Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee? Neeya?
Nee? Neeya?
Nee? Neeya?
Ebook190 pages1 hour

Nee? Neeya?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நூறு வருஷத்துக்கு முன்பு பிரிட்டிஷ் துரை ஒருவர் ஆசையோடு கட்டிய மாளிகை அது. அந்தக் கட்டடத்தின் பெயரே சம்மர் கூல் பாலஸ். ஆள் நடமாட்டமில்லாத இந்த பங்களாவில் மர்மமான முறையில் ஒரு பெண் இறந்து கிடக்கிறாள். அந்த மர்மத்திற்கான முடிவு தெரிந்ததா? இல்லையா? என்பதை வாசித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

Languageதமிழ்
Release dateOct 3, 2023
ISBN6580152609600
Nee? Neeya?

Read more from Rajendrakumar

Related to Nee? Neeya?

Related ebooks

Related categories

Reviews for Nee? Neeya?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nee? Neeya? - Rajendrakumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நீ? நீயா?

    Nee? Neeya?

    Author:

    ராஜேந்திரகுமார்

    Rajendrakumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajendrakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    அந்தப் பழைய பங்களாவை இடித்துத் தள்ளப்போகிறார்கள்.

    நூறு வருஷத்துக்கு முன்பு பிரிட்டிஷ் துரை ஒருவர் ஆசையோடு கட்டிய மாளிகை அது. பெயரே சம்மர் கூல் பாலஸ், லண்டன் இன்ஜினியர் ஒருவர் ப்ளான் போட்டு பிரிட்டிஷ் பாணியிலேயே கட்டப்பட்ட பங்களா.

    அகல நீளமான நிறைய படிக்கட்டுகளுக்கு மேலே கணிசமான முகப்புக்குப் பிறகு பங்களா போர்டிகோ ஆரம்பமாகி இருந்தது. உயரம் உயரமான தூண்கள், எங்கேயோபோல மேலே விதானம். ஹைஜாண்டிகான அசல் பர்மா தேக்குக் கதவுகள். கடந்து உள்ளே போனால் விசாலமான ஹால். டான்ஸ் ஹால், சின்ன சிமெண்ட் மேஜையில் ஆர்கெஸ்ட்ரா வயலின் இசை வடிய...

    பிரிட்டிஷ் சீமான்களும், சீமாட்டிகளும் கட்டிப்பிடித்து உரசியபடி ஆடும் பால் ரூம்டான்ஸ்.

    உச்சத்தில் குழிவான விதானத்தில் கண்ணாடி. சிற்ப அலங்காரங்களில் நிர்வாணப்பெண்கள், இலையால் மட்டும் முக்கிய பாகம் மறைக்கப்பட்ட ஆண்கள், மாடியில் நிறைய அறைகள். ஆளுயரத்துக்கும் அதிகமான கடிகாரம். கொத்துக் கொத்தாசுத் தொங்கும் சரவிளக்கு கண்ணாடி மணிகள். காற்றில் அசையும்போது சுகமான கிணு கிணு ஓசைகள்.

    சுவரோடு ஒட்டிய சிலுவையில் ரத்தம் ஓடும் இயேசுநாதர்.

    பழைய - மிகப்பழைய ஆனால் உறுதியான சோபா நாற்காலிகள், சுவர் முழுவதுமாக முகம் பார்க்கும் கண்ணாடிகளின் நடுவில் நின்றால் வரிசையாக இரண்டு புறமும் ஏகமாய்த் தெரியும் நீங்கள்.

    அனைத்தும் ஏற்கெனவே அப்புறப்படுத்தியாகிவிட்டது இப்போது பங்களாவை இடித்துத் தள்ளப் போகிறார்கள்.

    கொழுத்த பணக்கார பம்பாய்க்காரர் ஒருவர் லட்சம் லட்சமாக கொட்டிக் கொடுத்து வீட்டையும், முக்கியமாக நிலத்தையும் கையகம் செய்த கையோடு பிளாட் கட்ட, விற்க அட்வான்ஸும் வாங்கிவிட்டார்.

    இன்னமும் சற்றுநேரத்தில் இடிந்து தரைமட்டமாகிவிடும்.

    ஆள் வைத்து இடித்தால் நாளாகுமென்று கிரேன் கொண்டுவந்து நிறுத்தி இருந்தார்கள். கனமான இரும்புத் துண்டைத் தொங்கவிட்டுக்கொண்டு ஊசலாடிக் கொண்டிருந்தது கிரேன்.

    பக்கவாட்டில் பின்வாங்கி ஓங்கி ஓர் இடி இடித்தாலே கட்டடம் கலகலத்துச் சரியப்போகும் அபாயமிருந்தது.

    இன்ஜினியர் ஸ்பீக்கரை வைத்து கத்தினார். பார்த்தாச்சா? உள்ளே யாருமில்லையே?

    நேத்தே பார்த்தாச்சு சார். யாருமில்லை.

    அது நேற்றைய சங்கதி, இன்றைக்கு யாராவது விஷயம் தெரியாமல் உட்கார்ந்திருந்தால் வம்பாகிவிடும். எதற்கும் ஒரு தடவை பார்த்துட்டு வந்துடுங்க.

    எலேய் சாத்தப்பா, போய் பார்த்துட்டு வா ஓடு. என்று மேஸ்திரி சொல்லவே...

    அந்த சாத்தப்பாவாகப்பட்டவன் உள்நோக்கி ஓடினான்.

    காண்ட்ராக்டர் நீட்டிய சிகரெட் பெட்டியிலிருந்து உருவிய சிகரெட்டை உதட்டில் பொருத்திய இஞ்ஜினியர் நெருப்புக்காகக் குனிந்தபோது...

    எப்படியும் ஆடி முடிஞ்சு ஆவணி ஆரம்பத்துக்குள்ளே ப்ளாட்ஸ் ரெடியாயிடணும், முடியுமில்லையா? என்று கட்டட காண்ட்ராக்டர் கேட்கும்போதுதான்...

    மாடி ஜன்னலிலிருந்து கத்தினான் அந்த சாத்தப்பன் உரத்த குரலில்... சார் மேலே வாங்க சார்.

    ஏண்டா என்ன ஆச்சு?

    போலீஸ் கேஸ் சார். ஒரு பொண்ணு செத்துக்கிடக்குது சார்.

    காண்ட்ராக்டர் கண்களில் சலிப்புக் காட்டினார். இன்னைக்கு வேலை நடந்தமாதிரிதான். போலீஸ் எப்ப வந்து என்ன கண்டுபிடிச்சு...? கிரேனை வாடகைக்கு எடுத்தது வேஸ்ட்.

    ஏன் சார்? என்ற இஞ்ஜினியரை...

    போலீஸ் சடங்கெல்லாம் அவ்வளவு சீக்கிரம் முடியற சங்கதியில்லேப்பா, என்று ஒதுக்கிவிட்டு மேலேறிப் போனார் காண்ட்ராக்டர்.

    போலீசுக்கு தகவல் சொல்லியனுப்புங்கப்பா.

    அனுப்பியாச்சு சார்.

    அந்த அறைக்குள்ளே போய்ப் பார்த்தார். கட்டிய புடைவையும் அணிந்திருந்த நகைகளும் பெரிய இடத்துப் பெண்ணாகக் காட்டின.

    மேலோடு பார்த்த பார்வையில் பலாத்காரம் தெரியவில்லை. ஆடைகள் குலையாமல் கிழியாமல் அணிந்த நிலை மாறாமலிருந்தன.

    நல்ல வைர நகைகள் இருந்த நிலையிலிருந்ததினால் பணத்துக்காக நடந்த கொலை மாதிரியும் தெரியவில்லை.

    சுட்டுக் கொன்ற விதத்தில்தான் வெறித்தனம் தெரிந்தது. ஆறு குண்டுகள் ஜீவாதாரமான பகுதிகளில் பாய்ந்திருந்தன.

    போலீஸ் வந்தது. விசாரணை தொடங்கியது. அடையாளம் தெரிஞ்சவங்க யாராவது இருக்கீங்களா?

    ஒருவருக்கும் தெரியவில்லை.

    நேற்று ராத்திரிகூட ரூம் விடாம தேடி இருக்கோம் சார்! இந்த இடம் உள்பட இஞ்ச் விடாம தேடினோம். யாரையும் காணல. இப்பதான் இடிக்கிறதுக்கு முன்னால எதற்குமிருக்கட்டும்னு தேடிப் பார்த்தோம். இப்ப இருக்கு. அதாவது ராத்திரிதான் யாரோ கொண்டுவந்து போட்டிருக்கணும்.

    ஆமாம். இன்ஸ்பெக்டரும் சொன்னார். கொலை இந்த இடத்தில் நடந்திருக்க முடியாது. அப்படியே நடந்திருந்தாலும் சுற்றிலும் ரத்தம் சிதறியிருக்கும். உலர்ந்து உடம்போட மட்டுமிருக்கிறது.

    இதிலே ஒரு பிரச்சினை இன்ஸ்பெக்டர். கட்டடத்தை இடிச்சுத் தள்ள கிரேன் வாடகைக்கு எடுத்து வந்திருக்கோம். இன்றைக்கு இடிக்கலேன்னா வாடகை வீணாப் போயிடும். அதுவாவது பரவாயில்லே. மறுபடியும் கிரேன் கிடைக்கிறது கஷ்டம். எப்ப கிடைக்குமோ?

    நோ ப்ராப்ளம். போட்டோ கிராஃபர் வந்ததும் ஒரு சில மணிநேர சடங்குகளுக்கப்புறம் நீங்கள் உங்கவேலை பார்க்கலாம். ஆனாலும் நீங்க செய்தது பொறுப்பில்லாத செயல். பிணத்தைச் சுற்றி இத்தனை பேர் நெருங்கி வந்துட்டீங்களே. இப்ப போலீஸ் நாயைக் கொண்டுவந்தாலும் பயனிருக்காது.

    ஸாரி காண்ட்ராக்டர் சொன்னார். திடீர்பதற்றம். எதுவும் செய்யத் தோணல. ரியலி வெரி ஸாரி.

    போட்டோகிராபர் வந்தார். சுற்றிச் சுற்றி வந்து ப்ளாஷைக் கண்சிமிட்ட வைத்தார்.

    கைரேகை தடயமோ, வேறு எந்தத் தடயமோ கிடைக்காத நிலையில் பிணம் அப்புறப்படுத்தப்பட்டது. ஆஸ்பத்திரி ஆட்கள் தொங்கு படுக்கையில் அவனைக் கிடத்தி மிக அலட்சியமாகப் படியிறங்கிப் போனார்கள்.

    போலீசார் முன்னிலையிலேயே பங்களா முழுவதும் சுற்றி வந்து வேறு விபரீதம் எதுவுமில்லை என்பதை உணர்ந்தபிறகுதான் இன்ஸ்பெக்டர் அனுமதித்தார்.

    கோ அஹெட், நீங்கள் இடிக்கலாம்.

    காண்ட்ராக்டரே கவனமாக எல்லாரையும் அனுப்பிவிட்டு கடைசி ஆளாக இறங்கி வந்தார்.

    ஆஸ்பத்திரி வண்டியும், போலீஸ் ஜீப்பும் கிளம்பி போகுமளவுக்குக் காத்திருந்து கைவீசி அனுமதி தர...

    புகைத்துக் கொண்டிருந்த பீடியை வீசி எறிந்த இயக்குனர் கிரேனை முடுக்கிவிட... கனமான இரும்பு சங்கிலியில் தொங்கிய பாறை போன்ற இரும்புத்துண்டை அப்படியுமிப்படியுமாக நகர்த்தி ஊசலாடிய பின் ஆவேசமாக மோதவே...

    அந்த நூறாண்டு காலக் கட்டடம் விரிசல்விட்டது.

    இரண்டாவது மோதலுக்கு கலகலத்தது. மூன்றாவது நாலாவது மோதலுக்கு சரிந்து சரிந்து விழத்தொடங்கியது. பொலபொலவென்று உதிரலாயிற்று.

    ***

    பகல் மணி பத்தடிக்கும் போது...

    அரசு மருத்துவமனையில் வாசலில் ஜீப்பிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் வேதநாயகம் நடந்து போனார்.

    பிணக்கிடங்கு வாடை குமட்டலெடுக்கவே கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக்கொள்ள வேண்டிவந்தது.

    போஸ்ட்மார்ட்டம் நடத்திக் கொண்டிருந்தார் டாக்டர். பழகிப்போன துர்நாற்றம் அவரை பாதிக்காமல்விட்டிருந்தது. அலட்சியமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

    வாங்க இன்ஸ்பெக்டர் வேதநாயகம்!

    முடிஞ்சுதா?

    முடியப் போகிற ஸ்டேஜ். உங்க அவசரக் கேள்விக்கு பதில் சொல்லக்கூடிய நிலமைதான் கேளுங்க.

    பலாத்காரம்! கற்பழிப்பு?

    அதெல்லாமில்லை. சின்ன வற்புறுத்தல் முயற்சிகூட தெரியலை. ஆறு குண்டுகள் உடம்பில் பாய்ந்து அதில் ஒரு குண்டு இருதயத்தைத் துளைத்து மரணம் சம்பவித்திருக்கிறது. மற்றபடி ஒரு சின்ன கீறல்கூட கிடையாது.

    முன் விரோதம் காரணமாக பலி வாங்கப்பட்டதாக இருக்குமா?

    மே பீ டாக்டர் கேட்டார். அடையாளம் தெரிந்ததா?

    இன்னமும் இல்லை.

    யாராவது காணவில்லை என்று புகார் தந்திருக்கிறார்களா?

    வந்த புகார்கள் எல்லாமே இளம் பிள்ளைகளாகத்தானிருக்கிறது. இந்த வயசுப் பெண் காணாமல் போனதாக புகாரில்லை. தலைமையகத்திலேயே கேட்டுப் பார்த்துவிட்டேன்.

    என்ன செய்வதாக உத்தேசம்? பாடியை சொன்னேன்

    மார்ச்சுவரிக்கு அனுப்பிடலாம் டாக்டர்! மாலை பேப்பரிலேயே பிணத்தின் படத்தை பிரசுரித்து அடையாளம் கேட்கப் போகிறோம்.

    பெஸ்ட் ஆஃப் லக்.

    போட்டோக்களில் முகம் தெளிவாக இல்லை. குண்டு துளைத்த வேதனையில் முகம் கோணலாகி அதே நிலையில் உயிர் போயிருக்கிறது. அடையாளம் புரிவது கொஞ்சம் கஷ்டம். ஆனாலும் வேறு வழியில்லை.

    ***

    மாலை பத்திரிகைகளில் படத்துடன் போலீஸ் வேண்டுகோள் விடுத்திருந்தது.

    அடையாளம் தெரிகிறவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும் என்கிற செய்தியுடன் போன் நம்பரும் கொடுத்திருந்தார்கள்.

    இன்ஸ்பெக்டர் வேதநாயகம் போனுக்காகக் காத்திருந்தார். வரவில்லை. அலுத்துப்போய் உதவியாளரைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போன போது இரவு மணி பன்னிரண்டாகிவிட்டது.

    விடியும்முன் வரவிருக்கும் இன்னொரு பயங்கரத் தகவலைப் பற்றி அறியாத நிலையிலேயே தூங்கிப்போய்விட்டார்.

    ***

    அந்தக் கல்லூரி வளாகத்துக்குப் பின்னால் ரயில்கள் போவதும் வருவதுமாக இருந்தன. கிழக்கு கீற்றாக வெளுக்கத் தொடங்கியிருந்தது.

    இரவுப் போர்வையை விலக்கிய புதிய நாள், குழந்தை சிணுங்குவதுபோல ஒரு சிலிர்ப்புடன் விளையாடிக்கொண்டிருந்தது.

    கல்லூரி விடுதியிலிருந்து ஒரு கொத்து மாணவர்கள் வெளிப்பட்டு வந்தார்கள் அட்டகாச சிரிப்புடன்,

    குட்டை நிஜாரும், துவாலை பனியனும் அணிந்த இளம் தளிர்கள் காலை ஒட்டம் ஓடத் தயாரானர்கள்.

    ஏண்டா இவனே, அந்த தூங்கு மூஞ்சி இன்னுமா எழுந்திருக்கல?

    வந்து சேர்ந்துப்பான். நீங்க வாங்கடா நாம ஓடலாம்.

    ஓடினார்கள்.

    கைப்பந்தாட்ட மைதானத்தைச் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தவர்கள் ரயில்வே லைன் பக்கமாக ஓடும் போது மட்டும் சற்றே குமட்டலாக உணர்ந்தார்கள்.

    என்னடாது என்னமோ கெட்ட வாசனை வரல்லே?

    "நாய் பூனை

    Enjoying the preview?
    Page 1 of 1