Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ethuvarai Sorgam?
Ethuvarai Sorgam?
Ethuvarai Sorgam?
Ebook69 pages21 minutes

Ethuvarai Sorgam?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருவல்லிக்கேணியில் தன் தாய் ராஜலஷ்மியம்மாளுடன் வசித்து வந்தான் பரசு. வேலை தேடும் பட்டதாரியான இவனுக்கு, 'லீனா எண்டர்ப்ரைசஸ் பிரைவேட் லிமிடெட்'டில் இன்டர்வியூக்கு அழைப்பு வந்தது. பரசுக்கு வேலை கிடைத்ததா? இல்லையா? அதன்பின் நடந்த அடுத்தடுத்த சுவாரஸ்யமான நிகழ்வுகளைக் காண வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateAug 19, 2023
ISBN6580152609597
Ethuvarai Sorgam?

Read more from Rajendrakumar

Related to Ethuvarai Sorgam?

Related ebooks

Related categories

Reviews for Ethuvarai Sorgam?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ethuvarai Sorgam? - Rajendrakumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    எதுவரை சொர்க்கம்?

    Ethuvarai Sorgam?

    Author:

    ராஜேந்திரகுமார்

    Rajendrakumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajendrakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    கலே துறையைவிட்டு பிரான்ஸுக்கு டாட்டா சொன்ன அந்த ஹோவர் கிராஃப் (கப்பல் என்றும் சொல்ல முடியாத படகு என்றும் தள்ள இயலாத மிதவை. காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்கும் நிஜமாகவே தண்ணீருக்கு அரையடி மேலே) லண்டன் நகருக்கு பக்கமான டோவர் துறையை போய் சேர அநேகமாக அரைமணி நேரம் பிடிக்கும்.

    கீழே தளத்தில் நின்ற கார்களில் ஒன்றில் அமர்ந்திருந்த லீனா கதவை திறந்து மேலேறி வந்தாள்.

    மெலிதான விஸ்கி வாடை நிரவியிருந்தது. மெலிதாக முகத்தை சுளித்துவிட்டு நடந்தாள்.

    சற்று தொலைவில் கயிற்று தடுப்புக்கு பக்கத்தில் நின்றவாறு அந்த காதல் ஜோடி தன்னை மறந்த நிலையிலிருந்தது.

    அவள் நிறைய சிரித்தாள். பேசினாள். சிரித்தாள்.

    அவன் நிறைய தொட்டான். சமயம் கிடைக்கும் போதெல்லாம், உணர்ச்சியுடன் முத்தமிட்டான்.

    உதட்டை சுழித்து இளித்துக் கொண்டாள் லீனா.

    அந்தப் பெண் டோரதியை இவளுக்கு தெரியும். இவளிருக்கும் ஹாஸ்டலுக்கு பக்கத்திலேயே அவள் வீடு.

    உற்சாகமான பெண். தெருவுக்கு வந்தால் அவள் ஒரு பிரகாசம்.

    கொஞ்சமாக இருக்கும் ப்ரவுன் கலர் கூந்தலை மறைத்து எப்போதும் தங்க நிற மயிருடன் கூடிய விக் அணிந்திருப்பாள்.

    வசீகரமாக சிரிப்பாள்.

    கையில் பூங்கொத்தோ பழுப்பு நிற பக்கெட்டோ அணைத்தாற்போல் வருவது ஒரு கவர்ச்சியை காட்டும்.

    எப்போது ஹாஸ்டலை கடந்தாலும் திரும்பி இவள் கரை ஸிட் அவுட்டை பார்ப்பாள்.

    ஹாய் லீனா

    ஹாய் டோரதி.

    அந்த டோரதியின் தமிழ் தமாஷாக இருக்கும்.

    என்க்கும் உன்கும் இஷ்ட்டம் என்பாள்.

    அந்த தமிழை ரசிக்கவே அடிக்கடி கூப்பிட்டு வாயாடுவது இவள் வழக்கம்.

    அவளுக்கு ஒரு காதலன் இருப்பதாக அடிக்கடி சொல்லுவதுண்டு.

    இவன்தானா அது?

    இவளைப் பார்த்ததும் அந்த டோரதி காதலனிடமிருந்து உருவிக்கொண்டு வந்தாள்.

    ஹாய்.

    என்ன பாரீஸில் சுற்ற போனாயா?

    இல்லையே. என் வருங்கால மாமியார் வீடு அங்கேதானிருக்கிறது.

    பிரிட்டிஷ் பிரஜையில்லையா அவர்?

    "இல்லையே. பிரான்ஸ் பிரஜை. லண்டன் வருவார் போவார். பிஸினஸ் விஷயமாக. சரியாக சொன்னால் எங்கள் காதல் கிரேட் பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடைப்பட்ட கடல்

    Enjoying the preview?
    Page 1 of 1