Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unakkena Iruppen
Unakkena Iruppen
Unakkena Iruppen
Ebook93 pages34 minutes

Unakkena Iruppen

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466626
Unakkena Iruppen

Read more from N.C.Mohandass

Related to Unakkena Iruppen

Related ebooks

Related categories

Reviews for Unakkena Iruppen

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unakkena Iruppen - N.C.Mohandass

    16

    1

    வீட்டைச் சுற்றி ஆட்கள் புல் செதுக்கிக் கொண்டிருந்தனர். பெண்கள் கூட்டல், பெருக்கலில்! வாசலில் எப்போதோ பஞ்சாயத்து ரோட்டுக்காகக் கொட்டப்பட்டிருந்த ஜல்லிகள் அகற்றப்பட்டு, அவற்றிடையே முளைத்திருந்த நெருஞ்சிகள் அழிக்கப்பட்டு, இரும்பு கேட்டில் புது பெயின்ட் வாசம் அடித்தது.

    முகப்பில் வண்ணக் கோலம்! வீட்டுக்குள் பாத்திரங்கள் அடுக்கப்பட்டு, தரை பளபளவென மெழுகப்பட்டு, சுவர்கள் புது சுண்ணாம்பு தடவிக் கொண்டு, அலமாரி, ட்யூப் லைட் எல்லாம் துடைக்கப்பட்டு... எங்கும் சுத்தம்.

    திண்ணையின் ஒரு மூலையில் பள்ளிப் பிள்ளைகள் ரோட்டில் கண்ணும், சிலேட்டில் கையுமாயிருக்க, அம்மா இடுப்பில் கொசுவத்தை செருகிக் கொண்டு வந்து, ஏ பிள்ளைகளா... இன்னும் நீங்க போகலியா... என்று அதட்டினாள்.

    இல்லை... டீச்சர் இன்னும் போகச் சொல்லலை என்று அவசர அவசரமாய் புத்தக, நோட்டுக்களை பையில் எடுத்து அடுக்கினர்.

    மிதுனா என்ன இது... இன்னைக்குக் கூடவா டியூஷன்? மிதுனா தன் அறையிலிருந்து வெளிப்பட்டு, பிள்ளைங்களா! ஹோம் ஒர்க்கெல்லாம் முடிச்சுட்டிங்களா...! தலைவாரியபடி கேட்டாள்.

    முடிச்சுட்டோம் டீச்சர்! என கோரஸாய் பதில் வந்தது.

    அப்போ கிளம்புங்க... இன்னும் நாலு நாளுக்கு உங்களுக்கு லீவ்.

    ஓக்கே டீச்சர்! என அவர்கள் ஓடினர். அவர்களுக்குள் கிசுகிசுப்பாய், ஏ... இங்கே என்ன விஷேசம்? மந்திரி வராரா?

    இல்லை... டீச்சரோட வீட்டுக்காரர்! சௌதியிலிருந்து வராராம்.

    சௌதியில்லேடா... குவைத்.

    ம்... ஏதோ ஒண்ணு... அவரும் வாத்தியாரா...?

    இல்லை... கம்பெனில வேலையாம்!

    அப்போ பரமு வாத்தியார்...?

    ஏய்... சும்மாயிரு... அவரு வாத்தியார் மட்டும்தான்! அவருக்கும் இவங்களுக்கும் எந்த உறவும் இல்லை!

    ஹாலில் தொட்டிலில் இருந்து குழந்தை விசும்ப, மிதுனா! குழந்தை முழிச்சுக்கிட்டா போலிருக்கு... என்னன்னு போய் பாரு... என்று அதட்டல் வந்தது.

    சரித்தே... என்று முடியை கொண்டை போட்டுக் கொண்டு ஓடி, என்னம்மா... என்னாச்சு... வேணாண்டா... வேணாண்டா... என்று தோளில் போட்டு தட்டிக் கொடுத்தாள்.

    அம்மா அங்கும் ஓடி வந்து, குழந்தையை இப்படி கொடுத்துட்டு நீ போய்க் குளிச்சுட்டு வா! என்று விரட்டினாள்.

    இவளுக்குப் பசியோ என்னவோ... பால்... அவளை முடிக்க விடவில்லை.

    அதெல்லாம் பிறகு தரலாம்... அஜயன் வந்திடுவான். அவன் வரும்போது அலங்கோலமாய் இருப்பியா? சீக்கிரம்!

    குளிக்கும்போது தண்ணீர் உடலில் பட்டதும் மிதுனாவுக்கு சிலிர்த்தது. கணவன் அஜயன் பின்பக்கமிருந்து கட்டி அணைப்பதுபோல ஜிவு... ஜிவு...! ஃபோனில் அவனிடம் பேசின விஷயங்கள் சிலிர்ப்பு தந்தன.

    மிதுனா! இங்கே ஒரே குளிர்! எப்போ... நீ வரப் போகிறாய்?

    எனக்குள் உஷ்ணமேற்றுகிறீர்கள். இப்போதான் டெலிவரி ஆகியிருக்கு... பச்சப் பிள்ளையைத் தூக்கிக்கிட்டு அங்கு வர முடியுமா?

    இன்னும் எவ்ளோ நாளைக்கு இப்படி பிரிந்திருக்கிறதாம்?

    லீவ் போடணும்

    போடேன்!

    கிடைக்கணுமே... என் சர்வீஸ்க்கு லாங் லீவ் கிடைக்காதாம். குறைந்தது அஞ்சு வருஷம் வேலை பார்த்திருக்கணுமாம்!

    அது என்ன பெரிய வேலை! தூக்கி எறிஞ்சுட்டு வா!

    அரசாங்க வாத்தியார்! அப்படியெல்லாம் தூக்கி எறிய முடியுமா? பத்து வருஷக் காத்திருப்பில் கிடைச்ச வேலை. ரெண்டு லட்சம் லஞ்சம்!

    போனால் போகட்டும்... இங்கே குவைத்துல எத்தனையோ இந்தியப் பள்ளிகள்! உன் எக்ஸ்பீரியன்ஸ்க்கு இங்கே வேலை தேடிக்கலாம்...

    அவள் பேச்சை மாற்றி, ஐயோ குழந்தை அழுவுது! என்றாள்.

    எங்கே... ஃபோனிடம் அவளைக் கொண்டு வா! யார் சாயல்? என் மாதிரியா...? இல்லை உன் முகமா?

    தெரில... சிரிக்கும்போது நான்... அழும்போது...

    நானு? உதைப்பேன். அப்போ என்னை அழுமூஞ்சிங்கிறயா?

    ஐயையோ... என் புருஷனை அப்படிச் சொல்வேனா? சரி, சரி... குழந்தையை பார்க்க வேணாமா? பார்க்கணும்னு தோணலியா...?

    தோணுது... குழந்தையையும் அம்மாவையும் சேர்த்து!

    குழந்தை சரி... அம்மாவை இப்போதைக்கு மறந்திருங்க!

    ஏங்க?

    இன்னும் மூணு மாசத்துக்கு தாய், உறுதியா - கறாரா இருக்கணும். புருஷனை கிட்டே சேர்க்காதேன்னு டாக்டரம்மா சொல்லியிருக்காங்க!

    டாக்டரோட அம்மா கிடக்காங்க. டாக்டரோட அம்மாவுக்கு இங்கே என்ன வேலை?

    ஹையோ! கடி... லேடி டாக்டர். அவங்க அம்மா இல்லே. அதனால வாலையெல்லாம் சுருட்டி வச்சுட்டு நல்ல பிள்ளையா இருக்க முடியும்னா இப்போ வாங்க... இல்லேன்னா... மூணு மாசம் கழிச்சு...

    சுருட்டி வச்சிருக்க முடியும்னு எனக்குத் தோணலே... மூணு மாசம் கழிச்சே வரேன்!

    கணவனை அடக்கி அடக்கி வைத்தாலும் கூட, மிதுனாவுக்குள்ளும் பொங்கின ஆசைக்கு அளவில்லை. அவற்றை குழந்தையின் அரவணைப்பில் வடித்துக் கொண்டிருந்தாள்.

    மூன்று மாதங்கள் காத்திருப்பில் - எதிர்பார்ப்பில் ஓடிவிட்டது. இதோ இன்று ஒரே பரபரப்பு. மனதுக்குள் ஆர்ப்பரிப்பு!

    இன்னும் இரண்டு மணி நேரத்தில் வந்து விடுவான். இந்நேரம் விமானம் தரை இறங்கியிருக்கும். வெளியே வந்து கொண்டிருப்பான்.

    காரில் ஏறியிருப்பான்! ஆள் எப்படியிருப்பான்? வெயிலில் கறுத்து... வெயிட் போட்டு? தொப்பை விழுந்து?

    2

    அஜயனுக்குப் பிடித்த கறுப்பு சேலை - வெள்ளை ப்ளவுஸ் போட்டு, தலை சீவி, முடி கொள்ளாமல் மல்லிகை சூடி வாசலுக்கு வந்தபோது இரைச்சலாயிருந்தது.

    சமையல் கட்டிலிருந்து அம்மா

    Enjoying the preview?
    Page 1 of 1