Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indru Po Naalai Varaathe
Indru Po Naalai Varaathe
Indru Po Naalai Varaathe
Ebook130 pages48 minutes

Indru Po Naalai Varaathe

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466794
Indru Po Naalai Varaathe

Read more from N.C.Mohandass

Related to Indru Po Naalai Varaathe

Related ebooks

Related categories

Reviews for Indru Po Naalai Varaathe

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indru Po Naalai Varaathe - N.C.Mohandass

    1

    மாலைப் பொழுது சரிந்து கொண்டிருந்தது. சூரியன் சிவப்பு நிற மேகங்களுக்கிடையே சிதைந்து கொண்டிருந்தான். ஊர் ஜனங்கள் தங்களின் அலுவல்களை முடித்துக்கொண்டு பொழுது போக்கிற்குத் தயாராயினர். வம்பு எதுவும் கிடைக்குமா என அலைந்தனர்.

    பஞ்சாயத்து போர்டு கட்டிடத்தின் தலையில் விவிதபாரதி பாடியது. அதனருகிலேயே பனைமர உயரத்திற்கு ஆன்டெனா கட்டி, பூஸ்டருடன் வயர் புறப்பட்டு ஹாலின் மத்தியில் டி. வி. அமர்ந்திருந்தது.

    வயோதிகர்களும், பசங்களும் அதன் முன்னில் அமர்ந்திருந்தனர். கண்மணிப் பூங்காவின் ரசிகர்கள் இவர்கள்.

    பசங்கள் சத்தம் போட, பெரியவர் ஒருவர் ஒழுங்கா உட்கார்ந்தா உட்கார்ந்திரு, இல்லேன்னா வெளியே போடா! என்று விரட்டினார்.

    பஞ்சாயத்து பிரசிடெண்ட் சபாபதி வேப்பமர அடியில் அமர்ந்து பேப்பர் புரட்டிக் கொண்டிருந்தார். அவரிடம் புகார் சொல்வதற்காக ஒரு கோஷ்டி தாழ்மையுடன் நின்றிருந்தது. அவர் பேப்பரை மடித்து வைத்துவிட்டு, மூக்குக் கண்ணாடியை மடித்து பையில் போட்டுக்கொண்டு, ம்... உங்களுக்குள்ளே என்ன தகரார், சொல்லுங்க? என்றார்.

    அவர் ரிடையர்ட் ஸ்கூல் வாத்தியார். அவருக்கு ஊரில் நல்ல மதிப்பிருந்தது. எல்லோரும் அவரை அன்பாய் மாஸ்டர்’ என்றே அழைப்பார்கள்.

    சொல்லுங்க, உங்களுக்குள்ளே எப்போ பார்த்தாலும் தகரார்தானா? என்று அவர் கடிந்து கொண்டபோது, மாஸ்டர்! என்று அலறியபடி அவருடைய காரியதரிசியும் கோவிந்தன் என்கிற பெயர் கொண்டவனுமான அவன் ஓடி வந்தான்.

    என்னடா...?

    மாஸ்டர்! நம்மூர் மில்லுல வாயு லீக்காகி பத்து. பதினைஞ்சி பேர் மயங்கி விழுந்துட்டாங்க என்று அவன் தந்தியடித்தான்.

    என்னடா சொல்றே நீ?

    ஆமாம் மாஸ்டர். எல்லோருமே பொம்பளைங்க. கோவிலுக்கு போயிட்டு திரும்பும்போது திடீரென ஒரு புகை வந்தது.

    அவங்கள்ளாம் இப்போ எங்கேயிருக்காங்க? அவர் பதறினார்.

    எல்லோரையும் அந்த மில்லோட லாரியில் தூக்கிப் போட்டுகிட்டு கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு போயிருக் காங்க.

    அப்படியா... என்றவர் புகாருக்கு வந்திருந்தவர்களை, நீங்க வீட்டுக்குப் போங்க, அப்புறமா பேசிக்கலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டு தன் டி.வி.எஸ்-50 இல் ஏறி அமர்ந்தார்.

    கோவிந்தன், நானும் வரேன் மாஸ்டர் என்று பின்னால் தாவி அமர்ந்து கொண்டான்.

    நான்காவது கீலோமீட்டரில் அரசாங்க மருத்துவமனை இருந்தது.

    அங்கு கவனிப்பில்லை என்கிற குறையின் காரணமாய் சாதாரணமாய் யாரும் சிகிச்சைக்குப் போவதில்லை. அந்த பகுதியே எப்போதும் வெறிச்சோடிக் கிடக்கும்.

    ஆனால் இன்றோ, விஷயம் கேள்விப்பட்டு, வாயுவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எல்லோரும் அங்கே கூடிவிட்டிருந்தனர். உள்ளே போக அனுமதி கிடைக்காமல் அவர்கள் வாட்ச்மேனிடம் சண்டை பண்ணிக் கொண்டிருந்தனர்.

    அந்த ஊரின் கோவிலுக்கருகே பங்கஜன் டெக்ஸ்டைல் மில் இருந்தது. அதை உருவாக்கும்போது ஊரினருக்கு சந்தோஷமாகத்தானிருந்தது. நம்மூரும் இந்த மில்லால் பிரபலமடையும். வேலை வாய்ப்பும் பெருகும் என்று மகிழ்ந்து போயினர்.

    ஆனால் அந்த மகிழ்ச்சி ரொம்ப நாட்களுக்கு நிலைக்கவில்லை.

    அந்த மில்லிலிருந்து அவ்வப்போது குளோரின் லீக்காகி கோவிலுக்கு வருபவர்களின் சுவாசத்தைப் பாதிக்க ஆரம்பித்தது. ஒரு நாள் அல்ல, பல நாட்கள்!

    இதற்கு முனபு இப்படி சம்பவித்தபோதெல்லாம் அதன் ஓனரான பங்கஜன், மில்லுல விபத்து ஒண்ணு நடந்து போச்சு, இனி இது மாதிரி நடக்காம நான் பார்த்துக்கிறேன் என்று வாக்குக் கொடுத்திருந்தார்.

    ஆனால் மறுபடியும் லீக்காகியிருப்பது சபாபதிக்கு அவர்மேல் கோபத்தை உண்டு பணணிற்று. இனி பொறுத்துப் பயனில்லை. முதலில் அந்த மில்லை மூடச் சொல்ல வேண்டும். அதற்குமுன்பு ஆஸ்பத்திரியில் இருப்பவர்களின் நிலைமையை அறிய வேண்டும்.

    சபாபதியைக் கண்டதும் வாட்ச்மேன் ஒதுங்கி வழி கொடுத்தான். அவர் உள்ளே நுழைய, கூட்டமும் திமிறிக்கொண்டு அவரைத் தொடர்ந்தது

    ஜெனரல் வார்டில் இருபது படுக்கைகள் நிரம்பிக் கிடந்தன. அதில் கவிதா மட்டுமே மூர்ச்சை தெளிந்திருந்தாள். அவள் அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வான கிருஷ்ணதாஸின் காதலி என்பது இங்கே கொசுறுச் செய்தி.

    பெட்டில் கிடந்தவர்களை பார்க்கப் பார்க்க சபாபதியின் மனது பதறியது. ஒவ்வொருவரின் அருகிலும் சென்று சுவாசத்தைப் பரிசோதித்துப் பார்த்தார். நர்ஸ்களிடம். உததிரவு பிறப்பித்துவிட்டு, டாக்டர் எங்கேம்மா.

    ஆபீஸ் ரூம்ல இருக்கார் சார்.

    அவர் ஆபீஸ் ரூமுற்கு நடக்கும்போது கவிதா சிரமத்துடன் எழுந்துவர, பரவாயிலலை படுத்திரும்மா. இப்போ எப்படி இருக்கு? என்றார் கனிவுடன்.

    நெஞ்செல்லாம் திகுதிகுன்னு எரியுது மாஸ்டர்.

    படுத்திரும்மா. நான் டாக்டரை பார்த்திட்டு வரேன்.

    எனக்குக்கூட பரவாயில்லை மாஸ்டர், என் தோழி கிரிஜாதான் ரொம்ப அல்லாடறா. அவளை எப்படியும் காப்பாத்திடணும் மாஸ்டர்!

    சரிம்மா. நான் எல்லாம் பார்த்துக்கிறேன், நீ பேசாம ரெஸ்ட் எடு.

    ஆபீஸ் ரூமில் நுழைந்தபோது அங்கு பங்கஜனும் அமர்ந்திருந்தார். பங்கஜன் இவரைக் கண்டதும் பவ்யத்துடன் எழுந்து வாங்க மாஸ்டர்! என்றார்.

    சபாபதி அவரை முறைத்துவிட்டு, பேஷண்ட்ஸ்க்கு எப்படி இருக்கு டாக்டர்? என்றார்.

    உடனே கொண்டுவந்து அட்மிட் பண்ணினதால யாருக்கும் ஆபத்தில்லை. எல்லோருக்கும் ஆன்டி பாய்சனிங் இன்ஜெக்ஷன் கொடுத்திருக்கேன். இன்னும் ரெண்டு மணி நேரத்துல எல்லோரும் சரியாகிடுவாங்க!

    மிஸ்டர் பங்கஜன், நீங்க ஒரு ஆள் தான் இது எல்லாத்துக்கும் காரணம்.

    மாஸ்டர், ஆவேசப்படாம நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க. மில்லுல குளோரின் லீக்காகறதுக்கு சான்ஸே இல்லை.

    அப்புறம் எப்படி இவங்க...?

    அதுதான் எனக்கும் தெரியலே மாஸ்டர். எந்த லீக்கும் வரக் கூடாதுங்கறதுக்காக எக்குயிப்மெண்ட்ஸை செக்கப் பண்ணுவதற்கும் சேஃப்டி ஆபரேஷனுக்கும் தனி குழுவையே நியமிச்சிருக்கேன்.

    நியமிச்சா போதுமா. இந்த ஜனங்களுக்கு யார் பதில் சொல்றது.

    இது எப்படி நடந்ததுன்னு என்கொயரிக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கேன்.

    மிஸ்டர் பங்கஜன், இனி என்கொயர் பண்ணி என்ன பிரயோஜனம்? இவங்க உயிர்க்கு யாரு உத்திரவாதம்?

    யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லைன்னு டாக்டர் சொல்றார். இவங்களுக்குண்டான எல்லா செலவையும் நான் ஏத்துக்கறேன்.

    அது மட்டும் போதாது.

    இன்னும் என்ன செய்யணும் சொல்லுங்க? பங்கஜன் கெஞ்சினார்.

    அந்த மில்லை மூடணும்!

    மூடணுமா... என்ன சொல்றீங்க?

    ஆமா, இனி எந்த அசம்பாவிதமும் நடக்காதுன்னு நீங்க சொன்னதாலதான் நான் பேசாமயிருந்தேன். இனியும் விதியோட விளையாட முடியாது இன்னும் ஒரு வாரம் டைம் தரேன். அதுக்குள்ளே மூடிடுங்க!

    அவர் சொல்லிவிட்டு வெளியேறினார்.

    அன்று மாலை. சபாபதியின் வீடு.

    பங்கஜன் அவருடைய கால்களை வேண்டுமானாலும் பிடிக்கத் தயாராய் அமர்ந்திருந்தார்.

    "மாஸ்டர்! என்மேல நீங்க கருணை காட்டணும். ஒன்றல்ல இரண்டல்ல. ரூபாய் இருபத்தைந்து லட்சம் முதல் போட்டு தான் இந்த மில்லை கட்டியிருக்கேன். போட்ட முதலுக்கு இன்னும் வட்டிகூட எடுக்கல. இந்த நிலையில மூடச்சொன்னா நான் என்ன பண்ண முடியும்?’*

    மிஸ்டர் பங்கஜன், நீங்க உங்களோட முதலைப்பற்றி பேசறீங்க. ஜனங்களோட உயிருக்கு முன்னாடி. உங்க முதல் எம்மாத்திரம்?

    ஒத்துக்கிறேன். மில்லை மூடாம வேறு என்ன செய்யணும்னு சொல்லுங்க.

    சரி, நீங்க மில்லை மூடவேணாம். ஊருக்கு வெளியே ஷிப்ட் பண்ணுங்க?

    ஷிப்டா... என்ன மாஸ்டர் இது? வீடா இல்லை நாடக கம்பெனியா ஷிப்ட் பண்றதுக்கு...?

    இதோ பாருங்க பங்கஜன், இத்தனை பொல்யூஷனான மில்லை ஊருக்குள்ளே அதுவும் கோவிலுக்கருகில் கட்டினது முதல் தப்பு. அதுல மேற்கொண்டு மேற்கொண்டு விபத்து நடக்கிற மாதிரி நடந்துக்கிறது மன்னிக்கவே முடியாத தப்பு.

    மாஸ்டர், உங்க முடிவில் மாற்றமில்லையா? பங்கஜனின் குரலில் சற்று

    Enjoying the preview?
    Page 1 of 1