Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கையருகில் பூமாலை
கையருகில் பூமாலை
கையருகில் பூமாலை
Ebook146 pages53 minutes

கையருகில் பூமாலை

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

டாக்டர் ராஜசேகர் ராம்குமாரிடமிருந்து வாங்கிய திலகவதியின் பழைய மருத்துவ பைலை ஒன்று விடாமல் பொறுமையாகப் படித்துக் கொண்டிருந்தார்.
 ராம்குமார் ஒருவித பொறுமையிழந்த நிலையில் மருத்து வரையும் மனைவியையும், மாறி மாறி பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான். திலகவதி எந்தவித சலனமும் இல்லாமல் டாக்டரின் மேசை மீதிருந்த பேப்பர் வெயிட்டையே உற்றுப் பார்த்த வண்ணமிருந்தாள்.
 பைலை மூடி மேசை மீது வைத்துவிட்டு நிமிர்ந்தார்.
 "மிஸ்டர் ராம்குமார். உடல் நிலையைப் பொறுத்தவரை உங்க மனைவி நார்மலாத்தான் இருக்காங்கன்னு எல்லா ரிப்போர்ட்டும் சொல்லுது. மன ரீதியாத்தான் இவங்க பாதிக்கப்பட்டிருக்காங்க. சொல்லுங்க... எப்போயிருந்து இவங். இப்படி இருக்காங்க? எதனால இப்படியிருக்காங்க?''
 டாக்டர் இப்படிக் கேட்டதுதான் தாமதம். ராம்குமாரின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. பேச முடியாமல் அவன் தொண்டையடைத்த நிலையில் தவித்தான்.
 தன் மேசை மீதிருந்த தண்ணீர் நிரம்பிய டம்ளரை அவன் பக்கம் நகர்த்தினார்.
 ராம்குமார் அந்தத் தண்ணீரைப் பருகி விட்டு நிமிர்ந்தான்.
 "டாக்டர், என் மனைவி திலகவதி எல்லாரையும் மாதிரி நல்லாத்தான் இருந்தா. போன வருஷம் தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. ராஜான்னு எங்களுக்கு ஒரே பையன். அவன் மேல நாங்க ரெண்டு பேரும் உயிரையே வச்சிருந்தோம். ராஜாதான் எங்க எதிர்காலம். எல்லாமும் அவன்தான்னு இருந்தோம். ராஜா நாலாம் வகுப்பு படிச்சுக்கிட்டிருந்தான்'உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், கும்பகோணம் தீ விபத்து, பள்ளிக்கூடம் பத்தி எரிஞ்சு குழந்தைங்களெல்லாம் தப்பிச்சு வர முடியாம எரிஞ்சு சாம்பலான கொடுமை. இந்தியாவையே உலுக்கி எடுத்த அந்த கொடூரத்தை அதனால் பாதிக்கப்படாத மக்களாலேயே மறந்திருக்க முடியாது. எங்களால் மறக்க முடியுமா? அந்த விபத்துல கரிக்கட்டையா போன குழந்தைகள்ல எங்க ராஜாவும் ஒருத்தன். காலையில சலவை மடிப்பு மாறாத துணியோட புது ரோஜா மாதிரி ஸ்கூலுக்குப் போன 'பையன் கொஞ்ச நேரத்துல வெந்து வாழையிலையில் கிடந்தபோது... கடவுளே...''
 அவன் முகத்தை இரு கைகளாலும் மூடிக் கொண்டு விம்மி வெடித்தான். டாக்டர் எழுந்து அவனருகே வந்து தோளில் தட்டி ஆறுதல் படுத்தினார்.
 ''ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்...''
 ஒருவாறு தன்னை சமாதானப்படுத்திக் கொண்ட ராம்குமார் சிவந்த கண்களுடன் நிமிர்ந்தான்.
 அவன் குலுங்கிய சத்தத்தில் கூட சலனப்படாத திலகவதி பழைய நிலையிலேயே பேப்பர் வெயிட்டை வெறித்த வண்ணமிருந்தாள்.
 "அவனோட உடம்பைக்கரிக்கட்டையா பார்த்த நிமிஷத்தி லேர்ந்து இப்படி ஆனவள்தான் இன்னைக்கு வரை இப்படியிருக்கா. தானே சரியாயிடுவாள்னு ஒரு சில வாரங்கள் பொறுத்துப் பார்த்தேன். எந்த மாற்றமும் இல்லை. கும்ப கோணம், தஞ்சாவூர்னு பல மருத்துவமனைக்கும் ஏறி இறங்கினேன். எந்த முன்னேற்றமும் இல்லை உங்களைப் பத்தி டி.வி. பத்திரிகைன்னு படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன். என் மனைவியை எப்படியாவது குணப்படுத்திடணுங்கறதுக்காகவே சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்துல வேலையை வாங்கிட்டு வந்துட்டேன். நான் சென்னைக்கு வந்து ஒரு மாசம் தான் ஆகுது. டாக்டர்... என் மனைவியை குணப்படுத்திட முடியுமா? அவ பழையபடி ஆவாளா? என் மகனையும் தீக்கு பலி கொடுத்துட்டு என் மனைவியையும் இந்த நிலையில பார்த்துக்கிட்டிருக்க என்னால முடியலை டாக்டர். சொல்லுங்க டாக்டர்... என் மனைவி குணமாவாளா?''
 டாக்டர். ராஜசேகர் கருணை கொண்ட புன்னகை ஒன்றை சிந்தினார். அவனுடைய கைப்பற்றி அழுத்தினார்முடியாதுங்கற வார்த்தைக்கே இடமில்லைன்னுதான் இன்றைய மருத்துவ உலகம் இயங்கிட்டிருக்கு. நீங்க ரொம்ப மனம் தளர்ந்திருக்கீங்க. உங்க மனைவிக்கு ஒண்ணுமே இல்லை. அவங்களை என்னால் முழுமையாக குணப்படுத்திட முடியும். அதுவும் ரொம்ப சீக்கிரமே!''
 இந்த வார்த்தைகள் பன்னீரை அள்ளித் தெளித்து அந்த அதிர்வில் ரோஜாக்களை மலரச் செய்ததைப் போலிருந்தது. அவன் பரவசப்பட்டுப் போனான். கண்களில் புதிய ரகசியத்தைக் கண்டு கொண்ட துடிப்பு. இதழ்களில் வார்த்தைகள் பிரிந்து எழுத்துக்களாகி கோர்வையை இழந்து பேச முடியாத தவிப்பு...
 "டாக்டர்! நிஜமாவா? என் திலகவதியைக் குணப்படுத்திட முடியுமா?''
 "கண்டிப்பா! மூளையில அடிபட்டு ஆபரேஷன் செய்தும் கோமா நிலைக்குப் போய் கைவிடப்பட்ட எத்தனையோ கேஸ்களை கடவுள் அருளால் என் மூலமா குணப்படுத்தியிருக்கார். அந்த மாதிரியான கேஸையெல்லாம் உங்க மனைவியோட ஒப்பிடும்போது இது எதுவுமே இல்லை.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 3, 2024
ISBN9798224220762
கையருகில் பூமாலை

Read more from R.Sumathi

Related to கையருகில் பூமாலை

Related ebooks

Related categories

Reviews for கையருகில் பூமாலை

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கையருகில் பூமாலை - R.Sumathi

    1

    சரியாக நான்கு மணிக்கு தொலைபேசி ஒலித்த போது - பீங்கான் காபி கோப்பைகளை துடைத்துக் கொண்டிருந்த வைதேகி அவசரமாக அவற்றை வைத்ததில் ‘க்ளிங்’ என்ற ஓசை எழுந்தது.

    ஓடிச்சென்று தொலைபேசியை எடுத்தாள்.

    ‘‘ஹலோ..."

    வைதேகி, திலகவதியை ரெடி பண்ணிட்டியா?

    அம்மா நல்லா தூங்கிக்கிட்டிருக்காங்க சார்!

    ‘‘சரி, எழுந்ததும் அவளை ரெடி பண்ணிடு. நான் சரியா அஞ்சு மணிக்கெல்லாம் வீட்ல இருப்பேன். அஞ்சரைக்கெல்லாம் டாக்டரைப் பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கேன்."

    ‘‘சரி சார்" என்றதும் அவன் எதிர்முனையில் போனை வைத்த ஓசை கேட்டது.

    அவளும் வைத்து விட்டு திலகவதியின் அறையை நோக்கி நடந்தாள்.

    கலை வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய படுக்கை அதில் வரைந்து கிடத்தப்பட்ட ஓவியம் போல் உறங்கிக் கொண்டிருந்தாள் திலகவதி.

    முப்பத்தைந்து வயது. ஆனால் அவளைப் பார்த்தால் முப்பது வயது தான் மதிப்பிடலாம். தலையணையின் உறையை முழுவதும் மறைத்தபடி கூந்தல் பரந்து விரிந்து கிடந்தது. வலது கையை மடக்கி தலையை சுற்றி வைத்திருந்தாள்.

    மதியம் தலைக்கு குளித்ததால் இந்த ஆழ்ந்த உறக்கம், அருகே வந்து அவளைத் தொட்டு ‘அம்மா... அம்மா...’ என அசைத்தாள்.

    தொடர்ந்து சில நிமிடங்கள் அசைத்த பிறகுதான் திலகவதி கண் விழித்தாள். இமை பிரிந்த பின் தெரிந்த விழிகளில் இனம் புரியாத மருட்சி. உறங்கி எழுந்த புத்துணர்வு முகத்தில் இல்லை. மாறாக திகிலான அனுபவங்களை சந்தித்து வந்ததைப் போல் பதற்ற உணர்வுகள்.

    ‘‘அம்மா... எழுந்திரிச்சு வாங்கம்மா...’’ அவளுடைய தோளைப் பற்றி படுக்கையிலிருந்து கீழே இறக்கினாள்.

    வைதேகி திலகவதியை அழைத்துச் சென்று முகம் கழுவு வைத்தாள். டவலை எடுத்து அவளுடைய முகத்தை அழுந்தத் துடைத்து விட்டாள். நிலைக்கண்ணாடி எதிரே அமர வைத்து பரந்து கிடந்த அவளுடைய கூந்தலை சேர்த்து சீவி ஜடையாகப் பின்னினாள்.

    டைனிங் டேபிளுக்கு அழைத்து வந்து உட்கார வைத் தாள். பொம்மையைப் போல் அமைதியாக அமர்ந்திருந்தாள் திலகவதி. சற்று முன் கண்களில் இருந்த திகில் பயம் எதுவும் இப்பொழுது அந்தக் கண்களில் இல்லை.

    ஒருவித ஆழமான சோகம் மட்டுமே தெரிந்தது.

    சற்று முன் செய்து வைத்திருந்த அவல் உப்புமாவை ஒரு தட்டில் போட்டு எடுத்துக் கொண்டு வந்த வைதேகி அவளருகே அமர்ந்து ஊட்டி விட்டாள்.

    அமைதியாகச் சாப்பிட்டாள். சூடாகக் காபி கலக்கி அதையும் பருக வைத்தாள். பிறகு மறுபடியும் அறைக்கு அழைத்துச் சென்று பீரோவிலிருந்து புடவை, உள்பாவாடை, சட்டை என எடுத்து படுக்கை மீது போட்டு விட்டு அவளுடைய நைட்டியைக் கழற்றினாள். சட்டையை அணிவித்து புடவையைக் கட்டினாள். முகத்திற்கு பவுடர் பூசி பொட்டு வைத்தாள்.

    ஒரு நிமிடம் கண்ணிமைக்காமல் அவளையே பார்த்தாள்.

    ‘ச்சே! எவ்வளவு அழகாயிருக்கிறாள்? அழகாயிருந்து என்ன பயன்? அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லையே இவளுக்கு. ராஜா மாதிரி புருஷன் காரும், பங்களாவுமாக வசதியான வாழ்க்கை. ஆனால்... இப்படி சித்த பிரம்மை பிடித்துப் போய் இருக்கிறாளே!’

    ஒரு பக்கம் பாவமாகயிருந்தாலும் மறுபக்கம் ஒரு பைத்தியத்திற்கு இத்தனை அழகா என்று தோன்றியது.

    ஆனால் தன் அழகைக் கண்ணாடியில் வெறித்துப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்த திலகவதியின் கண்களில் எந்தவித ரசனையோ, பரவசமோ இல்லை. அதே வெறுமை!

    அவளை அழைத்து வந்து கூடத்தில் அமர்த்தினாள். ‘இவள் எதனால் இப்படி ஆனாள்? ஆரம்பத்திலிருந்தே இப்படித்தானா?’

    அவளுக்கும் தெரிந்துகொள்ள ஆசைதான்.

    அவள் வேலைக்கு வந்தே ஒரு மாதம் தான் ஆகிறது. ராம்குமாரிடம் கேட்க பயம். எப்பொழுதும் ஒருவித இறுக்கமான முகபாவனையில் இருப்பவன் ராம்குமார். தேவையிருந்தால் ஒழிய அனாவசியமாகப் பேச மாட்டான். அக்கம் பக்கம் கூட பேச்சு கொடுத்துப் பார்த்தாள். அவர்கள் வேலைக்காரி என்றால் எல்லாம் தெரிந்திருக்கும் என இவளுடைய வாயையே திருப்பிக் கிளறினர். அவர்களுக்கே எதுவும் தெரியவில்லை. காரணம் அவன் இந்த பங்களாவிற்கு வந்தே ஒரு மாதம்தான் ஆகிறதாம்.

    ஆக திலகவதியின் கதை மர்மமாகவேயிருந்தது.

    அவளுடைய யோசனையை கலைப்பதைப் போல் வாசலில் கார் சத்தம் கேட்டது.

    சுதாரித்துக் கொண்டவள் ஒரு நிமிடம் திலகவதியின் ஒப்பனைகள் சரியாக இருக்கிறதா என பார்த்துக் கொண்டாள்.

    உள்ளே வந்தான் ராம்குமார். நல்ல உயரம், கம்பீரமான உயரத்திற்கு பொருத்தமாக அலுவலக கோட் ஷட், உள்ளே வந்தவன் திலகவதியின் அருகே வந்தான். மெல்ல அவளுடைய தோளைத் தொட்டான்.

    டார்லிங்! ரெடியா என்றான்.

    அவனுடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்தாளே தவிர திலகவதியிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

    அவன் மென்மையாக சிரித்தபடி தன் கோட்டை மட்டும் கழட்டி வைதேகியிடம் கொடுத்து உள்ளே கொண்டு போய் மாட்டு என்றான்.

    ‘‘ஐயா... உங்களுக்கு டிபன்...’’

    ‘‘எனக்கு எதுவும் வேண்டாம். ராத்திரிக்கு சாப்பாடு எதுவும் பண்ண வேண்டாம். நான் உனக்கும் சேர்த்து வெளியிலிருந்து வாங்கிட்டு வர்றேன்" என்றவாறு மனைவியின் தோள் மீது கை போட்ட வண்ணம் அவளை அழைத்துச் சென்றான்.

    வாசல் வரைக்கும் வந்த வைதேகி அவர்கள் சென்ற பின் கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தாள்.

    கையிலிருந்த கோட்டை எடுத்து ஹேங்கரில் மாட்டியவள் ஒரு நிமிடம் யாரும் இல்லாத வீட்டில் யாரோ இருப்பதைப் போல் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அந்தக் கோட்டில் அழுத்தமாக முகத்தைப் புதைத்தாள்.

    காரை மெதுவாக செலுத்தியபடியே மனைவியை ஓரக் கண்ணால் பார்த்தான் ராம்குமார்.

    எந்தவித உணர்வையும் முகத்தில் காட்டாமல் வெறுமனே வேடிக்கைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள்.

    ரோஜா நிறத்தில் மெல்லிய பார்டருடன் கூடிய வழவழப்பான சேலை, முகத்தில் மெல்லிய பவுடர் பூச்சு, சிறிய பொட்டு, கனமான அலங்காரம் ஏதும் இல்லை. ஆனால் கலையழகுடன் மிளிர்ந்தாள்.

    ஆனால் அந்தக் கண்கள்?

    சோகம் அப்பிக் கிடந்தது. சுய நினைவை இழந்து விட்டாள். ஆனால் அந்தக் கண்கள் மட்டும் அவள் நெஞ்சுக்குள் புதைந்து கிடக்கும் சோகத்தைக் காட்டுவதைப் போல் காட்சி தருகின்றன.

    அவனுடைய இதயத்தை யாரோ மிதித்து அழுத்துவதைப் போலிருந்தது.

    இடது கையால் அவளுடைய தோளைச் சுற்றி இன்னும் அருகே அவளை இழுத்து அமர வைத்தான்.

    அவனருகே வந்தவள் இதமாக அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

    அணைத்திருந்த இடது கையால் நெற்றியில் புரண்ட கேசத்தை ஒதுக்கி மென்மையாக முத்தமிட்டான்.

    கண்கள் சட்டென்று கலங்கி கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்க சமாளித்துக் கொள்ள முயன்றான்.

    ‘திலகவதி! நீ என்றைக்கு பழைய திலகவதியாக ஆவாய்? என்றைக்கு உன்னையே நீ அறிந்து கொள்வாய்?’

    ஏதேதோ நினைவுகள் அவனை ஆட்கொண்டன.

    2

    டாக்டர் ராஜசேகர் ராம்குமாரிடமிருந்து வாங்கிய திலகவதியின் பழைய மருத்துவ பைலை ஒன்று விடாமல் பொறுமையாகப் படித்துக் கொண்டிருந்தார்.

    ராம்குமார் ஒருவித பொறுமையிழந்த நிலையில் மருத்து வரையும் மனைவியையும், மாறி மாறி பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான். திலகவதி எந்தவித சலனமும் இல்லாமல் டாக்டரின் மேசை மீதிருந்த பேப்பர் வெயிட்டையே உற்றுப் பார்த்த வண்ணமிருந்தாள்.

    பைலை மூடி மேசை மீது வைத்துவிட்டு நிமிர்ந்தார்.

    "மிஸ்டர் ராம்குமார். உடல் நிலையைப் பொறுத்தவரை உங்க மனைவி நார்மலாத்தான் இருக்காங்கன்னு எல்லா ரிப்போர்ட்டும் சொல்லுது. மன ரீதியாத்தான் இவங்க பாதிக்கப்பட்டிருக்காங்க. சொல்லுங்க... எப்போயிருந்து இவங். இப்படி இருக்காங்க? எதனால இப்படியிருக்காங்க?’’

    டாக்டர் இப்படிக் கேட்டதுதான் தாமதம். ராம்குமாரின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. பேச முடியாமல் அவன் தொண்டையடைத்த நிலையில் தவித்தான்.

    தன் மேசை மீதிருந்த தண்ணீர் நிரம்பிய டம்ளரை அவன் பக்கம் நகர்த்தினார்.

    ராம்குமார் அந்தத் தண்ணீரைப் பருகி விட்டு நிமிர்ந்தான்.

    "டாக்டர், என் மனைவி திலகவதி எல்லாரையும் மாதிரி நல்லாத்தான் இருந்தா. போன வருஷம் தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. ராஜான்னு எங்களுக்கு ஒரே பையன். அவன் மேல நாங்க ரெண்டு பேரும் உயிரையே வச்சிருந்தோம். ராஜாதான் எங்க எதிர்காலம். எல்லாமும் அவன்தான்னு

    Enjoying the preview?
    Page 1 of 1