Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennodu Ore Iravu
Ennodu Ore Iravu
Ennodu Ore Iravu
Ebook129 pages46 minutes

Ennodu Ore Iravu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கொட்டும் மழையில் ஒரு அழகான ரயில் பயணம். ஆனால், அங்கு நடந்ததோ ஒரு அக்கிரமம். சகுந்தலா என்ற பெண்ணின் அந்த இரவு நேர பயணத்தில் நடந்த விளைவுதான் என்ன? பாபு என்ற சிறுவனுக்கும், சகுந்தலாவுக்கும் இடையே உள்ள உறவு என்ன? சிவராமன், அபீதகுஜாம்பாள், பிரபு மற்றும் சாரங்கபாணி இவர்களால் சகுந்தலா வாழ்க்கையில் என்ன நடந்தது? வாருங்கள் வாசிப்போம் இரவின் மடியில்...

Languageதமிழ்
Release dateApr 9, 2022
ISBN6580152608165
Ennodu Ore Iravu

Read more from Rajendrakumar

Related to Ennodu Ore Iravu

Related ebooks

Reviews for Ennodu Ore Iravu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennodu Ore Iravu - Rajendrakumar

    https://www.pustaka.co.in

    என்னோடு ஒரே இரவு

    Ennodu Ore Iravu

    Author:

    ராஜேந்திரகுமார்

    Rajendrakumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajendrakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    கொஞ்ச நேரத்தில் ராகுகாலம் முடிந்து, நல்ல நேரம் ஆரம்பிக்கப் போகிறது. நாவலை அப்போதுதான் துவக்கப் போகிறேன். அதுவரை இன்னொரு கதை சொல்கிறேன்; கேட்கிறீர்களா?

    மின்னல் ஒன்று வானத்தைக் கீறிப் பிளந்து மறைந்தது. தொடர்ந்து...

    இடியோசை ஒன்று உருண்டு புரண்டு அட்டகாசமாக அந்த ரயிலைக் கடந்து தொலைவில் போய் மறைந்தது. ரயிலினுள்ளே...

    பயந்துபோய் தன்னைக் கட்டிக்கொள்ளும் குழந்தைக்குச் சொன்னாள், அதன் அம்மா: பயப்படாதேடா கண்ணு. ‘அர்ஜுனா அபயம்’ன்னு சொல்லு பயம் போயிடும்.

    எதிர் ஸீட்டில் அமர்ந்து நாவல் படித்துக்கொண்டிருந்த அந்தப் பெண் நிமிர்ந்து பார்த்தாள். உதட்டுக்குள் சிரித்துக் கொண்டாள். எங்கோ எப்போதோ படித்தது நினைவுக்கு வந்தது.

    ‘மானிடர்களின் அச்சத்தைப் போக்கவும், அதே சமயம் தீய வழியில் போகாமல் அச்சத்தை விதைக்கவுமே தெய்வ நம்பிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.’

    கையிலிருந்த நாவலை மூடி வைத்தாள்.

    ரயில் ஆடி ஆடிப் போய்க் கொண்டிருந்தது.

    மூடிய கண்ணாடி ஜன்னலைப் பார்த்தாள்.

    சாத்திய கண்ணாடியை உடைத்து விட்டுதான் மறு வேலை என்பதுபோல சீறிசீறித் தாக்கிக் கொண்டிருந்தது மழை. உட்புறமாகப் படிந்த நீரைத் துடைத்துப் பார்த்தாள்.

    தொலைவில்...

    ஒளிப் புள்ளிகள் பாம்பாக நெளிந்து மலை ஏறுவது தெரிந்தது. ஊர் வந்து விட்டது.

    சின்னப் பர்சில் சீசன் டிக்கெட்டைப் பார்த்துக் கொண்டாள். சின்னதாக மடித்து வைத்த குடையை எடுத்துக்கொண்டாள். கைப்பையைத் திறந்து நாவலையும், மூக்குக்கண்ணாடியையும் செருகினாள். ‘டப்’ என்ற சின்ன ஓசையுடன் மூடிவிட்டு எழுந்தாள்.

    ரயிலின் ஆட்டத்துக்கு ஈடு கொடுத்தவாறு கதவை நோக்கி நடந்தாள்.

    அவள் அடுத்த வரிசையைக் கடந்ததும்,

    மூக்குக்கண்ணாடியை நிமிர்த்தி பார்த்தார் சாரங்கபாணி. முன்புறம் தலைமயிர் கணிசமாக குறைந்திருந்தது. இருந்த கொஞ்சத்திலும் ஆங்காங்கே நரை. (அக்கிரமம் சார். இன்னைக்கெல்லாம் வயசு நாற்பதை தாண்டல்லே. அதுக்குள்ளே... என்று புலம்புவார் அடிக்கடி.)

    உருவத்திலிருந்த மூப்பு அவர் கண்களிலில்லை. அந்த சோடா பாட்டில் கண்ணாடிகளுக்கு பின்னே கண்கள் பளபளவென்று ஒளிர்ந்தன.

    சக்கி என்றார் பிரியத்துடன்.

    நின்றாள்; திரும்பினாள். என்ன அக்கௌண்டண்ட் சார்?

    ஸ்டேஷன் வந்தாச்சா? என்றார் அதே குழைவுடன்.

    வந்தாச்சு சார். மலை விளக்கு தெரிய ஆரம்பிச்சிடுச்சே. நடந்தாள்.

    அவர் அவசர அவசரமாக உடைமைகளை சேகரித்துக்கொள்ள ஆரம்பித்தார்.

    இறங்குமிடத்துக்கு திரும்பியவள் நின்றாள், சிரிப்பு வந்தது.

    ரயிலின் ஆட்டத்துக்கேற்ப தலை ஆடிக்கொண்டு தள்ளாட... பின்புறமாக ஊன்றிய கைகளும், விரிய பரத்தி நீட்டிய கால்களுமாக உட்கார்ந்திருந்தான் அவன்.

    மாரப்பன் பூபதி. அந்த ஊரின் பெரிய தலைவலி. ரௌடி. சாராயம் ஏறிக்கொண்டுவிட்டால் அவனுக்கு பெயர் மனிதனில்லை மிருகம்.

    திறந்திருந்த ஜன்னல் வழியே வீசிய காற்று சாராய நாற்றத்தை சுமந்து அருவருப்பூட்டியது. கீழுதடு பிரிய அருவருத்தாள் அவள்.

    அவளைப் பின்தொடர்ந்து வந்த சாரங்கபாணி அவள் தவிப்பை உணர்ந்தார்.

    எலே மாரப்பா உலுக்கினார். அடே மாரப்பபூபதி!

    ஆங்? ஆர்ராது? திடுக்கிட்டு விழித்தான். என்ன சார்?

    ஊர் வந்தாச்சு எழுந்து வழியைவிடுடா அலுத்துக் கொண்டார். தினம் தினம் இதே ரோதனையா போச்சுப்பா உன்னோட. ஏண்டா வழியிலே உட்கார்ந்து தூங்கி தொலையரே?

    அப்பதானே சாமி ஊர் வந்ததும் நீ என்னை எழுப்புவே... அதான். தலையை உசுப்பி கண்களை சிரமத்துடன் திறந்து அவளை ஆராய்ந்தான்.

    அவள் நெளிந்தாள். வணக்கம்மா என்றான் போதை தள்ளாடலுடன்.

    அட பாரேன் வியந்தார் சாரங்கபாணி. நானும்தான் ஒரு பெரிய மனுஷன் நிக்கிறேன். எனக்கெல்லாம் ஒண்ணுமில்லே; புடவையை பார்த்துட்டா உடனே வணக்கமா?

    அட ஏன் ஐயரே நீ காயுரே! நீயே எழுப்பி நீயே பேசியாச்சு அப்புறமும் என்னா வணக்கம்? பேச்சை ஆரம்பிக்கறச்சேதான் அதெல்லாம் சொல்வாங்க. நாயமா அப்படிப் பார்த்தா நீதான் எனக்கு வணக்கம் சொல்லி இருக்கணும்!

    அவருக்கு கோபம் வந்தது.

    அவள் உதட்டை சுழித்து சிரித்துக்கொண்டாள்.

    கொட்டும் மழையில் மெல்ல ஊர்ந்து... நகர்ந்து... க்ரிச்சென்ற ஓசையுடன் பெரியதொரு பெருமூச்சுடன் நின்றது ரயில்.

    அவசரமாக கதவைத் திறந்த மாரப்பபூபதி மழைக்காக ஒரு வினாடி தயங்க...

    ரெண்டு நிமிஷம்தான் நிறுத்துவான் அலறினார் சாரங்கபாணி. தள்ளுடா இறங்கணும்.

    ஏற்கனவே தள்ளிகிட்டுதான் சார் இருக்குது! என்ற மாரப்பன் கீழே குதித்து ஸ்டேஷன் கூரைக்குள் ஓடி மறைந்தான்.

    கீழே இறங்கி சின்ன குடையை விரித்தவள் திடுக்கிட்டுப் போனாள்.

    வீசிக்கொண்டிருந்த புயல் காற்றின் வேகத்தால் எதிர்ப்புறமாக விரிந்த அந்தக் குடைக்கம்பிகள் பீய்ந்தும் கிழிந்தும் போய்விட்டன. நனைந்துவிட்டாள்.

    அவளுக்கு பின்னால் பிளாட்பாரத்தில் குதித்த சாரங்கபாணி தனது பெரிய குடையை விரித்து அவளுக்கும் சேர்த்து பிடித்து நடந்தார்.

    காரணமின்றி அவரது முழங்கை தன் இடுப்பை மோதி நிற்பதையும், தொட்டுப் பிரிவதையும் உணர்ந்தாள்.

    கூரைக்குள் போனதும்...

    தாங்க்ஸ் என்று விலகிக்கொண்டு விட்டாள்.

    ஏமாற்றத்துடன் நடந்தவர் நின்றார். திரும்பி வந்து கேட்டார். ஏன் சக்கி, உன் குடைதான் பஞ்சராயிடுச்சே. எப்படி வீட்டுக்குப் போவே?

    மழை விட்டதும் போவேன்! குளிருக்காக கைகளை கட்டிக் கொண்டாள்.

    ஏன்? என் குடையிலேயே வாயேன். உன்னை வீட்டிலே விட்டுட்டு அப்புறமா நான் என் வீட்டுக்குப் போறேன்.

    நோ... தாங்க்ஸ்!

    ஏம்மா?

    உங்க வீடு கிழக்கே இருக்கு. நான் மேற்கே போக வேண்டியவ. உங்களுக்கு ஏன் வீண் சிரமம்? நீங்க போங்க.

    திரும்பி நின்று புடவை தலைப்பை எடுத்து பிழிந்துக் கொண்டாள்.

    சக்கி!

    திடுக்கிட்டு நிமிர்ந்தாள். அவசரமாகத் தலைப்பை மார்பில் தவழவிட்டுத் திரும்பினாள். சார் நீங்க இன்னுமா போகல்லே?

    எப்படிப் போறது? இந்த மழை இப்போதைக்கு விடாது போலிருக்கே. இந்த கொட்டற மழையிலே... இருட்டு நேரத்திலே... ஆளரவமேயில்லாத இந்த ஸ்டேஷனிலே உன்னை மட்டும் தனியா விட்டுட்டுப் போனா எனக்கு தூக்கம்வராதே சக்கி!

    மாமியைக் கூப்பிட்டுத் தாலாட்டுப் பாடச் சொல்லுங்க தூக்கம் தானா வரும்.

    Enjoying the preview?
    Page 1 of 1