Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neruppaai Oru Nilavu
Neruppaai Oru Nilavu
Neruppaai Oru Nilavu
Ebook98 pages29 minutes

Neruppaai Oru Nilavu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466862
Neruppaai Oru Nilavu

Read more from Devibala

Related to Neruppaai Oru Nilavu

Related ebooks

Related categories

Reviews for Neruppaai Oru Nilavu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neruppaai Oru Nilavu - Devibala

    1

    கண்ணாடி முன் நின்று தலையைப் படிய வாரிக் கொண்டிருந்தான் ஜனா ஏழாவது முறையாக.

    என்னங்க டிபன் ரெடி. வர்றீங்களா?

    ம்!

    குரல் கொடுத்துவிட்டு ஜன்னல் வழியாகப் பார்வையை வெளியே செலுத்தினான்.

    ஜன்னலில் அந்த முகம் உறைந்து கிடந்தது.

    அந்த இரண்டு பெரிய (?) சமுத்திர விழிகள் இவனையே தாபத்துடன் நிரப்பிக் கொண்டு அங்குலம் கூட அசையாமல் காத்திருக்க,

    ஜனா எந்தவித முக பாவமும் காட்டாமல் ஒரு நொடி பார்த்தான் அங்கே.

    உங்களைத்தானே? ஆறிப் போய்த்தான் சாப்பிட வருவீங்களா? சாருவின் குரல் வெகு அருகில் கேட்க,

    பார்வையை ஜன்னலிலிருந்து மீட்டு, இந்தப்பக்கம் திரும்பினான்.

    வந்து விட்டாள் சாரு.

    உங்களுக்குப் புடிச்ச குழிப்பணியாரமும், தேங்காப் பாலும் பண்ணியிருக்கேன்

    ம்!

    "நேரமாகலை ஆபீசுக்கு?’’

    கிளம்பியாச்சு!

    சமையல் கட்டில் பாய் போட்டிருந்தாள். உட்கார்ந்து கொண்டான். பரிமாறத் தொடங்கினாள்.

    நாலு வை! சாப்பிட வேண்டாம் நான்?

    ஏன் இப்படி அரைகுறையா சாப்பிடறீங்க? வயிறு ரொம்ப வேண்டாமா?

    "போதும். இஷ்டத்துக்குத் தின்னுட்டு சதை மலையா மாறணுமா? பார்க்க ஒரு அழகு வேண்டாம்?’’

    அவள் முகம் ஒரு நொடி சுத்தமாகச் சுருங்கிப் போனது.

    இனி யாரும், யாரையும் கட்டிக்க வேண்டாம். இருக்கற அழகு போதும். காபி தரட்டுமா?

    குடு!

    அதைக் குடித்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டான்.

    வெள்ளைப் பேன்ட்டும், கறுப்பு நிற சட்டையும் அணிந்து கொண்டான். அவனது பிரவுன் நிறத்துக்கு கறுப்புச் சட்டை அசாத்தியமாக இருந்தது.

    திரும்பவும் கொஞ்சமாகப் பவுடர் எடுத்து ஒற்றிக் கொண்டான்.

    தன் கறுப்புக் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டதும், அழகு அள்ளிக் கொண்டு போயிற்று.

    இந்தாங்க மத்யானச் சாப்பாடு!

    பையை வாங்கிக் கொண்டான்.

    சீக்கிரமா வாங்க. சாயங்காலம் மார்க்கெட் போகணும்!

    பாக்கறேன்

    வாசலில் அவன் இறங்க, எதிர்வீட்டுக் கதவு தற்செயலாக திறப்பது போலத் திறந்து கொண்டது.

    ஈரக் கூந்தலைத் துவட்டியபடி அவள் இயல்பாக வந்தாள்.

    ஆனால், இவனைப் பார்க்கத்தான் அந்த வரவு என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

    சாருவின் பார்வையில் உஷ்ணம் இருந்தது.

    தன் மொபெட்டை இயக்கி, அதில் வெகு நாசுக்காகப் படர்ந்து தெருவைக் கடந்து விட்டான் ஜனா.

    எதிர் வீட்டுப் பெண் பெருமூச்சு விட்டபடி வெளியேறினாள்.

    ஜனா...

    ஜனார்தன் என்ற முழுப்பெயர் கொண்ட ஜனாவை அத்தனை சுலபத்தில் வர்ணித்துவிட முடியாது.

    ஆண்களில் இப்படியொரு அழகா என்ற ஆச்சர்யம் ஜனாவைப் பார்த்த எல்லாருக்குமே வந்து விடும்.

    அப்படி ஒரு நிறம். சூரியனின் தங்க கிரகணங்களை தன் உடம்பில் வாங்கிக்கொண்டதைப் போல ஒரு தகதகப்பு. லேசான பெண்மை கலந்த முகத்தில் அழகான எடுப்பான கண்கள் - அளவான மூக்கு... ஈரப்பசை கலந்த உதடுகள்... அதன் மேல் ‘நறுக்’கென்ற கட்டையான மீசை... உடம்பும் செதுக்கி வைத்ததைப் போல... ஆண்களுக்கே அவனைப் பார்த்தால் ஒரு மாதிரித்தான் இருக்கும்.

    பள்ளி நாட்களிலிருந்தே அவன் அழகு மற்றவர்களால் வியப்புடன் விமர்சனம் செய்யப்பட்டுக்கொண்டே வந்ததால் ஜனாவுக்கு அதில் ஒரு கிறக்கமும், லேசான கர்வமும் உண்டானதில் அதிசயமில்லை. அதனால், அதைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற வேகம் உண்டாகிவிட்டது.

    அதிகம் வெயிலில் சுற்றமாட்டான்.

    காரமான பொருட்களை சாப்பிட மாட்டான்.

    கண்ணுக்கு அயர்ச்சி தரும் காரியங்களைச் செய்யமாட்டான். கடுமையான தேகப்பயிற்சி, ஓட்டம், யோகா என்று தொடங்கிவிட்டான். உணவிலும் சபலமே இல்லை. சீரான முறைகளைக் கையாளத் தொடங்கிவிட்டான்.

    படிப்பில் ஒன்றும் ஜனா புலியல்ல.

    கிட்டி முட்டி ஒரு பி.எஸ்.ஸி. பட்டத்தை அதுவும் இரண்டாம் வகுப்புதான், வாங்குவதற்குள் மூச்சு முட்டி விட்டது.

    வீட்டில் மூன்றாவது பையன்.

    இரண்டு அண்ணன்மார். இரண்டு தங்கைகள்.

    அப்பாவுக்குக் குடும்பக் கவலையே பெரிதாக இருந்தது.

    வேலை கிடைக்காமல் மூன்று வருடங்கள் காத்திருந்தான் ஜனா.

    மாமாதான் எப்படியோ ஒரு தனியார் வேலையில் அவனை உட்கார வைத்து விட்டார். சுமார் சம்பளம்தான்.

    மாமாவின் மகள்தான் சாரு. இங்கே சாரு பற்றியும் சொல்லியாக வேண்டும். கட்டை, குட்டையாக இருட்டுக்குப் பிறந்தவள் போல அப்படி ஒரு கறுப்பு.

    ஒரு முறை பார்த்த யாரும் நிச்சயம் மறுமுறை பார்க்கமாட்டார்கள். வயது இருப்பதைக் கடந்து விட்டது.

    யாரும் சாருவை அத்தனை சுலபமாக மணக்கமாட்டார்கள். மாமாவுக்கு பண வசதி கணிசமாக

    Enjoying the preview?
    Page 1 of 1