Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pillai Kaniamuthey...
Pillai Kaniamuthey...
Pillai Kaniamuthey...
Ebook92 pages34 minutes

Pillai Kaniamuthey...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pillai Kaniamudhe is the story of Ranganathan who lost his pregnant wife to the disaster of Tsunami. Later he got married to Rukmini, who unfortunately not blessed with child birth. Hence they plan to adopt a child from an orphanage and do so. Later on Ranganathan comes to know from the records of the orphanage that the child he adopted is his own! The child along with the mother got admitted in the orphanage after the Tsunami. After handing over the child to the trustees, the mother passed away.

Thus Ranganathan gets his own child back and his second wife is also happy that she is the present mother for her husband's child!

Languageதமிழ்
Release dateMay 24, 2020
ISBN6580130605436
Pillai Kaniamuthey...

Read more from Prabhu Shankar

Related to Pillai Kaniamuthey...

Related ebooks

Reviews for Pillai Kaniamuthey...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pillai Kaniamuthey... - Prabhu Shankar

    http://www.pustaka.co.in

    பிள்ளைக் கனியமுதே...

    Pillai Kaniamuthey…

    Author:

    பிரபுசங்கர்

    Prabhu Shankar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/prabhu-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    குழந்தையின் அசாத்தியா பேச்சு ருக்மிணியை அசர வைத்தது. வியந்து, வியந்து மாய்ந்து போனாள். மூன்று வயது கூட முடியவில்லை. அதற்குள் மழலையிலேயே இத்தனை பேச்சா!

    கட்டிலின் விளிம்பில் படுத்திருந்தாள் அவள். ஒட்டுலே போகாதே; உருந்துருவே... என்று அவன் அவளை எச்சரித்தது. அவளை அப்படியே பிரமிக்க வைத்தது. தான் கட்டிலின் ஒட்டில் விளிம்பில் படுத்திருப்பதைச் சுட்டிக் காட்டி, தான் கட்டிலிலிருந்து விழுந்து விடக் கூடாது என்பதை முகத்தில் சற்றே கவலையுடனும், ழகரம் வராத மழலையில் அவன்தான் எத்தனை அழகாகச் சொல்கிறான்! நாலைந்து நாட்களுக்கு முன்னால், அப்படி கட்டிலில் படுத்திருந்த அவனைத் தான் எச்சரித்தது ருக்மிணியின் நினைவுக்கு வந்தது. அதை அப்படியே, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப, மிகக் கச்சிதமாக திருப்பிச் சொல்லும் சாமர்த்தியம் இந்த வயதில் எல்லா குழந்தைகளுக்கும் வருமா என்ன?

    அவனை அப்படியே அள்ளியெடுத்து உச்சி முகர்ந்தாள். உள்ளத்தில் கர்வம் ஓங்கி வளர்ந்தது. யாருக்குக் கிடைக்கும் இப்படி ஒரு மழலை பாக்கியம்!

    என்ன ருக்மிணி, அமுதனைக் கொஞ்சிகிட்டிருக்கே? எனக்கு ஆபீஸுக்கு நேரமாச்சு, ஞாபகமிருக்கு இல்லே கணவன் ரங்கநாதன் சற்றே பெருமை தோய்ந்த கேலிக் குரலில் கேட்டான்.

    ஐயோ, ஆமாங்க. சாரி... இதோ வந்திட்டேன்... என்று பதட்டமடைந்த ருக்மிணி, சமையலறைக்கு ஓடினாள்.

    சாப்பாடு, கைப்பை முதலானவற்றை எடுத்துக் கொண்டு ரங்கநாதன் வாசல் கதவருகே கை வைத்தபடி, பைபை அமுதன்... அப்பா ஆபீஸுக்குப் போயிட்டு வரவா? சாயங்காலமா வர்ரேன்... என்றான்.

    பை, பை ப்பா... என்று அமுதன் தன் பிஞ்சுக் கரத்தை நீட்டி ஆட்டியபடி, கதவருகே வந்து தன் தந்தையை வழியனுப்பி வைத்தான்.

    சம்பிரதாயமாக, ஏங்க, எல்லாத்தையும் எடுத்துகிட்டீங்களா? எதையும் மறக்கலியே? என்று கேட்டு தானும் அவனை வழியனுப்பி வைத்தாள்.

    எடுத்துகிட்டேன். ருக்மிணி, என்ற ரங்கநாதன், வழக்கமான எச்சரிக்கையை விடுத்தான்: குழந்தையை பத்திரமாகப் பார்த்துக்கோ...

    வாயிற்கதவைத் தாளிட்டுவிட்டு உள்ளே வந்த ருக்மிணி சோபாவில் அமர்ந்து தலையைப் பின்னால் சாய்த்து அப்போதைக்கு தற்காலிகமாக சில விநாடிகள் ஓய்வெடுத்துக் கொண்டாள்.

    ஒடம்புக்கு உவ்வாவா ம்மா... என்று கேட்டபடி தன் பட்டுக் கரத்தை அவளுடைய கழுத்தில் வைத்துப் பார்த்தான் அமுதன். ஜொரம் இல்லே; கழுத்து சுடலியே! என்று தனக்கு ஆறுதலாகவும், அம்மாவுக்கு ஆதரவாகவும் சொல்லிக் கொண்டான். மீண்டும் அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள் ருக்மிணி. அவள் கண்களில் தீர் திரையிட்டது. அந்தத் திரைக்குப் பின்னால் அவளுடைய சொந்த சோகம் மறைந்தது. அவ்வப்போது நெஞ்சுக்குள்ளிருந்து பீறிடும் சோகம்தான்; இயலாமையின் நிர்த்தாட்சண்யமான அரக்கத்தனம் அந்த சோகத்தை மேன்மேலும் கிளறிவிடும்தான். ஆனால், இறைவனின் கருணை, கணவனின் அன்பு இரண்டும், அமுதனாக அவள் மடியில் கிடக்கும் போது, அந்த சோகமெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியாது.

    அவள் விட்ட நிம்மதிப் பெருமூச்சு அமுதனை தலையைத் தூக்கி அம்மாவின் முகத்தைப் பார்க்க வைத்தது. இந்தக் குழந்தையிடம் ஒரு அணு அளவுகூடத் தன் உணர்வுகளை வெளிப்படுத்தி விடக் கூடாது என்று அவள் இந்த சந்தர்ப்பத்திலும் நினைத்துக் கொண்டாள். ஆமாம், இதுபோன்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தான்!

    *****

    2

    ரங்கநாதனுக்குத் திருமணம் நிச்சயித்தார்கள். அவனுடைய பெயர் கொஞ்சம் கர்நாடகமாக இருந்ததே தவிர, அவன் இந்த காலத்துப் பிள்ளைதான். அதாவது அவன் நாகரிக உலகின் முன்னேற்றங்களையும், வசதிகளையும் அறிந்தவன்; அவற்றில் சிலவற்றையாவது அனுபவிப்பவன். ஆனாலும், மரபணு ஆதிக்கத்தில் அவன் பழமையின் மதிப்பையும் இழக்க விரும்பாதவனாக இருந்தான். அதனால்தான் தன் பெற்றோர் காவிரி நதிக்கரையில் அவனுக்காகப் பெண் பார்த்தபோது அவன் எந்த மறுப்பும் சொல்லவில்லை.

    வெறுமே புகைப்படத்தை மட்டும் காண்பித்து இவள்தான் உனக்காகப் பார்த்திருக்கும் பெண். இவளை நாம் பெண் பார்க்கப் போகிறோம், என்று அவனுடைய பெற்றோர் சொன்னபோது, அவன் தன் மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டான்: 'இவள்தான் என் மனைவி!’

    இந்த சம்பிரதாயமெல்லாம் எதுக்கும்மா? ரங்கநாதன் தன் தாயிடம் சொன்னான். "நீங்க பார்த்து

    Enjoying the preview?
    Page 1 of 1