்கு எழுத்திட்டு வரணும். என்று சீப் எக்ஸிகியூடிவ் கட்டளையிட்டவுடன், கார் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள். சுஜாவிற்கு இந்த வேலையை ஏற்பாடு செய்ததே ரமேஷ் தான்.

    சுஜா... நானில்லாமல் நீ வாடிப் போயிடுவே. அதை ஓரளவு மறக்க நீ வேலைக்குப் போவது நல்லது. என்றான். ஒரு வெளிக்கிழமை அவன் நண்பன் வேணு வந்தான்.

    சுஜா மேடம்... சார் சொன்னார், நீங்க எப்பன்னு சொன்னா அழைச்சிட்டுப் போறேன். என் தம்பியோட கம்பனி தான் அது.

    கண்ணியம் காட்டி கேட்டு நின்றான். நண்பன் என்று சொல்லிக் கொண்டு சார் என்கிறானே என்று ஆச்சரியம் ஏற்பட்டது. அவள் எம். எஸ். சி படித்திருந்தாள். வீட்டில் கம்ப்யூட்டர் இயக்கத் தெரிந்திருந்தாள். வேலைக்குப் போக வேண்டும் என்று அவள் கணக்கு போட்டு படித்ததில்லை. இபொழுது இது புது அனுபவமாகத் தான் இருக்கப் போகிறது. அவள் வேலையில் சேர்ந்து விட்டாள். அலுவலகம் செல்ல ஆரம்பித்ததும் ஏதோ புது உலகத்திற்குள் அடி எடுத்து வைத்த மாதிரி இருந்தது. பிரிவுத் துயர் மறக்க மறந்தாயிற்று. ரமேஷ் சென்று இரெண்டு வருடம் ஆகிவிட்டது.

    ஒரு நாள் பேசுகையில் எப்போ அழச்சிட்டுப் போகப் போறீங்க ரமேஷ்.? என்று கேட்டாள்.

    இப்போ கம்பனி நிலைமை சரயில்லை சுஜா. சற்று பொறு வேறொரு ஷேக் சார்ஜ் எடுத்துக் கொள்ள இருக்கார்...அவர் பார்த்து சீர் பண்ண வேண்டும். பிறகு தான் எதுவும் சொல்ல முடியும். என்றான்.

    எப்ப சரியாகும்.?

    "ஆறு மாசமாக்கலாம். வேலை போயிட்டா கஷ்டம் சுஜா. அங்கு அற்பது லட்சத்துக்கு வீடு

    Enjoying the preview?
    Page 1 of 1