Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Antha Aayiram Watts Kangal
Antha Aayiram Watts Kangal
Antha Aayiram Watts Kangal
Ebook109 pages39 minutes

Antha Aayiram Watts Kangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Short Stories Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466626
Antha Aayiram Watts Kangal

Read more from N.C.Mohandass

Related to Antha Aayiram Watts Kangal

Related ebooks

Reviews for Antha Aayiram Watts Kangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Antha Aayiram Watts Kangal - N.C.Mohandass

    12

    பச்சைப் பால்

    "நீ ஊருக்குப் போய்த்தான் ஆகணுமாய்யா...?"

    அஞ்சலை வாட்டத்துடன் கேட்டாள். அவளுடைய முகத்தில் எண்ணெய் வழிந்திருந்தது. ஈரமுடியைத் தளர்வாய்க் கொண்டை போட்டிருந்தாள்.

    பரமசிவம், ஏன் புள்ளே...? என்றானே தவிர கிளம்பிக் கொண்டுதானிருந்தான்.

    முதலாளி மாடுகளை டவுனுக்கு ஓட்டிப் போய் ஊசி போட்டுக்கிட்டு வரச் சொல்லியிருக்கார்...

    அவர் சொன்ன உடனே போயிரணுமா...?

    போகாம முடியுமா? அவர் தானே நமக்குச் சோறு போடறார்...?

    எனக்கு இங்கே தனியா இருக்கப் பயமாயிருக்கு.

    தனியாவா? அதான் முதலாளி இருக்காரே!

    என் பயத்துக்குக் காரணமே-அவர்தான்!

    என்ன சொல்றே நீ...? பரமசிவம் அதிர்ந்து போய்க் கேட்டான்.

    ஆமாய்யா; அவருடைய பார்வையே சரியில்லை.

    சேச்சே. முதலாளியைப் பத்தி அப்படியெல்லாம் பேசாதே. அவர் தங்கமான மனுஷர்!

    அவள் தலையைப் பிடித்து முத்தம் கொடுத்தான். நேரமாச்சு. நான் கிளம்பறேன்.

    என்ன செய்யப் போகிறோம், எப்படித் தப்பிக்கப் போகிறோம் என்று பயந்தபடியே அஞ்சலை பண்ணைக்குப் போனாள்.

    பயந்து பயந்து நுழைந்தாள்.

    அவள் வேலையைத் தொடங்கும் வரை கவனிக்காதது போல் பாசாங்கு செய்தவர், சடக்கென எழுந்து போய்க் கதவைத் தாழ் போட்டார். அவளுக்குத் திக்கென்றிருந்தது! அவர் சிரித்துக்கொண்டு அவளை நெருங்கினார்.

    அவர்கிட்டே நெருங்க நெருங்க, அவளுக்கு வியர்த்தது. கைகால்கள் நடுங்கின.

    ஐயா... இது துரோகம். எம்புருஷன் உங்களைத் தெய்வமா நினைச்சிட்டிருக்கார். உங்களுக்கு வேண்டி அவர் உயிரையே கொடுத்து உழைக்கறாருய்யா.

    உயிரையே கொடுக்கறவன் பெண்டாட்டியைக் கொடுக்கக்கூடாதா என்ன...

    ஐயா... என்னை விட்டிருங்கய்யா... வேண்டாம்ய்யா!

    "என்ன புள்ளே சொல்றே...?" பரமசிவம் ஓவென்று அலறினான்.

    கொஞ்ச நேரம் அப்படியே பிரமை பிடித்து அமர்ந்திருந்தான். அவன் கண்களில் உணர்ச்சி இல்லை

    அந்த அயோக்கியனைச் சும்மா விடக்கூடாது! இந்தா கத்தி. முதல்ல போய் அவனைப் பலி போட்டுட்டு வா! ஏன்ய்யா பேசாம இருக்கே? அஞ்சலை அவனை உலுக்கினாள்.

    அவர் என் எஜமான் புள்ளே, அவரை நான் எப்படி...? இந்த உடம்பு அவர் வீட்டு உப்பைத் தின்னு வளர்ந்தது. அவரைக் கொல்ல எனக்குத் தெம்பும் இல்லை. மனதில் தைரியமும் இல்லை. என்னை மன்னிச்சிடு அஞ்சலை.

    சே! நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா?

    ராத்திரி முழுவதும் பரமசிவம் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான்.

    விடியற்காலை.

    வானத்திலும் குழப்பமிருந்தது. மேகங்கள் கூட்டணி அமைத்திருந்தன. காற்று சுண்டிச் சுண்டி அடித்தது. அந்தக் காற்றில் நட்சத்திரங்கள் துடித்துப் போயின. மின்னல்கள் மத்தாப்பு கொளுத்தின. மழைச் சாரல்கள் - மண் வாசனையைக் கிளப்பின.

    வாசலில் சைக்கிள் மணி ஒலிக்க, பண்ணையாருக்குத் தூக்கம் போயிற்று. லைட் போட்டு மணி பார்த்தார்.

    அட அதுக்குள்ளே நாலாயிட்டுதா? பரமசிவம் எப்படித்தான் இத்தனை கரெக்டாய் வருகிறானோ... என்று ஆச்சர்யத்தையும் கொட்டாவியையும் வெளியே விட்டார்.

    பின்புறம் தொழுவத்தில் மாடுகள் சங்கிலியை உதறி, ம்மா என்றன. எழுந்து நின்று சடசடவென மூத்திரம் போயின. மின்னல் ஒன்று ஜன்னல் வழி வந்து கண்ணைப் பறித்தது. அடுத்து வந்த மின்னல் மின்சாரத்தையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு போயிற்று.

    அவர் வேட்டியைச் சரி பண்ணிக் கொண்டு, தட்டித் தடுமாறி போய்க் கதவைத் திறந்தார். தொழுவத்தில், பரமசிவம் சர்... சர்ரென ஒவ்வொரு மாட்டையும் பால் கறந்து கொண்டிருந்தான். அதிகாலையில் தினம் அவர் பச்சைப் பால் குடிப்பது வழக்கம்.

    சீக்கிரமா பால் கறந்து எடுத்து வா.

    சொல்லி விட்டு அவர் கிணற்றடியில் போய் அமர்ந்து கொண்டார்.

    தினமும் கறந்ததும் இளம்சூட்டுடனும் நுரையுடனும் பரமசிவம் கொண்டு வந்து கொடுப்பான். அவர் இரண்டு செம்பு குடித்துவிட்டுப் போய் முடங்கிக் கொள்வார்.

    என்னாப்பா... இன்னுமா கறந்து முடியலே. சீக்கிரமா கொண்டு வா!

    இந்தாங்கய்யா! பரமசிவம் செம்பை நீட்டினான்.

    அதை வாங்கி வாயிடம் கொண்டு போனவர் சற்றுத் தயங்கினார். பாலிற்குப் பதில் என்னவோ நெடி அடித்தது. விரலால் தொட்டுப் பார்த்தார். பிசுபிசுப்பாய்... கெட்டியாய் மூக்கையடக்கும் கவிச்சையுடன்.

    ரத்தம்!

    அவருக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. ஏய்... என்ன இது?

    திடீரென்று அவன் செம்பை பிடுங்கி அவருடைய வாயில் கவிழ்த்து விட்டான்.

    அவர் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவருடைய முகம் வெளிறிப் போயிற்று. அப்படியே விழுங்கினார். ரத்தம் தொண்டையில் இறங்க இறங்க அது வியாபித்த இடமெல்லாம் நெருப்பாய் எரிந்தது.

    துடித்தார். துள்ளினார். தரையில் பொத்தென்று விழுந்து புரண்டார்.

    ஐயோ... அம்மா

    எல்லாம் சில நொடிகளுக்குதான். அதன் பிறகு ரத்தம் கக்கி, நுரை தள்ளி, செயலிழந்து போனார்.

    கொஞ்ச நேரத்தில் தெருவில் -

    அஞ்சலை திடுக்கென அதிகாலையில் கண் விழித்தாள். கணவனைத் தேடியவள் மேலே விட்டத்தில் தூக்குப் போட்டுக் கொண்டு தொங்கின பரமசிவத்தைக் கண்டு வீலென அலறினாள்.

    பண்ணையாரைப் பேயடிச்சுருச்சாம். வாங்க போய்ப் பார்ப்போம், என்று சலசலப்புடன் ஜனங்கள் அவருடைய வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள்.

    காட்டுப்பட்டி ரயில்வே ஸ்டேஷன்

    காட்டுப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் ஆள் அரவமின்றி இருந்தது. அது சின்ன ஸ்டேஷன் தான். அந்த ஊருக்குள் ஸ்டேஷன் என்ற ஒன்றே அவசியமில்லை.

    அந்த நாட்களில் ஏதோ ஒரு இங்கிலீஷ்காரன் அங்கே ‘சின்னவீடு’ வைத்திருந்ததால் தன் சௌகர்யத்திற்காக ஸ்டேஷன் ஏற்படுத்தினதாய்ச் சொல்வார்கள்.

    அங்கு பாசஞ்சர் மட்டும் நிற்கும். ஆனால் பாசஞ்சர்கள் அதிகமாய் ஒன்றும் ஏறவோ இறங்கவோ மாட்டார்கள். லைன் கிடைக்காதபோது கிராசிங்கிற்காக எக்ஸ்பிரஸ்கள் நிற்பதுண்டு.

    அந்த ஸ்டேஷனையும், அதைச் சூழ்ந்துள்ள ஃபாரெஸ்ட்களையும் பார்ப்பவர்கள் காற்று வாங்கக்கூட கீழே இறங்கமாட்டார்கள். அதுவும் இரவு நேரம் என்றால் கேட்கவே வேண்டாம்.

    இப்போதும் அப்படித்தான்.

    எக்ஸ்பிரஸ் ரயில் சிக்னலிற்காகக் காத்து நிற்க, பெட்டிகளில் அங்கங்கே டிம்மாய் விளக்குகள் எரிந்தன. ஏதோ ஒரு பெட்டியில் குழந்தை அழுதது. யாரோ

    Enjoying the preview?
    Page 1 of 1