Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உயிரே... உறவே..!
உயிரே... உறவே..!
உயிரே... உறவே..!
Ebook111 pages38 minutes

உயிரே... உறவே..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தனது உடைமைகளை வைத்துவிட்டு பெட்டியை மூடினாள் வசந்தி. வேறு ஏதேனும் மறந்துவிட்டோமா என சிந்திக்கையில் கையில் சாப்பாடு பார்சலுடன் வந்தாள் விமலா. 

"என்னம்மா! எல்லாம் எடுத்து வெச்சிட்டியா?" 

"ம். வெச்சிட்டேன் அத்தை!" 

"இந்தா! ராத்திரிக்கு சப்பாத்தியும், பட்டாணிக் குருமாவும் வெச்சிருக்கேன். எட்டுமணிக்கெல்லாம் சாப்பிட்டுடு" 

"உங்களுக்கு ஏன் அத்தே வீண் சிரமம்? ரெயில்லயே வாங்கிப்பேனே?" 

"நாலு சப்பாத்தி போடுறதுல எனக்கென்ன சிரமம்? மறக்காம உள்ளே வை" -என அக்கறையாய் நீட்டிய பொட்டலத்தை வாங்கிக் கொண்டாள். 

"தண்ணி எடுத்துக்கிட்டியா?" 

"இல்ல அத்தே. இனிமேல்தான்..." 

"அட என்னம்மா நீ? ஏழு மணிக்கு ட்ரெயின். மணி ஆறாகப் போச்சு. இப்ப ராகவன் வந்திருவான்." 

"நான் ரெடிதான் அத்தை" 

"முதல்ல தலையை வாரிக்க. இந்தப் புடவை ரொம்ப சுமாரா இருக்கு. கொஞ்சம் நல்ல புடவையா எடுத்துக் கட்டிக்க." 

"எதுக்கு அத்தே? இது போதாதா?" 

"அட! ஆறு வருஷம் கழிச்சு உன் சொந்த ஊருக்குப் போற. போகும்போது பளிச்சுன்னு போகவேண்டாமா?" 

"அ... அதுக்கில்ல..." 

"ஷ்! முதல்ல புடவையை மாத்து. நான் போய் வாட்டர் பாட்டிலை எடுத்திட்டு வர்றேன்" - விமலா மின்னலாய் அறையை விட்டு வெளியேற, சலிப்பாய் எழுந்தாள் வசந்தி. 

பீரோவை நெருங்கினாள். ஆளுயர கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தை உற்று நோக்கினாள். அணிந்திருந்த சாம்பல் நிற புடவை வெகு எளிமையாய் மங்கலாய்த்தான் இருந்தது. 

பயணத்திற்கு சௌகர்யமாய் இருக்கும் என நினைத்தாலும் நாளைக் காலையில் ஊரில்போய் இறங்கும் போது இது அத்தனை நன்றாய் இராது என்றே தோன்றியது. இதைக் கருத்தில் கொண்டுதான் அத்தை புடவையை மாற்றச் சொல்லியிருக்கிறாள். 

அத்தை புத்திசாலி மட்டுமல்ல திறமைசாலியும் கூட. முகம் புன்முறுவல் பூக்க, பீரோவைத் திறந்து நான்கைந்து புடவைகளைத் தேர்ந்தெடுத்து பின் அவற்றை ஒதுக்கி, இறுதியில் இளம்மஞ்சள் நிற புடவையை எடுத்தாள். 

பளிச்சென்ற மஞ்சள் நிறத்தில் பொட்டு பொட்டாய் கண்ணாடிகற்கள் பதிக்கப்பட்டு அரக்கு நிற பார்டருடன் இருந்த புடவையை தோளில் போட்டுப்பார்த்தாள். 

வெகு பொருத்தமாய் இருக்க, இரண்டே நிமிடத்தில் புடவையை மாற்றிவிட்டு மீண்டும் கண்ணாடியில் தன்னைப் பார்த்தவளுக்கு திருப்தியாக இருந்தது. என்றாலும் முழு திருப்தி கிடைக்கவில்லை. 

அத்தை சொன்னது போல் மீண்டும் தலைவாரி, முகத்திற்கு பொட்டிட்டு கவனமாய் தன் முகத்தை ஆராய்ந்தாள். 

கிராமத்திலிருந்து வந்த போது இருந்த அதே முகம். இந்த ஆறு வருடங்களில் அப்படியொன்றும் மாற்றம் வந்துவிடவில்லை. ஆனாலும் ஏதோ ஒன்று குறைகிறது. என்ன அது? 

மின்னல் தெறிக்கும் இந்தக் கண்களில் குடியிருந்த உற்சாகம் எங்கே போயிற்று? அழுத்தமாய் குடியிருக்கும் என் புன்னகை எப்போது காணாமல் போயிற்று? 

எத்தனை அலங்காரம் செய்தாலும் புன்னகை சிந்தாத முகம் எப்படி அழகாக காட்சியளிக்கும்? அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது எத்தனை உண்மை! - தன்னைப் பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கியிருந்தவளை ராகவனின் குரல் கலைத்தது. 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 8, 2023
ISBN9798223486787
உயிரே... உறவே..!

Read more from Kalaivani Chokkalingam

Related to உயிரே... உறவே..!

Related ebooks

Related categories

Reviews for உயிரே... உறவே..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உயிரே... உறவே..! - Kalaivani Chokkalingam

    1

    தனது உடைமைகளை வைத்துவிட்டு பெட்டியை மூடினாள் வசந்தி. வேறு ஏதேனும் மறந்துவிட்டோமா என சிந்திக்கையில் கையில் சாப்பாடு பார்சலுடன் வந்தாள் விமலா.

    என்னம்மா! எல்லாம் எடுத்து வெச்சிட்டியா?

    ம். வெச்சிட்டேன் அத்தை!

    இந்தா! ராத்திரிக்கு சப்பாத்தியும், பட்டாணிக் குருமாவும் வெச்சிருக்கேன். எட்டுமணிக்கெல்லாம் சாப்பிட்டுடு

    உங்களுக்கு ஏன் அத்தே வீண் சிரமம்? ரெயில்லயே வாங்கிப்பேனே?

    நாலு சப்பாத்தி போடுறதுல எனக்கென்ன சிரமம்? மறக்காம உள்ளே வை -என அக்கறையாய் நீட்டிய பொட்டலத்தை வாங்கிக் கொண்டாள்.

    தண்ணி எடுத்துக்கிட்டியா?

    இல்ல அத்தே. இனிமேல்தான்...

    அட என்னம்மா நீ? ஏழு மணிக்கு ட்ரெயின். மணி ஆறாகப் போச்சு. இப்ப ராகவன் வந்திருவான்.

    நான் ரெடிதான் அத்தை

    முதல்ல தலையை வாரிக்க. இந்தப் புடவை ரொம்ப சுமாரா இருக்கு. கொஞ்சம் நல்ல புடவையா எடுத்துக் கட்டிக்க.

    எதுக்கு அத்தே? இது போதாதா?

    அட! ஆறு வருஷம் கழிச்சு உன் சொந்த ஊருக்குப் போற. போகும்போது பளிச்சுன்னு போகவேண்டாமா?

    அ... அதுக்கில்ல...

    ஷ்! முதல்ல புடவையை மாத்து. நான் போய் வாட்டர் பாட்டிலை எடுத்திட்டு வர்றேன் - விமலா மின்னலாய் அறையை விட்டு வெளியேற, சலிப்பாய் எழுந்தாள் வசந்தி.

    பீரோவை நெருங்கினாள். ஆளுயர கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தை உற்று நோக்கினாள். அணிந்திருந்த சாம்பல் நிற புடவை வெகு எளிமையாய் மங்கலாய்த்தான் இருந்தது.

    பயணத்திற்கு சௌகர்யமாய் இருக்கும் என நினைத்தாலும் நாளைக் காலையில் ஊரில்போய் இறங்கும் போது இது அத்தனை நன்றாய் இராது என்றே தோன்றியது. இதைக் கருத்தில் கொண்டுதான் அத்தை புடவையை மாற்றச் சொல்லியிருக்கிறாள்.

    அத்தை புத்திசாலி மட்டுமல்ல திறமைசாலியும் கூட. முகம் புன்முறுவல் பூக்க, பீரோவைத் திறந்து நான்கைந்து புடவைகளைத் தேர்ந்தெடுத்து பின் அவற்றை ஒதுக்கி, இறுதியில் இளம்மஞ்சள் நிற புடவையை எடுத்தாள்.

    பளிச்சென்ற மஞ்சள் நிறத்தில் பொட்டு பொட்டாய் கண்ணாடிகற்கள் பதிக்கப்பட்டு அரக்கு நிற பார்டருடன் இருந்த புடவையை தோளில் போட்டுப்பார்த்தாள்.

    வெகு பொருத்தமாய் இருக்க, இரண்டே நிமிடத்தில் புடவையை மாற்றிவிட்டு மீண்டும் கண்ணாடியில் தன்னைப் பார்த்தவளுக்கு திருப்தியாக இருந்தது. என்றாலும் முழு திருப்தி கிடைக்கவில்லை.

    அத்தை சொன்னது போல் மீண்டும் தலைவாரி, முகத்திற்கு பொட்டிட்டு கவனமாய் தன் முகத்தை ஆராய்ந்தாள்.

    கிராமத்திலிருந்து வந்த போது இருந்த அதே முகம். இந்த ஆறு வருடங்களில் அப்படியொன்றும் மாற்றம் வந்துவிடவில்லை. ஆனாலும் ஏதோ ஒன்று குறைகிறது. என்ன அது?

    மின்னல் தெறிக்கும் இந்தக் கண்களில் குடியிருந்த உற்சாகம் எங்கே போயிற்று? அழுத்தமாய் குடியிருக்கும் என் புன்னகை எப்போது காணாமல் போயிற்று?

    எத்தனை அலங்காரம் செய்தாலும் புன்னகை சிந்தாத முகம் எப்படி அழகாக காட்சியளிக்கும்? அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது எத்தனை உண்மை! - தன்னைப் பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கியிருந்தவளை ராகவனின் குரல் கலைத்தது.

    ஹாய் வசி!

    ம்? - திடுக்கிட்டு திரும்பியவள் மாமன் மகனைக் கண்டதும் மெலிதாய் புன்னகைத்தாள்.

    புறப்பட்டாச்சா?

    ம். நான் ரெடி!

    போலாமா? என்றவாறே பெட்டியை எடுத்துக் கொண்ட ராகவன், வசந்தி மீது கொள்ளைப் பிரியம் வைத்திருப்பவன். தன் மனக்கிடக்கையை அவளிடம் தெரிவித்துவிட்டு அவளது பதிலுக்காக நான்கு வருடமாய் காத்து நிற்பவன்.

    ராகவ்! மாமா வரலையா?

    கம்பெனியில் ஆடிட்டிங் நடக்குது. ஸோ! இந்த வாரம் முழுக்க அப்பா பிஸி!

    அப்போ... ரயில்வே ஸ்டேஷனுக்கு...?

    நான் கூட்டுட்டு போறேன். எல்லாம் எடுத்திட்டியா?

    ம். டிக்கெட்?

    ஹேண்ட் பேக்ல இருக்கு

    பத்திரம்! நைட்டுக்கு டிபன் எடுத்துக்கிட்டியா?

    ம்... அத்தை தந்தாங்க. - என்றவாறே இருவரும் அறையை விட்டு வெளியே வர, கையில் தண்ணீர் பாட்டிலுடன் வந்த விமலா ஒரு கணம் தடுமாறிப்போனாள்.

    வாட்ட சாட்டமாய் நின்ற தன் மகனருகே அவன் தோள்வரை நின்ற வசந்தியைப் பார்க்கையில் பெற்றவளின் மனம் ஏதேதோ எண்ணிக் களித்தது.

    அம்மா! என்ன நின்னுட்டீங்க? பாட்டிலைக் கொடுங்க. டயமாகுது

    இ... இதோ! ராகவா!

    என்னம்மா?

    காபி தரட்டுமா?

    வேணாம்மா! ட்ரெய்னுக்கு டயமாகுது. இப்பவே கிளம்பினாத்தான் சரியா இருக்கும். வசி! போலாமா?

    ம். அத்தே! போயிட்டு வரட்டுமா?

    பார்த்து போயிட்டு வாம்மா. போனதும் போன் பண்ணிடு.

    சரி அத்தே!

    நாலுநாளுக்குள்ள வேலை முடிஞ்சிடுமில்ல?

    தெரியல அத்தே! போனால்தான் தெரியும்

    எவ்வளவு சீக்கிரம் முடியுதோ அவ்வளவு சீக்கிரம் திரும்பிடும்மா.

    சரி அத்தே!

    உன்னைத் தனியா அனுப்ப மனசே இல்ல எனக்கு. இந்த நேரம் பார்த்து உம்மாமாவுக்கும் வேலை அதிகமா இருக்கு. இல்லன்னா உன்கூட அனுப்பியிருப்பேன்.

    பரவாயில்ல அத்தே! நான் போயிடுறேன்

    எதுக்கும் ஜாக்கிரதையா இரும்மா

    அம்மா! அவ என்ன வெளிநாட்டுக்கா போறா? அவளோட சொந்த ஊருக்குத் தானே போகிறாள்?

    அதுக்கில்லடா! இத்தனை வருஷம் கழிச்சுப்போறாளே. அங்கே எப்படி கவனிப்பாங்களோ?

    அத்தே! நான் என்ன விருந்துக்கா போறேன்? பத்திரத்தில் கையெழுத்துப் போட போறேன். போட்டதும் கிளம்பி வந்திடப் போறேன்

    வசந்தி!’

    என்ன அத்தே!

    இப்பவும் ஒன்னும் கெட்டுப்போயிடல. நீ... எதுக்கும் ஒருவாட்டி... யோசிம்மா

    எதைப்பத்தி?

    ஏற்கனவே எல்லாச் சொத்தையும் உன் சித்தப்பாகிட்ட கொடுத்திட்டீங்க. இப்ப இருக்கிற ஒரே சொத்தையும் கொடுத்திட்டா, அப்புறம் உனக்குன்னு அந்த ஊர்ல எதுவுமே இல்லாமப் போயிடுமே தயக்கமாய்ச் சொன்னவளிடம் கசப்பாய் புன்னகைத்தாள் வசந்தி.

    அப்பாவே போயிட்டாங்க. இனிமே அந்த ஊர்ல எனக்கு யார் இருக்கா? யாருக்காக நான் அங்கே போகப்போறேன்? - எனும்போதே இதயம் வலித்தது. கண்கள் லேசாய் கலங்கியது.

    வசந்தியின் கண்கள் கலங்கியதைக்

    Enjoying the preview?
    Page 1 of 1