Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பூ ஒன்று கண்டேன்
பூ ஒன்று கண்டேன்
பூ ஒன்று கண்டேன்
Ebook128 pages45 minutes

பூ ஒன்று கண்டேன்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரம்மாண்டமாய் உயர்ந்து நின்ற அந்த திருமண மண்டபம் முழுக்க கூட்டம் நிறைந்து வழிந்தது. வெளிச்ச மழையில் நனைந்து பார்ப்பவர்களின் கண்களையும், கருத்தையும் கவர்ந்து கொண்டிருந்த வண்ண மயமான விளக்குகள் மரக்கிளையில் சரங்களாய் தொங்கிக் கொண்டிருந்தன. வாசலருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரில் மணமக்கள் நின்று புகைப்படத்திற்காய் புன்னகைத்துக் கொண்டிருக்க, போவோர், வருவோர் என அனைவரும் ஒருகணம் நின்று அவர்களைப் பார்த்து பிரமித்துப் போயினர். 

இரவு விருந்து முடித்து புறப்பட்டவர்களை மலர்ச்சியோடு வழியனுப்புவதும், தாமதமாய் வந்து கொண்டிருந்தவர்களை இன்முகத்தோடு வரவேற்பதுமாய் சிதம்பரம் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தார். அவரது மனைவி லோகேஸ்வரி மண்டபத்தில் தங்கவிருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்க, அவர்களின் புதல்வியான சுப்ரஜா தோழியரின் கேலிகளுக்கும், கிண்டலுக்கும் இடையே சிக்கிக்கொண்டு அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தாள். 

நலங்கு முடிந்து மணமகள் அறைக்குள் நுழைந்தவளின் பின்னே நுழைந்த தோழியர் கூட்டம் ஒருமணி நேரமாய் கேலிசெய்கிறோம். என்ற பெயரில், வழக்கமாய் கேட்கும் ஹனிமூன், பர்ஸ்ட்நைட் என்று பேசியே போரடிக்க, சற்று நேரம் தன்னை தனியே விட்டுவிட்டு இவர்கள் கிளம்பமாட்டார்களா எனத் தோன்றியது சுப்ரஜாவிற்கு. 

அவளின் முகச்சுளிப்பைக் கண்ட உமாவிற்கு, அவளது மனநிலை புரிந்துவிட, தோழியரிடம் திரும்பினாள். 

"ஏய்! போதும்டி! போரடிச்சது போதும். சுஜா ரொம்ப டயர்டா இருக்கா. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். நாம் கிளம்பலாம்." 

"என்ன? கிளம்புறதா? இன்னிக்கு விட்டால் இனிமே இவளை எப்போ பார்ப்போமோ? விடிஞ்சா கல்யாணம். அப்புறம் நாலே நாள்ல டெல்லிக்குப் பறந்துடுவா. அதனால் இன்னிக்கு இவளை விடுவதாய் இல்லை" என அனைவரும் ஒருமித்த குரலில் மறுப்பைத் தெரிவிக்க, உமாவிடம் பார்வையால் மன்றாடினாள் சுப்ரஜா. 

'எப்படியாவது இவர்களை வெளியேற்றிவிடேன்' என கெஞ்சியவளிடம் கண்ணசைத்துவிட்டு எழுந்தாள் உமா. 

"ஷீலா! ஏற்கனவே அவ தலைவலிக்குன்னு சொன்னாள். நாம பேசி அவ தலைவலியை அதிகமாக்க வேண்டாம். கொஞ்ச நேரமாவது தூங்கட்டும். அதிகாலையிலேயே எழுந்திருக்கணுமே?" 

"ஏன் சுஜா? மார்னிங் ஒன்பது - பத்தரைதானே முகூர்த்தம்?" 

"அதுக்காக எட்டுமணிவரை தூங்கவிடுவார்களா? சாஸ்திரம் சம்பிரதாயம்னு எவ்வளவோ இருக்கே. மிச்சத்தை நாளைக்குப் பேசிக்கலாம். ம். வாங்க போலாம்." 

"ஏன்டி விரட்டுற?" 

"உங்களுக்காகவும் சேர்த்துத்தான் சொல்றேன் சுதா. நாமளும் சீக்கிரமா வீட்டுக்குப் போனால்தானே தூங்கியெழுந்து பிரெஷ்ஷா கிளம்பி வரமுடியும்?" 

"சரிசரி! ஓ.கே. சுஜா! குட் நைட்! ஸ்வீட் ட்ரீம்ஸ்." 

"குட்நைட்" விடுதலை உணர்வோடு சொன்னவளிடம் அனைவரும் கையசைத்து விடைபெற, உமாவும் தன் கைப்பையை எடுத்துக் கொண்டாள். 

"ஓ.கே. சுஜா! பை. டேக் ரெஸ்ட்!" 

"உமா!" 

"என்னப்பா?" 

"சடங்கெல்லாம் முடிஞ்சிடுச்சில்ல? இனிமே இந்த அலங்காரத்தையெல்லாம் எடுத்திடலாமா? ரொம்பத் தலைவலிக்குது."

"எடுத்திடலாமே! இனிமே யார் வந்து உன்னைப் பார்க்கப் போறாங்க?" 

"கொஞ்சம் ஹெல்ப் பண்ணு உமா! பூ வைக்கிறேன் பேர்வழின்னு மாப்பிள்ளையோட அக்கா என் தலைமுழுக்க ஆணி அடிச்சி வெச்சுட்டாங்க. யப்பா! எத்தனை ஹேர்பின்" 

சலித்துக் கொண்டே அறையிலிருந்த கண்ணாடியின் முன்னே வந்து அமர்ந்தாள் சுப்ரஜா. 

நலங்கின்போது பூசிய சந்தனமும், குங்குமமும் காய்ந்து போயிருச்சு. தலையில் சூடியிருந்த பூக்களும், சிகையலங்காரமும் அவளை பேரழகியாகக் காட்டியது. அணிந்திருந்த இளம்பச்சை நிற பட்டுப்புடவை அவளுக்கு வெகு பாந்தமாய் பொருந்தியிருந்தது. 

சுப்ரஜா இயல்பாகவே அழகி. அதுவும் இன்றைய அலங்காரத்தில் இன்னும் பேரழகாகத்தான் மாறியிருந்தாள். என்றாலும் இந்த மாப்பிள்ளையின் முகம் ஏன் உம்மென்றிருந்தது. மேடையில் இருந்தபோது ஒருமுறைகூட தன் புறம் திரும்பவில்லையே... சம்பிரதாயத்திற்குக் கூட ஒரு புன்னகை சிந்தவில்லை. 

உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ அறிமுகப்படுத்தவில்லை. நிச்சயதார்த்தத்தின் போதே தன் அலைபேசி எண்களை வாங்கிச் சென்றிருந்தாள் மாப்பிள்ளையின் தமக்கை. எந்த நிமிடமும் அவனிடம் இருந்து அழைப்பு வரலாம் என்ற எண்ணம் இந்த நிமிடம் வரை பொய்த்துதான் போனது. 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 7, 2023
ISBN9798223507901
பூ ஒன்று கண்டேன்

Read more from Kalaivani Chokkalingam

Related to பூ ஒன்று கண்டேன்

Related ebooks

Related categories

Reviews for பூ ஒன்று கண்டேன்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பூ ஒன்று கண்டேன் - Kalaivani Chokkalingam

    1

    பிரம்மாண்டமாய் உயர்ந்து நின்ற அந்த திருமண மண்டபம் முழுக்க கூட்டம் நிறைந்து வழிந்தது. வெளிச்ச மழையில் நனைந்து பார்ப்பவர்களின் கண்களையும், கருத்தையும் கவர்ந்து கொண்டிருந்த வண்ண மயமான விளக்குகள் மரக்கிளையில் சரங்களாய் தொங்கிக் கொண்டிருந்தன. வாசலருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரில் மணமக்கள் நின்று புகைப்படத்திற்காய் புன்னகைத்துக் கொண்டிருக்க, போவோர், வருவோர் என அனைவரும் ஒருகணம் நின்று அவர்களைப் பார்த்து பிரமித்துப் போயினர்.

    இரவு விருந்து முடித்து புறப்பட்டவர்களை மலர்ச்சியோடு வழியனுப்புவதும், தாமதமாய் வந்து கொண்டிருந்தவர்களை இன்முகத்தோடு வரவேற்பதுமாய் சிதம்பரம் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தார். அவரது மனைவி லோகேஸ்வரி மண்டபத்தில் தங்கவிருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்க, அவர்களின் புதல்வியான சுப்ரஜா தோழியரின் கேலிகளுக்கும், கிண்டலுக்கும் இடையே சிக்கிக்கொண்டு அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தாள்.

    நலங்கு முடிந்து மணமகள் அறைக்குள் நுழைந்தவளின் பின்னே நுழைந்த தோழியர் கூட்டம் ஒருமணி நேரமாய் கேலிசெய்கிறோம். என்ற பெயரில், வழக்கமாய் கேட்கும் ஹனிமூன், பர்ஸ்ட்நைட் என்று பேசியே போரடிக்க, சற்று நேரம் தன்னை தனியே விட்டுவிட்டு இவர்கள் கிளம்பமாட்டார்களா எனத் தோன்றியது சுப்ரஜாவிற்கு.

    அவளின் முகச்சுளிப்பைக் கண்ட உமாவிற்கு, அவளது மனநிலை புரிந்துவிட, தோழியரிடம் திரும்பினாள்.

    ஏய்! போதும்டி! போரடிச்சது போதும். சுஜா ரொம்ப டயர்டா இருக்கா. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். நாம் கிளம்பலாம்.

    என்ன? கிளம்புறதா? இன்னிக்கு விட்டால் இனிமே இவளை எப்போ பார்ப்போமோ? விடிஞ்சா கல்யாணம். அப்புறம் நாலே நாள்ல டெல்லிக்குப் பறந்துடுவா. அதனால் இன்னிக்கு இவளை விடுவதாய் இல்லை என அனைவரும் ஒருமித்த குரலில் மறுப்பைத் தெரிவிக்க, உமாவிடம் பார்வையால் மன்றாடினாள் சுப்ரஜா.

    ‘எப்படியாவது இவர்களை வெளியேற்றிவிடேன்’ என கெஞ்சியவளிடம் கண்ணசைத்துவிட்டு எழுந்தாள் உமா.

    ஷீலா! ஏற்கனவே அவ தலைவலிக்குன்னு சொன்னாள். நாம பேசி அவ தலைவலியை அதிகமாக்க வேண்டாம். கொஞ்ச நேரமாவது தூங்கட்டும். அதிகாலையிலேயே எழுந்திருக்கணுமே?

    ஏன் சுஜா? மார்னிங் ஒன்பது - பத்தரைதானே முகூர்த்தம்?

    அதுக்காக எட்டுமணிவரை தூங்கவிடுவார்களா? சாஸ்திரம் சம்பிரதாயம்னு எவ்வளவோ இருக்கே. மிச்சத்தை நாளைக்குப் பேசிக்கலாம். ம். வாங்க போலாம்.

    ஏன்டி விரட்டுற?

    உங்களுக்காகவும் சேர்த்துத்தான் சொல்றேன் சுதா. நாமளும் சீக்கிரமா வீட்டுக்குப் போனால்தானே தூங்கியெழுந்து பிரெஷ்ஷா கிளம்பி வரமுடியும்?

    சரிசரி! ஓ.கே. சுஜா! குட் நைட்! ஸ்வீட் ட்ரீம்ஸ்.

    குட்நைட் விடுதலை உணர்வோடு சொன்னவளிடம் அனைவரும் கையசைத்து விடைபெற, உமாவும் தன் கைப்பையை எடுத்துக் கொண்டாள்.

    ஓ.கே. சுஜா! பை. டேக் ரெஸ்ட்!

    உமா!

    என்னப்பா?

    சடங்கெல்லாம் முடிஞ்சிடுச்சில்ல? இனிமே இந்த அலங்காரத்தையெல்லாம் எடுத்திடலாமா? ரொம்பத் தலைவலிக்குது.

    எடுத்திடலாமே! இனிமே யார் வந்து உன்னைப் பார்க்கப் போறாங்க?

    கொஞ்சம் ஹெல்ப் பண்ணு உமா! பூ வைக்கிறேன் பேர்வழின்னு மாப்பிள்ளையோட அக்கா என் தலைமுழுக்க ஆணி அடிச்சி வெச்சுட்டாங்க. யப்பா! எத்தனை ஹேர்பின்

    சலித்துக் கொண்டே அறையிலிருந்த கண்ணாடியின் முன்னே வந்து அமர்ந்தாள் சுப்ரஜா.

    நலங்கின்போது பூசிய சந்தனமும், குங்குமமும் காய்ந்து போயிருச்சு. தலையில் சூடியிருந்த பூக்களும், சிகையலங்காரமும் அவளை பேரழகியாகக் காட்டியது. அணிந்திருந்த இளம்பச்சை நிற பட்டுப்புடவை அவளுக்கு வெகு பாந்தமாய் பொருந்தியிருந்தது.

    சுப்ரஜா இயல்பாகவே அழகி. அதுவும் இன்றைய அலங்காரத்தில் இன்னும் பேரழகாகத்தான் மாறியிருந்தாள். என்றாலும் இந்த மாப்பிள்ளையின் முகம் ஏன் உம்மென்றிருந்தது. மேடையில் இருந்தபோது ஒருமுறைகூட தன் புறம் திரும்பவில்லையே... சம்பிரதாயத்திற்குக் கூட ஒரு புன்னகை சிந்தவில்லை.

    உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ அறிமுகப்படுத்தவில்லை. நிச்சயதார்த்தத்தின் போதே தன் அலைபேசி எண்களை வாங்கிச் சென்றிருந்தாள் மாப்பிள்ளையின் தமக்கை. எந்த நிமிடமும் அவனிடம் இருந்து அழைப்பு வரலாம் என்ற எண்ணம் இந்த நிமிடம் வரை பொய்த்துதான் போனது.

    மாப்பிள்ளை என்ன அத்தனை கட்டுப்பெட்டியானவரா? தனக்குள்ளேயே சுப்ரஜா குழம்பிக் கொண்டிருக்க, பின்னால் நின்று அவளது சிகையலங்காரத்தை சிக்கலின்றி மெதுவாய் பிரித்துக் கொண்டிருந்த உமா, தோழியின் முகத்தை கண்ணாடியில் பார்த்தாள்.

    சுஜா!

    ம்?

    என்னா டென்ஷனா இருக்கா?

    இல்ல…

    இல்ல. உம்முகமே சரியில்ல. ஏதாவது பண்ணுதா? ரொம்பத் தலைவலிக்குதா? மாத்திரை ஏதாவது வேணுமா?

    இல்ல... அதெல்லாம் வேண்டாம்.

    பிறகேன்டி முகம் இப்படி வாடிப்போயிருக்கு?

    உ...மா...

    ம்?

    வந்து... மாப்பிள்ளையைப் பார்த்தியா?

    ம். பார்த்தேனே!

    எப்படி இருந்தார்?

    உன் அழகுக்கு அவர் கொஞ்சம் கம்மிதான். இருந்தாலும் ரொம்ப மோசமில்லை. நன்றாய்த்தான் இருக்கார்.

    ம்ப்ச்! நான் அதைக் கேட்கவில்லை.

    வேற?

    அது... அவர் எப்படி... கலகலப்பாய் இருந்தாரா? இல்லல உம்முன்னு இருந்தாரா? ஏன் கேட்கிறேன்னா ஸ்டேஜ்ல வெச்சு. அவரை நேராய் பார்க்க முடியவில்லையே அதான் - என்ற தோழியைக் கண்டு புன்னகைத்தாள் உமா.

    ப்பூ! இதுதான் உன் குழப்பத்துக்குக் காரணமா? மாப்பிள்ளை உன்னைவிட டென்ஷன் பார்ட்டிபோல. அதோட ரொம்ப வெட்கமும் பட்டார். நாங்க போய் பேசினாலும் மிரண்டு போயிட்டார் தெரியுமா?

    உ... மா!

    என்னப்பா?

    இந்த மாப்பிள்ளைக்கு... என்னைப் பிடிக்கலியோ?

    ஏய்! என்ன கேட்கிற?

    இல்ல... எங்கேஜ்மெண்ட அன்னிக்கும் ஒரு வார்த்தை கூட பேசல. அவரோட அக்கா என்னோட செல் நம்பர் வாங்கிட்டு போனாங்க. இந்த இருபது நாள்ல ஒரு நாள்ல கூட அவர் போன் பண்ணல.

    அட! இப்படி ஒரு ஆளா? ஓஹோ! இதுதான் உன் வருத்தமா? நான் வேணாப் போய் உனக்கு போன் பண்ணச் சொல்லட்டுமா?

    விளையாடாதேடி! எனக்கு ஒன்னும் அவர் கூடப் பேசணும்னு ஆசையில்ல.

    பிறகேன் வருத்தப்படுற?

    இல்ல உமா! படிப்பு முடிய இன்னும் நாலுமாதம்தான் இருக்கு. அப்பாவுக்கு பர்ஸ்ட் அட்டாக் வந்ததால் பயந்துபோய் அவசரமா கல்யாண ஏற்பாட்டை பண்ணிட்டாங்க. என்னாலயும் மறுக்க முடியல. கல்யாணம் முடிஞ்சதும் ஒரே வாரத்தில் டெல்லிக்கு போயிடணும்னு மாப்பிள்ளையோட அப்பா சொல்றார்.

    ஆனா என்னோட படிப்பு? ஒரு நாலு மாசத்தில படிப்பு முடிஞ்சிடும். அதுவரை நான் இங்கே இருந்தாகணும். அப்பாகிட்ட சொன்னால் கல்யாணம் முடியட்டும். மாப்பிள்ளைகிட்ட கேட்கலாம்னு சொல்றாங்க. எனக்கு அதுல உடன்பாடு இல்ல உமா.

    ஏன்?

    ஒருவேளை அவர் வேண்டாம்னு சொல்லிட்டா எனக்கு சங்கடமாய் இருக்கும். அதனால் கல்யாணத்துக்கு முன்னயே கேட்டுவிடலாம் என்றால் ஒரு போன்கூட செய்யல அவர்.

    அவர் பண்ணாவிட்டால் என்ன? நீ போன் பண்ணு

    ம்பச்! அவர் செல் நம்பரைத் தரவே இல்லை.

    என்ன?

    வீட்டு தொலைபேசி நம்பரைத்தான் தந்திருந்தார்கள். அதில் தொடர்புகொண்டால் அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அட்டெண்ட் செய்யுறாங்க.

    மாப்பிள்ளையிடம் பேசவேண்டும் என்று சொல்லவேண்டியதுதானே?

    "அதெப்படி முடியும்? அவரே பேசவில்லை. நானாக எப்படி

    Enjoying the preview?
    Page 1 of 1