Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சொர்ணப் புறா!
சொர்ணப் புறா!
சொர்ணப் புறா!
Ebook248 pages1 hour

சொர்ணப் புறா!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொழுது விடியுமுன்னே எழுந்த செல்லக்கண்ணும் பெருமாளும் விறுவிறுவென வேலையில் இறங்கினார்கள். செல்லக்கண்ணு வாசலை அடைத்து பெரிய கோலம் போட்டு முடிக்கும்போது பெருமாள் குளித்து விபூதி பூசி வெளியே வந்தான். அவனைப் பார்த்து புன்னகைத்த செல்லக்கண்ணு, "மச்சான் வெறும் வயிறா வெளியே கிளம்பாதே. கொஞ்சம் நீராகாரம் கொண்டு வரேன். குடிச்சிட்டு கிளம்பு..." என்றபடி வேகமாக உள்ளே ஓடினாள்.
 சொம்பு நிறைய நீராகாரம் குடித்துவிட்டு "மச்சான் கிட்டே சொல்லிடு செல்லக்கண்ணு. மதியம் சாப்பாட்டுக்கு வரவும் முன்ன பின்ன ஆவும். அதனால காத்திருக்காம சாப்பிடுங்க. நான் கிளம்பறேன்" என்ற பெருமாள் சாக்கை பின்புறம் வைத்துக் கொண்டு கிளம்பினான். அவன் போவதையே பார்த்து ரசித்த செல்லக்கண்ணு பரபரவென சமையலறைக்குப் போனாள்.
 முருகேசை எழுப்பி பல் விளக்கிவிட்டு குளிக்க வைத்து புது உடை போட்டு விட்டாள். "தம்பி குறும் புத்தனம் எதுவும் பண்ணாம உட்கார்ந்து விளையாடு. மாமா வர்றதால அம்மாவுக்கு நிறைய வேலை இருக்கு. கொஞ்சம் கடைக்குப் போயிட்டு வரேன். வந்து தோசை சுட்டுத்தரேன்..." என்று சொல்லிவிட்டு பையை எடுத்துக் கொண்டு நடந்தாள்.
 அப்போதுதான் எழுந்து வெளியே வந்த பழனி வாசலில் நிமிர்ந்து நின்று திமிர் முறித்தான். எதிர் வாசலில் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்த முருகேசு கண்ணில் பட்டான். அவனை வம்புக்கு இழுப்பதற்காக "என்னடா முருகேசு.. எங்க உங்கப்பனைக் காணோம்? காலையிலயே களைப்பிடுங்கப் போயிட்டானா? அவ எங்க உங்கம்மா? யாரு கூடவாவது சண்டை போடப் போயிருக்காளா? வாயாடியாச்சே அவ.." என்று கேட்டான் பழனிஅவனோடு எதுவும் பேசக்கூடாது என்று செல்லக்கண்ணு சொல்லி இருந்தது முருகேசுக்கு நினைவுக்கு வந்தது. அதனால் எதுவும் காதில் விழாதது மாதிரி உட்கார்ந்து மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தான்.
 அந்த அலட்சியத்தைப் பார்த்த பழனிக்கு கோபம் வந்தது.
 "முளைச்சு மூணு இலை விடலை... என்ன திமிரா இருக்கு பார்த்தியா? ஏன்டா காதுல விழாத மாதிரி உட்கார்ந்திருக்க உங்கம்மா சொல்லிக் குடுத்தாளா?" இப்போதும் முருகேசு பதில் சொல்லாமல் இருந்ததால் பழனி அவனை அடிக்க ஓடினான்.
 கையில் டீயுடன் வந்த வெள்ளையம்மா அவனை ஓடித் தடுத்தாள். "என்ன மாமா இது? சின்னப் பிள்ளைக் கூட வம்பு பண்ணிக்கிட்டிருக்கீங்க? அவன் பாவம்... தன் பாட்டுக்கு விளையாடிக் கிட்டிருக்கான். டீயை குடிச்சிட்டு குளிக்கப் போங்க."
 "டேய்... உன்னை ஒரு நாளைக்கு கவனிச்சிக்கறேன். உன் சாவு என் கையில தான்டா..." என்று சொல்வது தெரியாமல் சொல்லிக் கறுவியபடி பழனி டீகோப்பையை வாங்கிக் கொண்டான். ஒரு வாய் குடித்தவன் முகம் மாறியது. அப்படியே கீழே துப்பினான். "சீ என்னடி டீ இது? கழனித் தண்ணி மாதிரியே இருக்கு. ஒன்றியச் செயலாளரோட பெண்டாட்டி டீ போட்டாங்கன்னா அண்டா டீயை ஒத்தையாளா குடிக்கலாம். எல்லாத்துக்கும் குடுப்பினை வேணும். இந்த வீட்டுல தான் எதுவும் இல்லாதக் கொடுமை. வந்தவளாவது நாலு காசோட வந்திருக்காளா? தரித்திர மூதேவி... நான் அரசியல்ல எப்படி முன்னேறது மந்திரியாவது? சே... நீ ஏன்டி தூணாட்டம் நிக்கறே? போய் குளிக்கத் தண்ணி எடுத்து வை. பலகாரம் என்ன பண்ணியிருக்கே? வழக்கம்போல இட்லியை வேவிச்சுக் கொட்டி குவிச்சி வைச்சிட்டியா? முறுமுறுன்னு நாலு தோசை சுட்டு தேங்காய் சட்னி அரைச்சி வை. பார்க்கறா பாரு. உன் விடியா மூஞ்சில முழிக்கறதாலதான்டி எனக்கு எதுவுமே விடியவே மாட்டேங்குது." சிடுசிடுத்துக் கொண்டிருக்கும் அவன் குரலைக் கேட்டு பொன்னாத்தா வெளியே வந்தாள்.
 "ஏன்டா நாசமா போறவனே... எதுக்குடா இப்படி அவளை கரிச்சிக் கொட்டறே? நீ பத்து ரூபா சம்பாதிச்சிக்கிட்டு வந்து என் கையில் குடு. அப்புறமா ஒன்றிய செயலாளர் வீட்டு டீ மாதிரியும் குடிக்கலாம். முறுமுறுன்னு தோசையும் தின்னலாம். வெறும் கையால முழம் போடற வேலையை விட்டுட்டு வேலை வெட்டியைப் பாருடா.இந்தக் கட்சி வேலையெல்லாம் வேணான்டா பழனி. அம்மா சொல்றதை இனிமேலாவது கேளுடா. உன்கூட கூட்டாளி தானே எதிர்வீட்டு பெருமாளு? கஷ்டப்பட்டு உழைச்சி மானம் மரியாதையா இருக்கானே அதைப் பார்த்தாவது கத்துக்க மாட்டியா?"
 பொன்னாத்தா தன்னைத் திட்டியதைக் கூட பழனி பெரிசாக எடுத்துக் கொள்ளவில்லை. 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223547051
சொர்ணப் புறா!

Read more from Megala Chitravel

Related to சொர்ணப் புறா!

Related ebooks

Reviews for சொர்ணப் புறா!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சொர்ணப் புறா! - Megala Chitravel

    1

    மேகக் கூண்டுக்குள் அடைந்து கிடந்த நட்சத்திரப் புறாக்களை காற்றுப் பையன் வான வீதியில் திறந்து விட்ட பின் மாலைப் பொழுது வெற்றிலையை மென்றபடி காற்றாட வாசல் திண்ணையில் உட்கார்ந்திருந்த பொன்னாத்தாவைக் கூப்பிட்டாள் எதிர்வீட்டு செல்லக்கண்ணு.

    ஆயா நாளைக்கு’ மதியம் அண்ணனும் அத்தாச்சியும் வராங்க. கறி எடுக்கலாம்னு இருக்கேன். நாளைய மதிய சாப்பாடு நான் தரேன். நீங்க செய்ய வேணாம்.

    நீ வர்றவங்களை கவனி செல்லக்கண்ணு. உங்கண்ணன் வருஷத்துக்கு ஒரு தரம் வரான். எங்களுக்கு தரணும்னு எதுக்குச் சிரமப்படறே? பொன்னாத்தா மறுத்தாள்.

    ஆமா... உங்களுக்குன்னு தனியாவா உலை வைக்கப் போறேன்? செய்யறதில ரெண்டுப் பிடி கூடப் போடப் போறேன். நீ பேசாம இரு ஆயா. எங்க வெள்ளையம்மாவைக் காணோம்?

    தண்ணி எடுக்க போயிருக்கா. பெருமாளு விடிகாலையிலேயே வெளிய போனாப்பல இருக்கு. இன்னும் வரலியா?

    அவரு டவுனுக்குப் போயிருக்காரு ஆயா. நாளைக்கு மார்க்கெட்டுல இருந்து காய் வாங்க ஆளுங்க வராங்க. காய் ஏத்த சாக்கு வேணுமில்லே? ஆமா எங்க பழனியண்ணனைக் காணோம்?

    அந்தக் கொள்ளையில போறவன் எங்க இருக்கான்? என்னமோ கட்சி மீட்டிங்குன்னு நேத்தே போயிட்டானே. கல்யாணம் ஆவாத வரையிலும் தான் கட்சி... கட்சின்னு சுத்திக்கிட்டிருந்தான். போவுதுன்னு விட்டேன். இப்ப கல்யாணமும் ஆகி ஒரு பெண்ணும் வீட்டுக்கு வந்துட்டா. இப்பவும் அப்படியே இருந்தா என்ன பண்றது? தெய்வத்தை நிந்திக்கறதா இல்லை என்னையே திட்டிக்கறதான்னு புரியலை செல்லக்கண்ணு.

    தன்னிடம் புலம்பும் பொன்னாத்தாவை பரிதாபமாகப் பார்த்தாள் செல்லக்கண்ணு. விடு ஆயா... ஒரு பிள்ளை பிறந்தா எல்லாம் சரியாப் போகும். வெள்ளையம்மா சீக்கிரம் பிள்ளை உண்டாகணும்னு ஆத்தா கிட்ட வேண்டிக்க ஆயா... எல்லாம் நல்லா நடக்கும்.

    தலையில் ஒரு தவலை இடுப்பில் ஒரு குடம் என்று தண்ணீர் தூக்கி வரும் வெள்ளையம்மாவைக் கண்டதும் செல்லக்கண்ணு வேகமாக எழுந்து போய் குடத்தை வாங்கி இறக்கினாள்.

    சொன்னா கேக்கறாளா பாரு செல்லக்கண்ணு. வேலை சீக்கிரம் முடியணும்னு இப்படி ரெண்டு ரெண்டா தூக்கிட்டு வர்றா. பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க? என்னமோ நான்தான் இவளைக் கொடுமை பண்றேன்னு தானே வரும்? அவனும் என் பேச்சைக் கேக்கறதில்லை. இவளும் கேக்கறதில்லை. என்னமோ போ... பொன்னாத்தா மனக் கஷ்டப் பட்டாள்.

    அத்தை... வேலை சீக்கிரம் முடியணும்னு தூக்கிட்டு வந்திட்டேன். இனிமே செய்யலை போதுமா? வெள்ளையம்மா சிரித்தாள்.

    இப்படி சோழி உருட்டி போட்டா மாதிரி சிரிச்சே என்னை ஏமாத்திடறா பாரு இவ. போய் ஈரத்துணியை மாத்து. கருவாட்டை ஊற வைச்சிருக்கேன். மொச்சக் கொட்டையை வேக வைச்சி குழம்பை கூட்டியிருக்கேன். சோறு மட்டும் வடிச்சி குழம்பை தாளிச்சிடு. சாப்பிட்டுட்டுப் படுக்கலாம் பொன்னாத்தா சொன்னாள்.

    திரும்பவும் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு வெள்ளையம்மா துணி மாத்த உள்ளே போனாள். அந்த மட்டும் உன் நல்ல குணத்துக்கு நல்லப் பெண்ணா வந்திருக்குப்பாரு ஆயா. அதுக்கு சந்தோஷப்படணுமே நாம்... எந்த வகையிலும் யாருக்கும் ஒத்து வராத உன் பிள்ளை குணத்துக்கு இது கெடைச்சது பெரிய அதிர்ஷ்ட மாச்சே... செல்லக்கண்ணு சொன்னாள்.

    நீ ஒண்ணு... இவ மட்டும் சரியா இருந்து அவனை தொடப்பக் கட்டையால நாலு மாத்து மாத்தினா அவன் ஒழுங்கா வேலைக்குப் போவான். இவதான் எதுக்கெடுத்தாலும் இப்படிச் சிரிக்கறாளே... ரொம்ப வெள்ளந்தியா இருக்கா செல்லக்கண்ணு. என் காலத்துக்கு அப்புறம் எப்படி பொழைக்கப் போறாளோ? பொன்னாத்தா கண் கலங்கினாள்.

    நீ என்ன ஆயா? இப்படிப் பேசறே? எல்லாம் உன் பேரன் பேத்திக்கு கல்யாணம் பண்ணி அதுங்க பிள்ளையைப் பார்த்திட்டு தான் போவே... உன் பிள்ளைக்கும் வெள்ளையம்மாவுக்கும் உன்னைவிட்டா யாரு இருக்கா? செல்லக்கண்ணு கண்டித்தாள்.

    அது என்னமோ வாஸ்தவம்தான். தாய் தகப்பனில்லாத தூரத்து சொந்தக்காரப் பொண்ணு. இந்தப் பயலை தட்டிக் கேட்கக்கூட அவ பக்கத்தில யாருமில்லை. என்னமோ செல்லக்கண்ணு நீதான் உன் உடன் பிறப்பாட்டம் அவளைப் பார்த்துக்கணும் பொன்னாத்தா கண்ணீர் விட்டாள்.

    எல்லாம் அக்கா என்னை பார்த்துக்கும். நீ வந்து சாப்பிடு. எப்ப பார்த்தாலும் இப்படியே புலம்புதுக்கா இது. அதைக் கேட்டா அவருக்குக் கோபம் வருமா வராதா? அவரு கத்தறாரு... கொஞ்ச நாளு வாயை மூடிக்கிட்டு அவரு போக்குல தானேக்கா விட்டுப் பிடிக்கணும்? அம்மாவும் புள்ளையும் சரிக்கு சரியா சளைக்கறதில்லை. அவரு பாவம்க்கா வெள்ளையம்மா பேசியதைக் கேட்ட பொன்னாத்தா,

    பார்த்தியா செல்லக்கண்ணு... புருஷனை விட்டுத்தராளா பாரு... பைத்தியக்காரி... என்று பெருமையுடன் அங்கலாய்த்துக் கொண்டு எழுந்தாள்.

    மாமியாரும் மருமகளும் வீட்டிற்குள் போவதைப் பார்த்து செல்லக்கண்ணு சிரித்துக் கொண்டே உள்ளே போனாள். கொஞ்ச நேரத்திலேயே பெருமாள் வந்தான். சாக்கு பைகளைத் தலையில் தூக்கிக் கொண்டு வந்தவனை செல்லக்கண்ணு திட்டினாள்.

    என்ன மச்சான்... இவ்வளவு சுமையை தனியாவா தலையில் தூக்கிட்டு வந்தே? கூட யாராவது ஒருத்தரைக் கூட்டிட்டு வரக் சு.டாது? பார்த்து இறக்கு... என்றபடி கைலாகு கொடுத்து சுமையை இறக்கினாள். அட போ... புள்ள... ஆளு வைச்சா பத்து ரூவாய்க்கு கம்மியா வரமாட்டேங்கறான். அந்த பத்து ரூவா இருந்தா எவ்வளவு செலவு அடங்கும் பெருமாள் சொல்லிக் கொண்டே சட்டையைக் கழட்டினான். வியர்வையில் உடம்பே நனைந்து கிடந்தது.

    உன் சமாச்சாரம் எனக்குத் தெரியுமே. அதான் சுடு தண்ணி போட்டு வச்சிருக்கேன். குளிச்சிட்டு சாப்பிடவா. எதுவும் சாப்பிட்டுக்கூட இருக்க மாட்டியே... செல்லக்கண்ணு சொன்னதற்கு பெருமாள் சிரித்தான்.

    கண்ட எண்ணெயில போட்டு வைச்சிருக்கிற பஜ்ஜியையும் போண்டாவையும் தின்னா தொண்டையில கமறல் வருது செல்லக்கண்ணு. அதுதான் நீ சாப்பாடு எடுத்து வை... நிமிஷத்தில குளிச்சிட்டு வரேன்.

    உன் கஞ்சத்தனத்துக்கு எதையாவது சாக்கு சொல்லாதே மச்சான் என்ற செல்லக்கண்ணுவின் கன்னத்தில் தட்டினான் பெருமாள். வேகமாக குளிக்கப் போனான்.

    சாப்பிட்டு முடித்து வெற்றிலை போடும் போது மறுநாள் அண்ணன் வரும் விஷயத்தைச் சொன்னாள். என்னா திடீர்னு மச்சானும் தங்கச்சியும் வராங்க? பெருமாள் கேட்டதற்கு, ஏதாவது முக்கியமான விஷயமாத்தான் இருக்கணும். நமக்கு செலவு இல்லாம இருந்தா நல்லது... செல்லக்கண்ணு முடித்தாள்.

    பார்த்தியா பேச்சு வாக்கில மறந்திட்டேன். நம்ம அண்ணாச்சி கடையில சீட்டு போட்டிருந்தேன். இந்த மாசம் முடிஞ்சிது. பணமா கொண்டு வரவேணாம்னு பொருளா வாங்கிட்டு வந்திட்டேன். அந்த சட்டையை எடு... என்று சொல்லி சட்டையை எடுக்கச் சொன்னான். பாக்கெட்டிலிருந்து பளபளவென மின்னும் சங்கிலியை எடுத்துக் கொடுத்தான்.

    செல்லக்கண்ணு வியப்புடன் பார்த்தாள். என்னா மச்சான் இது? எப்படியும் மூணு பவுனுக்குக் குறையாது போலிருக்கே? குரலில் பெருமை இழையோடியது.

    கழுத்தில போட்டுக்க செல்லக்கண்ணு. உங்கண்ணன் வர்ற வேளையில் கழுத்தில் தங்கம் இருக்கட்டும். எண்பதாயிரம் ரூபா கையில வந்தது. செயின் வாங்கினது போவ மீதியை அண்ணாச்சிக்கிட்டயே குடுத்திட்டு வந்திருக்கேன். நாளைக்குப் போய் தங்கச்சிக்கு பட்டுப்புடவையும், மச்சானுக்கு வேட்டி சட்டையும் வாங்கிட்டு வந்திடறேன். காலையிலயே கறி எடுத்து சமைச்சிடு. பழனி வீட்டுக்கும் குடு... பெருமாள் கூறி முடித்ததும் செல்லக்கண்ணு புன்னகைத்தாள்.

    நீ இதுதான் சொல்லுவேன்னு எனக்குத் தெரியும் மச்சான். அப்படியே செய்திட்டேன். உன் கையால இந்த செயினை போட்டு விடு... என்று காதலோடு சொன்னாள். அதுபடியே போட்டு விட்ட பெருமாள், உனக்கு ரொம்ப அழகா இருக்கு செல்லக்கண்ணு. இன்னும் உன்னை தங்கத்தாலேயே இழைச்சிடறேன் பாரு... என்றான்.

    அப்பா அம்மாவுக்கு மட்டும் செயினு... எனக்குப்பா? என்னும் குஞ்சுக்குரல் குறுக்கிட்டது. அட... என் ராசா... உன்னை மறப்பேனா? நாளைக்கு உன்னை கடைக்குக் கூட்டிட்டுப் போய் பேண்ட் சட்டை வாங்கித் தரேன்... பெருமாள் மகனைக் கொஞ்சினான்.

    எனக்கு ஜீன்சு பேண்ட்டுப்பா... என்ற முருகேசை வாரி அணைத்துக் கொண்ட பெருமாள். சாப்பிட்டியாடா ராஜா? என்று கேட்டான். சாப்பிட்டேன்ப்பா... மாமாகூட மல்லியும் வருவா இல்லைப்பா? அவளுக்கும் டிரஸ் எடுக்கணும்பா... என்று முருகேசு சொன்னதைக் கேட்டு புருஷனும் பெண்டாட்டியும் சிரித்தார்கள்.

    பார்த்தியா செல்லக்கண்ணு. நம்ம பய இப்பவே மல்லிக்கு ரூட் போட்றதை.. இந்த காலத்தில பசங்க ரொம்ப சமர்த்தா இருக்காங்க. எனக்கு மட்டும் மாமா பொண்ணு இருந்திருந்தா.. உன்னை வந்து கல்யாணம் பண்ணியிருக்கவே மாட்டேன்... பெருமாள், செல்லக்கண்ணுவை வம்புக்கு இழுத்தான்.

    "நீ வரலின்னா? நான் உன்னை விட்டிடுவேன்னு நினைச்சியா? நீ எந்த பாதாள லோகத்தில் இருந்தாலும் துரத்திக்கிட்டில்லே வந்திருப்பேன்? சும்மா வம்பு பண்ணாம தூங்கு மச்சான்’ செல்லக்கண்ணு கொஞ்சினாள்.

    எதிர் வீட்டில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. கட்சித் தலைவர் மூணு நாள் கழிச்சி வீட்டுக்கு வர்ற நேரத்தைப் பார்த்தியா மச்சான். செல்லக்கண்ணு எரிச்சல் பட்டாள்.

    பெருமாள் அவளைக் கையமர்த்தி சைகை காட்டினான். நமக்கு எதுக்கு அவனோட வம்பு? அது வீட்டுக்கு அடங்காம திரியுது. ஊரில போய் உதைபட்டா அடங்கும். நமக்கெதுக்கு அவன் தொல்லை? நீ மட்டும் எப்பவும் அவன்கிட்டே கவனமாவே இரு செல்லக்கண்ணு. துஷ்டனைக் கண்டா தூர விலகு... சரி சரி படு. காலையில நெறைய வேலை இருக்கு என்று சொன்ன பெருமாள் படுத்த நொடிப் பொழுதில் தூங்கிப் போனான்.

    பாவம்… காலையில இருந்து எவ்வளவு வேலையோ... நினைத்த செல்லக்கண்ணு அவன் காலை மெதுவாகப் பிடித்து விடலானாள்.

    2

    பொழுது விடியுமுன்னே எழுந்த செல்லக்கண்ணும் பெருமாளும் விறுவிறுவென வேலையில் இறங்கினார்கள். செல்லக்கண்ணு வாசலை அடைத்து பெரிய கோலம் போட்டு முடிக்கும்போது பெருமாள் குளித்து விபூதி பூசி வெளியே வந்தான். அவனைப் பார்த்து புன்னகைத்த செல்லக்கண்ணு, மச்சான் வெறும் வயிறா வெளியே கிளம்பாதே. கொஞ்சம் நீராகாரம் கொண்டு வரேன். குடிச்சிட்டு கிளம்பு... என்றபடி வேகமாக உள்ளே ஓடினாள்.

    சொம்பு நிறைய நீராகாரம் குடித்துவிட்டு மச்சான் கிட்டே சொல்லிடு செல்லக்கண்ணு. மதியம் சாப்பாட்டுக்கு வரவும் முன்ன பின்ன ஆவும். அதனால காத்திருக்காம சாப்பிடுங்க. நான் கிளம்பறேன் என்ற பெருமாள் சாக்கை பின்புறம் வைத்துக் கொண்டு கிளம்பினான். அவன் போவதையே பார்த்து ரசித்த செல்லக்கண்ணு பரபரவென சமையலறைக்குப் போனாள்.

    முருகேசை எழுப்பி பல் விளக்கிவிட்டு குளிக்க வைத்து புது உடை போட்டு விட்டாள். தம்பி குறும் புத்தனம் எதுவும் பண்ணாம உட்கார்ந்து விளையாடு. மாமா வர்றதால அம்மாவுக்கு நிறைய வேலை இருக்கு. கொஞ்சம் கடைக்குப் போயிட்டு வரேன். வந்து தோசை சுட்டுத்தரேன்... என்று சொல்லிவிட்டு பையை எடுத்துக் கொண்டு நடந்தாள்.

    அப்போதுதான் எழுந்து வெளியே வந்த பழனி வாசலில் நிமிர்ந்து நின்று திமிர் முறித்தான். எதிர் வாசலில் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்த முருகேசு கண்ணில் பட்டான். அவனை வம்புக்கு இழுப்பதற்காக என்னடா முருகேசு.. எங்க உங்கப்பனைக் காணோம்? காலையிலயே களைப்பிடுங்கப் போயிட்டானா? அவ எங்க உங்கம்மா? யாரு கூடவாவது சண்டை போடப் போயிருக்காளா? வாயாடியாச்சே அவ.. என்று கேட்டான் பழனி.

    அவனோடு எதுவும் பேசக்கூடாது என்று செல்லக்கண்ணு சொல்லி இருந்தது முருகேசுக்கு நினைவுக்கு வந்தது. அதனால் எதுவும் காதில் விழாதது மாதிரி உட்கார்ந்து மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தான்.

    அந்த அலட்சியத்தைப் பார்த்த பழனிக்கு கோபம் வந்தது.

    முளைச்சு மூணு இலை விடலை... என்ன திமிரா இருக்கு பார்த்தியா? ஏன்டா காதுல விழாத மாதிரி உட்கார்ந்திருக்க உங்கம்மா சொல்லிக் குடுத்தாளா? இப்போதும் முருகேசு பதில் சொல்லாமல் இருந்ததால் பழனி அவனை அடிக்க ஓடினான்.

    கையில் டீயுடன் வந்த வெள்ளையம்மா அவனை ஓடித் தடுத்தாள். என்ன மாமா இது? சின்னப் பிள்ளைக் கூட வம்பு பண்ணிக்கிட்டிருக்கீங்க? அவன் பாவம்... தன் பாட்டுக்கு விளையாடிக் கிட்டிருக்கான். டீயை குடிச்சிட்டு குளிக்கப் போங்க.

    டேய்... உன்னை ஒரு நாளைக்கு கவனிச்சிக்கறேன். உன் சாவு என் கையில தான்டா... என்று சொல்வது தெரியாமல் சொல்லிக் கறுவியபடி பழனி டீகோப்பையை வாங்கிக் கொண்டான். ஒரு வாய் குடித்தவன் முகம் மாறியது. அப்படியே கீழே துப்பினான். சீ என்னடி டீ இது? கழனித் தண்ணி மாதிரியே இருக்கு. ஒன்றியச் செயலாளரோட பெண்டாட்டி டீ போட்டாங்கன்னா அண்டா டீயை ஒத்தையாளா குடிக்கலாம். எல்லாத்துக்கும் குடுப்பினை வேணும். இந்த வீட்டுல தான் எதுவும் இல்லாதக் கொடுமை. வந்தவளாவது நாலு காசோட வந்திருக்காளா? தரித்திர மூதேவி... நான் அரசியல்ல எப்படி முன்னேறது மந்திரியாவது? சே... நீ ஏன்டி தூணாட்டம் நிக்கறே? போய் குளிக்கத் தண்ணி எடுத்து வை. பலகாரம் என்ன பண்ணியிருக்கே? வழக்கம்போல இட்லியை வேவிச்சுக் கொட்டி குவிச்சி வைச்சிட்டியா? முறுமுறுன்னு நாலு தோசை சுட்டு தேங்காய் சட்னி அரைச்சி வை. பார்க்கறா பாரு. உன் விடியா மூஞ்சில முழிக்கறதாலதான்டி எனக்கு எதுவுமே விடியவே மாட்டேங்குது. சிடுசிடுத்துக் கொண்டிருக்கும் அவன் குரலைக் கேட்டு பொன்னாத்தா வெளியே வந்தாள்.

    ஏன்டா நாசமா போறவனே... எதுக்குடா இப்படி அவளை கரிச்சிக் கொட்டறே? நீ பத்து ரூபா சம்பாதிச்சிக்கிட்டு வந்து என் கையில் குடு. அப்புறமா ஒன்றிய செயலாளர் வீட்டு டீ மாதிரியும் குடிக்கலாம். முறுமுறுன்னு தோசையும் தின்னலாம். வெறும் கையால முழம் போடற வேலையை விட்டுட்டு வேலை வெட்டியைப் பாருடா. இந்தக் கட்சி வேலையெல்லாம் வேணான்டா பழனி. அம்மா சொல்றதை இனிமேலாவது கேளுடா. உன்கூட கூட்டாளி தானே எதிர்வீட்டு பெருமாளு? கஷ்டப்பட்டு உழைச்சி மானம் மரியாதையா இருக்கானே அதைப் பார்த்தாவது கத்துக்க மாட்டியா?

    பொன்னாத்தா தன்னைத் திட்டியதைக் கூட பழனி பெரிசாக எடுத்துக் கொள்ளவில்லை. பெருமாளோடு தன்னை ஒப்பிட்டுப் பேசியதைத்தான் அவனுக்கு பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பெத்த தாயா நீ? எதிர் வீட்டுக்காரனோட பெத்த புள்ளையை சேர்த்து வைச்சிப் பேசறியே. அவன் தலையெழுத்து மண்ணிலயும் சேத்திலயும் கிடந்து உழப்பிக்கிட்டிருக்கான். நான் நாட்டை ஆளப் பிறந்தவன். சும்மா இருக்கறா மாதிரியே தெரியும். ஒரு நாளைக்கு கொடி வைச்சக் காரில் வந்து இறங்கிடுவேன். நீ மட்டும் கொஞ்சம் காசு பணம் சேர்த்து வைச்சிருந்தின்னா... என் ரேஞ்ச்சே வேற. நீ எல்லா தப்பையும் பண்ணிட்டு என்ன குத்தம் சொல்றியே... நவுரு.. நவுரு.. உன் கிட்டே மணியம் பேசிக்கிட்டிருந்தா என் நேரம்தான் வீணாவும். ஒன்றிய செயலாளர். வரச்சொல்லியிருக்காரு... பழனி பறந்து கொண்டு ஓடினான்.

    வயித்துக்கு எதையாவது தின்னுட்டுப் போய்த் தொலையேன்டா என்று பொன்னாத்தா கூவுவதையும் காதில் வாங்காமல் பழனி தன் ஓட்டை சைக்கிளில் ஏறி காற்றாய் பறந்து விட்டான்.

    அத்தை சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே. அவரு வீட்டுக்கு வந்து தங்கறதே ரொம்பக் கொஞ்ச நேரம் தான். அந்த நேரத்தில் நீதான் அவருக்கு இதம் பதமா எடுத்துச் சொல்லி திருத்தணும். ஆனா நீ சிடுசிடுன்னு எதையாவது சொல்லி திட்டறே. அதுதான் சாக்குன்னு அவரு கிளம்பிடறாரு. உன் பிள்ளைதானே? உன் கோபத்தில பாதியாவது அவருக்கு இருக்காதா? பாவம்.. உங்க ரெண்டு பேரு போராட்டத்தில அவரு சாப்பிடாமலே போயிட்டாரு... வெள்ளையம்மா தன் புருஷனுக்கு ஆதரவாகப் பேசியதைக் கேட்ட பொன்னாத்தா தலையில் அடித்துக் கொண்டாள்.

    "என்னா பொம்பளைடி நீ? நான் தான்

    Enjoying the preview?
    Page 1 of 1