Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஜெகதா
ஜெகதா
ஜெகதா
Ebook207 pages1 hour

ஜெகதா

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நீ இப்படியே வக்கணையா சமைச்சிப் போட்டு கையிலயும் ரெண்டாள் உயரத்துக்கு டிபன் கேரியர் குடுத்து அனுப்பிக்கிட்டே இருந்தீன்னா வீட்டு வாசலை கூடிய சீக்கிரமே இடித்து தான் ஆல்டர் பண்ணனும்..." சாய்குமார் அலுத்துக் கொண்டான்.
 "என்னங்க நீங்க? இந்த நாலு கை பொங்கலுக்கும் ஒரு கை சட்னிக்குமா இவ்வளவு புலம்பல்? ஒவ்வொருத்தர் வீட்டுல போய் பாருங்க. ஒரு நாளைப் போல பிரியாணியும் குருமாவுமா சீர்படுது. வயித்துக்கு வஞ்சனை செய்யாதீங்க.." சிந்தூரி திட்டினாள்.
 "நல்லா சொல்லு இந்தப் பயலுக்கு. ஏன்டா என் மருமக புண்ணியத்தில் வாய்க்கு ருசியா சாப்பிட்டுக் கிட்டிருக்கேன். அதைக் கெடுத்திடுவே போலிருக்கே? முப்பது வருஷமா உன் அம்மா சுட்டுப் போட்ட வரட்டி சப்பாத்தியையும் கூழ் மாதிரி சோறும் தண்ணி சாம்பாரையும் தின்னு இம்சை பட்டவன் நான். என் மருமக வந்த ஒரு வருஷமாத்தானேடா இந்த வீட்டுல சமையலறைன்னு ஒண்ணு இருக்கறதும், அங்கே இருந்து ருசியான வாசனை வர்றதும் எனக்குத் தெரிஞ்சிது? இன்னொரு தரம் சாப்பாட்டைப் பத்தி ஏதாவது எனக்கே தெரிஞ்சிது? இன்னொரு தரம் சாப்பாட்டைப் பத்தி ஏதாவது சொன்னே.. தொலைச்சிடுவேன். ஏம்மா சிந்தூரி அன்னிக்கு கேரள பக்குவமா மீன் செய்யறதைப் பத்தி சொன்னியே. இன்னிக்கு செய்யறியா? என்ன மீன் வேணும்னு சொல்லு. இப்பவே போய் வாங்கிட்டு வந்திடறேன்." சப்பு கொட்டிக் கொண்டான் சாய் குமார்.
 வேகமாக கார் சாவியுடன் வெளியே போனவனை, "என்னங்க.. சாப்பாட்டுக் கேரியர்.." என்று கத்திக் கொண்டே ஓடிய சிந்தூரியைப் பார்த்து, "ரொம்ப தேங்க்ஸ்மா... என் அப்பா இவ்வளவு சந்தோஷமா பேசி நான் பார்த்ததே இல்லை..." என்றான்.
 "உங்க தேங்க்ஸை மறுக்காம நான் வாங்கிக்கறேன். நீங்க வரும்போது மறக்காம நான் குடுத்த லிஸ்ட்ல இருக்கற மளிகை சாமானையெல்லாம் வாங்கிட்டு வந்திடுங்க."அடிப்பாவி. அதையெல்லாம் வாங்கி வாரிக்கிட்டு வரணும்னா.. நாலு லாரி வேணும்டி. நீயும் உன் மாமனாரும் மதியமா போய் அதைச் செய்யுங்க. எனக்கு ஆபீசில முக்கியமான மீட்டிங் இருக்கு. பை.. பை.." என்று சாய்குமார் கையசைத்து விட்டுக் கிளம்பி விட்டான். சிந்தூரி உள்ளே வரும்போது மாமா தருமருக்கும் அத்தை பாஞ்சாலிக்கும் கடுமையான வார்த்தை யுத்தம் நடந்து கொண்டிருந்தது.
 "இதோ பாருங்க தரும ராசரே. உங்க மருமகளைப் புகழுங்க. பொன்னாலயே அலங்கரிங்க. நான் வேணாங்கலை. அதுக்காக அவ எதிரில என்னை மட்டம் தட்டற வேலையெல்லாம் வைச்சிக்காதீங்க. இன்னிக்குத்தானேய்யா இந்த புது சமையல்? போன வருஷம் வரை நான் செய்து போட்டதைத்தானே வழிச்சி வழிச்சி தின்னீரு? அப்ப தெரியலியா? அது சப்பாத்தி இல்லை வரட்டின்னு? உம்மையெல்லாம் சுண்ணாம்பு களவாயில வைச்சி சுடணும்யா.." என்று கத்தியபடி முசுமுசு'வென மூச்சு வாங்கும் பாஞ்சாலி அடுத்த வார்த்தை பேசுமுன்னே சிந்தூரி குறுக்கே பாய்ந்தாள்.
 "ஐயோ... என்ன அத்தை நீங்க? நான் புதுசா சமைக்கிறதால என் மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு மாமா சும்மாங்காட்டியும் இப்படி புகழ்ந்து பேசறாரு. மத்தபடி உங்க அனுபவத்துக்கும் கை பக்குவத்துக்கும் நான் எந்த மூலைக்கு வருவேன்?"
 அவள் பணிவாக நின்று பேசியதைக் கேட்ட பாஞ்சாலி மெல்ல புன்னகைத்தாள். "அத்தை நான் உங்களுக்கு மாம்பழ மில்க் ஷேக் எடுத்துக்கிட்டு வரேன்" என்றபடி சிந்தூரி உள்ளே போனாள். கூடத்தில் பாஞ்சாலி பேசுவது கேட்டது.
 "அவ என்னவோ நல்லவதான். நீங்க அவளைக் கெடுத்திடாம இருங்க சாமி. புண்ணியவானே."
 சிந்தூரி சிரித்துக் கொண்டாள். பாய்ந்து வரும் கோபத்தைக் கூட பொறுமை என்னும் அற்புதமான மாயத்தால் செயலிழக்க வைத்து விடலாம் என்று அம்மா சொல்லிக் கொடுத்தது எத்தனை நிஜம்? புது மனிதர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதும் அம்மா சொல்லிக் கொடுத்ததுதான். எத்தனை பெரிய படிப்பு படித்தாலும் வேலையில் இருந்தாலும் சமைக்கவும் வீட்டு வேலைகள் செய்யவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அம்மாதான் வற்புறுத்தி எல்லாமே சொல்லிக் கொடுத்தாள். அன்றைக்கு கோபமும் எரிச்சலும் வந்ததுஇன்று அம்மாவுக்கு மனதுக்குள் கோயில் கட்டிக் கும்பிட்டுக் கொண்டு இருப்பது தான் நிஜம்.
 "ஏம்மா சிந்தூரி... மாம்பழம் பறிக்க சேலத்துக்குப் போயிட்டியா?" கூடத்திலிருந்து தர்மர் கூப்பிடுவது கேட்டது. இரண்டு டம்ளர்களில் மாம்பழக் கலவையையும், ஒரு தட்டில் முந்தின நாள் செய்து வைத்திருந்த முந்திரி பக்கோடாவையும் வைத்துக் கொண்டு போனாள். "மாமா... இதைச் சாப்பிட்டுக்கிட்டே இதையும் குடிங்க. அத்தையும் நீங்களும் மலரும் நினைவுகளுக்கு போயிட்டு வாங்க. நான் மத்த வேலையெல்லாம் முடிச்சிட்டு வரேன்."
 "கொண்டா. கொண்டா.. இதை எப்ப ரகசியமா செய்தே? வாயிலப் போட்டாலே கரையுதே. பாஞ்சாலி சாப்பிடு.." தர்மர் தலைகால் புரியாமல் கத்தினார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223418887
ஜெகதா

Read more from Megala Chitravel

Related to ஜெகதா

Related ebooks

Reviews for ஜெகதா

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஜெகதா - Megala Chitravel

    1

    மேகமயில் தன் தோகை விரித்து உதறிய தங்கப் பொட்டுகளாக வானத்தரையெங்கும் நட்சத்திரங்கள் சிதறிக் கிடந்த இரவுப் பொழுது.

    காரை விட்டிறங்கி கைப்பெட்டியுடன் ஆறாவது தளத்தை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினான் பரணி. கதவைத் திறக்கும் போதே, ஏன் இவ்வளவு லேட்டு? இப்ப மணி என்ன தெரியுமா? பத்தரை. ஆபீஸ் முடிஞ்சதும் வீட்டுக்குப் போகணும்னு ஆம்பிளைக்கு மனசிலயும் உடம்பிலயும் ஒரு பதைப்பு வரணும். அதுதானே இல்லை. காலையில் முறைவாசல் பெருக்கறவ மாதிரி முதல் ஆளாய் போய் ராத்திரியில ஆபீஸ் மூடிட்டுப் போற பியூனாட்டம் கடைசியில் வந்தா? இப்படித்தான்.. இதெல்லாம் தானா இல்லே வரணும்? என்று கத்திய பாமாவைப் பார்த்தபோது பரணிக்கு அலுப்பாகியது.

    இப்ப என்ன உனக்கு? நான் இப்படியே திரும்பிப் போயிடணும். அவ்வளவுதானே? சரி போறேன். நீ கதவை பூட்டிக்கிட்டு நிம்மதியா தூங்கு...

    பேச்சாலயே ஆளை அடிச்சி வீழ்த்திடற வாய் ஜாலக்குகாரங்கக்கிட்ட என்னாட்டம் அப்பிராணி மனுஷி பேச முடியுமா? என்று சிடுசிடுத்துக் கொண்டே நகர்ந்தாள் பாமா.

    எதுவும் பேசாமல் உள்ளே வந்த பரணி குளித்து உடை மாற்றி வந்தான். சாப்பாடு டேபிள் மேலே இருக்கு. போட்டுத் தின்னுங்க. படுக்கையறையிலிருந்து வந்த கட்டளைக் குரலை உதாசீனப்படுத்தி பிரிஜ்ஜிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்தான்.

    தண்ணீர் குடித்துவிட்டு பால்கனியில் போய் உட்கார்ந்தான். கை தானாக சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டது. வானத்தில் பளிச்செனத் தெரிந்த நிலாவினுள் அம்மாவின் சிரித்த அழகான முகம் தெரிவது போலிருந்தது. அம்மாவைப் பற்றி நினைக்கும்போதே மனது தித்தித்தது. எப்போதுமே எல்லாவற்றிலும் நல்லதையே பார்க்கும் அவனுடைய அம்மா செய்த ஒரே தவறு.

    அதோ உள்ளே தூங்கிக் கொண்டிருக்கிறதே ஒரு ராட்சச ஜந்து, அதை சொந்த அண்ணன் மகள் என்று அவன் தலையில் கட்டி வைத்ததுதான். அண்ணன் மட்டும் தான் சொந்தம். அவருடைய மனைவி எத்தனை ஆண்டுகளானாலும் அந்நியர் வீட்டுப் பெண் என்பதை அம்மாவின் அன்பு மனம் மறந்து விட்டது. அதனால் தான் மாமாவின் மனைவி தன்னால் செய்ய முடியாத அண்ணி கொடுமை எல்லாம் தன் மகள் மூலம் தீர்த்துக் கொள்கிறாள்.

    கணவன் அலுத்துக் களைத்து வரும்போது ஆதரவாக வரவேற்று அன்பாக நாலு வார்த்தை பேசி பரிவாக சோறிடும் மனைவியாய் என்றுமே வாழாதவள் அத்தை. அவளைப் பொறுத்தவரை கணவன் உழைத்துக் கொட்டும் ஒரு யந்திரம் மட்டுமே. அவனுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதோ, அவனுடைய குடும்பத்துக்கு அன்பு பாராட்டுவதோ அவள் அறியாதது. இந்த உத்தம குணங்களைத் தன் மகளுக்கும் பிறந்த வீட்டு சீதனமாகக் கொடுத்தனுப்பி விட்டாள் அந்தப் புண்ணியவதி!

    திருமணத்தன்றே அதைப் பார்க்க முடிந்தது. புது மணமகளை ஆரத்தி எடுத்து வரவேற்ற அம்மா, வலது காலை எடுத்து வைச்சி உள்ளே வாம்மா என்றாள்.

    பாமா பல்லு தெரியச் சிரித்தாள். அத்தை வலது காலை மட்டும் உள்ளே வைச்சிட்டு, இடது காலை என்ன பண்றது? வெட்டி வெளியே போட்டிடணுமா? என்று அவள் கேட்டது சிரிப்புடன் சுற்றி நின்றவர்களை அதிருப்தி அடைய வைத்தது. அம்மா அதிர்ந்து போனாள். சின்ன வயசில இருந்தே என்கூட இப்படித்தான் வம்பு பேசிக்கிட்டே இருப்பா. எல்லாரும் உள்ள போங்க... என்று சமாளித்தாள்.

    வெளியில் அப்பா அம்மாவிடம், என்னம்மா மருமக முதல் குண்டைப் போட்டுட்டா போலிருக்கே? என்று கேலி பாதியும் கவலை பாதியுமாகச் சொல்வது பரணியில் காதில் விழுந்தது. ஸ்... சும்மா இருங்க... பையன் காதில விழப் போகுது. பாவம்.. கல்யாண நாளும் அதுவுமா பிள்ளை மனசு கஷ்டப்படக் கூடாது. எதையும் காட்டிக்காம உள்ள வாங்க என்று அம்மா அவரை அதட்டுவதும் கேட்டது.

    பரணி வேலைக்காக வெளியூர் போனபோது உப்பு போடும் சின்ன ஸ்பூனிலிருந்து அண்டா வரை அம்மா தான் வாங்கி அடுக்கினாள். கல்யாணத்தப்ப என்ன வேணும்னாலும் கேளுங்க. செய்திடறோம்னு நாங்க கேட்டப்ப நீங்க தானே எதுவும் வேணாம்னு பெருமை பேசினீங்க? இப்ப எங்கக்கை காலியா இருக்கு. அதனால நீங்களே எல்லாத்தையும் வாங்கிக் குடுங்க.. என்று பாமாவின் அம்மா சொன்னாள். பிள்ளை வீட்டுக்காக அம்மா அன்பாய் வாங்கி அழகு பார்த்து அடுக்கினதெல்லாம் என்னமோ தன்னால் தான் வந்தது என்று கூறவும் அவள் தயங்கவில்லை. அம்மா வழக்கம் போல அந்தப் பேச்சைத் தள்ளி விட்டாள்.

    பரணியை மேலே சிந்திக்க விடாமல் உள்ளிருந்து பத்து எருமைகள் கத்துவது போல பாமா கத்தினாள்.

    ராவெல்லாம் பனியில் உட்கார்ந்து சிகரெட் பிடிச்சிக்கிட்டு இருக்க வேண்டியது. காலையில ‘லொக்கு.. லொக்கு’ன்னு இருமி என் உயிரை வாங்க வேண்டியது. தனக்காவும் தெரியாது. சொன்னாலும் புரியாது. உங்களைத்தான்... உள்ள வந்து படுத்துத் தொலையுங்களேன்.

    காதலால் கசிந்துருகி கொண்டாட வேண்டிய இனிமையான இரவு நேரத்தில் எவ்வளவு அன்பாகக் கூப்பிடுகிறாள்? அப்படியே பாய்ந்து அவள் குரல் வளையை நெரிக்க வேண்டும் போலிருந்தது. பரணி பெரும் பிரயத்தனப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டு அசையாமல் உட்கார்ந்திருந்தான்.

    காலையில் வழக்கம் போல கண் எரிச்சலுடன் எழுந்து வழக்கம்போல வாய்ச் சண்டை போட்டு வழக்கம் போலவே காலைச் சிற்றுண்டி சாப்பிடாமல் பரணி படியிறங்கி விட்டான். காரில் ஏறியபோது சொந்த மாமன் மகளைக் கட்டியதால்தானே இந்த கதிபட்டால் அந்நியத்தில் பெண்ணெடுத்த தம்பி பத்ரியின் நிலை என்னவாக இருக்குமோ என்று நினைப்பு வந்தது.

    இப்படிச் செய்யாதேன்னு உனக்கு எத்தினி தரம் சொல்லி இருக்கேன்? நான் சொன்னா கேட்கக் கூடாதுன்னு உனக்கு ஏதாவது வேண்டுதலா? பத்ரி கேட்டான்.

    எது? வழக்கமா திட்டறதுதானே? திட்டிட்டுச் செய்யறதை செய்திட்டுக் கிளம்புங்க சார். நேரமாகுது. சுவேதாவின் குரல் பரிகாசம்.

    கிண்டலு? ம்? நீ பால் கொண்டு வெச்சிருக்கியே. இதுக்கு பேரு டம்ளர் இல்லை. ஒரு லிட்டர் அளவுள்ள அண்டா. ஒரு நாளைப் போல இது நிறைய பால் குடிக்கச் சொல்றியே.. இது உனக்கே ஓவரா தெரியலை?

    ஸாரிங்க... இதைப் பத்தி நீங்க என்கிட்டே கேக்கக் கூடாது. அத்தைகிட்டே... அதாவது உங்கம்மாகிட்டே தான் கேக்கணும். அவங்கதான் தனிக்குடித்தனம் வந்தன்னிக்கு இதை என் கையில் கொடுத்து தினமும் காலையில் இதுல பால் தரச் சொன்னாங்க.

    வாடி மாமியார் சொல்லைத் தட்டாத மருமகளே. தினமும் நீ போடற மாரடைச்சான் உருண்டை இட்லியைத் தின்னு இதையும் குடிச்சா அரை அடி கூட என்னால நகர முடியலை. அதனால இனிமே இட்லி ஒண்ணு இல்லேன்னா அரை தோசைதான் சாப்பிடப் போறேன்.. பத்ரியின் வார்த்தைகளைக் கேட்ட சுவேதா புன்னகைத்தாள்.

    அது முடியாது. தினமும் நாலு இட்லி இல்லைன்னா மூணு தோசை உங்களுக்குத் தரணும்னு எங்கத்தை உத்தரவு போட்டிருக்காங்க. அதை மீறமாட்டேன்.

    அடக்கடவுளே. மாமியாரும் மருமகளும் சண்டை போட்டுக்கிட்டாலும் ஆம்பிளைகளுக்குத் தொல்லை. இப்படி கோந்து போட்டது போல ஈஷிக்கிட்டாலும் ஆம்பிளைகளுக்கு பிரச்சினை. அம்மா தாய்மாரே. ஆண்களை விட்டிடுங்கம்மா. பொழைச்சிப் போறோம் என்றபடி கையெடுத்துக் கும்பிட்டான் பத்ரி.

    அச்சச்சோ.. நான் மாட்டேன்ப்பா. இதைக்கூட எங்கத்தையை கேட்டுக்கிட்டுத்தான் முடிவு செய்யணும் சார். சுவேதா வேண்டுமென்றே பழிப்பு காட்டினாள். பதிலுக்கு சிரித்துக் கொண்டே பத்ரி பைக்கை உசுப்பினான்.

    புன்னகையுடன் சுவேதா வீட்டிற்குள் போனாள். வாசலில் இருந்து உள்ளே வந்ததும் பார்வையில் படுவது போல நடுக்கூடத்தில் மாட்டி வைத்திருந்த திருமண புகைப்படம் கண்ணில் பட்டது. எல்லோருக்கும் நடுவில் சிரித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த அத்தையின் முகம் பளிச்சிட்டது.

    தன்னைப் பெண் பார்க்க வந்தபோது அத்தை சொன்னது இப்போதும் சுவேதாவின் மனதில் படமாக விரிந்தது. நிறைய படிச்ச பையனுக்கு பொண்ணு கேக்கறாங்க. அதனால எதிர்பார்ப்பும் அதுக்குத் தகுந்தா மாதிரி இருக்குமோன்னு பயப்படாதீங்க. எங்களுக்கு எதுவும் வேணாம். முடிஞ்சா ஒரே ஒரு வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு வாங்கிக் குடுத்தனுப்புங்க போதும். அதைப் போலவே என் பையனுக்கும் தங்கத்தில் எதையும் வாங்கிடாதீங்க. அவன் போட்டுக்கவே மாட்டான். வீணா பெட்டியிலதான் தூங்கும். அதனால உங்க திருப்திக்காக பட்டுல வேட்டி, சட்டை, துண்டு மட்டும் எடுத்துக் குடுத்திடுங்க. போதும். என்னங்க நான் சொன்னது?

    அத்தைக்கு ஏற்றவராக மாமாவும், நீ சொன்னா சரிதான் என்று புன்னகைத்தார்.

    பெண் பார்க்கும் படலத்தைப் பார்க்க வந்திருந்த உறவுக் கூட்டமும் அக்கம் பக்கமும் வாயைப் பிளந்து விட்டது. சுவேதாவின் குடும்பத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்..

    இன்னொண்ணும் சொல்லிடறேன். கல்யாணத்தை ரொம்ப ஆடம்பரமா பண்ணி காசை வீணாக்கறதெல்லாம் வேணாம். பதிவு திருமணம் செய்திட்டு சாயங்காலம் உறவையும் நட்பையும் கூப்பிட்டுச் சின்னதா விருந்து வைய்ங்க போதும். அன்னிக்கு மதிய சாப்பாட்டுக்கு ஆகிற பணத்தை ஆதரவற்றோர் இல்லத்துக்கும் முதியோர் இல்லத்துக்கும் கொடுத்திடுங்க. அவங்க வாழ்த்து நம்ம பிள்ளைகளை ரொம்ப காலம் நல்லா வாழ வைக்கும். எங்களுக்குப் பொண்ணு பிடிச்சிருக்கு. அதனால சும்மா நாள் கடத்தாம இன்னிக்கே ஒப்பு தாம்பூலம் மாத்திக்கலாம். என்னங்க நீங்க என்ன நினைக்கறீங்க?

    இதுதான் சரியான முடிவு. வீட்டுக்குப் போய் முடிவு சொல்றோம்னு வீணா பொண்ணை பதட்டப் பட வைக்க வேணாம். என்ன பத்ரி. உன் விருப்பம் என்ன?

    அம்மாவும் நீங்களும் என்ன சொன்னாலும் எனக்கு சம்மதம் தான்ப்பா என்று பத்ரியும் ஒப்புக் கொண்டதும் பெண் பார்க்க வந்த படலம், நிச்சய தாம்பூல விழாவாக முடிந்தது.

    அவர்கள் விடைபெற்று போய் வெகுநேரமாகியும் சுவேதாவின் குடும்பத்தினரால் பிரமிப்பிலிருந்து விடுபட முடியவில்லை. சுவேதாவின் அம்மா சம்பங்கி மெதுவாகக் கேட்டாள்.

    என்னங்க... இப்ப நடந்ததெல்லாம் நெசம்தானே? கனவில்லையே?

    உன் மருமகளோட தாய் வீட்டுல இருந்த கடைசி பைசா வரைக்கும் உறிஞ்சின உனக்கு இது கனவாத்தான் இருக்கும். ஏன்னா வெத்து கவுரவத்துக்கும் வெட்டி பந்தாவுக்கும் மட்டுமே வாழ்ந்து கிட்டிருக்கிற, நீ இப்பதானே நிஜமான ஒரு மனுஷியைப் பார்க்கறே? நீ செய்து நான் உனக்கு ஒத்து ஊதின பாவத்துக்கு உன்னைவிட மோசமானவங்கதான் வரப் போறாங்கன்னு மனசுக்குள்ள திகிலடிச்சிக் கிடந்தேன். ஆனா நம்ம சுவேதா எந்த ஜென்மத்திலயோ ஏதோ சாமிக்கு பொன்னால் பூவும் மனசால பக்தியுமா அர்ச்சனை பண்ணியிருக்கா போலிருக்கு. அதான் அவளுக்கு இப்படிப்பட்ட இடம் கிடைச்சிருக்கு. உன் கிட்ட ஒண்ணே ஒண்ணுதான் சொல்ல விரும்பறேன். தயவு செய்து ஏதாவது காரணம் சொல்லிக்கிட்டு சுவேதா வீட்டுக்குப் போயிடாதே. அவளாவது நிம்மதியா சந்தோஷமா அந்த நல்லவங்கக் கூட வாழட்டும். போ.. போ.. போய் குடிக்கத் தண்ணி கொண்டா. என்னமோ நெஞ்சையடைக்கறா மாதிரி இருக்கு.

    கணவர் சொன்னது மனதை உறுத்திட சம்பங்கி முகத்தைத் தூக்கிக் கொண்டு நகர்வதற்குள் சுவேதா தண்ணீருடன் வந்து விட்டாள். எல்லாமே சொடக்கு போடும் நேரத்தில் முடிய மறு மாதமே சுவேதா பத்ரியின் மனைவியாக மாமியார் வீட்டுக்கு வந்தாள்.

    அப்போதும், வலது காலை வைச்சி உள்ளே வாம்மா.. என்று சும்மா வரவேற்றபோது சுவேதா என்ன சொல்லப் போகிறாளோ என்னும் எதிர்பார்ப்பில் மொத்தக் கூட்டமும் உறைந்து நின்றது.

    ரொம்ப தேங்க்ஸ் அத்தை. உங்கக்கூட ஒண்ணா வாழறதுக்கு எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. உங்க மனம் போல நடந்து நல்ல மருமகள்னு பேர் எடுப்பேன்.. என்றபடி உள்ளே நுழைந்தவனைப் பார்த்து எல்லோரும் கைதட்டினர். பாமாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் பொரிந்து சிதறியது.

    மனோரஞ்சிதப் பூ மாதிரி மணந்து கொண்டே இருக்கும் அத்தையை இன்றைக்கு நினைத்தாலும் சுவேதாவுக்கு பெரும் வியப்பாக இருக்கும். அப்பா சொன்னது மாதிரி இந்த நல்ல வாழ்க்கை தெய்வம் தந்ததுதான் என்று மனதில் நினைத்தபடி சுவேதா வேலைகளைப் பார்க்கலானாள்.

    வண்டியில் போய்க் கொண்டிருந்த பத்ரி சிக்னலில் நின்றான். நிமிர்ந்து சுற்றிலும் பார்த்தபோது பக்க வாட்டிலிருந்த பெரிய விளம்பரப் பலகை கண்ணில் பட்டது. கணவனும் மனைவியும் அழகான குழந்தையுடன் சிரித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்க்கும் போது ஒரே தங்கை சிந்தூரியும் அவள் கணவன் சாய்குமாரும் நினைவுக்கு வந்தார்கள். திருமணமாகி ஓராண்டுதான் ஆகிறது. வீட்டில் செல்லப் பெண்ணாக இருந்தாலும் அம்மா அவளை நல்லக் குடும்பத் தலைவியாக உருவாக்கி இருந்தாள். இப்போது சிந்தூரி என்ன செய்து கொண்டிருப்பாள் என்று நினைக்கும்போதே பச்சை விளக்கும் பளிச்சிட்டு வழி விட்டது.

    2

    "நீ இப்படியே வக்கணையா சமைச்சிப் போட்டு கையிலயும் ரெண்டாள் உயரத்துக்கு டிபன் கேரியர் குடுத்து அனுப்பிக்கிட்டே இருந்தீன்னா வீட்டு வாசலை கூடிய சீக்கிரமே இடித்து தான் ஆல்டர் பண்ணனும்..." சாய்குமார் அலுத்துக் கொண்டான்.

    "என்னங்க நீங்க? இந்த நாலு கை பொங்கலுக்கும் ஒரு கை சட்னிக்குமா இவ்வளவு

    Enjoying the preview?
    Page 1 of 1