Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

என் கண்ணின் மணியே...
என் கண்ணின் மணியே...
என் கண்ணின் மணியே...
Ebook139 pages51 minutes

என் கண்ணின் மணியே...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"எல்லாம் ஓ.கே. தானே? சொதப்பிட மாட்டியே?"
 உற்சாகமும் படபடப்புமாய்க் கேட்ட நீரஜாவிடம் புன்னகையோடு பதிலளித்தான் வருண்.
 "விடிய விடிய தூங்காமல் உட்கார்ந்திருந்து எனக்கு நானே கேள்வி கேட்டு பதிலும் சொல்லி தயாராகி இருக்கேன். உங்கப்பா எந்த மாதிரியான கேள்வி கேட்டாலும் என்னால் டாண்டாண்ணு பதில் சொல்ல முடியும்."
 "நிஜமாவா?"
 "ப்ராமிஸ் நீரு! சொன்னால் நம்பமாட்ட! கூகுள்ல சர்ச் பண்ணி ஏகப்பட்ட பொது அறிவு கேள்வி பதிலை எல்லாம் மனப்பாடம் செய்து வெச்சிருக்கேன். நாட்டு நடப்பு... பேப்பர் நியூஸ்... அது இதுன்னு எதையும் விடல. நீ இவ்வளவு பொறுப்பாய் படித்திருந்தால் குரூப் எக்ஸாம்ல பாஸாகி கவர்மெண்ட் வேலைக்கே போயிருக்கலாம்னு சீனுகூட கிண்டல் பண்றான்."
 "சீனுகிட்ட சொல்லிட்டியா?"
 "நானா சொல்லல. என்னோட கடுமையான உழைப்பை பார்த்து அவனே கண்டுபிடிச்சிட்டான். கூடவே நிறைய தைரியம் சொல்லி அனுப்பியிருக்கான்."
 "வருண் நீ... ஸ்ட்ராங்கா இருக்கேல்ல?"
 "ம்! டபுள் ஸ்ட்ராங்கா இருக்கேன் நீரு!"
 "குட்! அப்பாவுக்கு வளவள கொழகொழன்னு பேசுறது பிடிக்காது. பேச வேண்டியதை தெளிவாய் சுருக்கமாய் சட்டுன்னு பேசிடணும். அப்புறம் முக்கியமான விஷயம்... ரொம்ப பவ்யமோ குழைவோ காட்டாதே! மிடுக்காய்... அவரை நேராய் பார்த்து பேசு. உன்னோட தைரியத்தைத்தான் அவர் விரும்புவார்! அதனால அவர் என்ன கேள்வி கேட்டாலும் ரொம்ப யதார்த்தமாய் தயக்கமோ பயமோ இல்லாமல் பேசு! சரியா?""உத்தரவு!"
 "நானும் அம்மாவும் கூட பக்கத்திலதான் இருப்போம். ஆனா அப்பாகிட்ட பேசும்போது நீ அவரை மட்டும்தான் பார்த்து பேசணும். என் பக்கம் திரும்பக்கூடாது."
 "அது கொஞ்சம் கஷ்டம்தான். ட்ரை பண்றேன்"
 "உதை வாங்கப்போற! சொல்வதை செய்"
 "சரி… திரும்பல"
 "என்ன கலர் ட்ரெஸ் போட்டிருக்க?"
 "அதான் நேற்றே செலக்ட் பண்ணிட்டியே அதே க்ரே கலர் ப்ளெய்ன் சர்ட். பிளாக் பேண்ட்"
 "குட்! அப்பாவுக்கு நீட்டாய் ட்ரெஸ் பண்ணினால்தான் பிடிக்கும். மாடர்ன் யூத் மாதிரி அங்கங்கே கிழிஞ்சு போன ட்ரெஸ் போட்டால் முகம் சுளிப்பாங்க!"
 "நல்ல வேளை உனக்கு ஒரு அண்ணனோ தம்பியோ இல்லை"
 "ஏன்?"
 "இருந்தால் உன் அப்பா தினந்தோறும் முகம் சுளித்திருப்பார்"
 "நோ! பிள்ளைகளை டீஸண்ட்டாய் வளர்த்திருப்பார். என்னை மாதிரியே"
 "ஒப்புக்கொள்கிறேன் நீரு! இரண்டு வருடமாய் விரும்புகிறோம். ஒரு பீச் தியேட்டர்... ஹோட்டல்... ம்ஹும் எங்கும் வரமாட்டாயே..."
 "வருவேன் நீ சொல்ற எல்லா இடத்துக்கும் வருவேன். உன் கையைப் பிடிச்சிகிட்டு வருவேன். அப்பாவோட அனுமதி கிடைத்தபிறகு" நீரஜா சின்னச் சிரிப்போடு சொல்ல, மறு முனையில் அமைதியானான் வருணன்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 7, 2023
ISBN9798223101154
என் கண்ணின் மணியே...

Read more from Kalaivani Chokkalingam

Related to என் கண்ணின் மணியே...

Related ebooks

Related categories

Reviews for என் கண்ணின் மணியே...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    என் கண்ணின் மணியே... - Kalaivani Chokkalingam

    1

    "எல்லாம் ஓ.கே. தானே? சொதப்பிட மாட்டியே?"

    உற்சாகமும் படபடப்புமாய்க் கேட்ட நீரஜாவிடம் புன்னகையோடு பதிலளித்தான் வருண்.

    விடிய விடிய தூங்காமல் உட்கார்ந்திருந்து எனக்கு நானே கேள்வி கேட்டு பதிலும் சொல்லி தயாராகி இருக்கேன். உங்கப்பா எந்த மாதிரியான கேள்வி கேட்டாலும் என்னால் டாண்டாண்ணு பதில் சொல்ல முடியும்.

    நிஜமாவா?

    ப்ராமிஸ் நீரு! சொன்னால் நம்பமாட்ட! கூகுள்ல சர்ச் பண்ணி ஏகப்பட்ட பொது அறிவு கேள்வி பதிலை எல்லாம் மனப்பாடம் செய்து வெச்சிருக்கேன். நாட்டு நடப்பு... பேப்பர் நியூஸ்... அது இதுன்னு எதையும் விடல. நீ இவ்வளவு பொறுப்பாய் படித்திருந்தால் குரூப் எக்ஸாம்ல பாஸாகி கவர்மெண்ட் வேலைக்கே போயிருக்கலாம்னு சீனுகூட கிண்டல் பண்றான்.

    சீனுகிட்ட சொல்லிட்டியா?

    நானா சொல்லல. என்னோட கடுமையான உழைப்பை பார்த்து அவனே கண்டுபிடிச்சிட்டான். கூடவே நிறைய தைரியம் சொல்லி அனுப்பியிருக்கான்.

    வருண் நீ... ஸ்ட்ராங்கா இருக்கேல்ல?

    ம்! டபுள் ஸ்ட்ராங்கா இருக்கேன் நீரு!

    குட்! அப்பாவுக்கு வளவள கொழகொழன்னு பேசுறது பிடிக்காது. பேச வேண்டியதை தெளிவாய் சுருக்கமாய் சட்டுன்னு பேசிடணும். அப்புறம் முக்கியமான விஷயம்... ரொம்ப பவ்யமோ குழைவோ காட்டாதே! மிடுக்காய்... அவரை நேராய் பார்த்து பேசு. உன்னோட தைரியத்தைத்தான் அவர் விரும்புவார்! அதனால அவர் என்ன கேள்வி கேட்டாலும் ரொம்ப யதார்த்தமாய் தயக்கமோ பயமோ இல்லாமல் பேசு! சரியா?

    உத்தரவு!

    நானும் அம்மாவும் கூட பக்கத்திலதான் இருப்போம். ஆனா அப்பாகிட்ட பேசும்போது நீ அவரை மட்டும்தான் பார்த்து பேசணும். என் பக்கம் திரும்பக்கூடாது.

    அது கொஞ்சம் கஷ்டம்தான். ட்ரை பண்றேன்

    உதை வாங்கப்போற! சொல்வதை செய்

    சரி… திரும்பல

    என்ன கலர் ட்ரெஸ் போட்டிருக்க?

    அதான் நேற்றே செலக்ட் பண்ணிட்டியே அதே க்ரே கலர் ப்ளெய்ன் சர்ட். பிளாக் பேண்ட்

    குட்! அப்பாவுக்கு நீட்டாய் ட்ரெஸ் பண்ணினால்தான் பிடிக்கும். மாடர்ன் யூத் மாதிரி அங்கங்கே கிழிஞ்சு போன ட்ரெஸ் போட்டால் முகம் சுளிப்பாங்க!

    நல்ல வேளை உனக்கு ஒரு அண்ணனோ தம்பியோ இல்லை

    ஏன்?

    இருந்தால் உன் அப்பா தினந்தோறும் முகம் சுளித்திருப்பார்

    நோ! பிள்ளைகளை டீஸண்ட்டாய் வளர்த்திருப்பார். என்னை மாதிரியே

    ஒப்புக்கொள்கிறேன் நீரு! இரண்டு வருடமாய் விரும்புகிறோம். ஒரு பீச் தியேட்டர்... ஹோட்டல்... ம்ஹும் எங்கும் வரமாட்டாயே...

    வருவேன் நீ சொல்ற எல்லா இடத்துக்கும் வருவேன். உன் கையைப் பிடிச்சிகிட்டு வருவேன். அப்பாவோட அனுமதி கிடைத்தபிறகு நீரஜா சின்னச் சிரிப்போடு சொல்ல, மறு முனையில் அமைதியானான் வருணன்.

    வருண்! என்னாச்சு?

    நீரு!

    ம்

    ஒரு வேளை... உன் அப்பா சம்மதிக்கவில்லையென்றால்?

    வருண்?

    அப்பாவிற்கு என்னை பிடிக்கவில்லையென்றால்?

    நோ நோ! அப்பாவிற்கு உன்னைக் கண்டிப்பாய் பிடிக்கும்!

    அதெப்படி அத்தனை உறுதியாய் சொல்ற?

    உன்னைப்பத்தி எல்லாமே அப்பாகிட்ட பேசிட்டேன். நீ எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு சொல்லியிருக்கேன். அப்பாவுக்கு நான்னா உயிரு. எனக்கு பிடிச்ச எல்லாமே அப்பாவுக்கும் பிடிக்கும்! ஸோ! உன்னையும் பிடிக்கும்.

    இல்ல! ஆயிரம் இருந்தாலும் நீ...

    போதும் வருண்! உன்னோட ரெகுலர் புராணத்தை ஆரம்பித்து விடாதே! நீ என்னை மட்டும்தானே விரும்புகிறாய்?

    சத்தியமாய்!

    இதையே அப்பாகிட்ட சொல்லிடு. தட்ஸ் ஆல் என்றபோதும் வருணனால் தலையாட்ட முடியவில்லை.

    சாதாரண பணியிலிருக்கும் வருணனை நீரஜாவிற்கும் தன்னை விட பலமடங்கு உயரத்தில் இருக்கும் நீரஜாவை தனக்கும் பிடித்துப்போனது இயல்பான ஒன்றாக இருக்கலாம்! ஆனால் பெண்ணைப் பெற்றவர் அதை இயல்பாக ஏற்றுக்கொள்வாரா?

    வருண்! அப்பா வர்றார்! போனை வை! என்றவாறே காதிலிருந்த அலைபேசியை அணைத்துவிட்டு தந்தையைப் பார்த்து புன்னகைத்தாள்.

    ஹாய் டாடி! குட்மார்னிங்!

    குட்மார்னிங் மை சைல்ட்! சாப்பிட்டியாடா?

    நீங்க வராம எப்படிப்பா?

    ஸாரிடா கண்ணு! அப்பாவுக்கு அவசர வேலை. பத்து மணிக்கு மீட்டிங் வெச்சிருந்தோம். இப்போ அரைமணிநேரம் முன்னதாய் மாத்தியிருக்காங்க. ஸோ... இப்பக் கிளம்பினால்தான் சரியாய் இருக்கும். நீ சாப்பிட்டுவிட்டு மறக்காம பால் சாப்பிடணும் சரியா? ஜெகதீஸ்வரன் புன்னகையோடு மகளின் தலையை வருடிவிட்டு, நகர முயல நீரஜா சற்று தயக்கமாய் குரல் கொடுத்தாள்.

    அப்பா! அப்போ... வருண்...?

    வரு...ண்... ஸ்ஸ்! அந்தப்பையனை இன்னிக்கு வரச்சொல்லியிருந்தேனில்ல?

    ம்...ம்...

    அடடா! இப்ப டயமில்லையேடா! ஒன்னு பண்ணு! நீ அந்தப் பையனுக்கு போன் பண்ணி நாளைக்கு வரச்சொல்லிடுறியா?’

    அவரு... ஆல்ரெடி வந்திட்டாருப்பா!

    என்ன? எங்கே?

    எட்டு நாற்பதுக்கே வந்திட்டாருப்பா. நீங்க ஒன்பது மணிக்கு மீட் பண்ணச் சொன்னீங்க. அதான் வெளியே வெயிட் பண்றார்.

    அட என்னம்மா நீ? வீட்டுக்கு வந்த பிள்ளையை வெளியே நிற்க வைக்கலாமா? நம்மைப் பற்றி என்ன நினைப்பான்? நேரம் வேறு ஆகிறதே. என்றவர் போர்டிகோவை அடைந்து கையிலிருந்த கோப்புகளை காருக்குள் வைத்தவாறே டிரைவரை அழைத்தார்.

    மூர்த்தி! ஸார்

    வெளியே ஒரு பையன் நிற்பான். கூப்பிடு!

    "எஸ் ஸார்! மூர்த்தி வெளிவாயிலை நோக்கிச் செல்ல, கூடவே வந்து நின்ற மகளிடம் திரும்பினார்.

    அந்தப்பையன் எதிலம்மா வந்தான்? ஆட்டோவிலா? பஸ்லயா?

    பைக் வெச்சிருக்காருப்பா!

    ஓ! என தலையாட்டியபோது மூர்த்தியோடு உள்ளே நுழைந்தான் வருணன். நீரஜா சொன்னதை நினைவில் வைத்து அவள் புறம் திரும்பாமல் ஜெகதீஸ்வரனை நேராய் பார்த்து மரியாதை நிமித்தமாய் கைகூப்பினான்.

    வணக்கம் சார்!

    வணக்கம் வணக்கம்! தம்பி! உனக்கு கார் ஓட்டத்தெரியுமா?

    ஸார்?

    இல்ல. உன்னை ஒன்பது மணிக் வரச்சொல்லியிருந்தேன். பட்... எனக்கு அர்ஜெண்ட்டா மீட்டிங் இருக்கு. உன்னையும் அவாய்ட் பண்ண முடியாது. மீட்டிங்கையும் கேன்ஸல் பண்ண முடியாது. ஸோ உனக்கு டிரைவிங் தெரிந்தால் நாம ஆபிஸ்வரை பேசிட்டே போகலாமே...

    தெரியும் ஸார்!

    கார் வெச்சிருக்கியா தம்பி

    இல்ல ஸார்! இனிமேல்தான் வாங்கணும். பட் பிரெண்ட்ஸ் கார்களை ஓட்டியிருக்கேன். என்னை நம்பி தைரியமாய் வரலாம் என்றதும் மகளைப் பார்த்து புன்னகைத்தார்."

    அப்பச் சரிம்மா! நாங்க கிளம்பட்டுமா?

    எதுவுமே சாப்பிடலையேப்பா? இருவரையும் பார்த்தே நீரஜா சொல்ல, மகளின் தோளில் தட்டினார்.

    யூ டோண்ட் வொர்ரி. போற வழியில ரெண்டு பேருமே சாப்பிட்டுக்கிறோம். நாங்களும் ரிலாக்ஸா பேசின மாதிரி இருக்கும்.

    ஓ.கே. ஓ.கே.! உற்சாகமாய் தலையசைத்த மகளின் நெற்றியில் முத்தம் பதித்துவிட்டு காரின் முன்பக்கக்கதவை திறந்தார்.

    மூர்த்தி! காரைத் தம்பி ஓட்டட்டும்! நீ தம்பியோட வண்டியை எடுத்திட்டு வா

    சரிங்க சார்!

    இந்தாங்கண்ணே சாவி! கையிலிருந்த பைக் சாவியை மூர்த்தியிடம் நீட்டிவிட்டு புன்னகையும் துள்ளலுமாய் நின்றியிருந்த நீரஜாவிடம் கண்சிமிட்டி விடைபெற்று காரில் ஏறினான் வருணன். அந்த சில கணங்களில் அவனை அளவெடுத்துவிட்டு முன்பக்க இருக்கையில் அமர்ந்து கொண்டார் ஜெகதீஸ்வரன். மகளுக்கு கையசைத்துவிட்டு, கார் புறப்பட்டதும் இருக்கையலிருந்த கோப்புகளை எடுத்து மடியில் வைத்து வாசிக்கத் துவங்கினார்.

    இதுவரை உள்ளே இருந்த படபடப்பை வெளிக்காட்டாமல் சமாளித்த வருணனுக்கு அவரது செயல் சற்று ஏமாற்றத்தைத் தந்தது. தன்னிடம் ஏதாவது பேச்சுக்கொடுப்பார் என சில கணங்கள் காத்திருந்துவிட்டு தயக்கமாய் குரல் கொடுத்தான்.

    ஸா...ர்!

    ம்? பைலை விட்டு நிமிராமலே குரல் கொடுத்தார்.

    "வந்து... ஆபீஸுக்கு எப்படிபோகணும்னு...

    முன்னால மூர்த்தி போவானே... பாலோ பண்ணு... என்றபோது மூர்த்தி தன் இரு சக்கரவாகனத்தில் முன்னே சென்று கொண்டிருக்க...

    ம் என்ற புருவ உயர்த்தலோடு காரை சீரான வேகத்தோடு செலுத்தினான் வருணன். முழுதாய் பத்து நிமிடம் கழித்த பிறகே வாயைத் திறந்தார் ஜெகதீஸ்வரன். அப்போது கூட பார்வை கோப்பை விட்டு நகரவில்லை.

    "என்ன

    Enjoying the preview?
    Page 1 of 1