Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கொஞ்சும் மைனாக்களே! - I
கொஞ்சும் மைனாக்களே! - I
கொஞ்சும் மைனாக்களே! - I
Ebook96 pages32 minutes

கொஞ்சும் மைனாக்களே! - I

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வந்த ஒரே வாரத்தில் கடைசித் தம்பியை ருக்மணி சுலபமாகக் கவர்ந்து விட்டாள்.
 ஒவ்வொருவர் ருசியையும் தனித்தனியாகக் கேட்டுக் கொண்டாள்!
 அவர்கள் மனசுக்குப் பிடித்தபடி எல்லாமே செய்தாள்.
 ருக்மணி வந்ததுமே சமையல் கட்டுப் பொறுப்பை விட்டு அம்மா விலகிவிட்டாள்.
 பெண்களிடம், "நீங்க ரெண்டு பேரும் எந்த வேலையும் செய்யக்கூடாது! அண்ணி செய்யட்டும். நீங்க செஞ்சா, அவளுக்கு அதுவே ஏறிக்கும்!" என்றாள்.
 பெண்களுக்கு அது பிடிக்கவில்லை! ஆனால் காட்டிக் கொள்ளவில்லை!
 ஆனால் குழந்தைகளின் ருசி கேட்டு ருக்மணி சமைக்க, பிரமாதமாக இருந்தது!
 ருசித்து சாப்பிட்டார்கள்!
 கொஞ்சம் கூட முகச் சுருக்கமில்லாமல், எப்போதும் சிரித்தபடி, இதமான வார்த்தைகளைப் பேசிக் கொண்டு, வீட்டில் யார் அழைத்தாலும் ஆஜராகும் ருக்மணியை மூவருக்குமே ரொம்பப் பிடித்துவிட்டது!
 கசாமுசாவென இரைந்து கிடந்த வீடு சுத்தமாகி, அதன் முகமே மாறிவிட்டது!
 வீட்டுக்கு வேலையாள் இல்லை!
 சகல கேவலைகளையும் ருக்குதான் செய்தாள்.
 காலை நாலுமணிக்கு எழுந்து விட்டால், இரவு பத்து மணிக்கு தான் படுக்கை!
 ஒரே வாரத்தில் அந்தக் குடும்பத்தில் ஐக்கியமாகிவிட்டாள். அதை அம்மா ரசிக்கவில்லை!
 'வீடு சுத்தமாயில்லை!'சாப்பாடு வாய்ல வைக்க முடியலை!'
 'சுறுசுறுப்பே இல்லை!'
 என இல்லாத குறைகளை பெரிதாக்கி அம்மா பேசப் பேச, பிள்ளைகள் மூவருக்கும் புரிந்துவிட்டது - அம்மா மாமியார்த் தனத்தைக் காட்டுகிறாள் என்று! "அண்ணி ரொம்ப நல்லவங்க! எங்க மூணு பேருக்கும் ரொம்பப் புடிச்சிருக்கு. அம்மாதான் ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காங்க! அண்ணி அதுக்கெல்லாம் வருத்தப்படற மாதிரித் தெரியலை! அதே சிரிப்பு! எப்படி முடியுது? ஆச்சர்யமாக இருக்கு!" என்று சாமியிடம் அவன் தம்பி பாலு சொன்னான்.
 அன்று இரவு சாமி ருக்குவின் அருகில் வந்து உட்கார்ந்தான்.
 "கல்யாணமாகி 2 வாரம் ஆகப்போகுது! உனக்கு எப்படி இருக்கு? இந்த வீடு, இங்குள்ளவங்க எல்லாரையும் புடிச்சிருக்கா?"
 "ரொம்பப் புடிச்சிருக்கு!"
 "என்கிட்ட பொய் சொல்றியா?"
 "இல்லீங்க! எனக்கு பொய் புடிக்காது. சொல்லவும் மாட்டேன்!"
 "அம்மா கடுகடுப்பா இருக்காங்கனு பாலு சொல்றான்!"
 "பாலு குழந்தை! அவன் பேச்சை இதுல கேக்க வேண்டாம். பெரியவங்க நமக்கு வழி காட்டுவாங்க! அதைப் புள்ளைங்களால புரிஞ்சுக்க முடியாது! எனக்கு அத்தையைப் புடிச்சிருக்கு! வாழ வந்த பொண்ணுக்கு மாமியார்தானே சொல்லித் தரமுடியும்! சொல்ற முறை கடுமையா இருக்கலாம். தப்பே இல்லை! டீச்சரம்மா கொஞ்சம் கடுமையா இல்லைனா, மாணவி சலுகை எடுத்துப்பா! படிப்பு முக்கியமில்லையா?"
 "ஓ... எங்கம்மாவை டீச்சர் ஆக்கிட்டியா?"
 "தப்பே இல்லை! முப்பது வருஷமா குடும்பத்தை நடத்தறது சுலபமா?"
 சாமி ஆடிப் போனான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 8, 2023
ISBN9798223552468
கொஞ்சும் மைனாக்களே! - I

Read more from Devibala

Related to கொஞ்சும் மைனாக்களே! - I

Related ebooks

Related categories

Reviews for கொஞ்சும் மைனாக்களே! - I

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கொஞ்சும் மைனாக்களே! - I - Devibala

    1

    பெண் பார்க்க வந்திருந்தான் சாமி! முதல் பார்வையிலேயே ருக்மணியை அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது! ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்த பெண் ருக்மணி என்று யாரும் நம்ப மாட்டார்கள்.

    நல்ல நிறம் - பூசின மாதிரி உடம்பு. அழகான கண்கள். பளீர் சிரிப்பு - அழகிப் போட்டிக்கு நின்றால் வேறு யாரும் ருக்குவை மிஞ்சி விட முடியாது!

    சாமி அம்மாவைப் பார்த்தான். அம்மாவின் கண்களில் திருப்தி இருந்தது!

    முதல்ல உங்க மகள் கூட நான் கொஞ்சம் தனியாப் பேசணும்!

    ருக்மணி உள்ளே போனாள். சாமி பின் தொடர்ந்தான்!

    சாமி ஒரு மௌனத்தில் அவளை எடைபோட முயற்சித்தான்.

    நான் அதிகம் படிக்கலை! பள்ளிக் கூடப் படிப்பைக் கூட சரியா முடிக்கலை! அதுக்குள்ள அப்பா இறந்துட்டார். விதவை அம்மா, ரெண்டு தங்கச்சிகள், ஒரு தம்பி என் பொறுப்புல வந்துட்டாங்க! அப்பா போனதால ஃபேக்டரில எனக்கு வேலை குடுத்தாங்க! பன்னண்டு வருஷமா வேலை பாக்கறேன். சம்பளம் கம்மிதான். அதை வச்சு அஞ்சு ஜீவன்கள் வாழ முடியலை. இப்ப ஆறாவதா நீ!

    ருக்மணி பேசவில்லை!

    குடும்பப் பொறுப்பை ஏத்துக்க எனக்கு மனைவியா ஒருத்தி வரணும். என் உடன்பிறப்புகளை உன் குழந்தைங்களா நீ நினைக்கணும். நமக்கு இப்ப வாரிசு வரக் கூடாது! எல்லாரையும் என் குடும்பத்துல அனுசரிச்சு நடக்கணும்! இதுக் கெல்லாம் சம்மதம்னா, இந்தக் கல்யாணம் நடக்கட்டும்!

    ருக்மணி யோசிக்கக் கூட அவகாசம் எடுத்துக் கொள்ளவில்லை!

    எனக்கு சம்மதம்!

    அவசரம் வேண்டாம்! இதுல கட்டாயமில்லை! இத்தனை அழகான நீ, என்னைக் கட்டிக்க சம்மதிச்சது ஆச்சர்யம்!

    என் அழகால ஒரு கோடீஸ்வர மாப்ளை வரணும்னு நான் எதிர்பாக்கலை! வரவும் வராது! ஆனா எங்கப்பாவால கல்யாணத்தை பெரிசா நடத்த முடியாது!

    தேவையில்லை! நமக்குக் கோயில்ல கல்யாணம். கையோட ஓட்டல்ல சாப்பாடு. முடிஞ்சு போச்சு!

    உங்கம்மா சம்மதிப்பாங்கள?

    வேற வழி? அம்மா பெரிசா எதிர்பார்த்தா நடக்குமா? நான் ஒரு சாதாரண தொழிலாளி! எனக்கு வரப் போற மனைவி கோடீஸ்வரியா எப்படி இருக்க முடியும்?

    ருக்மணி சிரித்தாள்.

    எனக்கு பூரண சம்மதம். இப்பவே என்னைப் பற்றி நான் சொல்லிக்கக் கூடாது! வாழ வந்தப்புறம் அதை நீங்க சொல்லுங்க!

    வெளியே வந்து விட்டார்கள்.

    எனக்கு சம்மதம். உங்க மகளுக்கும் புடிச்சிருக்கு!

    மற்ற விஷயங்கள்...? அம்மா இழுக்க, எதுவும் இல்லை! நல்ல தேதியைக் குறிங்க. கோயில்ல வச்சுக் கல்யாணம். ஓட்டல்ல சாப்பாடு!

    சாமி...?

    நீ புறப்படும்மா!

    சாமி வாசலில் இறங்கி நின்றேவிட்டான். ருக்மணி ஒரு மரியாதையுடன் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

    வீட்டுக்கு வந்ததும் அம்மா பிடித்துக் கொண்டாள்.

    நான் ஒருத்தி - அம்மானு எதுக்காக உன் கூட வந்தேன்?

    ஏன்மா?

    நீயே எல்லா முடிவுகளையும் எடுத்துட்டு அவங்ககிட்ட சொல்லிட்டே! வெள்ளைத் தோலைப் பார்த்து சொக்கிப் போயிட்டியா?

    சாமிக்கு சுருக்கென கோபம் வந்து விட்டது!

    நாக்கைக் கொஞ்சம் அடக்கு! வெள்ளைத் தோலைப் பார்த்து மயங்கறதா இருந்தா, இந்த 28 வயசு வரைக்கும் நான் காத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டேன்! புரியுதா?

    சரிடா! நீ பெருந்தன்மையா வேண்டாம்னு சொல்லிட்டே! உன் தங்கச்சிங்க ரெண்டு பேர் வளர்ந்து நிக்கறாங்களே! அவங்களைக் கட்டிக் குடுக்க வேண்டாமா? நீ சொன்ன மாதிரி சொல்ற மாப்ளைகள் கிடைப்பாங்களா?

    அவங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தா, கிடைக்கலாம்!

    இதென்ன பேச்சு?

    அம்மா! ஒனக்கு ருக்மணியை புடிச்சிருக்கா? இல்லையா?

    வெளி அழகு புடிச்சிருக்கு!

    அதுபோதும். உள் அழகை இப்ப யாராலும் பாக்க முடியாது! அவகிட்ட நிபந்தனைகளைப் போட்டாச்சு! அவளும் சம்மதிச்சாச்சு!

    எல்லாம் சம்மதிப்பாளுங்க! தாலி கழுத்துல ஏறிட்டா, கூடவே திமிரும் ஏறிடும்!

    ஏம்மா இப்படி பேசற?

    நான் பேசலை சாமி! நடப்புல உள்ளதைச் சொல்றேன்!

    சரிம்மா போதும்! சரக்கென உள்ளே போய்விட்டான்!

    சாமி குடும்பப்பாசம் உள்ளவன். ஆனால் முன்கோபக்காரன்.

    சட்டென வாய் பேசுவதற்கு பதில் கை பேசிவிடும்!

    அதன் பிறகுதான் பிரச்னைகளைப் பேசுவான்.

    இதனால் சாமியிடம் தொழிலாளிகளுக்கு கணிசமான பயம் உண்டு.

    தொழிற்சங்கத் தலைவனுக்கும் சாமிக்கும் ஒருமுறை விவாதம் பெரிதாகி, சாமி கை ஓங்கிவிட, அது பெரிய பிரச்னையாக வெடித்து, பிறகு சமாதானம் நடந்து ஒரு வழியாக முடிந்தது!

    சாமிக்கு 28 வயசு! முதல் தங்கை பத்மினிக்கு இருபது வயசு. அடுத்தவள் ராணிக்கு 17 வயசு! கடைசியாகத் தம்பி. அவனுக்கு பதினாலு வயசு!

    தம்பி, தங்கைகளிடம் சாமிக்கு அலாதி பிரியம். அவர்களிடம் மட்டும் கோபம் வெளிப்படாது!

    தங்கைகளைக் கட்டிக் கொடுத்த பிறகுதான் சாமி தன் கல்யாணம் என்றுதான்

    Enjoying the preview?
    Page 1 of 1